ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:1-5 Genesis biblical research
முதலாவது பெற்றோரின் பாவமும், பாவத்தினால் வரும் துன்பமும் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதாம் ஏவாளுடைய பாவத்தினால், தேவனுடைய கோபமும், சாபமும் அவர்களுக்கு விரோதமாக வருகிறது. சிருஷ்டிகளின் சமாதானம் சீர்குலைந்துபோகிறது.
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்து, அது மிகவும் நன்றாயிருக்கிறது என்று சொன்னார். ஆனால் பாவத்தினால் சிருஷ்டிகளின் அழகு மங்கிப்போகிறது. சகலமும் மோசமாயிருக்கிறது. அவை மிகவும் மோசமாயிருக்கிறது.
மனுக்குலத்திலுள்ள எல்லோரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்களாயிருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மனுக்குலத்திற்கு ஆத்தும மீட்பு உண்டாயிருக்கிறது.
சாத்தானின் தந்திரம் ஆதி 3:1-5
ஆதி 3:1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
ஆதி 3:2. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
ஆதி 3:3. ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
ஆதி 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
ஆதி 3:5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
ஏதேன் தோட்டத்திற்கு ஒரு சர்ப்பம் வந்தது. சாத்தான் சர்ப்பத்தைத் தனக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டான். ஆகையினால் தேவன் அந்தச் சர்ப்பத்தைச் சபித்தார். மற்றப்படி தேவன் தாம் சிருஷ்டித்த எந்தச் சிருஷ்டியையும் சபிக்கமாட்டார். சர்ப்பம் என்பதற்கான எபிரெய வார்த்தை ""நாகாஷ்'' என்பதாகும்.
வேதாகமத்தில் பிரத்தியட்சமான சர்ப்பத்தைக் குறிப்பதற்கு இந்த எபிரெய வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஆதி 3:1-14; ஆதி 49:17; யாத் 7:15; எண் 21:9; 2இராஜா 18:4; நீதி 30:19; பிர 10:8,11; ஆமோ 5:19; ஆமோ 9:3) சில வசனங்களில் சாத்தான் சர்ப்பமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறான். சாத்தான் சர்ப்பத்தினுடைய ரூபத்தில் உருவம் மாறி வரமுடியாது. அவன் ஒரு தூதன். இப்பொழுது அவன் ஒரு விழுந்துபோன தூதன் (எசே 28:11-17).
சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. ""தந்திரம்'' என்பதற்கான எபிரெய வார்த்தை ""அவ்ரோம்'' என்பதாகும். சாத்தான் ஒருவனைச் சோதிக்கும்போது அவன் தந்திரமாகவே சோதிப்பான். மனுஷனைப் பாவத்தில் விழ வைப்பதற்குச் சாத்தானும், சர்ப்பமும் தந்திரமாக உபாயம் பண்ணினார்கள். சாத்தான் தன்னுடைய வார்த்தைச் சாதுரியத்தினால் மனுஷரைப் பாவத்தில் விழப்பண்ணுகிறான். அதற்குச் சர்ப்த்தைக் கருவியாகப் பயன்படுத்துகிறான் (ஆதி 3:1-6; யோவான் 8:44; 2கொரி 11:3; 1தீமோ 2:14).
வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் கட்டுக்கதையோ, மாயமான வார்த்தைகளோ, புராணங்களோ, உருவகக்கதையோ அல்ல. இவையனைத்தும் உண்மைச் சம்பவம். ஒருசில இடங்களில் உவமஉருவக வாக்கியங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சர்ப்பத்தின் வித்து என்பது இயற்கையான சர்ப்பங்களையே குறிக்கும். இவை இயல்பாகவே மனுஷருடைய விரோதியாகி விட்டன. ஸ்திரீயின் வித்து என்பது தேவனுடைய மனுஷ அவதாரத்தைக் குறிக்கும். (ஆதி 3:15; ஏசா 7:14; ஏசா 9:6-7; ஏசா 11:1; மத் 1; யோவான் 1:14; ரோமர் 1:1-2; கலா 4:4; 1தீமோ 3:16; எபி 2:14-18).
மனுஷன் பாவத்தில் விழுந்த சரித்திர நிகழ்ச்சியைக் கற்பனைக் கதையாக விளக்க வேண்டிய அவசியமில்லை. சர்ப்பம் சாத்தானுடைய கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. பூமியின் மேலுள்ள மிருகங்களில் சர்ப்பமும் ஒன்று. சகல மிருகங்களிலும் சர்ப்பம் சபிக்கப்பட்டதாக இருக்கிறது. (ஆதி 3:1,14).
தேவனுடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று (யோபு 26:13) என்று வேதவசனம் கூறுகிறது. ஆயிரம் வருஷ அரசாட்சியில் சாத்தான் கட்டப்பட்டிருக்கும்போது சர்ப்பம் சபிக்கப்பட்டதாக இருக்கும் (ஏசா 65:25).
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பு, வலுசர்ப்பம், அந்தப் பழைய பாம்பு ஆகியவை சாத்தானுக்கு அடையாளமானவை (ஏசா 27:1; யோபு 41:34; வெளி12:3-17; வெளி 20:2) ஏவாளை வஞ்சித்த ஏதேன் தோட்டத்து சர்ப்பமும் சாத்தானுக்கு அடையாளமாகும். (2கொரி 11:3; 1தீமோ 2:14).
இயேசு கிறிஸ்து பேதுருவை ""எனக்கு பின்னாக போ சாத்தானே'' என்று கூறுகிறார். பேதுருவிடம் சாத்தானுடைய குணம் வெளிப்பட்டதினால் அவ்வாறு கூறுகிறார். (மத் 16:22-23) பாபிலோன், தீரு ஆகிய தேசங்களின் ராஜாக்கள் சாத்தானுக்கு அடையாளமாகக் கூறப்பட்டிருக்கிறார்கள். (ஏசா 14:12-14, எசே 28:11-17). இவர்கள் சாத்தான் அல்ல. இவர்களெல்லாம் சாத்தானின் கருவிகளே.
