பிலிப்பியர் நிருபம் ஒரு கண்ணோட்டம்




பிலிப்பியர்
முன்னுரை 

பிலிப்பி பட்டணம் மக்கெதோனியாவின் மேற்குப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்ற  பட்டணமாக விளங்கிற்று. அப்போஸ்தலர் பவுல்  ரோமாபுரி சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, பிலிப்பியருக்கு இந்த நிருபத்தை எழுதினார். ஆகையினால் விசுவாசிகள் மத்தியில்  இந்த நிருபம் மிகவும் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.  பிலிப்பி பட்டணத்திலுள்ள சபையார்மீது பவுல் மிகவும்  பிரியமாயிருக்கிறார். இந்தப் பட்டணத்தில் பவுல் சபையை ஸ்தாபனம்பண்ணினார்.   ஆகையினால் இந்தச் சபையின்மீது  ஒரு தகப்பனுக்கு இருக்கக்கூடிய பாசம் பவுலினிடத்தில் காணப்படுகிறது. பிலிப்பி சபையிலுள்ள விசுவாசிகளை பவுல் தன் சொந்தப் பிள்ளைகளைப்போல பாவிக்கிறார். சுவிசேஷத்தினால் அவர்களைப் பெற்றதாகச் சொல்லுகிறார். அதே சுவிசேஷத்தினாலேயே  அவர்களை ஆவிக்குரிய சத்தியங்களில் போஷிப்பதாகவும் சொல்லுகிறார். 

பிலிப்பி பட்டணத்தில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு தேவன் பவுலை விசேஷித்த வழியில் தெரிந்துகொண்டார்.  இரவு வேளையில்  பவுலுக்கு ஒரு தரிசனமுண்டாயிற்று. மக்கெதோனியாவிலுள்ள ஒரு மனுஷன்  பவுலின் சொப்பனத்தில் தோன்றி, மக்கெதோனியாவுக்கு வந்து தங்களுக்கு உதவிபுரியுமாறு பவுலைக் கேட்டுக்கொண்டான். இந்த அழைப்பு தேவன் மூலமாய் உண்டாயிற்று என்பதை பவுல் புரிந்துகொண்டார்.  தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பவுல் மக்கெதோனியாவுக்குப் போய் அங்கு ஊழியம் செய்தார். 

பிலிப்பி பட்டணத்தில் பவுலுக்கு அநேகப் பாடுகளும் உபத்திரவங்களுமுண்டாயிற்று. ஆனாலும் பவுலுக்கு அந்தப் பட்டணத்தார்மீது  கோபமோ விரோதமோ வரவில்லை. தன்னை அவர்கள் துன்பப்படுத்தினாலும்  பவுல் அவர்கள்மீது அன்பாகவே இருக்கிறார். உபத்திரவங்களை பொறுமையோடு சகித்துக்கொள்கிறார். பவுலின் அனுபவம் கர்த்தருடைய ஊழியக்காரராகிய நமக்கு  ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நாம்  சுவிசேஷத்தை அறிவிக்கும்போது ஜனங்கள் நம்மை வெறுக்கலாம். நம்மைத் துன்பப்படுத்தலாம். ஆனால் நாமோ அவர்களைப்போல பகை உணர்ச்சியைக் காண்பிக்கக்கூடாது. ஜனங்கள்மீது நாம் வைத்திருக்கிற அன்பு ஒருபோதும் குறைந்துவிடக்கூடாது. அன்பு இல்லையென்றால் சுவிசேஷ ஊழியத்தை உண்மையாய்ச் செய்யமுடியாது. 

