நாகூம் புத்தகம் ஒரு கண்ணோட்டம்




நாகூம் புத்தகம் முன்னுரை 

“”நாகூம்’’ என்னும் பெயருக்கு “”தேற்றரவாளர்’’ என்று பொருள்.  கர்த்தர் எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் ஜனங்களைத் தேற்றும் ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்.  நாகூம்  நினிவேயின் அழிவை  தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். அதே வேளையில்  அவர்   வடக்கு இஸ்ரவேல் தேசத்தின் பத்துக்கோத்திரத்தாருக்கு, கர்த்தருடைய ஆறுதலான செய்தியையும் சொல்லுகிறார். 

இதன் பின்பு வடக்கு இஸ்ரவேல் தேசத்தார் அசீரிய தேசத்து சிறையிருப்புக்குப்போனார்கள். எசேக்கியா ராஜாவின் காலத்தில் நாகூம் வாழ்ந்தார் என்றும், அக்காலத்தில் அவர் நினிவேக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னார் என்றும் வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இந்த சம்பவம் அசீரியாவின் ராஜா இஸ்ரவேல் வம்சத்தாரை சிறைப்பிடித்து சென்ற பின்பு நடைபெற்றது. இது எசேக்கியா ராஜாவின்  ஒன்பதாவது வருஷ ஆட்சிக்காலமாகும்.  

சனகெரிப் யூதாதேசத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ண வருவதற்கு முன்பாக, நாகூம்  நினிவேக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னார்.  இது எசேக்கியா ராஜாவினுடைய ஆட்சிக்காலத்தின் பதிநான்காம் வருஷமாகும். இந்த யுத்த முயற்சியில் சனகெரிப்புக்கு  தோல்வி உண்டாயிற்று. நாகூம் இது பற்றி முதலாவது அதிகாரத்தில் எழுதியிருக்கிறார். 

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில வருஷங்களுக்கு பின்பு நாகூம் இரண்டாவது, மூன்றாவது ஆகிய அதிகாரங்களில்  எழுதப்பட்டிருக்கிற செய்தியை தீர்க்கதரிசனங்களாக சொல்லுகிறார்.  இவை மனாசேயின் ஆட்சிக்காலத்தில்  சொல்லப்பட்டிருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.  

யூதாதேசம் பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப்போவதற்கு ஒரு சில வருஷங்களுக்கு முன்பாக, மனாசே  யூதாதேசத்தை ஆட்சிபுரிந்தான் என்று   சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். 

கி.மு. 786 - 757 ஆம் வருஷத்தில் நாகூமின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் நாகூம் தீர்க்கதரிசி ஆவார் (நாகூம் 1:1).

மையக்கருத்து

1. யோனாவின் காலத்திற்கு 100 வருஷங்களுக்குப் பின்பு நினிவே பட்டணத்தின் அழிவு.

2. நாகூம் தீர்க்கதரிசியின் புஸ்தகம் யோனா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் செய்தியோடு தொடர்புடையது.

3. யோனாவும், நாகூமும் முன்னறிவித்த பிரகாரம் நினிவே பட்டணம் முழுவதுமாக அழிக்கப்படுகிறது.

4. மேதியரும், பாபிலோனியரும் இந்தப் பட்டணத்தை அழித்தார்கள்.

யோனாவின் நாளில் நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். அதனால் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார். ஆனால் இப்போது நினிவே பட்டணத்தார் மறுபடியும் தங்களுடைய பாவ வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்கள். கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறார்கள். ஆகையினால் நினிவே பட்டணத்திற்கு அழிவு நியமிக்கப்படுகிறது.

 இந்தத் தீர்க்கதரிசன நூல் நினிவேயைக் குறித்து கூறப்பட்ட எச்சரிப்பின் வார்த்தைகளாகும். யோனாவின் புஸ்தகம் இரக்கத்தைக் காண்பிக்கும் புஸ்தகம். ஆனால் நாகூம் புஸ்தகம் நியாயத்  தீர்ப்பை வெளிப்படுத்தும் புஸ்தகம் ஆகும். 