ஏதேன் தோட்டத்து சர்ப்பம் மிகவும் விசேஷமானது. அதன் குணாதிசயங்களைப் பற்றிய விவரம் வருமாறு :
1. ஒரு காட்டு ஜீவன். (ஆதி 3:1).
2. மற்ற காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளது. (ஆதி 3:1).
3. தேவனாகிய கர்த்தர் இதை உண்டாக்கினார். (ஆதி 3:1).
4. இது ஒரு சர்ப்பம். சாத்தான் அல்ல. (ஆதி 3:1).
5. சர்ப்பத்திற்குப் பேசும் ஆற்றல் இருந்தது. (ஆதி 3:1-6).
6. சர்ப்பத்திற்குச் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. (ஆதி 3:1-6).
7. சர்ப்பத்திற்கு ஏமாற்றும் ஆற்றல் இருந்தது. (ஆதி 3:1-6).
8. தேவனுடைய திட்டத்தைப் பற்றி சர்ப்பம் தெரிந்து வைத்திருந்தது. (ஆதி 3:1-6).
9. மனுஷன் பாவத்தில் விழுவதற்கு முன்பாக சர்ப்பம் வயிற்றினால் நகராமல், நேராக நடந்திருக்கும் (ஆதி 3:14).
10. மற்ற காட்டு ஜீவன்களுக்கு இது தலையாக இருந்தது. (ஆதி 3:1,14).
11. சர்ப்பம் பகை உண்டாக்கும் தன்மையுடையது. (ஆதி 3:15).
12. ஏதேன் தோட்டத்தில் மனுஷனுக்கு அருகில் இருந்தது. (ஆதி 3:1-15).
13. சர்ப்பம் சம்பாஷணை பண்ணிற்று. (ஆதி 3:1-6).
14. சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சர்ப்பம் சபிக்கப்பட்டிருக்கிறது. (ஆதி 3:14).
15. மனுஷனை வஞ்சிப்பதற்குச் சாத்தான் சர்ப்பத்தைப் பயன்படுத்தினான். (ஆதி 3:1-19).
தேவன் சர்ப்பத்தை சபிக்கிறார். தேவன் சொன்ன சாபவார்த்தைகளெல்லாம் தீர்க்கதரிசன வார்த்தைகளாகும். அதன் விவரம் வருமாறு:
1. சகல நாட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய். (ஆதி 3:14).
2. சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய் (ஆதி 3:14).
3. உயிரோடிருக்கும் நாளெல்லாம் உன் வயிற்றினால் நகருவாய். (ஆதி 3:14).
4. உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். (ஆதி 3:14; ஏசா 65:25).
5. உனக்கும் ஸ்திரீக்கும் பகை உண்டாக்குவேன். (ஆதி 3:15).
6. உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் (ஆதி 3:15)
7. ஸ்திரீயின் வித்து உன் தலையை நசுக்குவார் (ஆதி 3:15; ரோமர் 16:20; வெளி 20:1-10).
8. நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதி 3:15; வெளி 1:18).
மேலே கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன அம்சங்களில் 1 முதல் 6 வரையிலுமுள்ள காரியங்கள் தொடர்ந்து நித்திய காலம் வரையிலும் நிறைவேறிக் கொண்டிருக்கும். கல்வாரி சிலுவையில் சாத்தான் தோற்கடிக்கப் பட்ட போது ஏழாவது அம்சம் ஓரளவு நிறைவேறிற்று. (கொலோ 2:14-17). அர்மகெதோனிலும் (வெளி 19:11-20:3), ஆயிரம்வருஷ அரசாட்சியின் முடிவிலும் (வெளி 20:7-11) இது பூரணமாக நிறைவேறும்.
இந்தத் தீர்க்கதரிசனத்தின் எட்டாவது அம்சம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படும்போது பூரணமாக நிறைவேறிற்று. சாத்தானால் இயேசு கிறிஸ்துவின் குதிங்காலை நசுக்கத்தான் முடிந்தது. சாத்தானால் இயேசுவைக் கொல்லமுடியாது. அவர் நித்தியமானவர். மனுக்குலத்தின் பாவத்திற்குப் பரிகாரமாக இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 10:18; அப் 2:23-36). ஆனால் இயேசு கிறிஸ்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும்போது அவன் பூரணமாக நசுங்கிப்போவான். (ஆதி 3:15; கொலோ 2:14-17; ரோமர் 16:20; வெளி 20:7-10).
பிசாசானவன் சோதனைக்காரனாயிருக்கிறான். அவன் ரூபத்திலும் சாயலிலும் ஒரு சர்ப்பத்தைப்போல இங்கு தன்னை வெளிப்படுத்துகிறான். பிசாசானவன் ஏவாளை வஞ்சிக்கிறான். பிசாசானவனும் சாத்தானும் பழைய பாம்பாகிய சர்ப்பம் என்று பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
""உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்'' (வெளி 12:9).
சாத்தான் ஒளியின் தூதனாகயிருந்தவன். அவன் மோசம்போக்குகிறவன். அவனுடைய ஆவி மனுஷரை வஞ்சிக்கிற ஆவியாகயிருக்கிறது. சாத்தானுக்கு தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கவேண்டும் என்னும் பேராசை உண்டாயிற்று. ஆனால் சாத்தானோ தன்னுடைய பாவத்தினால், தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆதி மேன்மையை இழந்துபோனான். அவன் தேவனுடைய சமுகத்தைவிட்டு விலகினான். சாத்தான் தேவனுக்கு விரோதமாகவும், அவருடைய சிங்காசனத்திற்கு விரோதமாகவும், அவருடைய மகிமைக்கு விரோதமாகவும், கலகம்பண்ணுகிறவனானான்.
