அந்த இரண்டாம் கற்பனை பாகம் 01
அது தென் இந்திய திருச்சபையைச் சேர்ந்த ஒரு கோவில். தெரிவது முன் மண்டபமும் வெஸ்ட்ரியும், வெஸ்ட் ரிக்கு சன்னல்கள் இருக்கின்றன. மண்டபத்திலிருந்து கோயி லுக்குள் செல்லவும் ஒரு வாசல். அது கோயிலின் பிரதான வாசல். அது திறந்திருக்கிறது. திறந்திருக்கும் இந்த வாசல் வழியாக கோயிலின் உட்புறத்தை நாம் ஓரளவு காணமுடி கிறது. கோயிலின் ஆர்கனை யாரோ இசைத்துக்கொண்டிருக் கிறார்கள். அன்று ஓர் ஞாயிற்றுக்கிழமை. மாலை நேரம்.
[வெஸ்ட்ரியிலிருந்து ஒரு நாற்காலியோடு வரும் போதகர் ஜான், நாற்காலியை மண்டபத்தின் நடுவில் வைத்துவிட்டுப் பேச ஆரம்பிக்கிறார்.] போதகர்: என் பெயர் ஜான்.
(அவருக்கு வயது 40 இருக்கும். வளர்த்திக்கேற்ற பருமன். மலர்ந்த முகம்.)
இது என் கோயில் (காட்டுகிறார்) நான் பணிபுரியும் கோயில். சமீபத்தில்தான் இங்கு மாற்றலாகி வந்திருக் கிறேன். இது ஒரு சி.எஸ்.ஐ. கோயில். சி.எஸ்.ஐ. கோயில்களில் இது ஒரு டிரெடிஷனல் சர்ச். வழிபாட்டு முறையிலிருந்து எல்லாக் காரியங்களும் இங்கு முறைதவறா மல் சம்பிரதாயப்படி நடந்தேறி வருகின்றன. (வெஸ்ட்ரியி லிருந்து ஒருவர் வருகிறார். அவர் கையிலும் ஒரு நாற்காலி இருக்கிறது).
இதோ வருகிறாரே இவர் (காட்டுகிறார்) இந்த கோயி லின் ஓர் முக்கிய அங்கத்தினர். இவர் பெயர் செல்வின். (செல்வின், தம்முடைய நாற்காலியைப் போ தகரின் நாற்காலிக்கு வலது புறத்தில் வைக்கிறார். செல்வினுக்கு 50 வயதிருக்கும். விலை உயர்ந்த சூட் அணிந்திருக்கிறார்).
மிஸ்டர் செல்வின்! காலம் சென்றுகொண்டே இருக் கிறது. அது செல்லச் செல்ல சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. ஆனால் நம் கோயிலுந் தானிருக்கிறது. ஆதிமுதற்கொண்டு அங்கு யாதொரு மாற்றமுமில்லாமல் ஒரு கூட்டுக்குள் அடைபட்டு இயங்கு வதுபோல் அது இயங்கி வருகிறது அல்லவா?
செல்வின்: சித்தாந்தம், சம்ரதாயங்கள், கோட்பாடு, நாம் வழிபடும் வழிபாட்டு முறை, இவை மாற்றத்துக்குரியவைகளா? அல்லவே.
போதகர்: நாம் ராக்கெட்டில் பறக்கலாம் ஆண்டவர் மட்டும் இன்னமும் கோவேறு கழுதையில்தான் ஏறி வரவேண்டும்; இப்படிச் சொல்லுகிறார்போல் இருக்கிறது உங்கள் கூற்று.
(செல்வின் பதில் சொல்லவில்லை. வெளியிலிருந்து மண்டபத்திற்கு வருகிறார் பிரதர் சஞ்சீவி. அவருக்கு 35 வயதிருக்கும். வேட்டியும் ஜிப்பாவும் அணிந்திருக்கிறார். அவர் கையில் ஒரு பைபிள் இருக்கிறது.)
இவர் பிரதர் சஞ்சீவி. (சஞ்சீவியை அறிமுகப்படுத்துகிறார் போதகர்.)
சஞ்சீவி: எனக்கொரு நாற்காலியைக் கொண்டு வரேன்.
(வெஸ்ட்ரிக்குப் போகிறார் சஞ்சீவி.)
போதகர்: (செல்வினைப் பார்த்து) எனக்காக வருத்தப்படு கிறாராம் பிரதர் சஞ்சீவி. மோட்சத்தில் எனக்கு இடமில்லை என்று சொல்லி வருந்துகிறாராம். கேள்விப்பட் டேன். (ஒரு நாற்காலியைக் கொண்டு வருகிறார் சஞ்சீவி. அதை போதகரின் நாற்காலிக்கு இடது பக்கமாக வைக்கிறார்.)
