அந்த இரண்டாம் கற்பனை பாகம் 02
கிறிஸ்மஸ் தினம். நேரம் காலை 5-45. கோயிலில் மின் விளக்குகளும், மண்டபத்தில் கலர் பல்புகளும் எரிந்துகொண் டிருக்கின்றன. மண்டபத்தின் அருகில் நட்டப்பட்டிருக்கும் கிறிஸ்மஸ் மரத்தில் பலூன்கள் தொங்கிக்கொண்டிருக் கின்றன. காற்றில் மிதந்து வருகிறது ஆர்கனில் இசைக்கப் படும் சில கிறிஸ்மஸ் பாட்டுகள்.
(போதகர் வெஸ்ட்ரியிலிருந்து மண்டபத்திற்கு வருகிறார்)
போதகர்: இன்று கிறிஸ்து பிறந்த நாள்; கிறிஸ்மஸ். 'பூமி யிலே சமாதானம் மனுஷர்மேல் பிரியம்' என்று அன்று பாடினர் விண்ணவர் அந்த முதல் கிறிஸ்மஸ் தினத்தன்று. இன்று நாங்களும் பாடினோம் எங்கள் கோயிலில் கிறிஸ்மஸ் கீதங்கள் பல. இதோ காலை ஆராதனையும் முடிந்துவிட்டது. சபையாரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர், அல்லது சென்றுகொண்டிருக்கின்றனர். நானும் புறப் பட்டுக்கொண்டிருக்கிறேன் வீட்டிற்கு . . . மணி இப்போது (கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்) காலை 5.45.
(கோயிலிலிருந்து ரூத்தும் மனோவும் வருகிறார்கள். மனோ வின் கையில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கிறது.)
நீங்களும் வந்துவிட்டீங்களா ரூத்! ரொம்ப குளிராயிருக்கு இல்லையா இப்போ மட்டும் ஒரு கப் காப்பி கிடைச்சால்
ரூத்: புறப்படுங்க வீட்டுக்குப் போவோம். போதகர்: துணி டிஸ்ட்ரிபூஷனைப்பற்றி என்ன? தாய்மார்
யார்ரெல்லாம் வாராங்க?
ரூத் : ஒருவரும் வரலையாம். போன வருஷம் போய் சங்கடப் பட்டது போதுமாம். சாக்கடைகளையும் குப்பை மேடுகளை யும் கடந்து சேரிகளுக்குப்போறது அருவருப்பா இருக்காம்.
போதகர்: இந்த ஆண்டு சேரிகள் எவ்வளவோ சுத்தமா யிருக்குதே. அரசாங்கம் சேரி மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்திருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் நாம் என்ன செஞ்சிருக்கோம் பிரமாதமாக. கேட்பாரல்லவா கேள்வி. ஆண்டவர் நம்மைக்
ரூத் : நம்ம டயோசிஸ் சமூகப் பணிபுரிகிறது. நம்ம கோயில் தொழுநோய் இல்லங்களுக்கு உதவுகிறது.
போதகர்: ஆமா. ஆனால் கிறிஸ்தவங்க தனிப்பட்டவங்க என்ன செய்றா அதைச் சொ எளியவனுக்குச் செய் வது தனக்குச் செய்வதாகும் என்று ஆண்டவர் சொல்லி யிருக்காரே.
(வெளியிலிருந்து ஒரு துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு வருகிறான் ஜோசப்.)
ஜோசப்: தனராஜ் ஐயா கொடுத்தாங்க இந்தத் துணிகளை டிஸ்ட்ரிபியூஷனுக்கு. கோயிலுக்கு வரும்போதே காரிலே
கொண்டாந்துட்டாங்களாம்.
போதகர்: இன்னைக்கு அவர் வரலாமே, துணி டிஸ்ட்ரிபியூஷ னுக்கு. நேரமிருக்குமே அவருக்கு.
ஜோசப்: ஏதோ பார்ட்டியாம், மனாசே அய்யா, பால்ராஜ் அய்யா அவங்களையும் கேட்டுட்டேன். அவங்களும் வரலை யாம்.
ரூத்: நீங்க, உங்க செக்ஸ்டன், கார்டனர், இத்தனை பேரும் போங்க போதும். என்னைக் கூப்பிடாதேயுங்க. எனக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்குது.