தன்னால் மனுஷனை அழிக்க முடியாது என்பது சாத்தானுக்கு நன்றாய்த் தெரியும். ஆனாலும் சாத்தானால் மனுஷனை வஞ்சிக்க முடியும். நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும் பாவத்தில் விழத்தள்ளவேண்டும் என்பது சாத்தானுடைய சதித்திட்டம். இதன் மூலமாக சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சி பண்ணுகிறான். அதோடு அவர்களுக்கும் தேவனுக்கும் நடுவே பிரிவை ஏற்படுத்த திட்டமிடுகிறான்.
ஆதாமும் ஏவாளும் நம்முடைய முதல் பெற்றோராகயிருப்பதினால், அவர்களுடைய பாவமும், அதன் மூலமாக வரும் சாபமும், மனுக்குலத்தார் அனைவருக்கும் கடந்து வருகிறது. சாத்தான் தன்னுடைய தந்திரத்தினால் ஆதாமையும் ஏவாளையும் வஞ்சிக்கிறான். இதன் மூலமாக மனுக்குலமே வஞ்சிக்கப்படுகிறது.
சாத்தான் ஏதேன் தோட்டத்திலே சர்ப்பத்தின் ரூபமாகவும், அதன் சாயலாகவும் வருகிறான். சர்ப்பமானது பார்ப்பதற்கு பளபளப்பாகயிருக்கும். ஆனால் பாம்பின் வாயிலே விஷம் இருக்கும். மனுஷருக்கு வரும் சோதனைகள் எல்லாமே வெளிப்பார்வைக்கு அழகாகவும், அலங்காரமாகவும், பகட்டாகவும் இருக்கும். ஆனால் உள்ளேயோ விஷம் இருக்கும்.
சாத்தான் ஒளியின் தூதனாகயிருப்பதினால், அவனால் சர்ப்பத்தின் வேஷத்தைத் தரித்துக்கொள்ள முடிகிறது. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருக்கிறது. பாம்பின் தந்திரத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும்.
சாத்தான் மனுஷரோடு நேரடியாக மோதமாட்டான். அவன் தன்னை வெளிப்படையாக யாருக்கும் காண்பிக்கமாட்டான். தந்திரம் பண்ணுவதும், பொய்சொல்லுவதும் சாத்தானுடைய தந்திரம். அது அவனுடைய சுபாவம்.
சாத்தான் முதலாவதாக ஸ்திரீயை சோதிக்கிறான். ஸ்திரீயானவள் ஏதேன் தோட்டத்திலே இருக்கிறாள். இப்போது ஆதாம் அவளுக்கு அருகாமையில் இல்லை. ஆனால் ஏவாளோ, தேவனாகிய கர்த்தர் தடைபண்ணியிருக்கிற, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திற்கு அருகாமையிலிருக்கிறாள்.
சாத்தான் மிகவும் தந்திரமாக ஏவாளை சோதிக்கிறான். ஏவாள் ஒரு ஸ்திரீயாகயிருப்பதினால் அவள் பலவீனமான பாத்திரமாயிருக்கிறாள். ஏவாள் சாத்தானால் எளிதாக வஞ்சிக்கப்படுகிறாள். அவள் தன்னை சாத்தானுடைய சோதனைக்கு ஒப்புக்கொடுக்கிறாள்.
ஏவாள் தனியாகயிருக்கும்போது சாத்தான் அவளோடு பேச்சு கொடுக்கிறான். பொதுவாக விசுவாசிகளுக்கு வரும் சோதனைகளில், ஏராளமான சோதனைகள், அவர்கள் தனிமையிலிருக்கும்போது அவர்களுக்கு வருகிறது. நாம் தனிமையிலிருப்பது சாத்தானுக்கு மிகவும் அநுகூலமாயிருக்கிறது. ஆகையினால் விசுவாசிகளாகிய நாம் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் தரித்திருக்கவேண்டும். அதுவே நமக்கு பெலமாயும் பாதுகாப்பாயும் இருக்கும்.
ஏவாள் ஏதேன் தோட்டத்திலே, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திற்கு அருகில் இருக்கிறாள். கர்த்தர் இந்த விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கூடாது என்று தடைபண்ணியிருக்கிறார். ஆனால் ஏவாளோ தடைபண்ணப்பட்ட விருட்சத்திற்கு அருகாமையிலிருக்கிறாள். ஒருவேளை, ஏவாள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அவள் அந்த கனியை உற்றுப்பார்த்து, தன்னுடைய ஆர்வத்தையும், ஆச்சரியத்தையும் தணித்துக்கொண்டிருந்திருக்கலாம்.
கர்த்தர் தடைபண்ணியிருக்கும் விருட்சத்தின் கனியை புசிக்காதவர்கள், தடைபண்ணப்பட்ட விருட்சத்திற்கு அருகாமையில் வரக்கூடாது. சாத்தான் நம்மை சோதிக்கக்கூடாது என்று நினைத்தால், நாம் சோதனைக்களத்திற்கு அருகாமையில் வரக்கூடாது. சோதனையான காரியங்களை விட்டு விலகிப்போய்விடவேண்டும்.
