அப்போஸ்தலர் நடபடிகள் ஒரு கண்ணோட்டம்

அப்போஸ்தலர்
முன்னுரை

புதிய ஏற்பாட்டில் நான்கு சுவிசேஷங்களுக்குப் பின்பு,  அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகம் கோர்க்கப்பட்டிருக்கிறது.  இந்தப் புஸ்தகத்தை வாசிக்கும்போது, இதற்கு முன்பு கோர்க்கப்பட்டிருக்கும் சுவிசேஷங்களையும், இதற்கு பின்பு கோர்க்கப்பட்டிருக்கும் நிருபங்களையும் தியானிப்பதற்கு உதவியாயிருக்கும்.

இயேசுகிறிஸ்து ""இந்தக் கல்லின்மேல்'' தம் சபையைக் கட்டுவதாகக் கூறினார். இயேசுகிறிஸ்து சொன்ன வாக்கியம் இப்போது நிறைவேறியிருக்கிறது. சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. ஆதித்திருச்சபையின் வளர்ச்சி அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. 

இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பின்பு, தம்முடைய சீஷர்களை உலகம் முழுவதும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்குமாறு கட்டளை கொடுத்தார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் அவர்களுக்கு ஊற்றப்படும்    என்றும் வாக்குப்பண்ணினார். சீஷர்கள்  பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு, தேவனுடைய வல்லமையினால் நிரப்பப்படுகிறார்கள். சபையார் மத்தியில் அற்புங்களும் அடையாளங்களும் நடைபெறுகிறது. இரக்கத்தின் அற்புதங்களும்,  நியாயத்தீர்ப்பின் அற்புதங்களும் தேவனுடைய வல்லமையினால் ஜனங்கள் மத்தியிலே நடைபெறுகிறது.

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவம் சுவிசேஷங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர் உயிர்த்தெழுந்து பரமேறிப்போனபின்பு, அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  அவர்களுடைய ஊழியங்களில் நடைபெற்ற அற்புதங்களும் அடையாளங்களும், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு மேலும் அதிகமான சாட்சியாயிற்று. 

தம்முடைய சீஷர்கள், தமக்குச் சாட்சிகளாகயிருப்பார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு  எவ்வாறு சாட்சிகளாகயிருந்தார்கள் என்பதை  அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகம் விவரித்துக் கூறுகிறது. இயேசுகிறிஸ்து பிரசங்கம்பண்ணும்போது பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று சொன்னார். அந்த ராஜ்யம் இப்போது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியர்களிடம், அவர்களுக்குத் தம்முடைய நாமத்தினாலே உபத்திரவங்கள் வரும் என்று  எச்சரித்துச் சொல்லியிருந்தார். இயேசுகிறிஸ்து சொன்ன பிரகாரமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்களுக்கு உபத்திரவங்களும், பாடுகளும், வேதனைகளும் உண்டாயிற்று. அவர்களில் சிலர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தமாக இரத்த சாட்சிகளாகவும் மரித்தார்கள். அப்போஸ்தலருடைய பாடுகளுக்கு மத்தியில் அவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலும் ஆதரவும் உண்டாயிற்று. இவையெல்லாமே  இயேசுகிறிஸ்து முன்னறிவித்த பிரகாரமாகவே நடைபெறுகிறது. 

இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணிய சத்தியங்களெல்லாம் புதிய ஏற்பாட்டு வரலாற்றில் பிரத்தியட்சமாக ஒவ்வொன்றாக நிறைவேறி வருகிறது. சுவிசேஷத்தையும் நிருபங்களையும் தியானிப்பதற்கு இவை ஒன்றுக்கொன்று உதவியாயிருக்கிறது. சுவிசேஷத்திலுள்ள சத்தியங்களை நிருபங்களிலுள்ள வசனங்கள் விளக்குகிறது. நிருபங்களிலுள்ள சம்பவங்கள் சுவிசேஷத்திலுள்ள வசனங்கள் உறுதிபண்ணுகிறது. 

அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில் இயேசுகிறிஸ்துவின் சபை ஸ்தாபிக்கப்பட்ட விவரம் எழுதப்பட்டிருக்கிறது.  இந்தப் புஸ்தகம் சபையின் வரலாற்றிற்கு முன்னுரையாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். கர்த்தருடைய விசுவாசிகளாகிய நாமெல்லோருமே இயேசுகிறிஸ்துவின் சபையில்  அங்கம் வகிக்கிறோம். நாம் மனுஷர் மத்தியில்  தேவனுடைய கூடாரமாக இருக்கிறோம். 

நான்கு சுவிசேஷங்களிலும் இயேசுகிறிஸ்துவின் சபைக்கு அஸ்திபாரம் போடப்பட்ட சம்பவம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது தேவனுடைய சபைக்கு  சுவிசேஷத்தில் அஸ்திரபாரம் போடப்பட்டு, அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில் அது கட்டியெழுப்பப்படுகிறது. யூதர்கள் மத்தியிலும், சமாரியர் மத்தியிலும், புறஜாதியார் மத்தியிலும் இயேசுகிறிஸ்துவின் சபை ஸ்தாபிக்கப்படுகிறது. 

அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தை எழுதின ஆசிரியர் லூக்கா. இவரே நான்கு சுவிசேஷங்களில், மூன்றாவது சுவிசேஷமான,  லூக்கா சுவிசேஷத்தை எழுதினவர். அப்போஸ்தலர் பவுலின் பாடுகளிலும், பிரயாணங்களிலும், ஊழியங்களிலும் லூக்கா  அவரோடு கூடயிருந்தவர். ""லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான்'' (2தீமோ 4:11) என்று  பவுல் தன் நிருபத்தில் எழுதியிருக்கிறார். 

அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தின் பின்பகுதியில், இந்தப் புஸ்தகத்தின் நடையை தியானித்துப் பார்க்கும்போது, லூக்கா பவுலோடு  எங்கே, எப்போது இருந்தாரென்பது தெளிவாக விளங்கும். லூக்கா இந்தப் புஸ்தகத்தை எழுதும்போது, தன்னையும் பவுலோடு சேர்த்து, அவரோடு  பிரயாணம் பண்ணுவதாக எழுதுகிறார். ""அந்தத் தரிசனத்தை அவன் (பவுல்) கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர்  எங்களை அழைத்தாரென்று நாங்கள் (பவுலும்,  லூக்காவும், மேலும் சிலரும்) நிச்சயித்துக் கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணினோம்'' (அப் 16:10). ""புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் (பவுலும், லூக்காவும், மேலும் சிலரும்)கப்பல் ஏறிப்  பி-ப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்'' (அப் 20:6). 

இந்தப் புஸ்தகத்திற்கு ""அப்போஸ்தலருடைய  நடபடிகள்'' என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதில் அப்போஸ்தலரின் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களோடு ஸ்தேவான், பர்னபா, ஆகியோரின் சரித்திரமும், அப்போஸ்தல ஊழியத்தைச்   செய்த வேறு சிலருடைய சரித்திரமும்  இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மற்ற அப்போஸ்தலர்களைவிட, பேதுரு, பவுல் ஆகியோரின் ஊழிய வரலாறு அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது. பேதுரு விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலாயிருந்தார். பவுலோ புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருந்தார். ""விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால், விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டது'' (கலா 2:7,8) என்று பவுல் எழுதுகிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள்  என்பதற்கு  அப்போஸ்தலருடைய செய்கைகள், ஊழியங்கள் என்றும் பொருள் சொல்லலாம்.  அப்போஸ்தலர்களில் யாரும் சோம்பேறியாகச் சும்மாயிருக்கவில்லை. அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்காக சுறுசுறுப்பாக  ஊழியம் செய்தார்கள். இயேசுகிறிஸ்துவின் வார்த்தையினால் அற்புதங்களும் அடையாளங்களும் நடைபெற்றது. கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகளை அப்போஸ்தலர்கள்  தங்கள் வாயினால் விசுவாசத்தோடு அறிவித்தார்கள். அப்போஸ்தலர்கள் சொன்னது  கிறிஸ்துவின் வார்த்தையாக இருந்தபடியினால்,  அவர்கள் சொல்ல அது அப்படியே ஆயிற்று. ஆகையினால் இந்தப் புஸ்தகம் அப்போஸ்தலருடைய நடபடிகள் என்று அழைக்கப்படுகிறது. 

அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகம்  கி.பி. 63 ஆம் வருஷம் எழுதப்பட்டது. இந்த நடபடிகள்  எழுதப்பட்ட இடம் சரியாகத் தெரியவில்லை. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் லூக்கா ஆவார். (அப் 1:1; லூக்கா 1:1-3)

மையக்கருத்து

 அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகம்     மாற்கு 16:20 ஆவது வசனத்தின் விரிவாக்கமாகும். பரிசுத்த ஆவியானவர்  தமது விசுவாசிகள்மீது வந்திறங்குகிறார். இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்குத் தேவனுடைய பிள்ளைகளைப் பெலப்படுத்துகிறார். 

கிறிஸ்துவின் சீஷர்கள் செய்யவும், பிரசங்கிக்கவும் செய்கிறார்கள்  (அப் 1:1-3). ஆயிரம் வருஷ அரசாட்சியைப் பற்றிய சத்தியம் இந்தப் புஸ்தகம் முழுவதிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  

அப்போஸ்தலருடைய நடபடிகளின் மையப்பகுதி எருசலேம் பட்டணமாகும். யூதர்கள் மோசேயின் பிரமாணத்தை இக்காலத்தில் அனுசரித்து வந்தார்கள். 

அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகம் புறஜாதியாருடைய இரட்சிப்பைப் பற்றியும் விளக்குகிறது. தேவனுடைய சத்தியத்தை அறிவிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பதிலாகப் புறஜாதியார் தெரிந்தெடுக்கப் படுவார்கள் என்று முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இந்தப் புஸ்தகத்தில் நிறைவேறுவதைக் காண்கிறோம்.               