(கோயிலுக்குள்ளிருந்து சரோ வருகிறாள்.)
வா சரோ. வீட்டுக்குப் புறப்பட்டுட்டியா (சரோவின் புடைவையை பிடித்துப் பார்த்து) எங்க வாங்கின, டிசைன் நல்லா இருக்குது, துணியும் அழுத் தமாயிருக்கிறது.
சரோ : கே.சி. ஸ்டோரிலே வாங்கினேன் அம்மா.
மனோ: இதோ பாருங்க அக்கா! எவ்வளவு மத்தாப்பு வச்சிருக்கேன் தெரியுமா?
(தன் கையில் இருக்கும் பையைத் திறந்து காட்டுகிறான்.)
சரோ: அடே நிறைய வச்சிருக்கியே எனக்கு தரமாட்டாயா மனோ?
மனோ: (சரோவுடைய கம்மலைக் காட்டி) உங்க புது கம்மல் அவ்வளவு மின்னலையே அக்கா. என் பக்கத்தில் பிளாரன்ஸ் ஆன்டி இருந்தாங்க. அவங்க கம்மல் எப்படி மின்னுச்சுது தெரியுமா லைட்டிலே!
ரூத்: இதைத்தான் பார்த்துக்கிட்டிருந்தியா கோயில்ல.
மனோ: ஒவ்வொருத்தரும் என்னென்ன கலர் சாரி கட்டி யிருக்காங்கன்னும் பார்த்தேன். எவ்வளவு தெரியுமா?
(கோயில் புத்தகங்களை கையில் ஏந்தியவாறு கோயிலுக் சுலர்குள் இருந்து வந்த மாலி, புத்தகங்களை வெஸ்ட்ரியில் வைக்க வெஸ்ட்ரிக்குப் போகிறார்.)
ரூத்: இன்னைக்கு குயர் அழகாகப் பாடினாங்க. உங்க டோன் கூட நல்லா இருந்தது நீங்கள் ஜெபங்களைச் சொல்லும் போது.
போதகர்: அஞ்சுக்கு இரண்டு பழுதில்லைன்னு இருந்த தாக்கும். ஹில்டாவும் ஸ்டீபனும் துணி டிஸ்ட்ரிபூஷனுக்கு வருவார்கள் அழைச்சால். ஆனால் அவங்களுக்குத்தான் வர முடியாது. மோஸஸ் காம்பவுண்டிலே அவங்க இரண்டு பேருமே ஊரிலே உள்ள ஏழைப் பிள்ளைகளுக்கு விருந்து கொடுக்கிறாங்களே. ஜோசப்! கதவு சன்னல்களை அடைச் சுட்டு துணி டிஸ்ட்ரிபியூஷனுக்கு நீ தயாராகு. ஆமா அனி அம்மா வச்சுலா அம்மா இவங்களாம் சோஷியல் சர்விசிலே ஆர்வம் உள்ளவங்களாச்சே, அவங்க வரக் கூடுமே.
ஜோசப்: அவங்களும் வரலையாம். காலை 7 மணிக்கு பிரதர் சஞ்சீவி கூட்டத்துக்குப் போறாங்களாம்.
(மாலி, வெஸ்ட்ரியிலிருந்து மண்டபத்துக்கு வருகிறார்.)
மனோ: சரோ அக்கா! வாங்க மத்தாப்பு வெளியிலே போய். கொளுத்தலாம்
ரூத்: சரோ நீ தனியாக வந்திருக்கியா? சரோ : இல்லை. அப்பா வந்திருக்கிறார். (ஜோசப்பிடம்) கோயிலுக்குள்ளே போறீங்கதானே. அப்படியே அப்பா கிட்ட நான் மண்டபத்திலிருக்கேன்னு சொல்லிடுங்க.
(ஜோசப் கோயிலுக்குள் போகிறான்.)
ரூத்: சரோ, நீயும் சஞ்சீவி கூட்டத்துக்குப் போய்க்கிட் டிருக்கேயாமே.
சரோ: அங்கே எழுப்புதலாகத்தானிருக்கிறது. மேலும் அவர்கள் எல்லாரும் என்னோடு மிகவும் பாசத்தோடு பழகுகிறார்கள்.
மனோ: வாங்கக்கா, வாங்கம்மா நீங்களும். மத்தாப்பு கொளுத்துவோம் வாங்களேன்.
