யோவான் நற்செய்தி ஒரு கண்ணோட்டம்




யோவான்
 முன்னுரை 

யோவான் எழுதின சுவிசேஷம் எங்கு, எப்பொழுது எழுதப்பட்டது என்பதைக் குறித்து  வேதபண்டிதர்கள் இன்னும் விரிவாக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த சுவிசேஷத்தை எழுதியவர் யோவான் என்பதில்  மாற்று கருத்து எதுவுமில்லை. இவர் இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். யாக்கோபுடைய சகோதரர். இவர் இயேசுகிறிஸ்துவுக்கு பிரியமாக இருந்த சீஷன் என்று அழைக்கப்படுகிறார். பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது,  அவர்கள் எல்லோரையும் விட யோவானே அதிக வருஷங்கள் இந்த பூமியில் உயிரோடு வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகிறது. யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு செத்தான். மற்ற சீஷர்கள் எல்லோரும் இரத்தசாட்சியாக மரித்தார்கள். யோவானுக்கு மாத்திரமே இயற்கையான மரணம் உண்டாயிற்று. 

எபேசு பட்டணத்தில் யோவான் இந்த சுவிசேஷத்தை எழுதியிருக்க வேண்டுமென்று  வேதபண்டிதர்களில் அநேகர் கூறுகிறார்கள்.  இந்த பட்டணத்தில் எபியோனியர் மூலமாக  வேதப்புரட்டு அதிகரித்திருந்தது. இவர்கள் இயேசுகிறிஸ்துவை சாதாரண மனுஷன் மாத்திரமே என்று  உபதேசம் பண்ணினார்கள். இயேசுகிறிஸ்துவின்  தெய்வத்துவத்தை இவர்கள் அங்கீகரிக்கவில்லை. இவர்களுடைய வேதப்புரட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய மெய்யான சத்தியத்தை வெளிப்படுத்தும் வகையிலும் யோவான் இந்த சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார். 

நான்கு சுவிசேஷங்களிலும், இந்த சுவிசேஷமே கடைசியாக எழுதப்பட்டிருக்கிறது. தங்களுடைய சுவிசேஷத்தில் மற்ற சுவிசேஷகர்கள் எழுதாமல் விட்டுவிட்ட சத்தியங்களை யோவான் இந்த சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறார். இந்த சுவிசேஷத்தில் யோவான் வேதத்தின் ரகசியங்கள் பலவற்றை தெளிவுபடுத்தியிருக்கிறார். மற்ற சுவிசேஷங்களில் இந்த ரகசியங்கள் ஒரு வரலாறு போலவே எழுதப்பட்டிருக்கிறது. மற்ற சுவிசேஷங்கள் இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான காரியங்களை அதிகமாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் யோவானோ சுவிசேஷத்தின் ஆவிக்குரிய காரியங்களை விளக்கிக் கூறியிருக்கிறார்.  

கி.பி. 70-ஆம் ஆண்டில் இந்தச் சுவிசேஷம் எழுதப்பட்டது. எழுதப்பட்ட இடம் தெரியவில்லை. இந்த சுவிசேஷத்தின் ஆசிரியர் யோவான் ஆவார். இவர் சீஷரில் இயேசுவுக்கு அன்பானவாயிருந்த ஒருவர். இவர் ஒரு    அப்போஸ்தலர். இவர் யாக்கோபின் சகோதரர் (மத் 4:21). யாக்கோபு, பேதுரு ஆகியோரோடு பல வேளைகளில் கூட இருந்தவர்  பொறுமையில்லாதவர். பஸ்காவை ஆயத்தம் பண்ணுகிறார்.  இயேசு கிறிஸ்து விசாரிக்கப்படும்போது அங்கு இருக்கிறார். இயேசுவின் கல்லறையில் இருக்கிறார்.  மற்ற வேளைகளில் இயேசுவோடு கூட இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார்.   மரியாளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.        தேவாலயத்தில் பேதுருவோடு இருந்தார். சிறைச்சாலையில் இருந்தார். சமாரியாவிற்கு அனுப்பப்பட்டார். சபையின் தூணாக இருந்தார்.   யோவான் எழுதின சுவிசேஷம், 1யோவான், 2யோவான், 3யோவான், வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய நூல்களின் ஆசிரியர்.   யோவான் தன்னுடைய நூறாவது வயதில் இயற்கையாக மரணமடைந்தார் என்று பாரம்பரிய வரலாறு கூறுகிறது.

மையக்கருத்து

இயேசு கிறிஸ்து தேவன், யெகோவாவின் மேசியா, குமாரன். இயேசு கிறிஸ்துவின் தேவத்துவம் இந்த சுவிசேஷத்தில் உறுதி பண்ணப்படுகிறது.  

இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்திற்குச் சாட்சிகள்

1. பிதா (யோவான் 5:32-37; யோவான் 8:18)

2. குமாரன் (யோவான் 8:14; யோவான் 18:37)

3. பரிசுத்த ஆவியானவர் (யோவான் 15:26; யோவான் 16:13-15)

4. எழுதப்பட்ட வார்த்தை (யோவான் 1:45; யோவான் 5:39-46)

5. இயேசு கிறிஸ்துவின் கிரியைகள் (யோவான் 5:17, 36;         யோவான் 10:25; யோவான் 14:11; யோவான் 15:24)

6. யோவான் ஸ்நானன் (யோவான் 1:7; யோவான் 5:32-35)

7. சீஷர்கள் (யோவான் 15:27; யோவான் 19:35; யோவான் 21:24)

யோவான் எழுதின சுவிசேஷத்திலும், மற்ற சுவிசேஷங்களிலும் காணப்படும் ஒற்றுமைகள்

1. யோவானுடைய வார்த்தை

2. கடைசி இராப்போஜனம்

3. பெத்தானியாவில் அபிஷேகம்

4. இயேசுகிறிஸ்துவின் பாடுகள்

5. உயிர்த்தெழுதல்

6. ஐயாயிரம் பேருக்கு போஜனம் கொடுத்தது

7. கடலின்மீது நடந்தது

இந்த ஏழு நிகழ்ச்சிகளைத் தவிர, யோவான் சுவிசேஷத்தில் காணப்படும் எல்லா நிகழ்ச்சிகளும் இந்த சுவிசேஷத்தின் விசேஷித்த காரியங்களாகும்.

சுவிசேஷங்களில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வர்ணனை

1. மத்தேயு - இயேசு கிறிஸ்து ராஜா

2. மாற்கு - இயேசு கிறிஸ்து ஊழியக்காரர்

3. லூக்கா - இயேசு கிறிஸ்து மனுஷர்

4. யோவான் - இயேசு கிறிஸ்து தேவன்

பொருளடக்கம்

  ஒ.  இயேசு கிறிஸ்து 

1. இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவமும் நித்தியமும் - (1:1-2)  

2. இயேசு கிறிஸ்து மூலமாய் சகலமும் உண்டாயிற்று - (1:1-3-5)                     

  ஒஒ. யோவான் ஸ்நானன் - (1:6-8)  

  ஒஒஒ. இயேசு கிறிஸ்து

1. தெய்வத்துவம், சிருஷ்டிப்பு கிரியை, இஸ்ரவேலர் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை - (1:9-11)  

2. மீட்பின் கிரியை - (1:12-13)  

3. வார்த்தை மாம்சமாகிறார் - (1:14)  

  ஒய. யோவான் ஸ்நானன் - (1:15)  

  ய. இயேசு கிறிஸ்து - கிருபை, சத்தியம் ஆகியவற்றின் ஆதாரம் - (1:16-18)  

  யஒ. யோவான் ஸ்நானன்

1. யோவான் ஸ்நானன் தன்னைப் பற்றி கூறிய சாட்சி - (1:19-24)  

2. யோவான் ஸ்நானன் தன் ஞானஸ்நானத்தைப் பற்றி கூறிய சாட்சி - (1:25-28)  

3. யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறிய சாட்சி - (1:29-34)  

  யஒஒ. இயேசு கிறிஸ்துவின் ஊழியமும் உபதேசமும்   

1. யோவான் ஸ்நானன் ஆதாயம் பண்ணிய இரண்டு சீஷர்கள் - (1:35-39)  

2. அந்திரேயா ஆதாயம் பண்ணிய பேதுரு - (1:40-42)  

3. இயேசுவானவர் தாமே ஆதாயம் பண்ணிய பிலிப்பு - (1:43-44)  

4. பிலிப்பு ஆதாயம் பண்ணிய நாத்தான்வேல் - (1:45-46)  

5. நாத்தான்வேலின் சந்தேகங்கள் நிவர்த்தியாகிறது - (1:47-49)  

6. இயேசு கிறிஸ்துவின் முதலாவது தீர்க்கதரிசனம் - (1:50-51) 

7. இயேசுவானவர் செய்த முதலாவது அற்புதம் - (2:1-11)  

8. கப்பர்நகூமை இயேசு தமது ஊழிய ஸ்தலமாக ஆக்குகிறார் - (2:12)  

9. தேவாலயத்தின் முதலாவது சுத்திகரிப்பு - (2:13-17)  

10. யூதர்கள் அடையாளத்தை நாடுகிறார்கள் - இயேசுவின் மரணத்தைப் பற்றிய முதலாவது தீர்க்கதரிசனம் - (2:18-22)  