பிரதர் சஞ்சீவி, எங்க சபையைச் சேர்ந்தவர் ஒரு சமயம், எங்களை விட்டுப் பிரிஞ்சு போயிற்றார். பிரிஞ்சு போய் ஒரு கூட்டத்தை ஆரம்பிச்சு அதை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார் இப்போது.
சஞ்சீவி: நானாகப் பிரிஞ்சி போனேனா, இல்லையே. தூய ஆவியானவர் தான் என்னை அழைச்சார். அழைச்சிட்டுப் போய் தனியாக ஒரு கூட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னார். இப்போதும் அவர் கிரியை செய்துகொண்டுதானிருக்கார். உங்க சபையில் சில நல்ல கிறிஸ்தவங்க இருக்காங்க. அவங்க உள்ளத்தில் அவர் கிரியை செய்துகொண்டிருக் கார். அவங்களையும் எங்களண்டை கொண்டுவந்திடுவார். கூடிய சீக்கிரத்தில்.
செல்வின்: அயோக்கியத்தனம்! அயோக்கியத்தனம்! (சீறுகிறார் செல்வின்)
சஞ்சீவி: யாரிடம் இவர் ஆத்திரப்படுகிறார்? (தலையை அசைத்தபடி) தூய ஆவியானவரிடமா ஆத்திரப்படுகிறார்! போதகர்: வீணாக, தூய ஆவியானவர் பெயரை இழுக்காதீங்க, பிரதர் சஞ்சீவி.
சஞ்சீவி: நானா? நான் ஒருபோதும் அவர் பெயரை வீணாகச் சொல்லமாட்டேன். அவர் என்னை ஆட்கொண்டிருக்கிறார். திடப்படுத்துகிறார். பரிசுத்தப்படுத்துகிறார். இந்த எக்ஸ் பீரியன்ஸ் எல்லாம் உங்களுக்கு இன்னும் கிடைக்கல்ல. இந்தக் கோயிலிலே செய்யும் ஜெபங்களும் கோயில் கூரைக்கு மேலே போறதும் இல்லை.
போதகர்: பாட்டும் ஜெபமும் மட்டும் போதுமா பிரதர் சஞ்சீவி. கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக அல்லவா வாழணும், அதுதானே முக்கியம். சஞ்சீவி: கிறிஸ்தவன் யார் அ சொல்லுங்க. இரட்சிக்கப்பட்டவங்கதான் கிறிஸ்தவன்.
போதகர்: இந்த எண்ணந்தான் உங்க எல்லாருக்கும். உங் களைத் தவிர மற்றவங்க எல்லாம் பாவிகள் என்ற எண்ணம் உங்களுக்கு. சரி, எங்களை விட்டுப் பிரிஞ்சு தான் போனீங்க. போய் சமுதாயத்தைத் தூய்மைப்படுத்தக்கூடாதா? அதை பரிசுத்தப்படுத்தக்கூடாதா?
சஞ்சீவி: அந்தச் சமுதாயத்துக்குள்ளே எப்படி நாங்கள்போய் எங்களை கொடுத்துக்கொள்கிறது! அது எங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாது. அதன் பாவங்களிலே நாங்கள் சிக்கி விடக்கூடாது. நாங்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஆசாரியக் கூட்டம். பரிசுத்தத்துக்கென்று பிரித்தெடுக்கப்பட்டிருக் கேரம்.
போதகர்: இப்படித்தான் எஸ்கேப் ஆறீங்க உலகத்தைவிட்டு சமுதாயத்தை விட்டு.
சஞ்சீவி: நாங்க எஸ்கேப் ஆறோம். நீங்க? சமுதாயத்தின் ஆசாபாசத்திலே சிக்கியிருக்க ஆசைப்படுறீங்க அப்படித் தானே?
போதகர்: கிறிஸ்தவம், சமுதாயத்தை விட்டுப் பிரிந்ததல்ல, விலகின தல்ல. சஞ்சீவி: போதியுங்க, போதியுங்க எல்லாரும் பாவம்செய்யுங்கன்னு போதியுங்க.
