வேதாகம நபர்கள் : அகிதூபு, அகித்தோப்பேல்




வேதாகம நபர்கள் : அகிதூபு, அகித்தோப்பேல்

அகிதூபு - ISAIDUB

அகிதூப்" என்னும் எபிரெய பெயருக்கு - 
"(என்) சகோதரர் நன்மையானவர்” "my brother is good (goodness)" என்று பொருள் பழைய ஏற்பாட்டில் "அகிதூப்” என்னும் பெயரில் மூன்று பேர் உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு

1. பினெகாசின் குமாரன். ஏலியின் பேரன். ஏலியின் மரணத்திற்குப் பின்பு அகிதூப் பிரதான ஆசாரியனானான். (1சாமு 4:11)

2. அமரியாவின் குமாரன். சாதோக்கின் தகப்பன். அகிமெலேக்கின் மரணத்திற்குப் பின்பு சவுல் சாதோக்கை பிரதான ஆசாரியனாக்கினான். (2சாமு 9:17; 1நாளா 6:7-8,52; எஸ்றா 7.2), 1நாளா 6:8,11-12 ஆகிய வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அகிதூபும், 2நாளா 31:10 ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அசரியாவும் ஒருவேளை ஒரே நபராக இருக்கலாம்

3. மெராயோத்தின் தகப்பன். இவன் தேவாலயத்து விசாரணைக்கர்த்தன். (1 நாளா 9:11)

அகித்தோப்பேல் - AHITHOPHEL

அகித்தோப்பேல்" என்னும் எபிரெய பெயருக்கு - "என் சகோதரர் மதிகேடன்” "my brother is foolish" என்று பொருள்.

தாவீதின் ஆலோசனைக்காரர்களில் ஒருவனாக இருந்தான். அப்சலோம் தாவீதுக்கு எதிராகக் கலகம் பண்ணியபோது, அகித்தோப்பேல் அப்சலோமிற்கு உதவி புரிந்தான் தன்னுடைய சுயசெல்வாக்கினால் அப்சலோமின் கலகம் வெற்றி பெறுமென்று நினைத்தான் தன்னுடைய அதிகாரத்திலும், பதவியிலும் உதவி பெறலாம் என நினைத்து, தாவீதின் மறுமனையாட்டிகளோடு சேருமாறு அகித்தோப்பேல் அப்சலோமிற்கு ஆலோசனை கூறினான். (2சாமு 15.12; 16.21) ஒரு ராஜாவின் மறுமனையாட்டிகளோடு சேருவது அவனுடைய சிங்காசனத்தை அபகரிப்பதற்குச் சமமான செயலாகும்

அப்சலோம் கலகம் பண்ணியபோது தாவீது எருசலேமை விட்டு ஓடிப்போனார். அவரைத் தொடர்ந்து சென்று, தாக்குமாறு அகித்தோப்பேல் ஆலோசனை கூறினான். ஆனால் அகித்தோப்பேலின் ஆலோசனை அப்சலோம் அங்கிகரிக்கவில்லை அப்சலோமிற்கு ஊசாய் என்னும் பெயரில் மற்றொரு ஆலோசனைக்காரன் இருந்தான் தாவீதை உடனடியாகப் பின்தொடர்ந்து தாக்காமல் சற்று தாமதித்து தாக்க வேண்டுமென்று ஊசாய் ஆலோசனை கூறினான். அப்சலோம் ஊசாயின் ஆலோசனையை ஏற்று தப்பியோடிய தாவீதை உடனடியாகப் பின்தொடர்ந்து தாக்காமல், தாமதம் பண்ணினான் அப்சலோமின் இந்த முடிவால் தாவீதுக்கு எதிரான கலகம் அழிந்து போகும் என்பதை உணர்ந்த அகித்தோப்பேல் தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்கு செய்து, நான்றுகொண்டு செத்தான். (2சாமு 17:23)

இவன் தாவீதின் ஆலோசனைக்காரரில் ஒருவன். மேலும் இவனுடைய குமாரன் தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவனாக இருக்கிறான். (2சாமு 15:12-34; 2சாமு 16:15-23; 2சாமு 17:1-23; 2சாமு 23:34; 1நாளா 27:33-34, சங் 41:9; சங் 55:12-14) அப்சலோமும், அகித்தோப்பேல் தாவீதுக்கு எதிராகக் கலகம் பண்ணுவத்தைக் குறித்து ஏற்கெனவே பேசி முடிவு பண்ணியிருக்க வேண்டும். இந்தக் கலகத்தைப் பற்றிய எண்ணத்தை அகித்தோப்பேல்தான் ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும். அகித்தோப்பேல் பத்சேபாளின் தாத்தா. உரியாவைக் கொலை செய்ததற்காகவும், பத்சேபாளைக் கெடுத்துப் போட்டதற்காகவும் அகித்தோப்பேல் தாவீதைப் பழிவாங்குவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். (2சாமு 11:3; 2சாமு 23:34).

