லூக்கா
முன்னுரை
வேதாகம ஆசிரியர்களில் லூக்கா மாத்திரமே இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்தவரல்ல என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். இவர் புறஜாதி மார்க்கத்திலிருந்து யூதமார்க்கத்தைத் தழுவியவர். அப்போஸ்தலர் பவுலின் ஊழியத்தின் மூலமாக இயேசுகிறிஸ்துவை தன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர். பவுல் மக்கதோனியாவுக்கு வந்தபின்பு லூக்கா அவரோடு கூடவே இருந்திருக்கிறார் (அப் 16:10). இவர் ஒரு வைத்தியர். ஆகையினால் பவுல் இவரை பிரியமான வைத்தியனாகிய லூக்கா என்று அழைக்கிறார் (கொலோ 4:14).
சித்திரங்களை வரைவதில் இவர் தேர்ச்சி பெற்றவர் என்றும், கன்னி மரியாளின் ஓவியத்தை இவர் அழகாக வரைந்தார் என்றும் யூதருடைய வரலாறு கூறுகிறது. அப்போஸ்தலர் பவுலோடு இணைந்து ஊழியம் செய்யும்போது லூக்கா இந்த சுவிசேஷத்தை எழுதினார். அப்போஸ்தலர் பவுல் ஒரு சகோதரனைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார் (2கொரி 8:18). அந்த சகோதரன் சுவிசேஷ ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சி பெற்றவன். அந்த சகோதரன் லூக்கா என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள்.
லூக்காவின் எழுத்து நடை மிகவும் தெளிவாகவும் இலக்கிய நயம் மிகுந்ததாகவும் இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு சம்பவத்தையும் இவர் மிகவும் துள்ளியமாக எழுதியிருக்கிறார். மற்ற சுவிசேஷ ஆசிரியர்களைவிட, லூக்கா மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எழுதக்கூடியவர். இயேசுகிறிஸ்துவின் ஆசாரிய ஊழியத்தை மிகவும் தெளிவாக விவரித்து எழுதியிருக்கிறார்.
லூக்கா இந்த சுவிசேஷத்தை எப்பொழுது எழுதினார் என்னும் காலம் தெளிவாக தெரியவில்லை. எங்கு எழுதினார் என்பதும் உறுதிபண்ணப்படவில்லை. இவர் ஒரு வேளை இந்த சுவிசேஷத்தை ரோமாபுரியில் எழுதியிருக்க வேண்டும். லூக்கா அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தின் ஆசிரியராகவும் இருந்து அதை எழுதியிருக்கிறார். ஒருவேளை இந்த புஸ்தகத்தை எழுதுவதற்கு முன்பாக லூக்கா இந்த சுவிசேஷத்தை எழுதியிருக்க வேண்டும். அப்போஸ்தலருடைய பவுல் ஒரு வீட்டுச் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது லூக்காவும் அவரோடுகூட காவலிலிருந்தார். இந்த சம்பவத்தோடு அப்போஸ்தலருடைய நடபடிகளின் வரலாறு நிறைவுபெறுகிறது.
லூக்கா மாத்திரமே தன்னோடுகூட இருந்ததாக பவுலும் குறிப்பிட்டிருக்கிறார் (2தீமோ 4:11). சிறைச்சாலையில் பவுலோடு இருந்தபோது லூக்காவுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைத்திருக்க வேண்டும். இந்த ஓய்வு காலத்தைப் பயன்படுத்தி லூக்கா இரண்டு வரலாற்று புஸ்தகங்களை எழுதியிருக்கிறார். ஒன்று இயேசுகிறிஸ்துவின் வரலாறு. மற்றொன்று ஆதித்திருச்சபையின் வரலாறு. தனக்கு எண்பத்தி நான்கு வயது ஆனபோது லூக்கா மரித்துப்போனாரென்றும், அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே அன்னகராக இருந்து ஊழியம் செய்தாரென்றும் யோரோம் என்னும் திருச்சபை வரலாற்று ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
லூக்கா எழுதின சுவிசேஷம் கி.பி. 58-63 - ஆவது வருஷத்தில் எழுதப்பட்டது. இந்த சுவிசேஷ புஸ்தகம் எழுதப்பட்ட இடம் சரியாகத் தெரியவில்லை. இந்த சுவிசேஷ புஸ்தகத்தின் ஆசிரியர் லூக்கா. இவர் ஒரு மருத்துவர். (கொலோ 4:14; 2தீமோ 4:11; பிலே 1:24) லூக்கா சில வசனங்களில் தன்னைப் பன்மைச் சுட்டுப் பெயரால் ""நாம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். அப் 16:10-17; அப் 20:5-15; அப் 21:1-18; அப் 27:1-28:16) இவர் ஒரு யூதர். ஒருவேளை லூகியாக இருக்கலாம். (ரோமர் 16:21; அப் 13:1) லூக்காவும், லூகியும் ஒரே நபரென்றால் லூக்கா பவுலின் உறவினர் ஆவார்.