சாத்தான் முதலாவதாக ஏவாளை சோதிக்கிறான். அதன்பின்பு அவள் மூலமாக ஆதாமை சோதிக்கவேண்டுமென்று திட்டமிடுகிறான். சாத்தான் மிகவும் தந்திரமாக யோசித்துப் பார்த்து, ஏவாளை வஞ்சிக்கிறான். ஏவாள் தடைபண்ணப்பட்ட கனியைப் புசிக்கவேண்டும். இதுவே சாத்தானின் நோக்கம். அந்தக் கனியை ஏவாளை எப்படி புசிக்க வைப்பது என்று சாத்தான் தந்திரமாக திட்டமிடுகிறான்.
சாத்தான் ஏவாளை வஞ்சிப்பதற்காக எப்படிப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்தினானோ, அதே வழிமுறைகளையே, இக்காலத்திலும் விசுவாசிகளை வஞ்சிப்பதற்கு பயன்படுத்துகிறான்.
சாத்தான் ஸ்திரீயை நோக்கி, ""நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ'' (ஆதி 3:1) என்று கேட்கிறான். இதே கேள்வியையே சாத்தான் இன்றும் விசுவாசிகளிடத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவன் ஒரு காரியத்தை நம்மிடத்தில் சொல்லி, அது பாவமா, இல்லையா என்னும் கேள்வியைக் கேட்கிறான். அந்தக் காரியம் பாவம் என்று நாம் சொன்னாலும், அந்தப் பாவத்தினால் ஒரு ஆபத்தும் வராது என்று சாத்தான் நம்மிடத்தில் சாக்குபோக்குகளை சொல்லுவான்.
சாத்தான் ஸ்திரீயை நோக்கி, ""நீங்கள் சாகவே சாவதில்லை'' (ஆதி 3:4) என்று சொல்லுகிறான். தேவனோ இது சம்பந்தமான தம்முடைய கட்டளையை மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, ""நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதி 2:17) என்று தெளிவாக கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் சாத்தானோ ஸ்திரீயை நோக்கி, ""நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று பொய் சொல்லுகிறான்.
சாத்தான் ஸ்திரீயை வஞ்சிப்பதற்கு மேலும் ஒரு தந்திரமான வார்த்தையைப் பேசுகிறான். அந்தக் கனியைப் புசிக்கும் நாளிலே அவர்களுக்கு நன்மை உண்டாகும் என்று பொய்சொல்லுகிறான்.
சாத்தான் ஸ்திரீயை நோக்கி, ""நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்'' (ஆதி 3:5) என்று பொய்சொல்லுகிறான்.
பாவத்தின் சம்பளம் மரணம். பாவத்தினால் நமக்கு சாபம் வரும். இதுவே சத்தியம். சாத்தானோ சத்தியத்தைப் புரட்டுகிறான். பாவத்தினால் மரணமும் சாபமும் வராது என்று சாத்தான் பொய்சொல்லுவது மாத்திரமல்ல, பாவம் செய்தால் நமக்கு ஆசீர்வாதம் வரும் என்றும் ஏமாற்று வார்த்தைகளை சொல்லுகிறான். இவை சாத்தானுடைய பொதுவான தந்திரங்களாகும்.
அன்று ஏதேன் தோட்டத்திலே ஏவாளை வஞ்சிப்பதற்காக சாத்தான் பயன்படுத்தின அதே தந்திரங்களை, இன்று நம்மை வஞ்சிப்பதற்காகவும் பயன்படுத்துகிறான். சாத்தானுடைய தந்திரங்களும், அவனுடைய மாய்மாலங்களும் நாம் அறியாததல்ல. நாம் சாத்தானுடைய வஞ்சக எண்ணத்தை அறிந்து, அவனுடைய சோதனைகளுக்கு விலகவேண்டும்.
சாத்தான் ஸ்திரீயைப் பார்த்து, அந்த விருட்சத்தின் கனியைப் புசிப்பது பாவமா அல்லது பாவமில்லையா என்று கேட்கிறான். அந்த விருட்சத்தின் கனி மெய்யாகவே தடைபண்ணப்பட்டிருக்கிறதா என்னும் சந்தேகமான கேள்வியையும் சாத்தான் ஸ்திரீயினிடத்தில் கேட்கிறான்.
சாத்தான் ஸ்திரீயை நோக்கி, ""நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ'' என்று கேட்கிறான். சாத்தான் கேட்கும் இந்த கேள்வியிலிருந்து, அவனுக்கும் ஸ்திரீக்கும் ஏற்கெனவே ஒரு சம்பாஷணை நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது. சாத்தான் அந்த சம்பாஷணையின் தொடர்ச்சியாக அவளிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறான்.
சாத்தானுக்கு தேவனுடைய திட்டமும் தெரியாது. அவருடைய சித்தமும் தெரியாது. தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்வதற்காக, சாத்தான் ஸ்திரீயினிடத்தில், ""கனியைப் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ'' என்று கேட்கிறான். தேவன் என்ன சொன்னார் என்பது சாத்தானுக்கு தெரியாது.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, ""நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம்'' (ஆதி 2:16,17) என்று சொன்னார்.
ஆனால் சாத்தானோ தேவன் சொன்னதை குழப்புகிறான். தேவன் சொல்லாததையும், அவர் சொன்னதுபோல பாவித்து, சாத்தான் ஸ்திரீயினிடத்தில் ""நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ'' என்று கேட்கிறான். தேவன் தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிப்பதற்கு தடைபண்ணவில்லை. அவர் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மாத்திரம் புசிப்பதற்கு தடைபண்ணியிருக்கிறார்.
ஸ்திரீயோ நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திற்கு அருகாமையிலிருக்கிறாள். ஆதாமும் இப்போது ஏவாளுக்கு அருகாமையில் இல்லை. ஸ்திரீயானவள் தனிமையிலிருக்கிறாள். அவள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள். இந்த சூழ்நிலை சாத்தானுக்கு சாதகமாகயிருக்கிறது. சாத்தான் ஸ்திரீயின் பலவீனத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறான்.