போதகர்: அப்படி நான் போதிக்கலையே. இதை நினைத்துப் பாருங்கள். ஆண்டவர் பரிசுத்தர். அப்படி இருந்தும் பாவிகளாகிய நம்மை விட்டு அவர் பிரிஞ்சு வாழவில்லையே. அவர் மட்டும் பிரிஞ்சு வாழ்ந்திருந்தால் அவரால் நமக்கு என்ன பயன் ஏற்பட்டிருக்கும்? ஒரு பயனும் ஏற்பட்டிராது. பாவு
சஞ்சீவி: அப்படியானால் பாவத்தோடு நாம் ஒப்புரவாகலாம்னு சொல்லுறீங்களா?
போதகர்: பாவத்துக்கு பயந்து ஒளியவேண்டாம். உலகத்தைவிட்டு எஸ்கேப் ஆகவேண்டாம் என்றுதான் சொல்லுகிறேன். வாழ்க்கை ஒரு பெரும் கடல். அதில் பயணம் செய்கிறோம். மற்றவர்களோடு சேர்ந்து பயணம் செய்கிறோம். மக்களோடு சேர்ந்து வாழும்போது இரு பெரும் சக்திகள் அங்கே உருவாகின்றன. ஒன்று சுயநலம், மற்றது அன்பு. எல்லாப் பாவங்களுக்கும் வேர் பாவம் அந்த வேரை அழிக்கக்கூடியது அன்பு. ஆண்டவர் அன்பின் சொரூபி. ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். நம் வாழ்க் கையில் அவர் இருக்கிறார். அவரில் நிலைத்திருந்தால் நாம் பாவத்தைக் கண்டு பயந்து ஓடவேண்டிய அவசியமே இல்லை.
சஞ்சீவி: ஒண்ணையொன்று சொல்லி இப்படிச் சமாதானம் சொல்றதிலே பிரயோஜனமில்லை. நமக்கு வேண்டியது ஒண்ணே ஒண்ணு. நம்ம ஆத்ம இரட்சிப்பு. நான் போன ஆண்டிற்கு முந்தின ஆண்டு, ஜனுவரி மாதம் 6 ஆம் தேதி, இந்தப் பாவ உலகத்திலிருந்து மீட்கப்பட்டவன். பிரேஸ் த லார்டு. இப்போ பாவக் கடலிலே பயணம் செய்கிற வனில்லை. ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம். பரத்திலே எனக்கு பங்கு இருக்கிறது. நீங்க மனந்திரும்பணும், இரட் சிக்கப்படணும், இல்லையேல் உங்களுக்குப் பரத்திலே பங்கு இருக்க முடியாது. பங்கு இருக்காது.
போதகர்: அதைப்பற்றி கவலைப்படவில்லை பிரதர் சஞ்சீவி. ஆண்டவர் பார்த்துக்கொள்வார் எல்லாவற்றையும்.
சஞ்சீவி: ஐயோ! என்ன நிர்ப்பந்தமான நிலைமை!
(தம்முடைய நாற்காலியில் உட்கார்ந்து பைபிளின் பக்கங்களைப் புரட்டி படிக்க ஆரம்பிக்கிறார். செல்வினும் தம்முடைய நாற்காலியில் அமர்கிறார். வெளியிலிருந்து மண்டபத்துக்கு வருகிறார் நோவா. அவர் வேட்டி அணிந் திருக்கிறார். நோவாவுக்கு வயது 50 இருக்கும்.) போதகர்: வாங்க மிஸ்டர் நோவா. உங்க பேழையிலிருந்து வாரீங்களா?
நோவா: அந்த நோவாவுக்கு மூணு பேர் ஆம்புள்ளப்
பசங்க. சேம், காம், யாப்பேத். ஆனால் இந்த நோவாவா கிய எனக்கு ஆம்புள்ள பசங்க இல்லையே. ஒரு பெண்தான் இருக்கா! ஆமா, சரோவுக்கும் வயசாகிட்டுப் போகுதே. இந்தக் கட்டையை நான் போடறதுக்குள்ளே ஒருத்தன் கையிலே அவளைப் பிடிச்சுக் கொடுத்துடணுமே நான்!
போதகர் : ஆமா, செய்யவேண்டியதுதான் (உற்சாகமாக) ஆனால் நான் கேட்டது உங்க பேழை, நீங்க அடிக்கடிப் போய்வந்துக்கிட்டிருந்தீங்களே, அந்தப் பேழை. அதைப் பற்றி கேட்கிறேன்.
