செப்பனியா முன்னுரை
சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் சொன்ன சிறிய தீர்க்கதரிசிகளில், செப்பனியாவின் புஸ்தகம் கடைசியாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. இவர் எரேமியாவின் காலத்திற்கு சற்று முந்திய காலத்தில் ஊழியம் செய்தவர். யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப்போன காலத்தில், எரேமியா கர்த்தருடைய வார்த்தையை தீர்க்கதரிசனமாய்ச் சொன்னார்.
கல்தேயர் மூலமாய் யூதாவுக்கும் எருசலேமுக்கும் பொதுவான அழிவு வரும் என்று செப்பனியா தீர்க்கதரிசனம் சொன்னார். யூதர்களுடைய பாவங்களை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். யூதர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டுமென்று அவர்களை கர்த்தருடைய நாமத்தினால் எச்சரித்தார்.
யூதாதேசத்தைப்போலவே, மற்ற தேசங்களும் பாவம் செய்தால், அவர்களுக்கும் அழிவு வரும் என்று, செப்பனியா அண்டை தேசத்தாரையும் எச்சரித்தார். யூதர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப்போனாலும், ஏற்ற காலத்திலே அவர்கள் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சொந்த தேசத்திற்கு சந்தோஷமாகத் திரும்பி வருவார்கள் என்னும் ஆறுதலான வாக்குத்தத்தங்களையும் செப்பனியா அவர்களுக்கு சொன்னார்.
கி.மு. 679 - 648 ஆம் வருஷங்களில் செப்பனியாவின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் செப்பனியா தீர்க்கதரிசி ஆவார் (செப் 1:1).
மையக்கருத்து
1. யூதர்கள்மீதும் புறஜாதியார்மீதும் அவர்களுடைய பாவங்களின் நிமித்தமாகத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும்.
2. பக்தியுள்ள யூதர்மீதும், பக்தியுள்ள புறஜாதியார்மீதும் தேவனுடைய நன்மை வரும்.
3. யூதாவின்மீது பாபிலோன் மூலமாக உடனடியாக நியாயத்தீர்ப்பு வரும்.
4. கர்த்தருடைய நாளில் வருங்காலத்தில் பாபிலோன்மீது நியாயத்தீர்ப்பு உண்டாகும். (செப் 1:1-18).
5. பாபிலோன்,பெலிஸ்தியா, மோவாப், அம்மோன், எத்தியோப்பியா, அசீரியா ஆகிய தேசங்கள் மூலமாகத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு புறஜாதியார் மீது உடடினயாக உண்டாகும். (செப் 2)
6. பாபிலோன் மூலமாக யூதாவின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு உடனடியாக உண்டாகும். வருங்காலத்தில் கர்த்தருடைய நாளிலும், மேசியாவின் ஆளுகையின்போதும், இஸ்ரவேலைப் பற்றி இந்தப் புஸ்தகத்தில் முன்னறிவிக்கப் பட்டிருக்கிறது. (செப் 3:1-20).
7. யூதா தேசத்தார் தேவனுடைய சித்தத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து இசைந்துபோக வேண்டும். இல்லை யெனில், அவர்கள்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிச்சயமாய் வரும்.
8. மேசியாவின் இரண்டாம் வருகையின் போது, இஸ்ரவேலில் மீதியாக இருக்கிறவர்கள் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்.
யோசியாவின் ஆட்சிக் காலத்தில் எழுப்புத-ன் நாட்களில் செப்பனியா யூதாவுக்கும், எருசலேமுக்கும் எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தார். யூதாவின் மிக மோசமான ராஜாக்களில் ஒருவனான மனாசேயின் ஆட்சிக் காலத்தில் தேசமும், ஜனங்களும் சீர்கெட்டுப் போயிருந்தார்கள்.
தெற்கு ராஜ்ஜியத்தின்மீது தேவனுடைய பொறுமை அதிகமாய் வெளிப்பட்டது. இந்தப் புத்தகம் நியாயத்தீர்ப்பைப் பற்றிய எச்சரிப்பாக இருந்தபோதிலும், வருங்காலத்தில் தேவனுடைய ஜனங்கள் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்னும் நம்பிக்கையையும் செப்பனியா கொடுத்தார்.
புத்தகத்தின் பொதுவான சுருக்க வருணனை
1. யூதாவின் பாவங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு (அதிகாரம் 1)
2. பெ-ஸ்தியர், மோவாப், அம்மோன், எத்தியோப்பியா, அசீரியா ஆகிய தேசங்களின்மீது நியாயத்தீர்ப்புகள் (அதிகாரம் 2)
3. வருங்காலத்தில் மறுபடியும் திரும்ப கூட்டிச் சேர்க்கப்படுவதற்குக் காத்திருத்தல் (அதிகாரம் 3)
பொருளடக்கம்
ஒ. யூதாவின்மீது உடனடி நியாயத்தீர்ப்பு
1. தலைப்பு, ஆசிரியர், வரலாற்றுப் பின்னணி (1:1)
2. பதினான்கு அம்ச நியாயத்தீர்ப்பு - பாபிலோனிய சிறையிருப்பு (1:2-6)
ஒஒ. கர்த்தருடைய நாள்
1. சமீபம் - ஏழு வகுப்பினர் தண்டிக்கப் படுவார்கள் (1:7-13)
2. சமீபம் - கர்த்தருடைய நாளின் ஏழு அம்ச குணாதிசயம் - காரணம் (1:14-18)
ஒஒஒ. புறஜாதியார்மீது பாபிலோனினால் நியாயத்தீர்ப்பு
1. யூதாவிற்கு ஐந்து அம்ச புத்திமதி (2:1-3)
2. பெலிஸ்தியாவிற்கு எதிராக (2:4-7)
3. மோவாபிற்கும் அம்மோனுக்கும் எதிராக (2:8-11)
4. எத்தியோப்பியாவிற்கு எதிராக (2:12)
5. அசீரியாவிற்கு எதிராக (2:13-15)
ஒய. யூதாவின் பதினான்கு அம்ச நீதிநெறி நிலை (3:1-7)
ய கடைசி நாட்கள்
1. அர்மகெதோன் (3:8)
2. தேசங்களின் மனமாற்றம் (3:9-10)
3. கலகக்காரர்கள் யூதாவிலிருந்து அகற்றப்படுவார்கள் (3:11-13)
4. மேசியா சீயோனில் ஆட்சி புரிகிறார் (3:14-17)
5. இஸ்ரவேலின் மீட்பு (3:18-20)