ரூத்: சரி வா !
(ரூத், சரோ, மனோ மூவரும் வெளியே போகிறார்கள், செல்வின் வருகிறார்.)
செல்வின்: அடேயப்பா நல்ல குளிர்! அடுத்த வருஷமாவது பாரீஷ் ஹாலில் து ஒரு டீ ஸ்டால் வச்சுடணும்.
போதகர்: வீட்டிற்குப் புறப்படலையா நீங்க?
செல்வின்: பண்டிகை அரேன்ஜ்மெண்ட் கமிட்டியிலே இருக்கேனே. மற்றவங்க பேருக்குத்தானே இருக்காங்க. இரவல் வாங்கின பூந்தொட்டிகள், சேர்கள் எல்லாம் போய்ச் சேரவேண்டிய இடத்தில் போய்ச் சேர வேண்டாமா?
போதகர்: செக்ஸ்டன் இருக்கான். கார்டனர் இருக்கார். இவங்களெல்லாம் பார்த்துக்கமாட்டாங்களா?
செல்வின்: காலம் கெட்டுப் போச்சே. ஆள் இருக்கணும் அப்போதான் ஒழுங்காக செய்வாங்க. என்ன வேலை யார்க்கிறாங்க? ஒண்ணும் சரியில்லை. இந்தா பாருங்களேன்.
(காட்டுகிறார்) எப்படி நட்டு வச்சிருக்கார் பார்த்தீங்களா நம்ம தோட்டக்காரர், மரங்களை எல்லாம் கோணலு மாணலுமா. தோட்டத்துக்குத்தான் ஒரு அமைப்பு இருக்கா. அடுத்த பாஸ்ட்ரேட் கமிட்டிற்கு எலெக்ட் ஆயிடனும். பல திட்டங்கள் வைத்திருக்கிறேன். நான் இந்த தோட்டத்தை அழிச்சிட்டு வேறு புதுசா அமைக்கணும் தோட்டம். இந்தக் கோயிலின் தோற்றமும் சரியாயில்லை. கோயிலை ரீமாடல் பண்ணி புதுப்பிக்கணும். காம்பவுண்டிலே எவ்வளவு இடம் இருக்குது பாருங்க வீணாக செக்ஸ்டன் வீட்டுப் பக்கத்திலே. அந்த இடத்திலே ஒரு நாலு மாடி கட்டிடம் கட்டி வாடகைக்கு விடணும். கோயிலுக்கு நல்ல வருமானம் வரட்டுமே.
போதகர்: செய்யவேண்டியதுதான். ஆனாலும் அதைக் காட்டிலும் செய்யவேண்டிய வேலை ஒண்ணு இருக்கே, முக்கியமான வேலை. இப்போ 20ஆம் நூற்றாண்டின் இறுதிக்கு வந்துட்டோம். மக்களின் மனப்பாங்கு எவ் வளவு தூரம் கெட்டிருக்கிறது. நாட்டில் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன. சுயநலம் எவ்வளவாகத் தாண்டவமாடுகிறது. மக்களுக்குள் மக்களின் அன்பும் தணிந்து போயிருக்கிறது. கோயிலுக்கு கட்டிடம் கட்டு வதைக் காட்டிலும் மக்களைக் கட்டுவது மிகவும் தேவையா யிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டுக்கு மக்களை இப்போதே பக்குவப்படுத்த நாம் கடமைப்பட்டிருக்கோம் இல்லையா?
(நோவா கோயிலுக்குள் இருந்து வருகிறார்.)
செல்வின்: நாமென்ன ஊரைக் கட்டமுடியுமா? எல்லாம் மக்களோட மனசையும் மாற்ற முடியுமா? கோயில் இருக்குது, ஆராதனை, கன்வென்ஷனெல்லாம் நடக்குது, ஜெபம் பண்ணுறோம், தான தர்மங்கள் செய்கிறோம். போதும். கோயில் கட்டிடத்தை ரீமாடல் பண்றது அது ஒரு முக்கியமான வேலையாக எனக்குத் தோணுது.
நோவா: அப்படியே எங்க கோயிலுக்கும் ஒரு போட்டுடுங்களேன்.
செல்வின்: இனி அதைப்பற்றி பேசுறதிலே பிரயோஜன மில்லை. உங்க குடியிருப்பு சனங்கள் இந்தக் கோயிலுக்கு வந்துகிட்டிருக்கட்டும்.
