உவமைகள் முன்னுரை
ஒரு சத்தியத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படும் கதை அல்லது சம்பவம் “உவமை” என்று அழைக்கப்படுகிறது. ஒரு சத்தியத்தை உபதேசம்பண்ணும்போது, அதை எளிதாக விளங்கிக்கொள்வதற்காக, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவத்தையோ, அல்லது நமக்கு மிகவும் பழக்கமான காரியங்களையோ சொல்லி, உபதேசம்பண்ணுகிறவர் நமக்கு சத்தியத்தை விளக்குகிறார். எபிரெயு, கிரேக்கு பாஷை இலக்கியங்களில் உவமைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாரபேலு” என்னும் கிரேக்க வார்த்தை தமிழில் “உவமை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. "மாஷல்" என்னும் எபிரெய வார்த்தை தமிழில்
“நீதிமொழிகள்” என்றும் “உவமைகள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது."
பழைய ஏற்பாட்டில் உவமைகள்
பழைய ஏற்பாட்டுப் புஸ்தகங்களில்
ஏராளமான உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு
இருக்கிறான்" நீதி 10:26. "பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே” (நீதி 30:24 -28) ஆகியவை யூதர்கள் மத்தியில் பிரபல்யமாகப் பயன்படுத்தப்படும் உவமைகளாகும்.
பழைய ஏற்பாட்டில் உவமைகள் சுருக்கமாகபிராமல், ஒரு கதையைப்போல விரிவாக இருக்கும். சீகேமியர் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள். இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களுடைய செய்கையை கண்டித்து உணர்த்தும் வகையில், யோதாம் ஒரு உவமையை, கதையைப்போல சொல்லி அவர்களுக்கு விளக்குகிறான் (நியா 95-15).
பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலிவமரம். அத்திமரம், இந்த உவமையில் திராட்சச்செடி, முட்செடி ஆகிய எதுவும் கற்பனை பாத்திரங்களல்ல. இவையெல்லாம் மெய்யாகவே உள்ளன. இவை கற்பனையாக இருக்குமென்றால், இவ்வாறு விவரிப்பது “உவமை” என்று அழைக்கப்படாமல், "உருவகக்கதை” என்று அழைக்கப்படும். ஒலிவமரம், அத்திமரம், திராட்சச் செடி ஆகியவற்றிற்கு மிகவும் பிரயோஜனமான வேலைகள் அதிகமாக உள்ளன. ஆகையினால் தாங்கள் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுவதற்கு மறுத்துவிடுகின்றன. ஆனால் முட்செடிக்கோ ஒரு வேலையும் இல்லை. சும்மாயிருக்கிறது. ஆகையினால் அது ராஜாவாக இருப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறது. யோதாம் இந்த உவமையைக் கூறும்போது, தான் சொல்ல விரும்பும் சத்தியத்தைக் கூறாமல், இந்த உவமையை மாத்திரமே கூறுகிறான். சீகேமியரோ இந்த உவமையின் கருத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.
தாவீது ராஜா பத்சேபாளுடன் விபச்சாரம் பண்ணி பாவம் செய்தான். பத்சேபாளின் மனைவியாகிய உரியாவையும் சதிபண்ணி போர்க்களத்தில் கொன்றுபோடுகிறான். இவனுடைய பாவத்தை நாத்தான் என்னும் தீர்க்கதரிசி, ஒரு உவமையின் மூலமாக தாவீதுக்கு உணர்த்துகிறான். நாத்தான் இந்த உவமையைச் சொல்லிவிட்டு, தாவீதை நோக்கி "நீயே அந்த மனுஷன்" என்று சொல்லுகிறான் (2சாமு 12:1-7).
நாத்தான் இந்த உவமையைக் சொல்லும்போது, அவன் வேறு யாரைப்பற்றியோ சொல்லுகிறான் என்று தாவீது நினைக்கிறான். ஆனால் நாத்தானோ, இந்த உவமையைச் சொல்லிவிட்டு, “நீயே அந்த மனுஷன்” என்று தாவீதிடம் கூறி, அவன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்துகிறான்.