நினிவே அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராமாக இருந்தது. அசீரியர்கள் வடக்கு ராஜ்ஜியத்தைக் கி.மு. 722-இல் கைப்பற்றினர். கி.மு. 765-ஆம் வருஷத்தில் யோனா அசீரியர்களிடம் பிரசங்கம் பண்ணி, தங்கள் தீயவழிகளி-ருந்து திரும்பிவருவதற்கு ஒருசந்தர்ப்பம் கொடுத்தார்.  

அசீரியர்கள் மனந்திரும்பினார்கள். ஆனாலும், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக விரைவில் எழும்பினார்கள். அசீரியர்கள் இஸ்ரவேலர்களைச் சிறைப்பிடித்துச் சென்றபிறகு, நாகூம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை அவர்களுக்கு கூறினார்.            (சுமார் கி.மு. 630) 

நாகூம் எல்கோசா ஊரைச் சேர்ந்தவர் (1:1). இது கப்பர் நகூமில் இருந்தது. இந்தப் பகுதியில் இயேசு கிறிஸ்து தமது ஊழியக்காலங்களில் அதிகமாக ஊழியம் செய்து வந்தார். 

புத்தகத்தின் பொதுவான சுருக்க வருணனை

1. கர்த்தருடைய பராக்கிரமமும் வருங்காலத்தில் நினிவேயின்மீது நியாயத்தீர்ப்பும் (அதிகாரம் 1)
2. நினிவேயின்மீது நியாயத்தீர்ப்பின் தொடர்ச்சி (அதிகாரம் 2)
3. நினிவே முழுவதுமாக அழிக்கப்படுதல் (அதிகாரம் 3)

பொருளடக்கம்

 ஒ. தேவனுடைய ஏழு குணாதிசயங்கள் 

1. தலைப்பும் ஆசிரியரும் (1:1)   
2. தேவனுடைய பழிவாங்குதல் (1:2)   
3. நீடிய பொறுமையும் நீதியும் (1:3)  
4. தேவனுடைய சர்வ வல்லமை (1:4-5)  
5. தேவனுடைய பரிசுத்தம் (1:6) 
6. நன்மையும் சர்வ ஞானமும் (1:7-8) 

 ஒஒ. நினிவேயின் வரம்பு மீறுதல் (1:9-11) 

 ஒஒஒ. யூதா 

1. யூதாவின் மீட்பு (1:12-14) 
2. ஆயிர வருஷத்தில் யூதாவின் ஊழியம் (1:15) 
3. அசீரியருக்கு எதிராக யூதா உற்சாகப் படுத்தப்பட்டது (2:1-2) 

 ஒய. நினிவேயின்மீது நியாயத்தீர்ப்பு 

1. வீதிகளில் யுத்தம் (2:3-6) 
2. நினிவேயின் சிறையிருப்பு (2:7-8) 
3. நினிவே கொள்ளையிடப்பட்டது (2:9) 
4. நினிவேயின் முழுமையான அழிவு (2:10-12) 
5. தேவன் அழிக்கிறார் (2:13) 

 ய. நினிவேயின் அழிவிற்குக் காரணங்கள் 

1. பொல்லாப்பும் சண்டைகளும் நிறைந்த பட்டணம் (3:1-4) 
2. தேவனிடமிருந்து நியாயத்தீர்ப்பு (3:5-7)  
3. நோவின்மீது நியாயத்தீர்ப்பு - எடுத்துக்காட்டு (3:8-10) 
4. நினிவேக்கு இது பொருந்தும் (3:11-13) 
5. ஆயத்தமாகுமாறு நினிவேக்கு அழைப்பு (3:14) 
6. நினிவே பாழாக்கப்படும் (3:15-17) 
7. பொல்லாப்பு (3:18-19)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.