நோவா: எல்லாராலேயும் வரமுடியலையே. வரமுடிஞ்சவங் களும் உங்க உயர்ந்த அந்தஸ்தை நினைச்சு சங்கடப் படுறாங்க.
செல்வின்: ஒரு குருப்பா அவங்களை கீழே ஒரு பக்கமாக உட்காரச் சொல்லுங்களே.
நோவா: அப்படி உட்கார்ந்தாலும் வேண்டாத ஒரு இடத் துக்கு வந்த மாதிரி தோணுதே அவர்களுக்கு. எனக்குக் கூட சங்கடமாப் போகுது சில சமயம். நவநாகரிகமான உயர்ரக கோயிலுக்கு ஆடைகளை அணிச்சுக்கிட்டு நீங்கள்ளாம் வரும்போது எப்படிங்க என்னைப்போல அந்தஸ்து உள்ளவங்க கோயிலுக்குள்ளே வந்து எவ்வளவு நேரத்துக்கு கூனிக் குறுகிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியும்? இன்னைக்கு நான் வெளியிலேயே நின்றுட்டேன், வாசலண்டை. அப்போ என் அண்டை ஒருத்தர் வந்து நின்றார். அவரை இதற்குமுன் நம்ம கோயில்ல பார்த்த தில்லை. 'கோயில்ல இடமில்லைன்னு பார்க்கிறீங்களா. பண்டிகையாச்சே பண்டிகை கிறிஸ்தவங்களும் வந்திருக் காங்க நிறையப் பேர். அவங்களும் முண்டி அடிச்சுக்கிட்டு உள்ளே போய் உட்கார்ந்துட்டாங்களே, இடமில்லையே. ஆனால் அதோ பாருங்க ஒரு இடம், அந்த மூலையிலே காலியாயிருக்குது முந்துங்கள். பிடிச்சுக்கலாம்'ன்னேன் அவரண்டை காலியிருந்த இடத்தை சுட்டிக்காட்டியபடி: அவர் 'வேணாம் உள்ளே நாடகம் நடக்குது, சனங்கள் உட்கார்ராங்க, எழும்புறாங்க. முட்டுப்போடுறாங்க, எல்லாருமா சேர்ந்து படிக்கிறாங்க, பாடுறாங்க நல்லா இருக்குது. ஆனால் எனக்குத்தான் அங்கே இடமில்லையே, எப்படி நான் உள்ளே போறது'ன்னார் பதிலுக்கு. அப்போ நான் சொன்னேன் அதோ பாருங்க கட்டிடம், அங்கே பிரதர் சஞ்சீவி கூட்டம் நடத்துகிறார், அங்கே ரொம்ப எழுப்புதலாக இருக்கிறதாக சொல்லிக்கிறாங்க, போய்ப்பார்க்கிறீங்களா?"ன்னு கேட்டேன். அவர், அங்கே போயிற்றுதானே வாரேன். அங்கே இரட்சிக்கப்பட்ட வர்களுக்குத்தான் இடம், எனக்கு இடமில்லைன்னு சொல்லி அனுப்பிச்சாரங்க'ன்னார் வருத்தத்தோடு. நான் ‘ஏன் வருத்தப்படுறீங்க நம்ம மனசுதான் கோயில், அங்கே ஆண்டவர் இல்லென்னா எந்தக் கோயிலிலேயும் நீங்க அவரைக் காணமுடியாது, எந்தக் கூட்டத்திலேயும் அவரைக் காணமுடியாது'ன்னு தேற்றினேன் அவர், ‘ஆனாலும் எனக்கு அவரை. வருத்தமாகத்தானுங்க இருக்குது. சத்திரத்திலே எனக்கு இடமில்லைன்னு சொல்லிட்டாங்க. என்னோட சொந்தக்காரரும் எனக்கு இடந்தரலை; சரி மோசஸ் வீட்டிற்குப் போறேன்'னார். நான், 'மோசஸ் வீட்டுக்கா!'ன்னேன் திரும்பி பார்த்த படி, ஆளைக் காணோம்! மறைந்துவிட்டார், தேடியும் பார்த்தேன். காணவே முடியல்ல!
செல்வின்: என்ன அழகான கிறிஸ்மஸ் கதை!