நோவா: (சிரித்துக்கொண்டே) ஓ எஸ் சாராயக் கடையைச்சொல்றீங்க. அடைச்சுப் போட்டுட்டாங்களே எனக்கு ஒருவித இருமல். (இருமிக் காட்டுகிறார்) இது சாராயத் துக்குத்தான் கட்டுப்படுங்க. எங்க நேட்டிவ் டாக்டர் சொன்ன மருந்து அது எனக்கு. அந்த மனுஷனும் என்னடான்னா, இப்போ 85 வயசாகும் அவருக்கு இன்ன மும் ஏதாவது சரக்கு எங்கேயாவது கிடைக்காதான்னு அலைகிறார்.
போதகர்: அப்போ கூடிய சீக்கிரம் அவர் பெயரை பேப்பர்லே பார்க்கலாந்தான் (சத்தமாக சிரிக்கிறார்.) சஞ்சீவி: (எழுந்து நின்றபடி) இதென்ன சிரிப்பு, இதென்ன கேலிப்பேச்சு! போதகர்! அதுவும் இந்தக் கோயில்வாசல்ல!
போதகர்: ஆண்டவர் கூடத்தான் கேலிப் பேச்செல்லாம் பேசியிருந்திருப்பார்.
சஞ்சீவி: (நெஞ்சில் கை வைத்தவாறு) ஆ கர்த்தாவே!
செல்வின்: (எழுந்து நின்றபடி) இப்படித்தான் இல்லாததைச் சொல்லி வேதத்தைப் புரட்டுராங்க இந்தக் காலத்ரீலே சி.எஸ்.ஐ. போதகர்மார். போதகர்: வேதத்தைப் புரட்டலையே. ஆண்டவர் விருந்துக் களுக்குப் போயிருந்ததாக வேதத்தில் இருக்கிறது. அங் கெல்லாம் 'உம்ன்னு சீரியசாக இருந்திருப்பாரா அவர்? கேலிப் பேச்செல்லாம் பேசியிருந்திருப்பார். நடனம்கூட ஆடியிருப்பார் மக்களோடு சேர்ந்து.
சஞ்சீவி: (தலையில் கை வைத்தவாறு) ஆ கர்த்தாவே! போதகர் பேசுற பேச்சா!
செல்வின்: கட்டுப்பாடில்லாமல் பேசினால் எதுவும் பேசலாம். கட்டுப்பாடில்லாமல் பேசக்கூடாது எங்க கோயில்ல ஆமா!
நோவா: செல்வின்! எங்க கோயிலைப்பற்றி என்ன சொல் றீங்க. எங்க குடியிருப்புக் கோயில்.
செல்வின்: அதுதான் கீழே விழுந்துட்டுதே.
நோவா: ஏன் கீழே விழுந்தது? நீங்க ரிப்பேர் பண்ணல்ல அதனால்தானே!
செல்வின்: நீங்க என்ன செய்தீங்களாம்?
நோவா: எங்க கையிலே பணமிருந்தால்தான் ரிப்பேர் செஞ்சிருப்போமே. பாஸ்ரேட் கமிற்றியைக் கேட்டோம். அவர்கள் எங்க கோயிலை ரிப்பேர் செய்யல்ல. ரிப்பேர் செய்ய எங்களுக்குப் பணமும் கொடுக்கல்ல.
செல்வின்: எல்லாம் நாங்கதான் செய்யணும். ரிப்பேர் ல்லப ண்மு செய்யணும். பணமும் கொடுக்கணும், பொறுப்பா? எல்லாம் எங்க
நோவா: இதுதானே தாய்க் கோயில். அடேயப்பா இது எவ்வளவு பெரிய பணக்காரக் கோயில்! இப்போகூட இந்தக் கோயிலே இருந்து ஒரு சின்ன கோயில் எங்களுக்குக் கட்டித்தரலாந்தான் நீங்கள்.
செல்வின்: என்னைக் கேட்டால் உங்களுக்கு கோயிலே அவசியமில்லை. உங்க சனங்கதான் இந்தக் கோயிலுக்கு வந்துக்கிட்டிறாங்களே இப்போ. உங்க கோயில் இடத்தைக்கூட நல்ல விலைக்கு விற்றுடலாந்தான். போதகர்: அப்படியெல்லாம் சொல்லாதீங்க மிஸ்டர் செல்வின்.
செல்வின்: அதோ பாருங்க! அதோ போகிறாரே, அங்கே (தூரத்தில் போகும் ஒருவரைக் காட்டுகிறார் செல்வின்) யார்? என் மைத்துனர், மாணிக்க நகர் இன்டஸ்ரியலிஸ்ட். அவரைக் கேளுங்க நோவா, நிச்சயம் உங்களுக்குக் கோயில் கட்டித்தந்துடுவார்' அல்லது அதற்கு ஏதாவது ஏற்பாடா வது செய்வார்.