மையக்கருத்து
இயேசு கிறிஸ்து தேவன் எதிர்பார்க்கும் புருஷன். (சக 6:12) இவர் பிதாவைச் சார்ந்திருந்தார். (லூக்கா 3:21) பாவிகளுக்குச் சிநேகிதர்(லூக்கா 5:29; லூக்கா 7:29-37); கிருபையுள்ளவர் (லூக்கா 7:13; லூக்கா 13:1); பிறன் (லூக்கா 10:30);
லூக்கா எழுதின சுவிசேஷத்தில் காணப்படும் விசேஷித்த காரியங்கள்
அற்புதங்கள்
1. திரளான மீன்களைப் பிடித்தல் (லூக்கா 5:4-11)
2. நாயீன் ஊரில் மரித்த வாலிபனை உயிரோடு எழுப்புதல் (லூக்கா 7:11-18)
3. நிமிரக்கூடாத கூனியைச் சொஸ்தமாக்குதல் (லூக்கா 13:11-17)
4. நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷனைச் சொஸ்தமாக்குதல் (லூக்கா 14:1-6)
5. பத்துக் குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குதல் (லூக்கா 17:11-19)
6. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதைச் சொஸ்தமாக்குதல் (லூக்கா 22:50-51)
உவமைகள்
1. கடன் கொடுக்கிறவன் (லூக்கா 7:41-43)
2. நல்ல சமாரியன் (லூக்கா 10:30-37)
3. உதவி புரியும் சிநேகிதன் (லூக்கா 11:5-8)
4. ஐசுவரியமுள்ள மதிகேடன் (லூக்கா 12:16-21)
5. கனிகொடாத அத்திமரம் (லூக்கா 13:6-9)
6. காணாமல்போன வெள்ளிக்காசு (லூக்கா 15:8-10)
7. இளைய குமாரன் (லூக்கா 15:11-32)
8. விடாமுயற்சியுள்ள விதவை (லூக்கா 18:1-8)
9. ஜெபம் பண்ணும் இரண்டு மனுஷர் (லூக்கா 18:9-14)
பொருளடக்கம்
ஒ. யோவான் ஸ்நானனின் பிறப்பு
1. லூக்கா எழுதின சுவிசேஷத்திற்கு முன்னுரை - (1:1-4)
2. யோவான் ஸ்நானனுடைய பெற்றோரின் வரலாறு - (1:5-7)
3. யோவான் ஸ்நானனின் பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்பு - (1:8-17)
4. சகரியாவிற்கு அடையாளம் - (1:18-20)
5. எலிசபெத்து கர்ப்பவதியாகிறாள் - (1:21-25)
6. இயேசுவின் பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்பு - (1:26-38)
7. மரியாள் எலிசபெத்தைச் சந்திக்க வருகிறாள் - (1:39-45)
8. கர்த்தரை மகிமைப்படுத்தி பாடிய பாடல் - (1:46-56)
9. யோவான் ஸ்நானனின் பிறப்பும் விருத்தசேதனமும் - (1:57-63)
10. சகரியாவின் வாய்திறக்கப்பட்டு நாவு கட்டவிழ்க்கப்படுகிறது - (1:64-66)
11. சகரியாவின் தீர்க்கதரிசனம் - (1:67-79)
12. யோவான் ஸ்நானனின் குழந்தைப் பருவம் - (1:80)
ஒஒ. இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திற்கு முற்பட்ட காலம்
1. இயேசுவின் பிறப்பு - (2:1-7)
2. மேய்ப்பர்களுக்கு கர்த்தருடைய தூதனின் அறிவிப்பு - (2:8-12)
3. பரமசேனையின் திரள் தேவனைத் துதிக்கிறார்கள் - (2:13-14)
4. இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்கள் உறுதி பண்ணுகிறார்கள் - (2:15-20)
5. இயேசுவிற்கு விருத்தசேதனமும் பெயரிடப்படுவதும் - (2:21)
6. மரியாளின் சுத்திகரிப்பு - (2:22-24)
7. சிமியோனின் தீர்க்கதரிசனம் - (2:25-35)
8. அன்னாள் கர்த்தரைப் புகழ்ந்து பேசுகிறாள் - (2:36-37)
9. இயேசுவின் குழந்தைப்பருவம் - (2:38-50)
10. இயேசு தமது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நமக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பிக்கிறார் - (2:51-52)
ஒஒஒ. யோவான் ஸ்நானனின் ஊழியம் -
1. யோவான் ஸ்நானனின் காலமும் அழைப்பும் - (3:1-2)
2. யோவான் ஸ்நானனுடைய ஊழியத்தின் நோக்கம் - (3:3-6)
3. யோவான் ஸ்நானன் ஜனங்களுக்கு கூறிய ஏழு அம்ச செய்தி - (3:7-11)
4. ஆயக்காரருக்கும் போர்ச்சேவகருக்கும் யோவான் ஸ்நானன் கூறிய நான்கு அம்ச செய்தி - (3:12-14)
5. இயேசு கிறிஸ்து பற்றி யோவான் ஸ்நானன் முன்குறித்துக் கூறுகிறான் - (3:15-18)
