இன்றைய ஜெப குறிப்புகள்
உலகத்திற்க்காக ஜெபிப்போம் PRAY FOR OUR WORLD 49-64
49. உலகில் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறவர்களின் நிலைகள், எண்ணங்கள் மாறிட ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 3 :2
50. உலகில் பெயர், புகழுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற நிலை எண்ணங்கள் மாறிட ஜெபிப்போம் - கலாத்தியர் 5: 26
51.உலகில் காணப்படும் மனித வழிபாடுகள் அகன்று போக ஜெபிப்போம் - மத்தேயு 18: 7
52.உலகில் சுவிசேஷத்தை அறிவிக்கத்தக்க தாகமுள்ள, பாரமுள்ள சுவிசேஷகர்கள் எழும்பி வர ஜெபிப்போம் - 2 தீமோத்தேயு 4:5
53. உலகெங்கும் சுவிசேஷத்தை கேட்டவர்கள் அதை விசுவாசித்து பலன் தந்திட ஜெபிப்போம் - கொலோசெயர் 1:6
54. உலகத்தில் உள்ள சர்வ சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷம் முழுமையாய் சென்றடைய ஜெபிப்போம் - கொலோசெயர் 1:23
55. உலகம் முழுவதிலும் ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்கத்தக்க உண்மையான, போதகர்கள், சுவிசேஷகர்கள், ஊழியர்கள்
ஆகியோரை தேவன் எழுப்பிட ஜெபிப்போம் - நியாயாதிபதிகள்1 :2
56.தேசங்களையும், தேசங்களில் உள்ளவர்களையும் தேவன் பாதுகாத்து நடத்திடவும், புலம்பலிலிருந்து தேசத்தை தேவன்
காப்பாற்றிட ஜெபிப்போம் - ஓசியா 4: 3
57. ஒவ்வொரு தேசத்திலும் உண்மை தேவனைப் பற்றிய அறிவு மக்களுக்கு கிடைத்திட ஜெபிப்போம் - ஒசியா 4:1
58. தேசங்களிலே உண்மைகள் ஒழுக்கங்கள் இறக்கம் மேலோங்கிட
ஜெபிப்போம் - ஒசியா 4: 1
59. உலகில் ஆரோக்கியமான தூய, சுத்தமான தண்ணீர் தாராளமாய் கிடைக்க ஜெபிப்போம் - யாத்திராகமம் 23:25
60. எல்லா தேசத்திலும் விபச்சாரத்தில் காணப்படுகிறவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, தேவனிடம் மன்னிப்பை பெற்று திருந்தி வாழ்ந்திட ஜெபிப்போம் - யோவான் 8: 11
61. ஒவ்வொரு தேசத்தை ஆளுகின்ற எல்லா அதிகாரிகளுக்காக ஜெபிப்போம் - 1 தீமோத்தேயு 2: 1,2
62. இப்பொழுது ஒவ்வொரு தேசங்களிலும் சிறைக்கைதிகளாகவும், அடிமைகளாகவும் காணப்படுகிற ஒவ்வொருவரின் பாவங்களையும் தேவன் மன்னித்து இரட்சிக்க ஜெபிப்போம் - உபாகமம் 30:3
63. உலகில் பலவகையான அநியாயங்களை செய்கிறவர்கள் மாறிட ஜெபிப்போம் - மல்கியா 3 :5
64. உலகிலே பலவகையான பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், தேவனிடம் அதற்கான மன்னிப்பை பெற்றிட ஜெபிப்போம் - சகரியா 13: 1