நோவா: மோசஸ்தானே ஆமா. அவர் செய்வாரே! நான் ஓடிப்போய் அவரைக் கூட்டியாறேன் (வெளியே விரைந்து செல்லுகிறார்).
செல்வின்: வழித் தெரியாத மனுஷன் என் அத்தான் மோசஸ். எல்லாரும் கார், பங்களான்னு வாழுறாங்க. இந்தமனுஷனுக்கு என்ன வந்தது. மாணிக்க நகரிலே ஒரு சின்ன வீடு கட்டிக்கிட்டு அங்கே குடியிருக்கவும் போயிட்டாரே.
போதகர்: அங்குள்ளவர்களுக்கு இவர் மிகவும் உதவியாயிருக்கார் இல்லையா?
செல்வின்: இவர் என்ன வாழுறார். வரும் லாபத்தில் பெரும் பகுதியை மற்றவர்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு இந்த மனுஷன் என்ன ஒரு ஏழை மாதிரிதானே வாழுகிறார்.
(போதகர் மனைவி பாரீஷ் ஹாலை (Parish hall) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்.)
போதகர்: (கையசைக்கிறார்) ரூத்! ரூத், இப்படி வா இங்கே மண்டபத்துக்கு! (மற்றவர்களிடம்) என் மனைவி ரூத் இருக்காளே அவளோட அப்பாவும் ஒரு போதகர், ஆனால் அந்தக் காலத்துப் போதகர் சபைகளிலே இத்தனை பிரச் சினைகள் இல்லாத காலம். இப்போதான் போதகர்களுக்கு (சிரித்துக்கொண்டே) போதாத காலமாயிருக்கே.
(ரூத் வருகிறாள். அவளுக்கு வயது 35 இருக்கும். ரூத்தைத் தொடர்ந்து போதகரின் மகன் மனோ வருகிறான். அவனுக்கு வயது 7).
ரூத்: தாய்மார் கூட்டம் இன்னைக்கு பாரீஷ் ஹாலிலே நடக் குது. அதுதான் போய்க்கிட்டிருக்கேன்.
போதகர்: 5 மணிக்குத்தானே கூட்டம். இப்போ (கை கடிகாரத்தைப் பார்க்கிறார்) 4.40 ஆகுது ரூத்! ஒரு சேஞ்ச் இருக்கட்டுமே இன்னைக்கு உங்க தாய்மார் கூட்டத்திலே. தாய்மார் நீங்க, பாட்டுப் பாடுங்க, பைபிள் வாசியுங்க, ஜெபம் செய்யுங்க, பிரசங்கம் பண்ணுங்க. கலந்து உரை யாடல் எல்லாம் நடக்கட்டும். ஆனால் பொதுவான ஒரு நோக்கு... பார்வை ... அது இருக்குதே, அது மட்டும் இன்றைக்கு உங்க மனதிலே, நான், என் குடும்பம், என் சபை என்று உள் நோக்கிய தாயிராமல், பிறர், பிறரின் நலம் இவ்வாறு வெளி நோக்கிய தாயிருக்கட்டுமே என்ன சொல்ற? (மனோவைப் பார்த்து) வா மனோ!emmt
(அவனை அணைத்துக்கொள்கிறார்)
ரூத்துக்கு, இவன் ஒரு இஞ்சினியர், அல்லது டாக்டர் ஆகிடணும்னு ஆசை. எனக்கு ஆசை என்ன தெரியுமா? கிறிஸ்தவங்க அரசியலில் நுழையப்பயப்படுறாங்களே. இவன் ஏன் அரசியலில் நுழைந்து, மக்களுக்குச் சேவை செய்யக்கூடாது? இப்படி ஓர் ஆசை! )
சஞ்சீவி: காலம் கெட்டுப் போச்சுது! கெட்டுப் போச்சுது!
போதகரின் நினைவுகளையும் பாருங்கள் (தலையை அசைத்தபடி) அரசியலில் நுழையணுமாம் மகன் ... ! உம் ,..!
(நோவாவின் மகள் சரோ வருகிறாள்) போதகர்: வா சரோ. இவள் நோவாவின் மகள். ரொம்ப சுறுசுறுப்பு. அவங்க வீட்டு வேலை அத்தனையும் இவளே கவனித்துக்கொள்கிறாள். நோவா வைத்திருக்கும் மாடு களைப் பராமரிப்பது முதல், பாலை வினியோகம் பண்றது, கணக்கு வைத்துக்கொள்ளுவது எல்லாம் இவளே செய்கி றாள். பாராட்ட வேண்டும்.