யூதருக்கும் புறஜாதிக் கிறிஸ்தவருக்குமிடையே மிகப்பெரிய பிரச்சனை இருந்தது. மோசேயின் பிரமாணத்தைப் புறஜாதிக் கிறிஸ்தவர்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டுமா என்பதே அந்தப் பிரச்சனை. இறுதியாக கிறிஸ்துவர்கள் நியாயப் பிரமாணத்தின்கீழ் இல்லை என்றும், பழைய ஏற்பாட்டுப் பிரமாணங்கள் எல்லாம் ஒழிந்து போயின என்றும் மோசேயின் பிரமாணத்திற்குப் பதிலாக புதிய உடன்படிக்கை விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. (அப் 15:24)

மற்ற புஸ்தகங்களில் காணப்படாத 400 விசேஷித்த வார்த்தைகளை லூக்கா பயன்படுத்துகிறார். அவை மருத்துவம் சம்மந்தமான சொற்களாகும். 

அப்போஸ்தலருடைய மையச்செய்தி இயேசு கிறிஸ்துவின் மரணம், அவர் அடக்கம் பண்ணப்படுவது, மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் தேவன் தமது வசனங்களை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் உறுதிபண்ணுவது என்பனவாகும். 

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும், வரங்களினாலும் ஏராளமான ஜனங்கள் சபையில் சேர்க்கப்பட்டார்கள்.   ஒரு கிறிஸ்தவ சபை எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில் நாம் தெளிவான உபதேசத்தை வாசிக்கலாம்.

பொருளடக்கம்

  ஒ.  உயிர்த்தெழுந்த பின்பு இயேசு கிறிஸ்துவின் ஊழியம்

1. லூக்கா சுவிசேஷத்தின் கருத்து (1:1)

2. அப்போஸ்தலருடைய நடபடிகளின் கருத்து (1:2) 

3. உயிர்த்தெழுந்த பின்பு இயேசு கிறிஸ்து நாற்பது நாட்களுக்கு தரிசனம் கொடுத்தார் (1:3)

4. வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்குமாறு கட்டளை (1:4)

5. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் (1:5)

6. இராஜ்ஜியத்தைப் பற்றிய கேள்வி (1:6-7)

7. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தோடு பெலனடைவோம் என்னும் வாக்குத்தத்தம் (1:8)

8. இயேசு கிறிஸ்து பரமேறுகிறார் (1:9)

9. இயேசுவின் இரண்டாம் வருகை முற்குறித்துக் கூறப்படுகிறது (1:10-11)

  ஒஒ. சபை பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்படுகிறது 

1. பத்து நாட்கள் காத்திருப்பு (1:12-14)

2. சபையின் அலுவலக கூட்டம் 

(1) இன்னும் ஒரு அப்போஸ்தலர் தேவை  (1:15-20)

(2) அப்போஸ்தலருக்கு தகுதிகள் (1:21-22)

(3) இரண்டு பேர்களை ஆலோசிக்கிறார்கள் (1:23)

(4) ஜெபம் பண்ணினார்கள் (1:24-25)

(5) மத்தியாவை அப்போஸ்தலப் பட்டத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள் (1:26)

3. பெந்தெகொஸ்தே நாள் - மனுஷர்மீது பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி (2:1-4)

4. ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றதினால் ஏற்பட்ட விளைவு (2:5-13)

  ஒஒஒ. எருசலேமின் எழுப்புதல்

1. முதலாவது அப்போஸ்தல பிரசங்கம்  

(1) பிரசங்கியாரும் பிரசங்கத்தைக் கேட்டவர்களும் (2:14)

(2) யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று (2:15-16)

(3) கடைசி நாட்களில் யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது (2:17-18) 

(4) உபத்திரவ காலத்திலும் மனுஷர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறுவார்கள் (2:19-21)

(5) இயேசு கிறிஸ்துவை தேவன் வெளிப்படுத்தினார் (2:22)

(6) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் (2:23)

(7) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் (2:24-32)

(8) இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் - காண்கிறதும் கேட்கிறதுமாகிய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் (2:33-35)

(9) தேவன் இயேசுவை ஆண்டவரும் கிறிஸ்துவும் ஆக்கினார் (2:36)

2. பேதுருவின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு (2:37)

3. பாவிகள் செய்ய வேண்டியது (2:38)

4. பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம் எல்லா விசுவாசிகளுக்கும் உரியது (2:39)

5. எழுதப்படாத அநேக புத்திமதிகள் (2:40)

6. மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள் (2:41) 

7. ஆதித்திருச்சபையின் மகிமையான நிலை (2:42-47) 

8. அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்ற பிறகு அவர்கள் மூலமாக நடைபெற்ற முதலாவது அற்புதம் (3:1-8)

9. அற்புதத்தினால் ஜனங்கள்மீது ஏற்பட்ட விளைவு (3:9-11)

10. பேதுருவின் இரண்டாவது செய்தி

(1) இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை அற்புதம் உறுதிபண்ணுகிறது (3:12-13)