பிலிப்பு சபையில் ஸ்தாபிக்கப்பட்ட சபை, ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக இருந்தது. ஒரு சில விசுவாசிகளே சபையிலிருந்தார்கள்.      பவுல்  அதைப் பார்த்து சோர்ந்துபோகவில்லை.   ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு மகிமையாயிருக்கும் என்று பவுல்    கர்த்தருக்குள் விசுவாசித்தார். கர்த்தருடைய  ஊழியக்காரராகிய நாம் அவருடைய  ஊழியத்தை உண்மையாய்ச் செய்யவேண்டும்.  ஆரம்பம் சிறியதாகவும், அற்பமாகவும் இருந்தாலும் சோர்ந்துபோகக்கூடாது. ஊழியம் கர்த்தருடையது. கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள். கர்த்தர் ஒரு அறுவடை காலத்தை நியமித்து வைத்திருக்கிறார். நமக்கும் ஏற்றகாலத்தில் ஒரு ஆசீர்வாதம் கிடைக்கும்.

அப்போஸ்தலர் பவுல் பிலிப்பியருக்கு இந்த நிருபத்தை எழுதும்போது, அங்குள்ள சபை வளர்ந்து பெருகியிருக்கிறது. விசுவாசிகள்  எண்ணிக்கையில் அதிகரித்திருக்கிறார். ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இப்போது பவுல்மீது அன்பாயிருக்கிறார்கள். அவருக்கு வெகுமதிகளை அனுப்பியிருக்கிறார்கள்.  பவுல் அவர்கள் அனுப்பிய வெகுமதிகளுக்காக அவர்களுக்கு நன்றிசொல்லுகிறார் (பிலி 4:18).  கொடுக்கல் வாங்கல் காரியத்தில் பிலிப்பியர் மாத்திரமே பவுலோடு உடன்படுகிறார்கள்.   வேறு எந்த சபையும் இந்த விஷயத்தில் பவுலோடு உடன்படவில்லை (பிலி 5:16). 

கி.பி. 64 ஆம் ஆண்டு பவுல் இந்த நிருபத்தை ரோமாபுரியிலிருந்து எழுதினார். இந்த நிருபத்தை எழுதுவதற்கான காரணம்  பிலி 4:10-18 ஆகிய வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  கிறிஸ்தவருடைய ஜீவியத்தில் காணப்படும் சந்தோஷம். தன்னுடைய பாடுகளிலும், உபத்திரவங்களிலும் பவுல் மிகுந்த சந்தோஷமாக இருந்தார். இந்த நிருபத்தில் “”சந்தோஷம்’’ என்னும் வார்த்தை 14 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிருபத்தின் மையக்கருத்தே “”சந்தோஷம்’’ என்பதாகும். (பிலி 3:1) விசுவாசிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காரியங்களில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

1. மற்ற விசுவாசிகளோடு ஐக்கியமாக இருப்பதில் சந்தோஷமாக இருக்க வேண்டும். (பிலி 1:3-11)
2. சுவிசேஷத்தின் நிமித்தம் பாடுகளை அனுபவிக்கும்போது சந்தோஷமாக இருக்க வேண்டும். (பிலி 1:12-30)
3. பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும் போது சந்தோஷமாக இருக்க வேண்டும். (பிலி 2:1-18)
4. ஊழியக்காரர் உண்மையோடு இருந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். (பிலி 2:19 - 3:1)
5. மாம்சத்தில் சந்தோஷப்படாமல் கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருக்க வேண்டும். (பிலி 3:1-21)
6. ஒற்றுமையில் சந்தோஷமாக இருக்க வேண்டும். (பிலி 4:1-3)
7. எல்லாவற்றிலும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.             (பிலி 4:4-23)

பொருளடக்கம்
  ஒ.  முன்னுரை 

1. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-2)
2. ஸ்தோத்திரமும் ஜெபமும் (1:3-5)
3. விசுவாசிகளுக்காக கர்த்தரிடத்தில் நம்பிக்கை (1:6-7)
4. ஆசீர்வாதத்திற்காக நான்கு அம்ச ஜெபம் (1:8-11)