சரோ: எல்லா வேலைகளையும் செய்துதானே ஆகவேண்டும், வேறு வழி? அதோ பாருங்கள் (காட்டுகிறாள்)..
செக்ஸ்டனும், தோட்டக்காரர் மாலியும் வெளியே நின்றுக்கிட்டிருக்காங்க.
போதகர்: ஏன் வெளியே நிற்கிறார்கள்? வா ஜோசப்! வாங்க மாலி!(கூப்பிடுகிறார்).
(செக்ஸ்டன் ஜோசப்பும், தோட்டக்காரர் மாலியும் வருகிறார்கள். ஜோசப்புக்கு 27 வயதிருக்கும், மாலிக்கு 50 வயது.)
போதகர்: (ஜோசப்பைக் காட்டியபடி) இவன் பெயர் ஜோசப். எங்க கோயில் செக்ஸ்டன். (மாலியைக் காட்டி) இவர் மாலி, எங்க தோட்டக்காரர், ஒரு தனிக்கட்டை இப்போ இவர். என்றாலும்.
செல்வின்: (முந்திக்கொண்டு) அவனுக்கும் திரும்ப ஒரு கலியாணம் இரண்டாந்தரம் ஒன்று, நாமாகச் செய்து வைக்கணும்னு சொல்ல வாறீங்களா?
போதகர்: அப்படியெல்லாம் இல்லை தனிக்கட்டை என்றாலும் இந்த விலைவாசி உயர்விலே நாம் கொடுக்கிற சம்பளம் ஒன்றும் கட்டலைன்னு சொல்லிக்கிட்டிருக்கார்ன்னு சொல்ல வாரேன் (ஜோசப்பைப் பார்த்து) சரி, ஜோசப் நீ போய் தாய்மார் கூட்டத்துக்கு அரேஞ்ஜ் பண்ணப்போ.
(ஜோசப் போகிறான்)
நீங்களும் போகலாம் மாலி, மனோ! நீ விளையாடப் போறீயா? மாலி கூட்டிற்று போங்க அவனை.
(மாலியும் மனோவும் தோட்டத்திற்கு போகிறார்கள்.)
ருத்: சரோ! பாரீஷ் ஹாலுக்கு என்னோடே வாயேன்.
எனக்கு கொஞ்சம் உதவிசெய்யலாம் நீ வந்தால்.
சரோ: கோயிலுக்குள் போய் ஜெபம் பண்ணனும்ன்னு நினைச் சேன். என்னோட ஒரு கன்னுக்குட்டிக்கு சீக்கு, அதுக்கு சுகம் கிடைக்க வேண்டிக்கலாம்ன்னு போறேன்.
சஞ்சீவி: சீக்கா! எங்க கூட்டத்துக்கு வாங்க சிஸ்டர். உங்க கன்னுக்குட்டிக்கு நிச்சயமாக சுகம் கிடைக்கும். நீங்க வந்தால், அப்படியே யார் யாருக்கு சுகம் வேணுமோ அவங்கள்ளாம் எங்க கூட்டத்துக்கு வரலாம். வந்து சுகம் பெற்று திரும்பலாம். (போதகரைப் பார்த்து) பாஸ்டர்!
இந்த வாரம் சுகம் அருளும் வரம் இருக்கே .
போதகர்: அதைப்பற்றித் தனியாகப் பேசலாமே நாம் பிறகு.
'சஞ்சீவி: அதுவும் சரிதான். நாங்க எடுத்த படங்களையெல் நாங்க எ லாம் உங்களுக்குக் காட்டணும், சுகம் கிடைச்சவங்க ளோட படங்கள். நாலு ஆல்பத்திலே ஒட்டி வச்சிருக் கோம். இப்போ நானுந்தான் போகணும். 5 மணிக்கு “ எங்களுக்கு ஒரு கூட்டம் இருக்குது, வாரேன்.
(போகிறார்)
ரூத்: (சரோவைப் பார்த்து) வா, போவோம், பாரீஷ் ஹாலுக்கு பிறகு நீ போய் கோயில்ல ஜெபம்பண்ணிக்க உன்னோட கன்னுக்குட்டிக்காக.
(இருவரும் பாரீஷ் ஹாலை நோக்கி நடக்கின்றனர்)
செல்வின்: கேள்விப்பட்டீங்களா, ஜோசப் பெயரும் சரோ பெயரும் அடிப்பட்டுக்கிட்டிருக்குது தெரியுமா உங்களுக்கு. கோயில் பெயர் கெட்டுப்போயிட வேண்டாம்.
போதகர்: ஏன் அப்படி சொல்றீங்க!