11. எருசலேமில் பல அற்புதங்கள் - (2:23-25)   

12. இயேசுவும் நிக்கொதேமுவும்

(1) நிக்கொதேமு இயேசுவிடம் இராக்காலத்தில் வருகிறான் - (3:1-2)  

(2) மறுபடியும் பிறக்க வேண்டியதின் அவசியத்தை இயேசு கூறுகிறார் - (3:3)  

(3) மறுபடியும் பிறக்க வேண்டுமென்பதை நிக்கொதேமு தவறாக புரிந்து கொள்கிறான் - (3:4)  

(4) மறுபடியும் பிறக்க வேண்டியதின் அவசியத்தை இயேசு விளக்கி கூறுகிறார் - (3:5-8)  

(5) மறுபடியும் பிறக்க வேண்டும் என்பது நிக்கொதேமுவிற்கு புரியாத இரகசியமாகவே இருக்கிறது - (3:9)  

  (6) நிக்கொதேமுவை, அவனுடைய அறியாமைக்காகவும், அவிசுவாசத்திற்காகவும் இயேசு கிறிஸ்து கடிந்து கூறுகிறார். (3:10-12)

  13. இயேசுவைப் பற்றிய சாட்சி

(1) பரலோகத்தில் இருக்கிற கிறிஸ்து - (3:13)  

(2) கிறிஸ்துவின் சிலுவை மரணம் - (3:14-17)  

(3) அவிசுவாசிகளுக்கு ஆக்கினைத்தீர்ப்பு - (3:18-21)  

14. இயேசு கிறிஸ்து யூதேயாவில் ஊழியம் செய்கிறார் - (3:22)  

15. யோவான் ஸ்நானன் அயினோன் என்னும் இடத்தில் ஊழியம் செய்கிறான் - (3:23-24)  

16. யோவான் ஸ்நானனின் கடைசி சாட்சி 

(1) தன்னைப் பற்றி - (3:25-29)  

(2) இயேசு கிறிஸ்துவைப் பற்றி - (3:30-36)   

17. இயேசு கிறிஸ்து கலிலேயாவிற்கு பிரயாணம் பண்ணுகிறார் - (4:1-3)  

18. இயேசு கிறிஸ்துவும் சமாரிய ஸ்திரீயும்

(1) சூழ்நிலைகள் - (4:4-6)  

(2) இயேசு ""தாகத்துக்குத் தா'' என்கிறார் - (4:7-8)  

(3) ஸ்திரீ ""என்னிடத்தில் எப்படி கேட்கலாம்'' என்கிறாள் - (4:9)  

(4) இயேசு - அவர் உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்திருப்பார் - (4:10) 

(5) ஸ்திரீ - எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும் - (4:11-12)  

(6) இயேசு - நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்று - (4:13-14) 

(7) ஸ்திரீ - அந்த தண்ணீரைத் தரவேண்டும் - (4:15)  

(8) இயேசு - உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா - (4:16)  

(9) ஸ்திரீ - எனக்கு புருஷன் இல்லை - (4:17)  

(10) இயேசு - ஐந்து புருஷர் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கு இருக்கிறவன் உனக்கு புருஷன் அல்ல - (4:18)  

(11) ஸ்திரீ - ஆண்டவரே நீர் தீர்க்கதரிசி - நான் எங்கு தொழுது கொள்ள வேண்டும் - (4:19-20)  

(12) இயேசு - பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் - (4:21-24)  

(13) ஸ்திரீ - கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் - (4:25)  

(14) இயேசு - நானே அவர் - (4:26)  

19. சீஷர்கள் திரும்பி வருகிறார்கள் - ஸ்திரீ ஊரிலுள்ள ஜனங்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறாள் - (4:27-30)  

20. ஊழியக்காரரின் சந்தோஷமும் திருப்தியும் - (4:31-34)  

21. சுவிசேஷ ஊழியத்தைப் பற்றிய உபதேசம் - (4:35-38)  

22. இரண்டு நாள் எழுப்புதல் கூட்டம் - (4:39-42)  

23. கலிலேயாவில் இயேசுவை ஏற்றுக் கொள்கிறார்கள் - (4:43-45)  

24. இராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனை இயேசு குணமாக்குகிறார் - (4:46-54)   

25. பெதஸ்தா குளம் - இயேசு ஓய்வுநாளில் திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்குகிறார் - (5:1-9)  

26. ஓய்வுநாளில் படுக்கையை எடுத்துக் கொண்டு போவதற்காக யூதர்கள் அவனைக் கடிந்து கொள்கிறார்கள் - (5:10-13) 

27. இயேசு தாம் சொஸ்தமாக்கிய திமிர்வாதக்காரனை மறுபடியும் காண்கிறார் - (5:14)  