  ஒஒ. உபத்திரவத்திலும் கிறிஸ்தவ வெற்றி

1. சுவிசேஷத்திற்காக உபத்திரவப்படுவதினால் ஏற்படும் விளைவு (1:12-19)
2. ஜீவனிலும் மரணத்திலும் கிறிஸ்தவ பிரதிஷ்டை (1:20-24)
3. ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கு கர்த்தர் விடுதலை பண்ணுவார் என்னும் நம்பிக்கை (1:25-26)
4. கிறிஸ்துவிற்காக பாடுகளை அனுபவிப்பதில் உறுதியாய் தரித்திருக்க வேண்டும் (1:27-30)

 ஒஒஒ. கிறிஸ்தவ ஜீவியம் - கிறிஸ்தவ ஜீவியத்திற்கு நான்கு எடுத்துக்காட்டுக்கள்

1. கிறிஸ்தவ ஜீவியத்திற்கு ஓர் விண்ணப்பம் (2:1-4)
2. கிறிஸ்துவின் முன்மாதிரி

(1) சுயதாழ்மையின் ஏழு அம்சம் (2:5-8)
(2) ஏழு அம்ச உயர்வு (2:9-11)

3. இரட்சிப்பின் கிரியை (2:12-16)
4. பவுலின் முன்மாதிரி - மரணத்திற்குப் பிரதிஷ்டை (2:17-18)
5. தீமோத்தேயுவின் முன்மாதிரி - சுயநலமில்லாமல் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிதல் (2:19-24)
6. எப்பாப்பிரோதீத்துவின் முன்மாதிரி - சுய தியாகமும் அதிக உழைப்பும் (2:25-30)

 ஒய. கிறிஸ்தவ ஜீவியத்தின் இலக்கு

1. யூதமார்க்கத்தாருக்கு எதிரான எச்சரிப்பு (3:1-2)
2. மாம்சத்தில் நம்பிக்கை வைக்கக்கூடாது (3:3-4)
3. பவுலுடைய மாம்சத்தின் எட்டு அம்ச மேன்மை (3:5-6)

4. கிறிஸ்தவ இலக்கின் எட்டு அம்சம்

(1) கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும் (3:7-8)
(2) கிறிஸ்துவிற்குள் இருக்கிறவனென்று காணப்படவேண்டும் (3:9)
(3) கிறிஸ்துவை வல்லமையிலும் பாடுகளிலும் மரணத்திலும் அறிய வேண்டும் (3:10)
(4) பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாட வேண்டும் (3:11-12)
(5) கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி தொடர வேண்டும் (3:13-14)
(6) ஒரே ஒழுங்காய் நடந்து கொண்டு ஒரே சிந்தûயாய் இருக்க வேண்டும் (3:15-16)
(7) அப்போஸ்தலரின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் (3:17-19)
(8) கிறிஸ்துவோடு மகிமை அடைய வேண்டும் (3:20-21)

 ய. விசுவாசிகளுக்கு புத்திமதிகள்

1. கர்த்தரிடத்தில் நிலைத்திருக்க வேண்டும் (4:1)
2. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் (4:2-4)
3. சாந்த குணம் வெளிப்படவேண்டும் (4:5-7)
4. கிறிஸ்தவ நீதிநெறி பண்பின் பிரகாரம் ஜீவிக்க வேண்டும் (4:8)
5. அப்போஸ்தல முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் (4:9)

  யஒ. பவுலின் உபத்திரவங்களில் பிலிப்பியரின் கரிசனை

1. கடந்த காலத்தில் விசாரிக்கவில்லை (4:10)
2. எந்த நிலைமையிலிருந்தாலும் பவுல் மன இரம்மியமாயிருக்க கற்றுக் கொண்டார் (4:11-13)
3. பிலிப்பியரின் பராமரிப்பிற்கு புகழ்ந்துரை (4:14-18)
4. தேவனுடைய பராமரிப்பின் வாக்குத்தத்தம் (4:19)
5. முடிவுரையும் ஆசீர்வாதமும் (4:20-23)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.