சாத்தான் தேவனுடைய தெய்வீக பிரமாணத்தை அவமதிக்கிறான். ஸ்திரீயின் மனதிலே அதுபற்றி சந்தேகத்தை ஏற்படுத்த முயற்சி பண்ணுகிறான். தேவனுடைய பிரமாணம் நியாயமற்றது என்பதுபோல சாத்தான் சொல்லுகிறான். தேவன் தம்முடைய வார்த்தைகளை உறுதியாக சொல்லுகிறார். ஆனால் சாத்தானோ தேவனுடைய வார்த்தையில் உறுதியுமில்லை, நிச்சயமுமில்லை என்பதுபோல பேசி, மனுஷரை சோதிக்கிறான்.
சாத்தான் ஸ்திரீயை சோதித்தாலும், அவளுக்கு கர்த்தருடைய கட்டளை தெளிவாக தெரிந்திருக்கிறது. ஸ்திரீயானவள் சாத்தானுக்கு தேவனுடைய தெய்வீக கட்டளையை அறிவிக்கிறாள்.
ஸ்திரீயானவள் தேவனுடைய தெய்வீக கட்டளைக்கு மதிப்பு கொடுக்கிறாள். ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து, ""நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்'' (ஆதி 3:2,3) என்று சொல்லுகிறாள்.
ஸ்திரீயானவள் சாத்தானிடத்தில் பேசுவது அவளுடைய பலவீனம். நாம் சோதனையோடு சகவாசம் வைத்துக்கொள்ளக்கூடாது. சோதனையை விட்டு விலகிப்போய்விடவேண்டும். ஸ்திரீயானவளோ சாத்தானை விட்டு விலகிப்போவதற்கு பதிலாக, அவனோடு சம்பாஷணை பண்ணுகிறாள்.
"அதிகமான பேச்சுக்கள் எப்போதுமே ஆபத்தானது. சாத்தான் ஸ்திரீயினிடத்தில் பேச ஆரம்பிக்கிறான். அவன் வஞ்சகமான குணமுள்ளவன். சாத்தான் ஆரம்பத்திலேயே பொய் சொல்லுகிறான். ஸ்திரீயானவளுக்கு சத்தியம் தெரியும். அவளுக்கு கர்த்தருடைய தெய்வீக கட்டளை தெரியும். ஏவாள் தனக்கு தெரிந்திருக்கும் சத்தியத்தில் நிலைத்திருக்கவேண்டும். ஆனால் ஸ்திரீயானவளோ சாத்தானோடு சம்பாஷணைபண்ண ஆரம்பித்துவிடுகிறாள். நாம் சாத்தானோடு சகவாசம் வைத்துக்கொள்வது நமக்கு எப்போதுமே ஆபத்தானது.
"ஏதேன் தோட்டத்திலே ஆதாமும் ஏவாளும் பாவம் அறியாதவர்களாக, கள்ளம் கபடமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பொய்சொல்லத் தெரியாது. ஆகையினால் ஸ்திரீயானவள் சாத்தானிடத்தில் உண்மையைப் பேசுகிறாள். தேவன் தங்களுக்கு சொன்ன கட்டளையை, ஸ்திரீயானவள் சாத்தானுக்கு அப்படியே சொல்லுகிறாள்.
"சாத்தான் ஸ்திரீயைப் பார்த்து \"\"நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ'' என்று கேட்டபோது, ஸ்திரீயானவள் அவனுக்குƒபிரதியுத்தரமாக, \"\"நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளை புசிக்கலாம்'' என்று சொல்லுகிறாள்.
"தேவன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று சொன்னார். ஸ்திரீயானவள் தேவன் சொன்ன இந்தக் கட்டளையையும் சாத்தானுக்கு சொல்லுகிறாள். அவள் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறாள். தேவன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று சொன்னதினால், தான் அதை புசிப்பதில்லை என்றும், அதை தொடுவதில்லை என்றும் ஸ்திரீயானவள் தீர்மானமாய்ச் சொல்லுகிறாள்.
"நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கூடாது என்பது தேவனுடைய கட்டளை. \"\"அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' என்றும் தேவன் ஆதாமுக்கு கட்டளையிட்டிருக்கிறார். தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாவிட்டால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மரணம் வரும். தேவன் தடைபண்ணியிருப்பதை புசியாமலிருப்பது தங்களுக்கு நன்மையானது என்று ஆதாமும் ஏவாளும் தீர்மானமாயிருக்கிறார்கள்.
"சாத்தான் ஸ்திரீயின் வார்த்தைகளை பொறுமையோடு கேட்கிறான். அவள் தன் வார்த்தைகளை சொல்லி முடித்தவுடன், சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி, \"\"நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று சொல்லுகிறான். சாத்தான் ஸ்திரீயின் மனதிலுள்ள பயத்தை தன்னுடைய வஞ்சக வார்த்தையினால் அகற்றுவதற்கு முயற்சிபண்ணுகிறான்.
"நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிப்பதினால், அவர்களுக்கு ஒரு ஆபத்தும் வராது என்று சாத்தான் விவாதம் பண்ணுகிறான். அந்த விருட்சத்தின் கனியைப் புசிப்பது தேவனுடைய கட்டளையை மீறுகிற செயல். அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறினாலும், தேவன் அவர்களுக்கு சொன்ன பிரகாரம், அவர்கள் செத்துப்போகமாட்டார்கள் என்று சாத்தான் சொல்லுகிறான். தேவன் அவர்களுக்கு இவ்வளவு கடினமான தண்டனையைக் கொடுக்கமாட்டார் என்பது சாத்தானுடைய விவாதம். தேவன் தண்டிப்பதாக சொன்னாலும், அவர் தம்முடைய வார்த்தையின் பிரகாரம் அவர்களை தண்டிக்கமாட்டார் என்று சாத்தான் சொல்லுகிறான்.