யூதாவின் ராஜாவாகிய அமத்சியா தன் இருதயத்தில் பெருமை பாராட்டிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசிடத்தில் தன் ஸ்தானபதிகளை அனுப்பி, தங்களுடைய சாமர்த்தியத்தைப் பார்க்க வருமாறு கூறுகிறான். அமத்சியாவின் ஆணவமான பேச்சை, அவனுக்கு உணர்த்துவதற்காக, யோவாஸ் ஒரு அதை அமத்சியாவிடம் சொல்லுமாறு அவனுடைய ஸ்தானாபதிகளுக்குச் சொல்லியனுப்புகிறான்.
"லீபனோனிலுள்ள முட்செடியானது. லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ் செய்துகொடு என்று உன் சொல்லச்சொல்லிற்று: ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; பெருமைபாராட்டிக் கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்" (2இராஜா 14:8-10).
ஏசாயா நேசருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து ஒரு பாட்டைப் பாடுகிறார். இதுவும் உவமையாகவே பாடப்படுகிறது. “இப்பொழுது ன் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத் தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச் செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டு பண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.
வம்சமே; சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு" (ஏசா 5:1-7). ஏசாயாவின் பாட்டைக் கேட்ட ஜனங்களோ அதன் கருத்தை உடனடியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆயினும் ஏற்ற வேளை வந்தபோது ஏசாயா பாடின உவமைப்பாடலைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள்
கர்த்தர் ஓசியாவை நோக்கி நீ
போய். ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள். தேசம் கர்த்தரைவிட்டு விலகிச் சோரம்போயிற்று" (ஓசி 1:2) என்று சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு உண்மையில்லாமல் சோரம்போயிருப்பதை இந்த வசனம் உவமையினால் விளக்குகிறது. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அழைத்து வந்தார். மனுஷரைக் கட்டியிழுக்கிற அன்பின் கயிறுகளால் அவர் அவர்களை இழுத்து வந்தார் (ஓசி 11:4) ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ மனந்திரும்பமாட்டோம் என்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரரின் ஆவிக்குரிய வேசித்தனமும் ஓசியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது." முரட்டாட்டமும், உவமையாக எசேக்கியேல் தீர்க்கதரிசியும் எருசலேமை உவமையினால் விவரிக்கிறார். (எசே 23:1-5), இந்த வசனப்பகுதியில் அகோலிபாள், அகோலாள் ஆகிய பெயர்கள் உவமைப் பெயர்களாம். அகோலாள் என்பதற்கு சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம் என்று எசேக்கியேல் குறிப்பிடுகிறார். எசேக்கியேல் ஒரு பெரிய கழுகைப்பற்றிக் கூறுவதும் உவமையே ஆகும் (எசே 173-10).
புதிய ஏற்பாட்டில் உவமைகள்
புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து சொன்ன
ஏராளமான உவமைகள் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தெய்வீக சத்தியங்களை உபதேசம் பண்ணும்போது, அவர் உவமைகளைக் கூறி சத்தியங்களை விளக்குகிறார். தம்முடைய சீஷர்களுக்கு உபதேசம்பண்ணும்போதும், திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம்பண்ணும்போதும், வேதபாரகரோடும் பரிசேயரோடும் விவாதம்பண்ணும்போதும் இயேசுகிறிஸ்து உவமைகளை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
"இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன். உலகத்தோற்ற முதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது" (மத் 13:34,351,
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு உபதேசம்பண்ணும்போது, மன்னிக்காத கடின இருதயமுள்ள வேலைக்காரனை உவமையாகக் கூறுகிறார் (மத் 18:23). திரளான ஜனங்களுக்கு விதைக்கிறவனைப்பற்றி உவமையாகக் கூறுகிறார் (மாற் 4:3). பரிசேயனாகிய சீமோனுக்கோ கடன்பட்ட இரண்டுபேரை உவமையாகக் கூறுகிறார் (லூக் 7:41). எருசலேமைப்பற்றிச் சொல்லும்போதோ கனிகொடாத அத்திமரத்தை உவமையாகச் சொல்லுகிறார் (லூக் 13:4). யூதமார்க்கத்துத் தலைவர்களைப்பற்றிச் சொல்லும்போதோ திராட்சத்தோட்டத்தை உவமையாகச் சொல்லுகிறார் (மாற் 12:1) இயேசுகிறிஸ்து கூறிய உவமைகளை ஜனங்களும், வேதபாரகரும் பரிசேயரும் உடனடியாகப் புரிந்துகொள்கிறார்கள். "இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்" (மாற் 12:42)
இயேசுகிறிஸ்து உவமையாகச் சொன்னது. ஒரு சுவிசேஷத்தில் உவமையாகவும், மற்றொரு சுவிசேஷத்தில் உருவகமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. திராட்சத்தோட்டத்து எஐமானுடைய குமாரனைப்பற்றிச் சொல்லும்போது "அவனைப்பிடித்து கொலைசெய்து திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்" (மாற் 12:8) என்று மாற்குவும், “அவனைப்பிடித்து திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே தள்ளி கொலைசெய்தார்கள்" (மத் 21:39) என்று மத்தேயுவும் எழுதியிருக்கிறார்கள்.