நோவா : கதையில்லை.
செல்வின்: இப்படிப்பட்ட ஒரு கதையை போதகர் உங்களுக் குச் சொல்லியிருக்கணும். நீங்கள் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்றீங்க, அவ்வளவுதான்.
போதகர்: இல்லை. அப்படிப்பட்ட கதையை நான் அவருக்குச் சொன்னதில்லை.
செல்வின்: அப்போ நோவாவுக்கு ஆண்டவர் தரிசன மாயிற்றாரா. அத்தான் மோசஸைக் கேட்கணும். அவ ருடைய வீட்டிற்கு யாராவது கிறிஸ்மஸ் அன்று வந்தார் களா இல்லையான்னு.
போதகர்: எதற்கு இதெல்லாம். நோவாவுக்கு ஆண்டவர் தரிசனமானாரோ இல்லையோ. இந்தக் கோயிலிலே பெரும் பாலான மக்கள் வெறும் சடங்காச்சாரத்தைத்தான் நிறைவேற்றுகிறவர்களாயிருக்கிறார்கள், வெறும் மத அனுஷ்டானங்களுக்குத்தான் கட்டுப்பட்டிருக்கிறார்கள் என்ற ஒரு உண்மையாவது தெளிவாகுதல்லவா.
செல்வின்: என்ன தெளிவாகுது. மத அனுஷ்டானங்களிலே நம்பிக்கை இல்லாத ஒரு போதகர் எங்களுக்கு போதக ராக வந்திருக்கிறது தெளிவாகுது. (நோவாவிடம்) இதோ சஞ்சீவி வாரார், அவரிடம் உங்க கதையைச் சொல்லுங்க. (செல்வின் கோயிலுக்குள் போகிறார்.)
போதகர்: இது ஒரு வேடிக்கையான காலம். ஒன்று உண்மை என்று தெரிந்தாலும் மக்கள் உடனே அதை பூரணமாக ஏற்றுக்கொள்ளாத காலம். ஒருசிலவற்றின்மேல் அவர் கள் கொண்டுள்ள நம்பிக்கை தவறு என்று அறிந்தாலும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்ளும் காலம்.
(சஞ்சீவி வருகிறார் )
சஞ்சீவி: கோயில் முடிஞ்சுட்டதா? எல்லாரும் போயிட் டாங்களா?(கோயிலுக்குள் எட்டிப் பார்க்கிறார்) ஒருத்தரும் இல்லை தனி ஜெபம் பண்றவங்க! நாங்க இராத்திரி பூரா வும் விழிச்சிருந்து ஜெபம் பண்ணினோம். என்ன சந்தோஷம் பிரேஸ்த லார்ட்! (நோவாவிடம்) நாகமணி தெரியுமா? உங்க சொந்தக்கார பையன். கடவுளுக்குள் வாழ்ந்த சகோதரன். இப்போ எங்ககூட்டத்திலே சேர்ந்திருக்கான்.
நோவா: தெரியும். அவனோட வீட்டிலிருந்து சரோவைக் கேட்டு வந்தாங்க. போதகரைக் கேட்கலாம்ன்னு இருக் கேன்.
சஞ்சீவி: கேளுங்க. பையன் உண்மையான கிறிஸ்தவன். நான் சர்ட்டிபிக்கேட் கொடுக்கமுடியும்.
நோவா: ஆனால் பையன் உங்க கூட்டத்திலே சேர்ந்துட் டான். நாங்க சி.எஸ்.ஐ. திருச்சபையைச் சேர்ந்தவங்க. என் பொண்ணு உங்க சபையைச் சேர்ந்த பையனைக் கட்டிக்கிறதிலே பிரச்சினை இருக்கான்னு பாஸ்டரைக் கேட் கிறேன்.
சஞ்சீவி: சரி செய்யுங்க.
(சஞ்சீவி போகிறார். நற்கருணைப் பாத்திரங்களைக் கோயிலிலிருந்து எடுத்துக்கொண்டு வந்த ஜோசப் அவற்றை
வெஸ்ட்ரியில் கொண்டுபோய் வைக்கவெஸ்ட்ரிக்குப் போகிறான்.)
நோவா: சரோவுக்கு கலியாணம் ஆயிட்டா எனக்கு பாரம் குறைஞ்சு போகும்.