28. சொஸ்தமான மனுஷன் யூதரிடம் அறிவிக்கிறான் - (5:15)  

29. இயேசுவை கொல்வதற்கு சதியாலோசனை - (5:16)  

30. இயேசுவின் பதிலுரை

(1) இயற்கையில் பிதாவும் இயேசுவும் சமம் - (5:17-18)  

(2) வல்லமையிலும் கிரியைகளிலும் பிதாவும் இயேசுவும் சமம் - (5:19-20)  

(3) மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதில் பிதாவும் இயேசுவும் சமம் - (5:21)  

(4) நியாயத்தீர்ப்பு செய்வதில் பிதாவும் இயேசுவும் சமம் - (5:22)  

(5) கனத்தில் பிதாவும் இயேசுவும் சமம் - (5:23)  

(6) நித்திய ஜீவனைக் கொடுப்பதில் பிதாவும் இயேசுவும் சமம் - (5:24-25)  

(7) தம்மில்தாமே ஜீவனுடையவராய் இருப்பதில் பிதாவும் இயேசுவும் சமம் - (5:26-27)  

(8) மரணத்தின்மீதும் நித்தியத்தின்மீதும் உள்ள அதிகாரத்தில் பிதாவும் இயேசுவும் சமம் - (5:28-29)  

(9) இயேசு பிதாவினிடத்தில் கேட்கிற படியே நியாயத்தீர்ப்பு செய்கிறார் - (5:30)  

(10) இயேசுவைப் பற்றி கூறப்பட்டுள்ள சாட்சி

(அ) யோவான் ஸ்நானன் - (5:31-35) 

(ஆ) இயேசுவின் கிரியைகள் - (5:36)  

(இ) பிதா - (5:37-38)  

(ஈ) வேதவாக்கியங்கள் - (5:39-42)  

(11) இயேசு பிதாவின் நாமத்தினாலே வந்திருக்கிறார் - (5:43)  

(12) இயேசு அவிசுவாசத்தைக் கடிந்து கொள்கிறார் - (5:44-47)   

31. ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக போஜனம் கொடுக்கிறார்  - (6:1-13)  

32. இயேசுவை இராஜாவாக்கும்படி பிடித்துக் கொண்டு போக ஜனங்கள் மனதாயிருக்கிறார்கள் - (6:14-15)  

33. இயேசு தண்ணீரின்மீது நடக்கிறார் - (6:16-21) 

34. ஜீவ அப்பத்தைப் பற்றிய உபதேசம்

(1) திரளான ஜனங்கள் இயேசுவை தேடி வருகிறார்கள் - (6:22-25)   

(2) இயேசு ஜனங்களுடைய தவறான நோக்கங்களைக் கடிந்து கொள்கிறார் - (6:26-27)  

(3) தேவனுக்கு ஏற்ற கிரியைகளை எவ்வாறு செய்வது என்று ஜனங்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள் - (6:28)  

(4) தேவனுக்கேற்ற கிரியை - (6:29)  

(5) ஜனங்கள் அடையாளத்தை கேட்கிறார்கள் - (6:30-31)  

(6) பிதா மெய்யான அப்பத்தை கொடுக்கிறார் - (6:32-33)  

(7) ஜனங்கள் அந்த அப்பத்தை எப்பொழுதும் தங்களுக்கு தரவேண்டும் என்று கூறுகிறார்கள் - (6:34)  

(8) இயேசு - ஜீவ அப்பம் நானே - (6:35-40)  

(9) முறுமுறுக்கும் யூதர்கள் - (6:41-42)   

(10) இயேசு ஜீவ அப்பத்தைப் பற்றி மேலும் விளக்குகிறார் - (6:43-51)  

(11) யூதர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் பண்ணுகிறார்கள் - (6:52)  

(12) இயேசு ஜீவ அப்பத்தைப் பற்றி இன்னும் அதிகமாக விளக்கி கூறுகிறார் - (6:53-58)  

35. உபதேசத்தினால் சீஷத்துவத்திற்கு பரீட்சை - (6:59-66)  

36. பேதுருவின் புதிய விசுவாச அறிக்கை - (6:67-69)  

37. யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுக்கப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (6:70-71)   

38. இயேசுவின் சகோதரர்கள் அவரை விசுவாசிக்க வில்லை - (7:1-9)  

39. எல்லா மனுஷருக்காகவும் மரிப்பதற்காக கலிலேயாவிலிருந்து இறுதி பிரயாணம் - (7:10-13)  

40. தேவாலயத்தில் இயேசு உபதேசம் பண்ணுகிறார்  

(1) யூதர்கள் ஆச்சரியப்படுகிறார்கள் - (7:14-15)  

(2) இயேசுவின் உபதேசம் பிதாவின் உபதேசம் ஆகும் - (7:16-19)  