(2) இஸ்ரவேலின் மூன்று பாவங்கள் (3:14-15)

(3) இயேசு என்னும் நாமத்தின் வல்லமை (3:16)

(4) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (3:17-18)

(5) தேசம் மீட்கப்படுவதற்கு நிபந்தனைகள் (3:19)

(6) இயேசுவின் இரண்டாம் வருகை (3:20-21)

(7) இயேசுவின் முதலாம் வருகையை மோசே முன்குறித்துக் கூறினார் (3:22)

(8) ஜீவனை அல்லது மரணத்தை சுயாதீனமாக தெரிந்தெடுக்க வேண்டும் (3:23)

(9) இயேசுவின் பாடுகளை எல்லா தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்தார்கள் (3:24)

(10) கிறிஸ்துவின் ஊழியத்தை ஆபிரகாமும் முன்னறிவித்தான் (3:25)

(11) சுவிசேஷம் முதலாவது இஸ்ரவேலுக்கு அறிவிக்கப்படுகிறது (3:26)

11. முதலாவது உபத்திரவம்

(1) பேதுருவையும் யோவானையும் கைதுபண்ணுகிறார்கள் (4:1-3)

(2) பேதுருவின் இரண்டாம் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு - ஐயாயிரம் பேர் இரட்சிக்கப் பட்டார்கள் (4:4)

(3) பேதுருவையும் யோவானையும் விசாரிக்கிறார்கள் (4:5-7)

(4) பேதுருவின் விவாதம் - இயேசு என்னும் நாமத்தின் வல்லமை (4:8-12)

(5) ஆலோசனைச் சங்கத்தாரின் முடிவு (4:13-18)

(6) பேதுரு, யோவான் ஆகியோரின் பதிலுரை (4:19-20)

(7) யூதர்கள் அப்போஸ்தலர்களை பயமுறுத்தி விட்டுவிடுகிறார்கள் (4:21-22)

12. வல்லமைக்காக விசுவாசிகள் ஒருமனப்பட்டு ஜெபிக்கிறார்கள் (4:23-30)

13. ஜெபத்திற்கு தேவன் கொடுக்கும் பதில்  (4:31)

14. சபையின் நிலைமை (4:32-37)

15. ஆதிசபையில் காணப்பட்ட முதலாவது பாவமும் அதன் விளைவுகளும் (5:1-11)

16. ஆதித்திருச்சபையின் வல்லமை (5:12-16)

17. இரண்டாவது உபத்திரவம்

(1) அப்போஸ்தலர்களைக் கைது பண்ணுகிறார்கள் (5:17-18)

(2) அற்புதமாக விடுதலையாகிறார்கள் (5:19-20) 

(3) ஆலோசனை சங்கத்தார் அப்போஸ்தலர்கள் தப்பித்ததைக் கண்டுபிடிக்கிறார்கள் (5:21-24)

(4) அப்போஸ்தலர்களை மூன்றாம் முறையாக கைதுபண்ணுகிறார்கள் (5:25-26)

(5) அப்போஸ்தலர்களிடத்தில் இரண்டாம் முறையாக விசாரணை (5:27-28)

(6) அப்போஸ்தலரின் விவாதம் (5:29-32)

(7) விவாதத்தினால் ஏற்பட்ட விளைவு (5:33)

(8) கமாலியேலின் எச்சரிப்பு (5:34-39)

(9) அப்போஸ்தலர்களை அடித்து இனிமேல் இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக்கூடாது என்று கட்டளையிடுகிறார்கள் (5:40)

(10) அப்போஸ்தலரிடத்தில் காணப்பட்ட விளைவு (5:41)

18. எதிர்ப்புகளின் மத்தியிலும் அப்போஸ்தலர்கள் தொடர்ந்து தேவனுடைய ஊழியத்தைச் செய்கிறார்கள் (5:42)

19. சபையில் முதலாவது பிரச்சனை (6:1)

20. பிரச்சனை தீர்த்து வைக்கப்படுகிறது (6:2-3)

21. போதிக்கிறவர்களின் கடமைகள் (6:4)

22. மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அபிஷேகித்தார்கள் (6:5-6)

23. சபையின் வேகமான வளர்ச்சி (6:7)

24. மூப்பரின் வல்லமை (6:8)

25. மூன்றாவது உபத்திரவம் 

(1) ஸ்தேவானின் வல்லமையும் ஞானமும் (6:9-11)

(2) ஸ்தேவான்மீது ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக விசாரணை (6:12-15)

(3) ஸ்தேவானின் பிரசங்கம்

(அ) ஆபிரகாமின் அழைப்பு (7:1-3)

(ஆ) வாக்குத்தத்தங்களும் உடன்படிக்கைகளும் (7:4-8)

(இ) எகிப்தில் யோசேப்பும் இஸ்ரவேலரும் (7:9-16)

(ஈ) எகிப்தியரிடத்தில் அடிமைத்தனம் (7:17-19)

(உ) நாற்பது வருஷங்களாக மோசேக்கு பயிற்சி (7:20-22)