அகித்தோப்பேலின் ஆலோசனையும், ஊசாயின் ஆலோசனையும்

அகித்தோப்பேல் அப்சலோமுக்கு ஏற்கெனவே 2சாமு 16:21-23 வசனங்களில் தாவீதின் மறுமனையாட்டிகளோடே சேருமாறு ஆலோசனை கூறினான். இப்போது பன்னீராயிரம் பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் ஆகிய பின்தொடர்ந்து போக வேண்டும் என்று மற்றொரு ஆலோசனையைக் கூறுகிறான். தாவீது விடாய்த்தவனும் அப்பொழுது கைதளர்ந்தவனுமாயிருக்கையில் அவனைத் திடுக்கிட பண்ணலாம் அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டிப்போடலாம் என்று ஆலோனை கூறுகிறான். இதன் பின்பு ஜனங்கள் சமாதானத்தோடே இருப்பார்கள் என்பது அகித்தோப்பேலின் ஆலோசனை. (2சாமு 17.1-3), அப்சலோமுக்கும், இஸ்ரவேலின் மூப்பருக்கும் இந்த ஆலோசனை நல்ல ஆலோசனையாக இருந்தது. ஆனால் அவர்கள் ஊசாயின் ஆலோசனையையும் கேட்க விரும்பினார்கள். ஊசாயின் ஆலோசனையைக் கேட்டபின்பு, அவர்கள் அகித்தோப்பேலின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, ஊசாயின் ஆலோசனையை அங்கிகரித்தார்கள். இதனால் அவமானமடைந்த அகித்தோப்பேல் தன் ஜீவனை மாய்த்துக் கொண்டான்

அகித்தோப்பேலின் ஆலோசனை

1. நான் பன்னீராயிரம் பேரைத் தெரிந்து கொண்டேன். (2சாமு 17:1).

2. இன்று இராத்திரி தாவீதைப் பின் தொடர்ந்து போவேன்.

3. அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போவேன். (2சாமு 17:2).

4. அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்.

5. அப்பொழுது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவார்கள்.

6. நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டுவேன்

7. ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன். (2சாமு 17:3).

ஊசாயின் ஆலோசனை

1. அகித்தோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல (2சாமு 17:7).

2. உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்று நீர் அறிவீர் {2சாமு 17:8).

3. அவர்கள் வெளியிலேகுட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்று நீர் அறிவீர்

4. உம்முடைய தகப்பன் யுத்த வீரனுமாயிருக்கிறார் அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்

5. அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார் (2சாமு 17.9).

6. துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள் அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங் கூட கலங்கிப்போவான் (2சாமு 17.9-16)

7. உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள்
என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள். (2 சாமு 17:10)

8. ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயர் செபாமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப் படட்டும். (2சாமு 17:11). 

9. நீர்தானே கூட யுத்தத்திற்குப் போகவேண்டும். 

10. அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போவோம் (2சாமு 17.12),

11. பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர் மேல் இறங்குவோம்.

12. அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.

13. ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால் இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப்
பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போடுவோம். (2சாமு 17.13).

14. அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவோம்.

அகித்தோப்பேலும் ஊசாயும் அப்சலோமுக்கு ஆலோசனை கூறுகிறார்கள் ஊசாயின் ஆலோசனையே அப்சலோமுக்கும், இஸ்ரவேலின் மூப்பருக்கும் நல்ல ஆலோசனையாகப்படுகிறது. அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்காகக் கர்த்தர் இவ்வாறு கட்டளையிட்டிருக்கிறார் (2சாமு 17:14). அப்சலோம் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று அகித்தோப்பேல் கண்டபோது, தன் வீட்டுக்குப்போய்
நான்றுகொண்டு செத்தான் (2சாமு 17:23). இந்தச் சம்பவத்தினால் தாவீதுக்குத் தப்பியோடுவதற்கும், யுத்தத்திற்கு ஆயத்தமாவதற்கும் சமயம் கிடைக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.