(3) இயேசுவை பிசாசு பிடித்தவன் என்று குற்றம் சுமத்துகிறார்கள் - (7:20)  

(4) இயேசு யூதர்களின் நிலையற்ற பழக்கங்களைக் கடிந்து கொள்கிறார் - (7:21-24)  

(5) இயேசுவிடம் யூதர்கள் கூறிய மறுப்புரை - (7:25-27)  

(6) இயேசு யூதர்களிடம் கூறிய பதிலுரை - (7:28-29)  

(7) பிரிவினை - இயேசுவைக் கொல்ல சதியாலோசனை - (7:30-32)  

(8) இயேசு பரிசேயருக்கு கூறிய பதிலுரை - (7:33-34)   

(9) இயேசுவைப் பற்றியும் அவருடைய உபதேசங்களைப் பற்றியும் யூதர்களுக்குள் விவாதம் - (7:35-36)  

(10) பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் - (7:37-39)  

41. பிரிவினை - இயேசுவைக் கொல்ல சதியாலோசனை - (7:40-44)           

42. சேவகரின் அறிக்கையும் நிக்கொதேமுவின் ஆலோசனையும் - (7:45-53)    

43. இயேசு தேவாலயத்தில் உபதேசம் பண்ணுகிறார்  

(1) விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ - (8:1-11)  

(2) இயேசு உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார் - (8:12)   

(3) தம்மைப் பற்றி இயேசு கொடுத்த சாட்சியை பரிசேயர் குற்றப்படுத்துகிறார்கள் - (8:13)  

(4) பிதா தம்மைக் குறித்து சாட்சி கொடுப்பதாக இயேசு கூறுகிறார்  - (8:14-18)  

(5) உம்முடைய பிதா எங்கே - (8:19-21)  

(6) தன்னைத்தான் கொலைசெய்து கொள்வானோ - (8:22-24)  

(7) நீர் யார் - (8:25-29)  

(8) விசுவாசிகளுக்கு இயேசுவின் உபதேசம் - (8:30-32)  

(9) யூதர்கள் விடுதலையின் சந்ததியாயிருக்கிறோம் என்கிறார்கள் - இதற்கு இயேசுவின் மறுப்புரை - (8:33-38)  

(10) யூதர்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம் என்கிறார்கள் - இதற்கு இயேசுவின் மறுப்புரை - (8:39-40)  

(11) யூதர்கள் பிதாவின் சந்ததியாயிருக்கிறோம் என்கிறார்கள் - இதற்கு இயேசுவின் மறுப்புரை - (8:41-47)  

(12) யூதர்கள் இயேசுவை சமாரியன் என்றும் பிசாசு பிடித்தவன் என்றும் கூறுகிறார்கள் - இதற்கு இயேசுவின் மறுப்புரை - (8:48-51)  

(13) இயேசுவின் மகிமையைப் பற்றிய விளக்கம் - (8:52-56)  

(14) ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே இயேசு இருக்கிறார் - (8:57-58)  

44. இயேசுவை கொல்வதற்கு சதியாலோசனை - (8:59)   

45. பிறவிக்குருடன்  

(1) இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம் - (9:1-3)              

(2) இயேசு பிறவிக்குருடனை சொஸ்தமாக்குகிறார் - (9:4-7)  

(3) குருடனும் அயலகத்தாரும் - (9:8-12)  

(4) குருடனும் பரிசேயரும் - (9:13-17)  

(5) குருடனின் பெற்றோரும் யூதரும் - (9:18-23)  

(6) குருடனும் பரிசேயரும் - (9:24-34)  

(7) இயேசுவும் குணமாக்கப்பட்ட மனுஷனும் - (9:35-38)  

46. தேவாலயத்தில் உபதேசம்  

(1) இயேசுவின் ஊழியம் - (9:39)  

(2) பரிசேயரின் கேள்வியும் இயேசுவிம் பதிலும் - (9:40-41) 

(3) நல்ல மேய்ப்பனைப் பற்றிய உவமை - (10:1-6)  

(4) நல்ல மேய்ப்பனைப் பற்றிய உவமையின் விளக்கம் - (10:7-18)  

(5) யூதர்களுக்குள் பிரிவினை - (10:19-21)  

47. தேவாலயத்தில் இயேசுவின் உபதேசம்  

(1) யூதர்கள் இயேசுவிடம் விசாரிக்கிறார்கள் - (10:22-24)  

(2) இயேசு தமது தெய்வத்துவத்தை வலியுறுத்துகிறார் - (10:25-30)   

(3) இயேசுவை கொல்வதற்கு முயற்சி  - (10:31-33)  

(4) இயேசு தமது தெய்வத்துவத்திற்கு சாட்சி கூறுகிறார் - (10:34-38)  

