தினம் ஒரு தியானம்
நன்றியறிதலுள்ளவர்களாய் இருங்கள் கொலோசெயர் 3:15
நாம் நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கிறதற்கு எத்தனையோ காரணங்களுண்டு, எவ்வளவோ நியாயமுண்டு! நம்மைச் சூழ சரீர ஆத்தும நன்மைகளைப் பார்க்கிறோம். கடந்துபோன காலங்களைப் பார்த்தால், உலகத் தோற்றத் கிற்கு முன்னே கிறிஸ்தேசுவில் தேவன் நம்மைத் தெரிந்து கொண்டதற்காகவும், அவர் தமது ஒரே பேறான குமாரனை நம்முடைய பாவ பரிகாரமாய் இந்த உலகத்தில் அனுப்பின தற்காகவும், பாவத்தைக் குறித்து நமக்கு மெய்யுணர்வைத் தந்து, இயேசுவினிடம் நம்மை நடத்தி, நம்மை மோட்சத் துக்குத் தகுந்தவர்களாக்கும்படித் தம்முடைய பரிசுத்த ஆவியை நம்முடைய இருதயங்களில் ஊற்றினதற்காகவும் நாம் சந்தோஷப்படவேண்டுமே. நம்முடைய கையில் அவரு டைய வசனமிருக்கிறது. நம்முடைய இருதயத்தில் அவரு டைய கிருபை இருக்கிறது. நம்முடைய வீட்டில் அவருடைய இரக்கங்களையும், நம்முடைய கண்களுக்கு முன்னே பாகதியை யும் பார்க்கிறோம். நமக்கு நன்றியறிதல் வேண்டாமா? கடினப் பட்ட நம்முடைய நன்றிகெட்ட இருதயங்களை இயேசுவி னிடத்தில் கொண்டுபோகவேண்டும். அவர் மெதுவாக்கி நன்றியறிதலால் நிரப்புவார். நம்முடைய அவைகளை நன்றிகேட்டை அவரிடத்தில் அறிக்கையிட்டு அவருடைய பாதத்தில் விழுந்து, நம்முடைய கெட்ட குணத்தைக் குறித் துப் புலம்பவேண்டும். மன்னிக்கிறதற்கு அவர் ஆயத்தமா யிருக்கிறார். அவர் நம்மை முற்றிலும் சுத்திகரிப்பார். நம்மு டைய கெஞ்சுதலுக்குச் செவிகொடுத்து நம்முடைய முறைப் பாட்டுக்கு இரங்குவார். 'இயேசுவே! எங்களுடைய அபாத்தி ரத் தன்மையையும், உம்முடைய பெரிதான தயவையும் நாங் கள் நன்றாய் அறிந்துணரும்படி செய்யும்; அப்போது எங்கள் ஆத்துமாக்கள் சந்தோஷ உதடுகளால் உம்மை நித்தம் போற் றும். உமதுபேரில் சார்ந்திருக்கிறோமென்பதை மறவாமல், நன்றியுள்ள அன்பு நிறைந்த பிள்ளைகள்போல் எங்கள் பிதா வாகிய தேவனுக்கு முன்பாக ஜீவனம்பண்ணி, நித்தம் நன்றி யறிதலுள்ளவர்களாய் இருப்போமாக.
அனந்தானந்தகாலம்
என் மனமும்மைப் போற்றும்
உம்மைப் புகழ்ந்து பாட
காணாததுவுங் கூட