போதகர்: ஆமா (இப்போது சத்தமாக) ரூத்! (கூப்பிடுகிறார்) சிறிது நேரத்தில் ரூத் வருகிறாள். ஜோசப் வெஸ்ட்ரியி லிருந்து மண்டபத்துக்கு வருகிறான்.)
ரூத், ஒரு கலியாண விஷயம் பேசணும். வாயேன் கோயிலுக்குள் போய் ஜெபம் செஞ்சிட்டு அதைப்பற்றி பேசுவோம். (போதகர், ரூத், நோவா மூவரும் கோயி லுக்குள் போகிறார்கள்.)
மாலி: காத்திருந்தானாம் ஒருத்தன்.
ஜோசப்: என்ன மாலி!
மாலி: திருமண பேச்சு நடக்குது அங்கே (காட்டுகிறார்). சரோவுக்கு திருமணம். உனக்கு தைரியம் வரலையே அவ ளண்டை பேச. மனதுக்குள்ளே அவளை நினைச்சுக்கிட்டிருந் தால் போதுமா. எப்படிடும்.டும் கலியாணம் நடக்கும்.)
ஜோசப்: (குளம்பியபடி) என்ன மாலி சொல்றீங்க!
(மனோவும் சரோவும் வருகிறார்கள்)
மனோ : (ஒரு வெடியைக் காட்டியபடி) மாலி, இதை வெடிச் சுக்காட்டுங்களேன். சரோ அக்காவுக்கு வெடிக்க பயமா 'யிருக்காம்.
(வெடியை மாலியின் கையில் கொடுக்கிறான்)
மாலி: பூ ! இது என்ன வெடி. ஜோசப்பிடம் கொடுக்க லாம். ஆனால் அவன் பெரிய பெரிய வெடிகளைத்தான் வெடிப்பான். இப்போகூட அவனுக்காக ஒரு ரொம்ப பெரிய வெடியை தயாரிச்சுக்கிட்டிருக்காங்க ஒரு இடத் திலே. அதையும் இலேசா ‘டமார்'ன்னு வெடிச்சுடுவான். அவன் ரொம்ப தைரியசாலி. உனக்குத் தெரியுமா மனோ. அன்னைக்கு ஒரு நாள் ஒரு முரடன் ஒரு நோஞ்சானைப்
போட்டு அடிக்கிறான் உதைக்கிறான் ரோட்டிலே. ஒருத் தருக்கும் தைரியமில்லை முரடன் கிட்ட போறதுக்கு. அப்போ எங்கேயோ இருந்து பாஞ்சு வந்தான் பார் ஜோசப். டமார்! ஒரு மோதல் மோதுறான் முரடன் மேலே விழுகிறான் முரடன் கீழே! கும்! கும்!ன்னு குத்துவிடுகிறான் ஜோசப் முரடனுக்கு செத்தேன்! செத்தேன்! ஓடுறான் முரடன். அவன் பயந்துகொண்டு ஓடின ஓட்டத்தைப் பார்க்கணுமே! அப்படி ஓடுறான்.
மனோ சரோ : அப்படியா!
ஜோசப்: வெறும் கதை.
மாலி: அப்படித்தான் சொல்வாங்க பயில்வான்கள்ளாம். நான் குத்துச்சண்டை, மல்யுத்தம் எல்லாம் சொல்லித் தாரேன் இப்போ அவனுக்கு. (சரோவிடம்) நீ லேசா நினைச்சுடாதே அவனை சரோ. அவன் பெரிய பேச்சாளி மேலிட பேச்செல்லாம் பேசக் கற்றுக்கிட்டிருக்கான். அவன் படிச்சவன். 9 வரை படிச்சிருக்கான். இப்போ அவன் சொல்லித்தாரான் பாடம் மற்றவர்களுக்கு (ஜோசப்பிடம்) எத்தனை பேர் படிக்கிறாங்க ஸ்கூலிலே.
ஜோசப்: அஞ்சு பேர். இராப் பாடசாலை. எழுதப்படிக்கத் தெரியாதவங்களுக்கு சொல்லித்தாறேன். போதகர் ஐயாவோட ஏற்பாடு.