48. இயேசுவைக் கொல்வதற்கு முயற்சி - (10:39-42)  

49. மரித்த லாசரு உயிருடன் எழும்புகிறான்  

(1) சூழ்நிலையும் நோக்கமும் - (11:1-6)  

(2) யூதேயாவிற்கு மறுபடியும் பிரயாணம் - (11:7-16)  

  (3) இயேசும் மார்த்தாளும் - (11:17-27)  

(4) இயேசுவும் மரியாளும் - (11:28-32)  

(5) இயேசுவின் மனதுருக்கம் - (11:33-36)  

(6) இயேசு லாசருவை அடக்கம் பண்ணிய கல்லறையினிடத்திற்கு வருகிறார் - (11:37-38)  

(7) மார்த்தாளின் அவிசுவாசம் - (11:39)  

(8) இயேசுவின் விசுவாசம் - (11:40)  

(9) இயேசுவின் ஜெபம் - (11:41-42)  

(10) இயேசுவின் வல்லமை - லாசருவை உயிருடன் எழுப்புகிறார் - (11:43-44)  

50. அற்புதத்தின் விளைவு - (11:45-46)  

51. இயேசுவைக் கொல்ல முயற்சி - (11:47-48)  

52. இயேசுவின் மரணத்தைப் பற்றி காய்பாவின் தீர்க்கதரிசனம் - (11:49-52)  

53. இயேசுவைக் கொல்ல முயற்சி - (11:53-54)    

54. இயேசுவைப் பிடிப்பதற்குக் கட்டளை - (11:55-57)   

55. இயேசுவின் அபிஷேகம் - (12:1-8)   

56. லாசருவைக் கொல்ல சதியாலோசனை - (12:9-11) 

57. வெற்றிப்பவனி - (12:12-19)  

58. தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உபதேசம்

(1) சூழ்நிலை - கிரேக்கர்கள் இயேசுவை தேடுகிறார்கள் - (12:20-22)  

(2) இயேசு தமது மரணத்தை முன் குறித்துக் கூறுகிறார் - (12:23-24)  

(3) சீஷத்துவத்திற்கு பரீட்சை - (12:25-26)   

(4) ஜெபம் - வானத்திலிருந்து உண்டான சத்தம் - (12:27-29)  

(5) கிறிஸ்துவின் சிலுவையில் உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு - (12:30-33)  

(6) இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி - (12:34)  

(7) இயேசு ஜனங்களுக்கு புத்திமதி கூறிவிட்டு அவர்களை விட்டு மறைகிறார் - (12:35-36)   

59. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக ஜனங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை - (12:37-41)  

60. அதிகாரிகளின் சுபாவம் - (12:42-43)  

61. இயேசு தம்மைப் பற்றி ஜனங்களிடம் கூறிய கடைசி சாட்சி - (12:44-50)   

62. கடைசி பஸ்கா 

(1) இயேசுவின் வேளை - (13:1)  

(2) போஜனம் பண்ணுகிறார்கள் - யூதாஸ் சோதிக்கப்படுகிறான் - (13:2)  

(3) இயேசு தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக சீஷர்களுடைய கால்களைக் கழுவுகிறார் - (13:3-5)  

(4) பேதுருவின் கலக்கம் - (13:6)  

(5) இயேசு செய்வதை பேதுரு அப்பொழுது அறியவில்லை - (13:7) 

(6) தனது கால்களைக் கழுவக்கூடாது என்று பேதுரு கூறுகிறான் - (13:8) 

(7) பின்பு பேதுரு தன் கைகளையும் தலையையும் கழுவவேண்டுமென்று கூறுகிறான் - (13:9)  

(8) யூதாசைத் தவிர எல்லோரும் சுத்தமாயிருக்கிறார்கள் - (13:10-11)  

(9) இயேசுவின் தாழ்மை நமக்கு ஓர் எடுத்துக்காட்டு - (13:12-17)  

(10) யூதாஸ் தம்மை காட்டிக்கொடுக்கப் போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (13:18-26)   

(11) யூதாஸ் தன்னை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறான் - (13:27-30)  

(12) பஸ்காவில் இயேசுவின் கடைசி உபதேசம் - (13:31-35)  

63. ஒலிவமலையில் இயேசுவின் பிரசங்கம் 

(1) பேதுரு தம்மை மறுதலிக்கப் போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (13:36-38)   

(2) சபை எடுத்துக் கொள்ளப்படப்போவதைப் பற்றிய முதலாவது அறிவிப்பு - (14:1-4)  

(3) ஜீவியத்தின் பிரதான கேள்வி - (14:5)  

(4) இயேசுவின் பதிலுரை - (14:6-7)  

(5) உண்மையான விசுவாசிகளின் ஆவல் - (14:8)   