செல்வின்: செக்ஸ்டனுக்கு என்ன கேடு வந்தது. அவன் பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு போவானா. சரோ கிட்டபல்லைக் காட்றது, சிரிக்கிறது. எல்லாரும் கவனிச்சுக் கிட்டு தானிருக்காங்க.
போதகர்: மனதிலே களங்கமில்லாமல் பேசியிருக்கக் கூடாதா? செல்வின்: அதெப்படி அவங்களுக்குள்ளே அண்டர்ஸ்டாண்
டிங் இருக்குதே.
போதகர்: காதலன்னு சொல்ல வாரீங்களா.
செல்வின்: காதலாவது கத்தரிக்காயாவது. கலியாணம் பண்ணிக்க முடியாது. அது அவங்களுக்குத் தெரியும்.
போதகர்: ஜாதி வித்தியாசம்ன்னு சொல்றீங்களா. கலப்புத் திருமணம் நடக்கிறதில்லையா.
செல்வின்: என்னமோ இதெல்லாம் வேண்டாம். கூப்பிட்டுகண்டிச்சு வையுங்கள்.
போதகர்: அவங்க என்ன தவறு செஞ்சுட்டாங்க கண்டிக் கிறதுக்கு. மேலும் மற்றவங்களோட சொந்த காரியங் களிலே தலையிடுகிறதும் சரியில்லைதான்.
செல்வின்: அவங்க இரண்டுபேரும் எக்கேடு கெட்டுப்போனா லும் அதைப்பற்றி எங்களுக்கும் கவலையில்லை தான். கோயில் பெயர் மட்டுந்தான் கெட்டுப்போகக்கூடாது. உங்ககிட்ட விஷயத்தை சொல்லிற்றேன்; பார்த்துக்கங்க.
(கோயில் வாசல் வரை சென்றவர் திரும்பி வருகிறார்) ஆல்டர் சுவர் எவ்வளவு மோசமாயிருக்கு பார்த் தீங்களா. வர்ணமெல்லாம் போயிருக்குது. வாங்க வந்து பாருங்க. 2
(செல்வின் கோயிலுக்குள் செல்லுகிறார். அவரைத் தொடர்ந்து செல்லாமல் மண்டபத்திற்கு வந்துகொண் டிருக்கும் மோசசையும் நோவாவையும் பார்த்துக்கொண்டு நிற்கிறார் போதகர். மோசசுக்கு 55 வயதிருக்கும்.)
போதகர்: மிஸ்டர் மோசஸ்! வாங்க! உங்களை ஓடிவந்து பிடிச்சுட்டாரே நோவா!
மோசஸ்: ஆமா, வேகமாகத்தான் ஓடி வந்திருக்கார். அவங்களோட கோயில் கட்டிடம் எல்லாம் கீழே சரிஞ்சுட்டுதாமே. விஷயமெல்லாம் சொன்னார்.
(செல்வின் வருகிறார்)
செல்வின்: (போ தகரிடம்) இங்கேயே நின்னுட்டீங்களே! ஆல்டர் சுவர் வர்ணமெல்லாம் போய் எப்படி களையிழந்து தெரியுது! வாங்க. உடனே வந்து பாருங்க, வாங்க!
மோசஸ்: சுவரிலுள்ள வர்ணந்தானே செல்வின். செல்வின்: அதெப்படி சொல்றது ஆல்டர் எப்படிப்பட்ட இடம்! எவ்வளவு தூய்மையாக, அழகாக அதை வச்சிக் கணும். ஆல்டரைப் பார்த்தாலே நம்மை அறியாமல் நமக்கு ஒரு பயம் மனதிலே ஏற்பட வேண்டாம்? மனதிலே பக்தி உருவாக வேண்டாம்?
மோசஸ்: கிறிஸ்மசுக்கு கோயிலை வெள்ளையடிக்கப் போறீங்க. அப்போ வர்ணம் கொடுத்துடுங்களேன் ஆல்டருக்கு.
செல்வின்: ஆமா, கிறிஸ்மசுக்கு ஒரு மாதந்தானே இருக்குது! கிறிஸ்மஸ் அரேஜ்மெண்ட் கமிட்டியை இன்னும் ஏற்படுத்தக் காணோம்! போதகர் சும்மா இருக்கார் ஒன்றும் செய்யாமல்!
போதகர்: கிறிஸ்மஸ் பாட்டு பிராக்டீஸ் ஆரம்பமாயிட்டுது (மோசசிடம்) குயர் பிராக்டீசுக்கு வரல்லையே ஸ்டீபன்.