(ஊ) இஸ்ரவேலரை மீட்கும் மோசேயின் முயற்சியை அவர்கள் முதலாவது ஏற்றுக் கொள்ளவில்லை (7:23-28)

(எ) மோசேக்கு நாற்பது வருஷ தெய்வீக பயிற்சி (7:29-34)

(ஏ) மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இஸ்ரவேலரின் நாற்பது வருஷ கலகம் (7:35-41)

(ஐ) இஸ்ரவேல் தொடர்ந்து கலகம் பண்ணியதால் தேவன் இஸ்ரவேலை தள்ளிவிட்டார் (7:42-50)

(ஒ) இஸ்ரவேல் இன்னும் கலகம் பண்ணுகிறார்கள் (7:51-53)

(4) ஸ்தேவானின் தரிசனம் - பரலோகம், தேவன், கிறிஸ்து (7:54-56)

(5) ஸ்தேவான் முதலாவது இரத்தச்சாட்சியாக மரிக்கிறான் - பவுலைப் பற்றிய முதலாவது குறிப்பு (7:57-60)

(6) சபையார் எல்லாருக்கும் துன்பம் உண்டாயிற்று - விசுவாசிகள் சிதறிப்போனார்கள் (8:1)

(7) ஸ்தேவானின் அடக்கம் - விசுவாசிகளை துன்புறுத்திய சவுல் (8:2-3)

10. பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவின் எல்லைகளுக்கு புறம்பாக துரத்தி விடுகிறார்கள் (13:50-52)

11. இக்கோனியா பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுகிறது (14:1-5)

12. இக்கோனியாவிலிருந்து லீஸ்திரா வரையிலும் - சப்பாணியைக் குணமாக்குகிறார்கள் - இங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறார்கள் (14:6-10)

13. ஜனங்கள் பவுலையும் பர்னபாவையும் தேவர்கள் என்று வழிபட வருகிறார்கள் (14:11-18)

14. பவுலை கல்லெறிந்து அவன் மரித்துப்போனான் என்று எண்ணி அவனை பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக் கொண்டு போகிறார்கள் (14:19-20)

15. லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வருகிறார்கள் - ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை ஏற்படுத்துகிறார்கள் (14:21-23)

16. பெர்கே, அத்தலியா பட்டணத்திற்கு திரும்பி வந்து பின்பு சீரியாவிலுள்ள அந்தியோகியாவிற்கு வருகிறார்கள் -  அப் 13:1 -ல் குறிப்பிட்டுள்ள முதலாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (14:24-26)

17. முதலாவது மிஷினெரி பிரயாணத்தைக் குறித்து சபையில் அறிவிக்கிறார்கள் (14:27-28)

  ல. கிறிஸ்தவர்களின் முதலாவது பொதுக்குழு கூட்டம்

1. விருத்தசேதனம் (15:1-2)

2. பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவிலிருந்து அனுப்புகிறார்கள் (15:3-4)

3. ஆலோசனைச் சங்கத்தின் நோக்கம் (15:5-6)

4. பேதுருவின் வாக்குவாதம் (15:7-11)

5. தேவன் புறஜாதியாருக்குள்ளே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார் (15:12)

6. யாக்கோபுவின் விவாதம் (15:13-18)

7. புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களை கலங்கப் பண்ணுதலாகாது (15:19-21)

8. பிரிவினையில்லாமல் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை காத்துக் கொள்ளப்படுகிறது (15:22)

9. புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு உபதேசம் (15:23-29)

10. நிருபத்திற்காகவும் அதனால் உண்டான ஆறுதலுக்காகவும் சந்தோஷப் படுகிறார்கள் (15:30-34)

  லஒ. பவுலின் இரண்டாவது மிஷினெரி பிரயாணம்

1. மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான் நிமித்தமாக பவுலும் பர்னபாவும் பிரிந்து விடுகிறார்கள் (15:35-39)

2. பவுல் சீலாவை தெரிந்து கொண்டு சீரியாவிற்கும் சிலிசியாவிற்கும் பிரயாணம் செய்து சபைகளை திடப்படுத்துகிறான் (15:40-41)

3. தெர்பையிலும் லீஸ்திராவிலும் பவுல் - தீமோத்தேயு பவுலோடு சேர்ந்து கொள்கிறான் (16:1-3)

4. எல்லா சபைகளுக்கும் அப்போஸ்தல சட்டங்களை கொடுக்கிறார்கள் (16:4-5)

5. பிரிகியா, கலாத்தியா, மீசியா ஆகிய தேசங்களுக்கு பிரயாணம் (16:6-8)

6. துரோவாவில் மக்கெதோனியா தேசத்தானின் அழைப்பு (16:9-10)

7. துரோவாவிலிருந்து பிலிப்பி பட்டணத்திற்கு பிரயாணம் (16:11-12)

8. பிலிப்பி பட்டணத்தில் முதலாவது விசுவாசி - லீதியாள் (16:13-15)

9.  குறிசொல்லுகிற ஏவுகிற ஆவியைத் துரத்துகிறார்கள் - பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் (16:16-24)