(6) தேவனுடைய உண்மையான வெளிப்பாடு - (14:9-11)  

(7) இயேசுவை விசுவாசிக்கிறவர்களால் செய்யக்கூடிய காரியங்கள் - (14:12)  

(8) விசுவாசிகளுக்கு தேவன் செய்யும் காரியம் - (14:13-14) 

(9) தேவனிடத்தில் அன்பாயிருக்கிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் - (14:15-17) 

(10) ஆவிக்குரிய ஐக்கியமும் வல்லமையும் - (14:18-21)  

(11) விசுவாசிகளுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார் - (14:22)  

(12) விசுவாசிகளிடத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார் - (14:23-25)   

(13) பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் - (12:26)  

(14) தேவனுடைய சமாதானம் - (14:27)  

(15) இயேசு பிதாவினிடத்திற்கு போகிறார் - (14:28-31)    



64. கெத்செமனே தோட்டத்திற்குப் போகும் வழியில் உபதேசம்  

(1) மெய்யான திராட்சச்செடி - (15:1)  

(2) இரண்டு விதமான கொடிகள் - (15:2)  

(3) உண்மையான விசுவாசிகள் - (15:3)  

(4) கனிகொடுப்பதற்கு நிபந்தனை - (15:4-5)  

(5) கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும் - (15:5-6)  

(6) ஜெபத்திற்கு பதில் கிடைக்க நிபந்தனை - (15:7)  

(7) கனிகளைக் கொடுப்பதன் நோக்கம் - (15:8)  

(8) கிறிஸ்துவில் நிலைத்திருப்பதற்கு நிபந்தனைகளும் அதனால் ஆசீர்வாதங்களும் - (15:9-14)  

(9) சிநேகிதத்திற்கு ஏழு அடையாளங்கள் - (15:15-17) 

(10) உண்மையான விசுவாசிகளை உலகம் ஏன் பகைக்கிறது - (15:18-21)  

(11) உலகம் ஏன் தேவனையும் கிறிஸ்துவையும் பகைக்கிறது - (15:22-25)  

(12) சத்திய ஆவியான தேற்றரவாளன் - (15:26-27)  

(13) இயேசு உபத்திரவத்தை முன் குறித்துக் கூறுகிறார்  - (16:1-3)  

(14) கிறிஸ்தவர்களின் உபத்திரவத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்திற்குக் காரணம் - (16:4-6)  

(15) இயேசு பிதாவினிடத்திற்கு போவதன் அவசியம் - (16:7)             

(16) உலகத்தில் பரிசுத்த ஆவியானவரின் மூன்று அம்ச கிரியை - (16:8:11)  

(17) வருங்கால வெளிப்பாடுகளின் தீர்க்கதரிசனங்கள் - (16:12-15)  

(18) இயேசு பிதாவினிடத்திற்கு போவதன் உபதேசம் - (16:16)  

(19) சீஷர்கள் இந்த உபதேசத்தைத் தவறாக புரிந்து கொள்கிறார்கள் - (16:17-18)  

(20) இயேசு பிதாவினிடத்தில் போவதையும் திரும்பவும் வரப் போவதையும் குறித்து விளக்குகிறார் - (16:19-22)  

(21) இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்க வேண்டும் - (16:23-26)  

(22) சீஷர்கள் தவறாக புரிந்து கொண்டதற்கு தெளிவான விளக்கம் - (16:27-28)  

(23) சீஷர்கள் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள் - (16:29-30)   

(24) உபத்திரவங்களையும் கிறிஸ்தவர்களின் பாடுகளையும் குறித்த தீர்க்கதரிசனங்கள் - (16:31-33)   

65. கர்த்தருடைய ஜெபம்  

(1) பிதாவையும் குமாரனையும் மகிமைப்படுத்துதல் - (17:1)                 

(2) நித்திய ஜீவன் - (17:2-3)  

(3) நியமித்த கிரியை செய்து முடிக்கப் பட்டிருக்கிறது - (17:4)               

(4) கிறிஸ்துவின் மகிமை - (17:5)  

(5) கிறிஸ்து மனுஷருக்கு பிதாவின் நாமத்தை வெளிப்படுத்துகிறார் - (17:6-8)  

(6) விசுவாசிகள் அனைவருடைய ஒற்றுமை - (17:9-11)  

(7) கேட்டின் மகன் கெட்டுப்போகிறான் - (17:12)  

(8) விசுவாசிகளின் பரிசுத்தம் - (17:13-14) 

(9) விசுவாசிகளை தீமையிலிருந்து காக்கும்படி ஜெபம் - (17:15)  

(10) விசுவாசிகளின் பரிசுத்தத்தைப் பற்றிய சாட்சி - (17:16)                