"சாத்தான் ஸ்திரீயை நோக்கி, \"\"நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று சொன்ன வாக்கியத்திற்கு, \"\"நீங்கள் செத்துப்போவீர்கள் என்னும் நிச்சயமில்லை'' என்று வேதபண்டிதர்களில் சிலர் அர்த்தம் சொல்லுகிறார்கள். சாத்தான் மனுஷரை சோதிக்கும்போது, முதலாவதாக மனுஷருடைய மனதிலே சத்தியத்தை சந்தேகப்பட வைக்கிறான். அதன் பின்பு சாத்தான் மனுஷரை சத்தியத்தை மறுதலிக்க வைக்கிறான்.
"சாத்தான் மனுஷரை சோதிக்கும்போது, மனுஷருடைய மனதிலே குழப்பம் ஏற்படும். அவர்கள் சத்தியத்தை நம்பாமல், அதைப்பற்றி விவாதம்பண்ண ஆரம்பிப்பார்கள். தங்கள் மனதிற்குள் தேவையில்லாத கேள்விகளையெல்லாம் கேட்டு, தங்களுக்குள் குழப்பமடைவார்கள். முடிவிலே அவர்கள் சத்தியத்தை சந்தேகப்பட்டு, அதை மறுதலித்துவிடுவார்கள். சத்தியத்தை மறுதலிக்கிறவர்கள் தேவனையும் மறுதலிப்பார்கள். சத்தியம் இல்லை என்று சொல்லுகிறவர்கள் தேவனும் இல்லை என்று சொல்லுவார்கள்.
"சாத்தான் ஸ்திரீயை நோக்கி, \"\"நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று சொல்லுகிறான். அவன் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டு பேசுகிறான். \"\"அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்'' என்று தேவன் உறுதியாய் சொல்லியிருக்கும்போது, சாத்தான் ஸ்திரீயை நோக்கி, \"\"நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று சொல்லுகிறான். சாத்தானுடைய வார்த்தைகள் எப்போதுமே சத்தியத்திற்கு முரணாக இருக்கும்.
"ஏவாள் தடைபண்ணப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்தால், அவள்தான் செத்துப்போவாள். அவள் அந்தக் கனியைப் புசிப்பதினால் சாத்தானுக்கு ஒரு ஆபத்தும் வராது. இதுவே சாத்தானுடைய தந்திரம். சாத்தான் எப்போதுமே நமக்கு ஆபத்து வரும் வண்ணமாகவே நம்மை சோதிப்பான். நாம் பாவத்தில் விழுந்தால் நமக்குத்தான் மரணம் வரும். நம்முடைய பாவத்தினால் சாத்தானுக்கு ஒரு ஆபத்தும் வராது. சாத்தான் எப்போதுமே நம்முடைய ஜீவனோடும், நம்முடைய பாதுகாப்போடும் விளையாடுகிறான். சாத்தானுடைய சோதனைக்கு கீழ்ப்படிந்து பாவம் செய்கிறவர்கள், தங்களுக்கு தாங்களே அழிவை வரவழைத்துக்கொள்கிறார்கள்.
"சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி, \"\"நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று சொல்லுகிறான். ஒருவேளை அவர்கள் கர்த்தர் சொன்ன பிரகாரம் செத்துப்போனாலும், சாத்தான் சாகமாட்டான். தண்டனை அவர்களுக்குத்தான் வரும்.
"சாத்தான் ஸ்திரீயை நோக்கி, மேலும் சில இச்சக வார்த்தைகளை சொல்லுகிறான். \"\"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்'' (ஆதி 3:5) என்று சாத்தான் ஸ்திரீயினிடத்தில் சொல்லுகிறான்.
"சாத்தான் ஸ்திரீயைப் பார்த்து \"\"நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று சொல்லுவதினால் மாத்திரம், அவள் தன்னுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியமாட்டாள் என்பது சாத்தானுக்கு நன்றாய்த் தெரியும். ஸ்திரீயானவள் இப்போது ஜீவனோடிருக்கிறாள். அந்தக் கனியைப் புசித்த பின்பும், அவள் ஜீவனோடிருப்பாள் என்று சாத்தான் சொல்லுகிறான். இதனால் ஸ்திரீக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பது சாத்தானுக்கு தெரியும். ஏற்கெனவே ஜீவனோடிருந்தவள், இப்போது தொடர்ந்து ஜீவனோடிருக்கிறாள். இதில் ஸ்திரீக்கு விசேஷித்த நன்மை எதுவும் ஏற்படவில்லை.
"தேவன் தடைபண்ணின விருட்சத்தின் கனியைப் புசித்தால், அவள் சாகாமலிருப்பது மாத்திரமல்ல, அவளுக்கு அதிக நன்மைகளும் உண்டாகும் என்று சாத்தான் ஆசை வார்த்தைகளை சொல்லுகிறான். பாவம் செய்கிறவர்கள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பாவம் செய்கிறார்கள். தங்களுக்கு ஒரு ஆதாயமும் வரவில்லையென்றால், நம்மில் அநேகர் பாவம் செய்யமாட்டார்கள்.
