Type Here to Get Search Results !

தினம் ஒரு தியானம் என்னை நோக்கிப் பாருங்கள் ஏசாயா 45:22

 

தினம் ஒரு தியானம்


என்னை நோக்கிப் பாருங்கள் ஏசாயா 45:22


புது வருஷத்தின் காலை தொடங்குகிறது. நாமோ இன் னும் துக்கத்திற்கும், துன்பத்திற்கும், சாத்தனுடைய அதிகாரத்திற்கும் உள்ளானவர்களாகவே இருக்கிறோம். பாவம் நமக் குள்ளே வாசம்பண்ணுகிறது. எண்ணிறந்த காரியங்கள் நமக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறது. ஆகிலும் தேவன் நமக்குச் சொல்லுகிறதென்ன? ‘என்னை நோக்கிப் பாருங்கள். பக்கியத்தின் ஊற்றாக, கிருபையைக் கொடுக்கிறவராக, உங் கள் சிநேகிதனாக என்னை நோக்கிப்பாருங்கள். எந்தத் துன் பத்திலும், எந்த இடத்திலும், உங்களுக்கு வேண்டிய சகலத் திற்கும், என்னை நோக்கிப்பாருங்கள். இன்றைக்கு என்னை நோக்கிப்பாருங்கள். உங்களுக்குத் தருகிறதற்கான ஆசீர்வா தங்கள் என்னிடமுண்டு. நான் தயவு காண்பிக்கக் காத்திருக் கிறேன். இயேசுவில் நான் உங்கள் பிதா-உங்கள் இகபா நன் மைகளைக் குறித்து எனக்கு அதிகக் கவலையுண்டு. நான் வாக்க ளித்ததெல்லாவற்றையும் நிறைவேற்றுவேன். உங்கண் ஆசீர் வதிக்கவேண்டுமென்றே உங்களோடிருக்கிறேன். உங்கள் காரி யங்களில் நான் கவலையற்றவனல்ல. சகலத்தையும் உங்கள் நன்மைக்கென்று முடிப்பதற்கு நான் பொறுப்பாளி. முற்கா லங்களில் உங்கள் பேரிலும், மற்றவர்கள் பேரிலும் நம்பிக்கை வைத்தீர்கள். அதனால் உங்கள் நம்பிக்கை அவமாகித் துக்கப் பட்டீர்கள்; இப்பொழுது என்னைமாத்திரம் நோக்கிப் பாருங் கள், சகலத்திற்கும் என்னைப் பாருங்கள். இந்த நாளிலும், இந்த வருஷத்தின் ஒவ்வொரு நாளிலும், உங்கள் கண்ணை யும் மனதையும் என்னிடம் ஏறெடுங்கள். எனக்கு முன்பாக சமாதானமாயும் பரிசுத்தமாயும் நடவுங்கள். அப்படி நடக் கும்போது, நான் உங்களைப் பரிசுத்தரும் பாக்கியருமாக்குகி றேனோ இல்லையோவென்று பாருங்கள். என்னைச் சோதித்து, என் வாக்கின் ஒவ்வொரு அட்சாமும் உண்மையோ அல் லவோவென்று அறிந்துகொள்ளுங்கள்' என்கிறார்.


உனதாவிதேகமும் 

உன் சிந்தை முழுவதும் 

அவருட நேசமே 

நடத்தி ஆளட்டுமே; 

உன் கண் எந்தநோமும் 

அவரையே நோக்கட்டும்.

Post a Comment

0 Comments