மோசஸ்: என்னமோ தெரியல்ல. ஸ்டீபனும் ஹில்டாவுமா ஏதோ ஒரு கான்சர்ட் நடத்தப்போறாங்களாம். கிடைக்கிற பணத்தைக்கொண்டு ஒரு பெரிய விருந்து ஏழைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்னு எண்ணியிருக்காங்களாம். அந்த மும்முரத்தில் குயர் பிராக்டீசை மறந்துட்டானோ என்னவோ. அவனுக்கு ஞாபகப்படுத்துறேன் குயர் பிராக்டீசை.
போதகர்: அப்புறம் (மோசேயையும் செல்வினையும் மாறி மாறி பார்த்தவாறு) ஸ்டீபன், ஹில்டா திருமணத்தை எப் போது நடத்தப்போறீங்க?
செல்வின்: அது நடக்கப்போறதாக எனக்குத் தெரியலையே . போதகர்: என்ன அப்படி சொல்லிட்டீங்க! ஹில்டாவும், ஸ்டீபனும் முறைப்பெண், முறை மாப்பிள்ளை. ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். காதலிக்கிறார்கள். இது ஊர் அறிந்த விஷயம். அப்படியிருக்க!
செல்வின்: என்ன செய்றது சொல்லுங்க. ஸ்டீபன் நல்லவன் உத்தமன். தன் உயிரை மதிக்காமல் ஹில்டாவை அவன் மரணத்தினின்றும் காப்பாற்றியிருக்கான். என்றாலும் என்ன செய்றது? தன் தந்தையைப்போல் ஒரு ஏழையாக அல்லவா அவனும் வாழ நினைக்கிறான். ஹில்டாவுக்கு கார் இருக்கணும், பங்களா இருக்கணும், பெரிய சொசைட்டியிலே அவள் மூவ் பண்ணனும், அவளுடைய கணவன் ஒரு பணக் காரனாயிருக்கணும் அல்லது உயர்ந்த உத்தியோகமாவது பார்க்கணும், நிறைய சொத்து சுகத்தோடு அவள் வாழணும். அவள் ஸ்டீபனுக்கு வாழ்க்கைத் துணைவியாக அமையமுடியாது.
(கோயிலுக்குள் போகிறார்)
மோசஸ்: சரி பார்ப்போம், எத்தனை காலத்துக்குத்தான் செல்வின் மெட்டீரியலிசத்துக்கு அடிமையாயிருக்கப் போகிறான் பார்ப்போம். வாங்க நோவா உங்க யிருப்புக் கோயிலைப் பார்த்துட்டு வருவோம் வாங்க. குடி
(மோசஸும் நோவாவும் வெளியே போகிறார்கள்)
போதகர்: இது கடைசிக் காலம். ஆண்டவரின் வருகையின் காலம். இப்போதையக் கிறிஸ்தவர்களின் மனப்போக்கை
எண்ணிப் பாருங்கள். அவர்கள் ஆட்டிட்டியூட் (attitude) எவ்வாறு இருக்கிறது? மெட்டீரியலிசத்தின்மீது கிறிஸ்த வர்களுக்கு மோகம். பணம், பதவி இதில் மோகம். மெட்டீ ரியலிசம், கிறிஸ்தவத்தின் எதிரி என்று அவர்கள் அறிந் திருந்தும் அவர்களுக்கு இந்த மோகம். ஒட்டகம் ஊசியின் காதில் நுழைந்துவிடும். ஆனால் ஐசுவரியவான் கடவுளின் ராஜ்ஜியத்தில் நுழைவதுதான் அரிது என்று ஆண்டவர் எச்சரித்தும் அவர்களுக்கு இந்த மோகம். அடுத்தபடியாக . . . தன்னை பின்பற்றுகிறவர்கள் அன்பைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆண்டவர் போதித்திருக்க எதிரிடையாக சுயநலத்தின்மீதுதானே கிறிஸ்தவர்களில் அநேகர் நாட்டம் கொண்டவர்களாயிருக்கிறார்கள். எல்லாம்தான், தனக்கு, தன் பிள்ளைக்கு தன் ஆன்ம இரட்சிப்புக்கு இப்படியாகத்தானே. சுயநலம்! சுயநலம்! ஆண்டவரின் இரண்டாம் கற்பனையை உண்மையாகக் கைக் கொள்ள எண்ணும் கிறிஸ்தவர்கள் எத்தனைபேர்தான் நமக்குள் இருக்கிறார்கள்? நூறு பேர்களில் ஒருவராவது உண்டா? சிந்தியுங்கள்.