(11) விசுவாசிகள் ஊழியத்திற்காக வேறுபிரிக்கப்படுகிறார்கள் - (17:17-19)   

(12) விசுவாசிகள் ஒன்றாயிருக்க வேண்டும் - (17:20-23)  

(13) விசுவாசிகளின் மகிமை - (17:24)  

(14) உலகம் பிதாவை அறியவில்லை - (17:25)  

(15) ஊழியம் நிறைவேறிற்று - (17:26)   

  யஒஒஒ.  இயேசுவின் பாடுகள்  

1. கெத்செமனே தோட்டத்தில் இயேசு - (18:1)  

2. இயேசுவைக் கொல்ல முயற்சி - இயேசு காட்டிக்கொடுக்கப்படுவதும் கைதுபண்ணப்படுவதும் - (18:2-11)  

3. இயேசுவை அன்னா என்பவனிடத்திற்கு முதலாவதும், பின்பு காய்பா என்பவனிடத்திற்கும் கொண்டு போகிறார்கள் - (18:12-14)  

4. பேதுருவின் முதலாவது மறுதலிப்பு - (18:15-18)  

5. இயேசுவின் விசாரணை - (18:19-24)  

6. பேதுருவின் இரண்டாம், மூன்றாம் மறுதலிப்புக்கள் - (18:25-27)  

7. பிலாத்துவிற்கு முன்பாக இயேசு - (18:28-37)  

8. இயேசுவிற்கு தண்டனையும் பரபாசிற்கு விடுதலையும் - (18:38-40)   

9. இயேசுவின் சிரசின்மேல் முள்முடியை வைக்கிறார்கள் - (19:1-3)  

10. பிலாத்து இயேசுவை ஜனங்களுக்கு முன்பாக கொண்டு வருகிறான் - (19:4-7)    

11. இயேசுவை பிலாத்துவிடம் மறுபடியும் கொண்டு போகிறார்கள் - (19:8-11)  

12. பிலாத்து இயேசுவை விடுதலை பண்ண வழிபார்க்கிறான் - (19:12)  

13. பிலாத்து இயேசுவை யூதருக்கு முன்பாக நிறுத்துகிறான் - (19:13-14)  

14. யூதர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள் - (19:15)  

15. இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் - (19:16-24)  

16. இயேசுவின் சிலுவையின் அருகே நின்ற ஸ்திரீகள் - (19:25-27)  

17. இயேசுவின் மரணம் - (19:28-37)  

18. இயேசுவை அடக்கம் பண்ணுகிறார்கள் - (19:38-42)   

 ஒல. உயிர்த்தெழுந்த பின்பு இயேசுவின் ஊழியம் 

1. ஸ்திரீகள் அப்போஸ்தலரிடம் கல்லறை காலியாக இருப்பதை அறிவிக்கிறார்கள் - (20:1-2)  

2. பேதுருவும் யோவானும் இயேசுவை அடக்கம் பண்ணிய இடத்திற்கு ஓடுகிறார்கள் - (20:3-10)  

3. மகதலேனா மரியாளுக்கு இயேசுவின் தரிசனம் - (20:11-17)  

4. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு மகதலேனா மரியாளின் சாட்சி - (20:18)  

5. இயேசு பத்து பேருக்கு தரிசனம் தருகிறார் - தோமா அங்கில்லை - (20:19-20)  

6. இயேசு தமது சீஷர்களுக்கு ஊழியப் பொறுப்புக்களைக் கொடுக்கிறார் - (20:21-23)  

7. கண்டு விசுவாசித்த தோமா - (24-25)  

8. இயேசு பதினொறு பேருக்கு தரிசனம் தருகிறார் - (20:26-28)  

9. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் - (20:29)  

10. யோவான் எழுதின சுவிசேஷத்தின் நோக்கம் - (20:30-31) 

11. இயேசு தமது சீஷர்களுக்கு மறுபடியும் தம்மை வெளிப்படுத்துகிறார் -  

(1) ஒரு மீனும் அகப்படவில்லை - (21:1-3)  

(2) திரளான மீன்கள் அகப்படுகிறது - (21:4-6)   

(3) இயேசுவிற்கு அன்பாயிருந்த சீஷன் - (21:7)  

(4) சீஷர்கள் மீன்களுள்ள வலையை கரைக்கு இழுத்து வருகிறார்கள் - (21:8-14)  

12. பேதுருவின் மூன்று அம்ச ஊழியம் - (21:15-17)   

13. பேதுருவின் மரணத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் - (21:18-19)               

14. பேதுரு யோவானைப் பற்றி கேட்கிறான் - (21:20-23)  

15. யோவான் - இந்த சுவிசேஷத்தை எழுதியவர் - முடிவுரை - (21:24-25)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.