மாலி: ரொம்ப அடக்கம்! ரொம்ப அடக்கம்! பேசமாட் டான் அதிகமாக. ஆனால் உன்கிட்டே தனியாகப் பேச ஆரம்பிச்சுட்டால் பேசுவான், பேசுவான் மணிக்கணக்கில் பேசுவான். நீ கேட்டுக்கிட்டேதான் இருக்கணும் (மனோ விடம்) வா மனோ! இந்த வெடியெல்லாம் சின்ன வெடி. (வெடியைக் காட்டுகிறார்) ஜோசப் பெரிய பெரிய வெடி யைத்தான் வெடிப்பான். அதோ பார் தோட்டத்தை, மரங்களும் செடிகளும் நம்மைப் பார்த்து சிரிக்குது. அது களுக்குப் போய் 'குட்மார்னிங்! குட்மார்னிங்!'ன்னு குட் மார்னிங் சொல்லிட்டு, உனக்கு வெடிகளை வெடிச்சுக் காட்டுகிறேன் வா.
(மாலியும் மனோவும் தோட்டத்திற்கு போகிறார்கள்)
சரோ: என்ன, பிரமாதமாக அளக்கிறார் உங்களைப்பற்றி மாலி.
ஜோசப்: இப்படித்தான் அவர் சில சமயம் அளந்துவிடுவார். கதையை. (கையைக் காட்டி) அங்கே கோயிலுக்குள் போதகர் அய்யாவும் அம்மாவும் பேசுறாங்க உங்க அப்பா கிட்ட என்ன விஷயம் தெரியுமா? உன் கலியாண விஷயம்
பேசுறாங்க.
சரோ: (மிகவும் சாதாரணமாக) உம் அப்படியா அப்புறம்... (மௌனம் இருவரும் சிறிது நேரம்)
ஜோசப்: (சற்று தயக்கத்துடன்) உங்க . . . உங்க வீட்டு
கொ.. கொ . . . கொல்லையிலே ஒரு பெரிய வைக்கோற் படப்பு இருக்குதே. சரோ: உம் இருக்குது.
ஜோசப்: என்னோட வீட்டுப் பக்கத்திலே நிறைய காலியிடம் இருக்குது.
சரோ: வைக்கோற் படப்புதான் இல்லையாக்கும். ஜோசப் குருவிகள் தான் பாவம், வைக்கோல் கிடைக்கல்ல. சண்டு சருகை எடுத்துக்கிட்டு வந்து கூடு கட்டப்பார்க்குது) என் வீட்டிலே.
சரோ: எங்க வீட்டிலே நிறைய வைக்கோல் இருக்குதுன்னு சொல்லி அனுப்பக்கூடாது அதுங்களுக்கு,
ஜோசப்: என் வீட்டு முற்றத்திலே நிறைய இடமிருக்குது பூந்தோட்டம் போடறதுக்கு.
சரோ: போடுங்க, போடுங்க நான் வாரேன் பூவெல்லாம் பறிச்சுக்கிட
(மௌனமாகயிருக்கின்றனர் இருவரும் சிறிது நேரம்) உம் பேசுங்க!
(ரூத் வந்துகொண்டிருப்பது தெரிகிறது) பேசுங்க! உம் பேசுங்க! (அவசரமாக சொல்லுகிறாள்).
ஜோசப்: அது..அது ... சரோ : அது! அது! சொல்லுங்க சீக்கிரம் மனதிலுள்ளதை!
(ரூத் வந்து விடுகிறாள்)
ரூத்: சரோ உனக்கு நாகமணி தெரியுமா? (அவள் பதிலுக்கு எதிர்பாராமல் சத்தமாக 'மனோ! மனோ'வென்று கூப்பிடு கிறாள்.) ஜோசப் நீ அய்யாவைக் கூப்பிடுகிறதாகச் சொல். (ஜோசப் தயங்கியபடி போகிறான்)
சரோ: எந்த நாகமணி?
ரூத்: சைக்கிள் கடை வச்சிருக்காராமே தொழில் பேட்டை ரோடிலே. சரோ: பிரதர் நாகமணியா! என்ன அழகா பாடுறார் தெரியுமா அம்மா, அவர்! ரொம்ப நல்லவர். ஆசைகளை யெல்லாம் துறந்தவர். சிஸ்டர்! சிஸ்டர்!ன்னு
என்னண்டை ரொம்ப பிரியமா பேசுவார்.
ரூத்: அவருக்கு கலியாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்களாம் அவங்க வீட்டிலே.