"தேவன் தடைபண்ணின விருட்சத்தின் கனியைப் புசித்தால், அவர்களுக்கு இரண்டு ஆதாயங்கள் உண்டாகும் என்று சாத்தான் ஸ்திரீயை நோக்கி ஆசை வார்த்தைகளை சொல்லுகிறான். அவையாவன: \n
"1. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் \n
"2. நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள். \n
"ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தால், அவர்கள் இப்போதிருக்கும் நிலமையிலிருந்து உயர்ந்த நிலமைக்குப் போவார்கள் என்று சாத்தான் ஆசை வார்த்தைகளை சொல்லுகிறான். அவர்கள் இருவரும் இப்போது பாவமில்லாமல் பரிசுத்தமாயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்குள் சந்தோஷமாயும் திருப்தியாயும் இருக்கிறார்கள்.
"சாத்தானோ ஸ்திரீயை நோக்கி, \"\"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும்'' என்று சொல்லுகிறான். அவர்களுடைய கண்கள் இப்போது திறக்கப்பட்டுத்தான் இருக்கிறது. ஆனாலும் அந்தக் கனியைப் புசித்தால், அவர்களுடைய கண்களுக்கு விசேஷித்த மேன்மையும், அதிக வல்லமையும், ஏராளமான சந்தோஷமும் உண்டாகும் என்று சாத்தான் பொய் சொல்லுகிறான். அவர்கள் இருவரும் இப்போது பார்ப்பதைவிட, இன்னும் ஏராளமான காரியங்களையும், புதிய காரியங்களையும் பார்ப்பார்கள் என்று சாத்தான் அவர்களை ஏமாற்றுகிறான்.
"அவர்களுடைய கண்கள் திறக்கப்படும் என்று சொன்னது மாத்திரமல்ல, \"\"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே, நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போலிருப்பீர்கள்'' என்றும் சாத்தான் ஸ்திரீயினிடத்தில் பொய் சொல்லுகிறான். தேவர்கள் என்னும் பெயருக்கு எபிரெய பாஷையில் \"\"எலோகிம்'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எலோகிம் என்னும் பெயருக்கு \"\"வல்லமையுள்ள தேவன்'' என்று பொருள்.
"தேவன் மாத்திரமே சர்வஞானமும், சர்வவல்லமையுமுள்ளவர். அவர்கள் அதைப் புசிக்கும் நாளிலே, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவர்களும் சர்வஞானமுள்ளவர்களாக இருப்பார்கள் என்றும், அவர்கள் தேவர்களைப்போலாகி, சர்வவல்லமையுள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் சாத்தான் ஸ்திரீக்கு ஆசை வார்த்தைகளை சொல்லுகிறான்.
"அவர்கள் தடைபண்ணப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசிக்கும் நாளிலே, அவர்கள் நன்மை தீமை அறிந்துகொள்வார்கள் என்றும் சாத்தான் ஸ்திரீயினிடத்தில் சொல்லுகிறான். அவர்கள் எதையெல்லாம் அறிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ, அதையெல்லாம் அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்கள் அறியாத இரகசியம் எதுவுமே இருக்காது.
"சாத்தான் ஸ்திரீயை சோதிக்கும்போது, தன்னுடைய வஞ்சக வார்த்தைகளை உறுதிபண்ணுவதற்கு, தேவனுடைய பெயரை பயன்படுத்துகிறான். சாத்தான் ஸ்திரீயினிடத்தில் ஆசை வார்த்தைகளை சொல்லிய பின்பு, \"\"இதை தேவன் அறிவார்'' என்று சொல்லுகிறான். சாத்தான் தேவனுடைய நாமத்தை வீணிலே பயன்படுத்துகிறான்.
"தேவன் தடைபண்ணியிருக்கிற விருட்சத்திற்கு, \"\"நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்'' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெயருக்கும், அந்த விருட்சத்தின் சுபாவத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் சாத்தானோ மிகவும் தந்திரமாக, அந்த விருட்சத்தின் பெயரும், அதின் சுபாவமும் ஒத்திருப்பதாக பொய்சொல்லுகிறான். \"\"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே, நன்மை தீமை அறிந்துகொள்வீர்கள்'' என்று சாத்தான் வஞ்சகமான வார்த்தைகளை சொல்லுகிறான்.
"சாத்தான் ஸ்திரீக்கு ஆசை வார்த்தைகளை சொல்லிவிட்டு, அந்த வார்த்தைகள் தாமதமில்லாமல் உடனே நிறைவேறும் என்றும் பொய்சொல்லுகிறான். \"\"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே'' தான் சொல்லுகிற காரியங்களெல்லாம் அவர்களுக்கு நடைபெறும் என்று சாத்தான் பொய்சொல்லுகிறான்.
"அவர்கள் அந்தக் கனியைப் புசித்தவுடனேயே, அவர்களுடைய ஜீவியத்தில் உடனடி மாற்றமுண்டாகும் என்றும், அவர்கள் உடனே தேவர்களைப்போல இருப்பார்கள் என்றும் சாத்தான் ஆசையான வார்த்தைகளை பொய்யாய்ச் சொல்லுகிறான்.
"சாத்தானுடைய வஞ்சக வார்த்தைகளில் அவனுடைய சதித்திட்டம் வெளிப்படுகிறது. ஆதாமும் ஏவாளும் இப்போது கர்த்தருக்குள் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்கள். சாத்தானோ அவர்களிடத்தில் தன்னுடைய வஞ்சக வார்த்தைகளைப்பேசி, அவர்கள் தற்போதிருக்கும் நிலையில், அவர்களுடைய மனதிலே திருப்தி ஏற்படாத ஒரு சூழ்நிலையை உண்டுபண்ணுகிறான். இதனால் அவர்கள் தற்போதிருக்கும் நிலையைவிட, ஒரு உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
"சாத்தான் அவர்களுடைய மனதிலே பேராசையை ஏற்படுத்துகிறான். தேவன் ஆதாமையும் ஏவாளையும் மனுஷனாகவும் மனுஷியாகவும் உருவாக்கியிருக்கிறார். அவர்களோ தாங்கள் மனுஷராயிருப்பதற்கு பதிலாக, தேவர்களாயிருக்கவேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள். தாங்கள் தேவர்களாயிருப்பதற்கு தங்களுக்கு தகுதியிருக்கிறது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
"தேவனே மனுஷனையும் மனுஷியையும் உருவாக்கினார். தேவன் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக அவர்களை மனுஷனாகவும், மனுஷியாவும் உருவாக்கியிருக்கிறார். தாம் உருவாக்கின மனுஷரைக்குறித்து தேவனுக்கு கரிசனையும், நல்ல நோக்கமுமுள்ளது.