திராட்சத்தோட்டத்து எஜமானுடைய மகன் திராட்சத்தோட்டத்துக்குள்ளே கொலைசெய்யப்பட்டு, திராட்சத்தோட்டத்துக்கு வெளியே போடப்பட்டானா, அல்லது திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கொலைசெய்தார்களா என்பதைத் தெளிவாக விளக்கவேண்டுமென்றால், இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வரலாற்று சம்பவத்தை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இயேசுகிறிஸ்து எருசலேம் நகரத்துக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டார். ஆகையினால் அவரைத் திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே தள்ளி கொலைசெய்தார்கள் என்று விளக்கம் சொல்லுவதே சரியாக இருக்கும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய சத்தியத்தை விவரிக்கும்போது அநேகம் உவமைகளைச் சொல்லுகிறார். அவைகளில் எதுவும் உருவகக் கதைகளல்ல. இயேசுகிறிஸ்து சொல்லும் ஒவ்வொரு உவமையும், ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்வதற்குப் பெரிதும் உதவியாயிருக்கிறது. அவர் சொல்லுகிற உவமைகளெல்லாமே இஸ்ரவேல் தேசத்தில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களாகும்.
இயேசுகிறிஸ்து கூறும் உவமைகளுக்கு அளவுக்கு அதிகமாக வியாக்கியானம் கொடுக்கக்கூடாது. நல்ல சமாரியன் உவமையை இயேசு சொல்லும்போது, நாமும் நல்ல சமாரியனைப்போல பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்பதுதான் அடிப்படைக் கருத்து. "இயேசு இந்த உவமையின் முடிவில் நியாயசாஸ்திரியைப் பார்த்து "நீயும் போய் அந்தப்படியே செய்” என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்து கூறிய உவமையை இம்மட்டுமாக விளக்கினால் போதுமானது. சமாரியன் ஏறிவந்த கழுதைக்கும், சத்திரத்திற்கும், சத்திரக்காரனுக்கும், சமாரியன் கொடுத்த இரண்டு பணத்துக்கும் ஆவிக்குரிய அர்த்தங்களைச் சொல்ல முற்படக்கூடாது. சத்தியத்தை விளங்க வைப்பதற்காகத்தான் இயேசுகிறிஸ்து உவமையைப் பயன்படுத்துகிறார். இதற்கு மாறாக உவமையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு நபருக்கும் அதிகமாக வியாக்கியானம் கொடுத்து, உவமையையே கடினமாக்கிவிடக்கூடாது.