சரோ அவருக்கா! கடையை மூடிட்டு முழுநேர ஊழியத்துக்குப் போறதாகக் கேள்விப்பட்டேன்! ரூத்: கலியாணம் பண்றதாயிருந்தால் கடையை மூடுறதில்லை யாம்.
சரோ: கடையை மூடக்கூடாதுதான். அவரோட அப்பா அம்மா இருக்காங்களே. அவரை
நம்பி
ரூத்: அவருக்கு ஒரு பெண்மேலே ரொம்ப இஷ்டமாம். சுட்டிக் கிறதாயிருந்தால் அவளைத்தான் கட்டிக்கிடுவாராம்.
சரோ: அவளைக் கட்டிக்கல்லன்னா கடையை மூடிட்டு முழு நேர ஊழியத்துக்குப் போயிடுவாராமா? அவங்க
ரூத்: அவங்க கூட்டத்திலே இதைப்பற்றி ஜெபத்திலே கடவுளைக் கேட்டாங்களாம். கடவுள், நாகமணி ஊழியத் துக்கு வரவேண்டாம். கலியாணம் பண்ணிக்கிட்டு கடையை நடத்திவரட்டும்ன்னு சொல்லிட்டாராம்.
சரோ: அவர் இஷ்டப்படுற பெண்ணையே கட்டிக்கச் சொல் லிட்டாராமா?
ரூத்: பெண்ணை கேட்டுப் பார்க்கச் சொன்னாராம்.) அது தான் என்னைக் கேட்கச் சொல்லியிருக்காங்க உன்னை.
சரோ: என்னையா! என்னையா? பிரதர் நாகமணி கட்டிக்க நினைக்கிறார் ! இல்லை அம்மா இல்லை! கடவுள் அவரை எனக்குக் காட்டலன்னு அவர்கிட்ட சொல்லிடுங்க.
ரூத்: அப்படின்னா, உனக்கு யார்மேலேயும்.
(சரோ சொல்லத் தயங்குகிறாள். மனோ வருகிறான்)
மனோ: வீட்டுக்குப் போகலாமாம்மா? மரஞ்செடிகளுக் கெல்லாம் மாலி வணக்கம் வணக்கம்ன்னு சொல்லிட்டு வாரார். அதோ பாருங்க (காட்டுகிறான்). நான்கூட அதுங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லிட்டு வாறேன்.
ரூத்: அப்படியா!
மனோ: தூணி டிஸ்ரிபூஷனுக்கு நானும் வாரேம்மா, சரோ அக்கா நீங்களும் வாங்க. முதல்ல வெடியெல்லாம் வெடிக் கனும் வீட்டிலே போய்.
(வாசல் வரை போய் அப்பா! என்று கூப்பிடுகிறான். சில செடிகளை எடுத்துக்கொண்டு வருகிறார் மாலி)
ரூத்: என்ன செடிகளாம்?
மாலி: ஜோசப் வீட்டு முன்னே நடப்போறோம்.
ரூத்: ஜோசப்புக்கு தோட்டம் போடறதிலே இன்டரஸ்டா! மாலி: தன் வீட்டுக்கு அவனே வெள்ளையடிச்சு வர்ணம் கொடுக்கிறான் தெரியுமா உங்களுக்கு. ரூத்: அடே பரவாயில்லையே!
மாலி: என்னமோ அம்மா இப்போ ரொம்ப சந்தோஷமா யிருக்கோம். இந்த தோட்டத்தை அழிக்கணும்னு செல்வின் ஐயா சொல்லிட்டு வரார். புது பாஸ்ட்ரேட்
கமிட்டியிலே அவரும் வந்துட்டார்ன்னா . . . அதுதான் எனக்கு பயமாயிருக்குது.
(போதகரும் நோவாவும் வருகின்றனர். கோயில் விளக்கு கள் அணைந்துகொண்டே வருகின்றன.)
போதகர்: புறப்படலாமா ரூத்? (ரூத் ஏதாவது பேசுவாள் என்று அவளைப் பார்க்கிறார்) ரூத்: அந்த இடம் சரோவுக்கு விருப்பமில்லையாம்
(சிறிது நேரம் ஒருவரும் பேசவில்லை) மனோ: (ரூத்திடம்) போகலாம்மா வீட்டுக்கு
(ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள்) [வெளிச்சம் மறைந்து இருள் சூழ்கிறது]