10. பூமி மிகவும் அதிர்ந்தது (16:25-26)

11. சிறைச்சாலைக்காரனும் அவனுடைய வீட்டாரும் இரட்சிக்கப்படுகிறார்கள் (16:27-34)

12. இரகசியமாய் விடுதலைப் பெற பவுல் விரும்பவில்லை (16:35-40)

13. பிலிப்பி பட்டணத்திலிருந்து தெசலோனிக்கே பட்டணத்திற்கு பிரயாணம் (17:1-4)

14. யூதர்களுடைய எதிர்ப்பு - பட்டணத்தை விட்டு பவுலை வெளியேற்றுகிறார்கள் (17:5-9)

15. தெசலோனிக்கே பட்டணத்திலிருந்து பெரோயா பட்டணத்திற்கு பிரயாணம் - யூதர்கள் பவுலை இங்கும் எதிர்த்து அவனை பட்டணத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள் (17:10-14)

16. அத்தேனே பட்டணத்தில் பவுல் - சீலாவும், தீமோத்தேயுவும் தன்னிடத்திற்கு வருமாறு அழைப்பு (17:15)

17. அத்தேனே பட்டணத்தில் கிரேக்க ஞானிகளோடு பவுல் வாக்குவாதம் பண்ணுகிறான் (17:16-21)

18. அத்தேனே பட்டணத்தில் பவுலின் பிரசங்கம் - இயேசு உலகத்தை நியாயம் தீர்க்கிறார்

(1) அறியப்படாத தேவன் (17:22-23)

(2) கர்த்தரே சிருஷ்டிகர் - மனுஷனை தேவன் சிருஷ்டித்ததின் நோக்கம் (17:24-27)

(3) விக்கிரகாராதனையை பவுல் கடிந்து கொள்கிறான் (17:28-29)

(4) அறியாமையுள்ள காலங்கள் (17:30)

(5) தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பார் (17:31)

(6) பவுலின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு (17:32-34)

19. அத்தேனே பட்டணத்திலிருந்து கொரிந்து பட்டணத்திற்கு பிரயாணம் -  ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் (18:1-3)

20. ஓய்வுநாளைக் குறித்து ஜெபாலயத்தில் பவுலின் சம்பாஷணை (18:4)

21. சீலாவும் தீமோத்தேயுவும் பவுலோடு சேர்ந்து கொள்கிறார்கள் (18:5-6)

22. பவுல் யூதருடைய ஜெபாலயத்தை விட்டு ஒரு வீட்டில் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (18:7-8)

23. பயப்படாமல் பேசுமாறு பவுலின் தரிசனம் (18:9-11)

24. பவுல் கைது பண்ணப்படுகிறான் - கல்லியோன் என்பவனுக்கு முன்பாக பவுலைக் கொண்டு போனார்கள் - கல்லியோன் அவர்களைத் துரத்தி விட்டான் (18:12-16)

25. சொஸ்தேனேயைப் பிடித்து அடிக்கிறார்கள் (18:17)

26. கொரிந்து பட்டணத்திலிருந்து கெங்கிரேயாவிற்கும் எபேசுவிற்கும் பிரயாணம் - இங்கு பிரசங்கம் பண்ணி ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் வழியனுப்பி விடுகிறான் (18:18-20)

27. எபேசு பட்டணத்திலிருந்து செசரியா, எருசலேம் பட்டணத்திற்கு பிரயாணம் பண்ணி, அந்தியோகியாவிற்கு திரும்பி வருகிறார்கள் - அப் 15:35-ல் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (18:21-22)

  லஒஒ. பவுலின் மூன்றாவது மிஷினெரி பிரயாணம்

1. கலாத்தியா, பிரிகியா நாடுகளுக்கு பிரயாணம் (18:23)

2. அப்பொல்லோ என்பவன் எபேசுவில் பிரசங்கம் பண்ணுகிறான் - ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவனுக்கு தேவனுடைய மார்க்கத்தை திட்டமாய் விவரித்துக் காண்பிக்கிறார்கள் (18:24-28)

3. பவுல் எபேசுவில் யோவானின் சீஷர்களைக் காண்கிறான் (19:1-7)

4. ஜெபாலயத்தில் பவுல் மூன்று மாதங்கள் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (19:8)

5. ஜெபாலயத்திலிருந்து விசுவாசிகளை தனியாக பிரிக்கிறான் - திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்து வருகிறான் (19:9-10)

6. பவுல் மூலமாக நடைபெற்ற அற்புதங்கள் (19:11-12)

7. பவுலைப் போன்று கிரியை நடப்பித்தவர்களை பொல்லாத ஆவி மேற்கொண்டது (19:13-17)

8. எபேசுவில் எழுப்புதல் பரவிற்று (19:18-20)

9. பிரசங்க பிரயாணம் - தீமோத்தேயுவும் எரஸ்துவும் முன்பாகவே அனுப்பப் படுகிறார்கள் (19:21-22)

10. பவுல் எபேசுவில் தங்குகிறான் - வெள்ளி தட்டான்களின் கலகம்

(1) கலகத்திற்கு காரணம் (19:23-27)