இயேசுகிறிஸ்து தம்முடைய உபதேசத்தில் ராஜ்யத்தைப்பற்றிய உவமைகளை அதிகமாகச் சொல்லியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தில் ராஜ்யத்தைப்பற்றிய உவமை முக்கிய இடம்பெற்றிருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிய உவமைகளில் இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றியும், தம்முடைய தெய்வீக ஊழியத்தைப்பற்றியும் விவரிக்கிறார். இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிச் சொல்லும்போது, அவர் தம்முடைய ராஜ்யத்தைப்பற்றித்தான் சொல்லுகிறார் என்பதை உபதேசத்தைக் கேட்கிறவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து ராஜ்யத்தின் உவமையைச் சொல்லும்போது அவர் இரண்டு விதமான ராஜ்யங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று ஏற்கெனவே இருக்கிற ராஜ்யம். மற்றொன்று இனிமேல் வரப்போகிற ராஜ்யம். இயேசுகிறிஸ்து எந்த ராஜ்யத்தைப் பற்றிக் குறிப்பிட்டாலும், நாம் அந்த ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஆயத்தமாகயிருக்க வேண்டுமென்பதே இயேசுகிறிஸ்து முக்கியப்படுத்தும் செய்தியாக இருக்கிறது.
இயேசுகிறிஸ்து பரலோக ராஜ்யத்தைப்பற்றி உவமையாகச் சொல்லும்போது, அதை ஒரு விலையுயர்ந்த முத்தையும், நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தையும் உவமையாகச் சொல்லி விவரிக்கிறார். "அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அதைக் கொள்ளுகிறான் (மத் 13:44-46).
இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தைப்பற்றி உவமையாகக் கூறும்போது, விதைக்கப்படும் விதையானது முளைத்து அறுவடைக்கு ஆயத்தமாகயிருப்பதாக விவரிக்கிறார். இந்த உவமையில் நான்கு விதமான நிலங்களும் (மாற் 4:3), களைகளும் (மத் 13:24) குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காலத்தில் தேவனுடைய ராஜ்யத்திற்கு விரோதமாக கிரியை செய்த சாத்தானின் கிரியைகளாகும்.
உவமைகளிள் அட்டவணை
நான்கு சுவிசேஷங்களிலும் இயேசுகிறிஸ்து சொன்ன உவமைகள் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கீழ்க்கண்ட பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. உபதேச உவமைகள்
2. சுவிசேஷ உவமைகள்
3. நியாயத்தீர்ப்பு. வருங்கால உவமைகள்
I. உபதேச உவமைகள்
அ. தேவனுடைய ராஜ்யம்
1. விதைக்கிறவனும் நிலமும்
2. களைகள்
3. கடுகுவிதை
4. புளித்தமாவு
5. புதைக்கப்பட்ட பொக்கிஷம்
6.விலையுயர்ந்த முத்து
7. வலை
8.விதைமுளைத்து பயிராவது
ஆ. ஊழியமும் கீழ்ப்படிதலும்
1. திராட்சத்தோட்டத்து கூலியாட்கள்
2. தாலந்துகள்
3. பிரபுவின் ஊழியக்காரர்
4. எஜமான், ஊழியக்காரன்
இ ஜெபம்
1. தேவைக்கு உதவும் சிநேகிதன்
2. அநீதியுள்ள நியாயாதிபதி
ஈ.பிறர்
1. நல்லசமாரியன்
உ தாழ்மை
1. விருந்து
2. பரிசேயனும் ஆயக்காரனும்
ஊ. ஐசுவரியம்
1. மதிகேடான ஐசுவரியவான்
2. பெரிய விருந்து
3. பத்தியுள்ள உக்கிராணக்காரன்
II. சுவிசேஷ உவமைகள்
அ. தேவனுடைய அன்பு
1. காணாமற்போன ஆடு
2. காணாமற்போன வெள்ளிக்காசு
3. காணாமற்போன குமாரன்
ஆ. நன்றியுள்ள சுபாவம்
1. கடனை மன்னிப்பது
III. நியாயத்தீர்ப்பு, வருங்கால உவமைகள்
அ. கிறிஸ்துவின் மறுவருகை
1. பத்துக்கன்னிகைகள்
2. உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்
3. புறதேசத்திற்கு பிரயாணம்போன வீட்டெஜமான்
ஆ. தேவனுடைய தீர்ப்பு
1. இரண்டு குமாரர்
2. பொல்லாத தோட்டக்காரர்
3. கனிகொடாத அத்திமரம்
4. கலியாண விருந்து
5. மன்னிக்காத ஊழியக்காரன்