"ஆனால் தேவனுக்கு ஆதாமைக் குறித்தும் ஏவாளைக் குறித்தும் நல்ல நோக்கமோ, நல்ல திட்டமோ இல்லை என்று சொல்லி சாத்தான் ஸ்திரீயை வஞ்சிக்கிறான். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தால் அவர்களுக்கு நன்மை உண்டாகும் என்றும், ஆனால் தேவனோ அவர்களுக்கு நன்மை உண்டாகக்கூடாது என்றும் நினைத்து, அவர்கள் அதைப் புசிக்கக்கூடாது என்று தடைபண்ணியிருக்கிறார் என்று சாத்தான் அவர்களிடத்தில் பொய்சொல்லுகிறான்.
"சாத்தான் ஸ்திரீயினிடத்தில் இச்சக வார்த்தைகளை பொய்யாய்ச் சொல்லுகிறான். அதைப் புசிக்கும் நாளிலே அவர்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், அவர்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பார்கள் என்றும் பொய்சொல்லுகிறான். தான் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காக, \"\"இதை தேவனும் அறிவார்'' என்று மேலும் ஒரு பொய்யை சொல்லுகிறான். தேவனுக்கு இவையெல்லாம் தெரிந்தும், அந்தக் கனியைப் புசிக்கக்கூடாது என்று அவர் சொல்லுகிறார், ஆகையினால் தேவனுக்கு அவர்களைக்குறித்து நல்ல நோக்கமோ, நல்ல திட்டமோ இல்லை என்று சாத்தான் தன்னுடைய வஞ்சகமான வார்த்தைகளைப் பேசுகிறான்.
"சாத்தான் சொல்லுகிற வார்த்தை தேவதூஷணமான வார்த்தை. தேவனுடைய வல்லமையை தூஷிக்கக்கூடாது. தேவனாகிய கர்த்தரை ஏளனம்பண்ணக்கூடாது. மனுஷன் தம்முடைய நிலமைக்கு உயர்ந்துவிடுவானோ என்று, தேவன் பயப்படுகிறவரல்ல. சர்வசிருஷ்டிகராகிய தேவன், தம்முடைய சிருஷ்டிகளைப் பார்த்து, பயந்து நடுங்குகிற தேவனல்ல.
"சாத்தான் தேவனுடைய நன்மையான சுபாவத்திற்கு விரோதமாகப் பேசுகிறான். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்து, அவை மிகவும் நல்லது என்று கண்டார். அவை நன்றாயிருக்கவேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். தேவன் தம்முடைய தெய்வீக கிருபையினாலும், தெய்வீக பராமரிப்பினாலும், தம்முடைய சிருஷ்டிகளின் தேவைகளையெல்லாம் சந்திக்கிறார். அவை ஆனந்தமாயிருப்பதைப் பார்த்து தேவனும் சந்தோஷப்படுகிறார். ஆனால் சாத்தானோ தேவனுடைய நன்மையான சுபாவத்தைக் குற்றப்படுத்துகிறான். மனுஷன் நன்றாயிருப்பது தேவனுக்கு பிடிக்கவில்லை என்று பொய் சொல்லுகிறான்.
"ஆதாமும் ஏவாளும் சாத்தானுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால், அவர்கள் தேவனுடைய அன்பை விட்டு விலகிப்போகவேண்டியதுவரும். தேவனுடைய அன்பை விட்டு விலகுகிறவர்கள், தேவனை விட்டே பிரிந்துபோய்விடுவார்கள். சாத்தான் இதை எதிர்பார்த்துத்தான் ஸ்திரீயானவளை சோதிக்கிறான். ஆதாமும் ஏவாளும் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கக்கூடாது. அவர்கள் தேவனுடைய அன்பையும், அவரையும் சந்தேகப்படவேண்டும். அவர்கள் தேவனைவிட்டுப் பிரிந்துவிடவேண்டும். இதுவே சாத்தானுடைய சதித்திட்டம். சாத்தான் நம்முடைய முதல் பிதாக்களுக்கு மிகவும் ஆபத்தான கண்ணியை விரிக்கிறான்.
"சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி, \"\"நீங்கள் தேவர்களைப்போல் இருப்பீர்கள்'' என்று சொல்லுகிறது. மனுஷரை வஞ்சிப்பதற்குச் சாத்தான் பயன்படுத்தும் மிகப்பெரிய கருவி புகழ்ச்சியும், பேராசையுமாகும். மனுஷன் தன்னைத் தேவனாக்கிக் கொள்ள முடியும் என்று சாத்தான் வஞ்சிக்கிறான். இந்த வசனத்தில் \"\"தேவர்கள்'' என்று பன்மையில் கூறப்பட்டிருப்பது தேவனுடைய திரித்துவப் பண்பை விளக்குகிறது. \"\"ஏலோ'' என்பது தேவன் - ஒருமை. \"\"ஏலோகிம்'' என்பது தேவர்கள் - பன்மை.
"தேவனுக்குத் தீமையைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவரால் பாவம் செய்ய முடியாது. அவர் மனுஷரிடத்தில்தான் தீமையையும், பாவத்தையும் கண்டு அதைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்.