(2) வெள்ளி தட்டான்கள் பவுலின் உடன் ஊழியக்காரர்களை அரங்க சாலைக்குள் கொண்டு செல்கிறார்கள் (19:28-29)

(3) பவுல் கூட்டத்திற்குள் போக மனதாயிருந்தான் - ஆனால் அவனுடைய நண்பர்கள் அவனைப் போகவிடவில்லை (19:30-31)

(4) கூட்டத்தின் குழப்பம் (19:32-34)

(5) பட்டணத்து சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்துகிறான் (19:35-41)

11. மக்கெதோனியாவிற்கும் கிரேக்கத்திற்கும் பிரயாணம் (20:1-5)

12. பிலிப்பி பட்டணத்திலிருந்து துரோவா பட்டணத்திற்கு பிரயாணம் (20:6)

13. வாரத்தின் முதல் நாளிலே அப்பம் பிட்கிறார்கள் (20:7-8)

14. ஐத்திகு உயிரோடு எழுப்பப்படுகிறான் (20:9-12) 

15. துரோவா பட்டணத்திலிருந்து மிலேத்து பட்டணத்திற்கு (20:13-16)

16. மிலேத்துவிலிருந்து பவுல் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைக்கிறான்

(1) ஆசியாவில் பவுலின் உண்மையுள்ள ஊழியம் (20:17-19)

(2) கிறிஸ்துவிற்காக பவுலின் பத்து வைராக்கியம் (20:20-21)

(3) பாடுபடுவதற்கு பவுலின் பிரதிஷ்டை (20:22-24)

(4) பவுல் உண்மையுள்ளவனாகவும் சுத்தமுள்ளவனாகவும் இருக்கிறான் (20:25-27)

(5) சபையில் பிளவுகளும் குழப்பங்களும் பற்றிய எச்சரிப்பு (20:28-31)

(6) தேவனிடத்தில் அவர்களை ஒப்புக் கொடுக்கிறான் (20:32)

(7) பவுலின் தன்னலமற்ற சேவை (20:33-35)

(8) கிறிஸ்தவரின் பிரியாவிடை (20:36-38)

17.  மிலேத்துவிலிருந்து தீரு பட்டணத்திற்கு (21:1-3)

18. தீருவில் பரிசுத்த ஆவியானவர் பவுலை எருசலேமிற்கு போக வேண்டாமென்று தடைபண்ணுகிறார் (21:4)

19. தீருவிலிருந்து செசரியா பட்டணத்திற்கு பிரயாணம் - பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசிக்கிறான் (21:5-9)

20. பவுலின் பாடுகளைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் எச்சரிக்கிறார் (21:10-11)

21. எருசலேமிற்கு சென்று அங்கு பாடு அனுபவிப்பதில் பவுல் உறுதியாக இருக்கிறான் (21:12-14)

22. செசரியா பட்டணத்திலிருந்து எருசலேமிற்கு பிரயாணம் - அப் 18:23-ல் துவங்கிய மூன்றாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (21:15-17)

  லஒஒஒ.  பவுல் கைதுபண்ணப்படுவதும் வழக்கு விசாரணைகளும் 

1. தேவன் புறஜாதியாரிடத்தில் செய்தவைகளை பவுல் விவரித்துக் கூறுகிறான் (21:18-19)

2. யூதமார்க்க கிறிஸ்தவர்களை திருப்தி செய்வதற்காக யூதமார்க்கத்து பொருத்தனைகளை செய்யுமாறு யாக்கோபும், மூப்பர்களும் பவுலுக்கு ஆலோசனை கூறுகிறார்கள் (21:20-24)

3. விசுவாசிகளான புறஜாதியார் பிரமாணங்களைக் கைக்கொள்வதில்லை (21:25)

4. மூப்பர்களின் ஆலோசனையை பவுல் பின்பற்றுகிறான் (21:26-27)

5. யூதர்கள் பவுலைச் சூழ்ந்து கொண்டு அடிக்கிறார்கள் - புறஜாதியார் பவுலை விடுவிக்கிறார்கள் (21:28-32)

6. பவுலை இரண்டு சங்கிலிகளினால் கட்டி கோட்டைக்குள்ளே கொண்டு வருகிறார்கள் (21:33-36)

7. ஜனங்களிடத்தில் பேசுவதற்கு தனக்கு உத்தரவாக வேண்டுமென்று பவுல் வேண்டிக்கொள்கிறான் (21:37-40)

8. ஜனக்கூட்டத்திற்கு முன்பாக பவுல் கூறிய விளக்கம்

  (1) கிறிஸ்தவர்களைப் பவுல் துன்புறுத்தினான் (22:1-5)

(2) பவுலின் மனமாற்றம் (22:6-11)

(3) அனனியாவின் ஊழியம் (22:12-16)

(4) தேவாலயத்தில் பவுலின் தரிசனம் (22:17-21)

(5) ஜனக்கூட்டத்திலிருந்து பவுலைக் காப்பாற்றுகிறார்கள் (22:22-24)

(6) பவுல் ஒரு ரோம பிரஜை (22:25-30)

9. ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக பவுலின் விவாதம்

(1) பவுலின் சாட்சி (23:1-2)

(2) பிரதான ஆசாரியனை பவுல் கடிந்து கொள்கிறான் (23:3-5)

(3) பவுலின் புதிய யுக்தி - பரிசேயருக்கு விண்ணப்பம் (23:6)

(4) பவுலின் யுக்தி வெற்றி பெறுகிறது - பரிசேயருக்கும், சதுசேயருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று (23:7-8)

10. பவுலை மறுபடியும் மீட்கிறார்கள் (23:9-10)

11. கர்த்தர் பவுலிடம் பேசுகிறார் (23:11)

12. பவுலைக் கொல்வதற்கு சதியாலோசனை (23:12-15)

13. சதியாலோசனை கண்டுபிடிக்கப்படுகிறது (23:16-22)

14. பவுலை செசரியா பட்டணத்திலுள்ள  தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்கு அனுப்புகிறார்கள் (23:23-24)

15. பேலிக்ஸிற்கு நிருபம் (23:25-30)

16. பவுலையும் நிருபத்தையும் பேலிக்ஸிடம் ஒப்புக்கொடுக்கிறார்கள் (23:31-33)

17. பவுலை ஏரோதின் அரண்மனையில் காவல் பண்ணும்படி பேலிக்ஸ் கட்டளையிடுகிறான் (23:34-35)

18. பேலிக்ஸிற்கு முன்பாக பவுல்

(1) பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டு (24:1-9)

(2) பேலிக்ஸ் முன்பாக பவுலின் விவாதம் (24:10-21)

(3) விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது - பவுலைக் கண்டிப்பில்லாமல் நடத்த உத்தரவாகிறது (24:22-23)

19. பவுல் பேலிக்ஸிற்கு பிரசங்கம் பண்ணுகிறான் (24:24-26)

20. செசரியா பட்டணத்தில் இரண்டு வருஷங்கள் அமைதி (24:27)

21. பவுலைக் கொல்வதற்கு புதிய ஆலோசனை (25:1-3)

22. பெஸ்து சதியை முறியடிக்கிறான் (25:4-5)

23. பெஸ்துவிற்கு முன்பாக பவுல் (25:6-9)

24. பவுல் இராயனுக்கு அபயமிடுகிறான் (25:10-12)

25. பெஸ்து அகிரிப்பா இராஜாவிடம் பவுலைப் பற்றி கூறுகிறான் (25:13-22)

26. அகிரிப்பா இராஜாவிற்கு முன்பாக பவுல் (25:23-27)

27. அகிரிப்பா இராஜாவிற்கு முன்பாக பவுல் உத்தரவு சொல்கிறான்

(1) கிறிஸ்தவர்களின் உபத்திரவம் (26:1-12)

(2) பவுலின் மனமாற்றம் (26:13-18)

(3) பவுலின் பிரசங்கம் (26:19-20)

(4) தான் கைது பண்ணப்பட்டதற்கு காரணம் (26:21-23)

(5) பவுல் பயித்தியக்காரன் என்று அவன்மீது குற்றச்சாட்டு (26:24)

(6) தான் பயித்தியக்காரன் அல்ல என்று பவுல் கூறுகிறான் (26:25-26)

(7) அகிரிப்பா இராஜாவிடம் பவுலின் விண்ணப்பம் (26:27-29)

(8) அகிரிப்பா இராஜாவின் தீர்மானம் (26:30-32)

  லஒய. பவுலை ரோமாபுரிக்கு அனுப்புகிறார்கள் 

1. செசரியா பட்டணத்திலிருந்து மீறாப் பட்டணத்திற்கு பிரயாணம் (27:1-5)

2. இத்தாலியாவிற்கு கப்பல்களை மாற்றுகிறார்கள் (27:6-9)

3. பவுலின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை (27:10-13)

4. புயல்காற்று வீசுகிறது (27:14-20)

5. பவுலின் தரிசனமும் தீர்க்கதரிசனமும் (27:21-26)

6. தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (27:27-44)

7. மெலித்தா தீவில் கரைசேருகிறார்கள் (28:1-2)

8. விரியன்பாம்பு பவுலின் கையை கவ்விக்கொள்கிறது (28:3-7)

9. மெலித்தா தீவில் புபிலியுவினுடைய தகப்பன் குணமடைகிறான் (28:8-10)

10. மெலித்தா தீவிலிருந்து ரோமாபுரிக்குப் பிரயாணம் (28:11-16)

11. ரோமாபுரியில் பவுல் - யூதர்களுக்கு முன்பாக பவுல் கூறிய காரியங்கள் (28:17-20)

12. பவுல் யூதர்களுக்கு பிரசங்கம் பண்ணுகிறான் (28:21-24)

13. பவுல் யூதர்களுக்குக் கூறிய கடைசி செய்தி - இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது (28:25-29)

14. ரோமாபுரியில் பவுலின் இரண்டு வருஷ ஊழியம் (28:30-31)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.