6. ஏரோது யோவான் ஸ்நானனைக் கைது பண்ணுகிறான் - (3:19-20)
ஒய. தமது ஊழியத்திற்காக இயேசு கிறிஸ்துவின் இறுதி ஆயத்தம் -
1. தண்ணீர் ஞானஸ்நானம் - (3:21)
2. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் - (3:22)
3. மரியாள், யோசேப்பு ஆகியோரின் வம்சவரலாறு
(1) இயேசுவிலிருந்து தாவீது வரையிலும் - (3:23-31)
(2) தாவீதிலிருந்து ஆபிரகாம் வரையிலும் - (3:32-34)
(3) ஆபிரகாமிலிருந்து ஆதாம் வரையிலும் - (3:35-38)
4. இயேசுவை சாத்தான் சோதிக்கிறான் - (4:1-13)
ய. இயேசுவின் ஊழியமும் உபதேசமும் -
1. இயேசு கலிலேயாவில் தமது ஊழியத்தை ஆரம்பிக்கிறார் - (4:14)
2. தாம் வளர்ந்த ஊரில் இயேசுவின் முதலாவது பிரசங்கம் - (4:15-27)
3. இயேசுவின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு - இயேசுவைக் கொல்வதற்கு முயற்சி - (4:28-30)
4. இயேசு கப்பர்நகூமை தமது ஊழிய ஸ்தலமாக ஆக்குகிறார் - (4:31-32)
5. இயேசு அசுத்த ஆவியை துரத்துகிறார் - (4:33-37)
6. பேதுருவின் மாமியை சொஸ்தமாக்குகிறார் - (4:38-39)
7. பிசாசுகளைத் துரத்துகிறார் - அநேகரை சொஸ்தமாக்குகிறார் - (4:40-41)
8. கலிலேயாவிற்கு இயேசுவின் இரண்டாவது பிரயாணம் - (4:42-44)
9. படவில் உட்கார்ந்து ஜனங்களுக்கு போதகம் பண்ணுகிறார் - (5:1-3)
10. இயேசு அற்புதம் செய்து படவை பயன்படுத்தியதற்கு கிரயம் செலுத்துகிறார் - (5:4-7)
11. பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரின் அழைப்பு - (5:8-11)
12. இயேசு குஷ்டரோகியை சுத்தமாக்குகிறார் - (5:12-14)
13. இயேசு திரளான ஜனங்களை சொஸ்தமாக்குகிறார் - இயேசுவின் கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று - (5:15-16)
14. கப்பர்நகூமிற்குத் திரும்பி வருகிறார் - திமிர்வாதக்காரனைக் குணப்படுத்துகிறார் - (5:17-26)
15. லேவி என்னும் மத்தேயுவின் அழைப்பு - (5:27-29)
16. பரிசேயருக்கு இயேசு கூறிய பதிலுரை - (5:30-32)
17. யோவான் ஸ்நானனின் சீஷர்களுக்கு இயேசு கூறிய பதிலுரை - (5:33-35)
18. வஸ்திரம், துருத்திகள் பற்றி உவமை - (5:36-39)
19. இயேசு ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் - (6:1-5)
20. ஓய்வுநாளில் சூம்பின கையையுடைய மனுஷனை சொஸ்தமாக்குகிறார் - (6:6-11)
21. பன்னிரெண்டு பேரை அபிஷேகம் பண்ணுகிறார் - (6:12-16)
22. இயேசு திரளான ஜனங்களை சொஸ்தமாக்குகிறார் - (6:17-19)
23. மலைப்பிரசங்கத்தின் ஒரு பகுதி -
(1) நான்கு பாக்கியவான்கள் - (6:20-23)
(2) நான்கு ஐயோக்கள் - (6:24-36)
(3) அன்பின் நான்கு பிரமாணங்கள் - (6:27-28)
(4) பழிவாங்குதலின் நான்கு பிரமாணங்கள் - (6:29-30)
(5) தங்கச்சட்டம் - (6:31-34)
(6) இரக்கத்தின் ஐந்து பிரமாணங்கள் - (6:35-36)
(7) நீதியின் நான்கு பிரமாணங்கள் - (6:37-38)
(8) குருடரான தலைவர்களைப் பின்பற்றுவதற்கு எதிரான எச்சரிப்பு - (6:39)
(9) ஒவ்வொரு விசுவாசியின் இலக்கு - (6:40)
(10) துரும்பும், உத்திரமும் - (6:41-42)
(11) வாயின் பேச்சும் கிரியைகளும் - (6:43-46)
(12) இரண்டு அஸ்திபாரங்களைப் பற்றிய உவமை - (6:47-49)
24. இயேசு நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனை சொஸ்தமாக்குகிறார் - (7:1-10)
25. விதவையின் மகனை இயேசு உயிருடன் எழுப்புகிறார் - (7:11-18)
26. யோவான் ஸ்நானன் இயேசுவைப் பற்றி கேட்ட கேள்விகள் - (7:19-20)
27. இயேசு கிரியைகளினால் யோவான் ஸ்நானனுக்கு பதில் கூறுகிறார் - (7:21-23)
28. யோவான் ஸ்நானனைப் பற்றி இயேசு கூறிய சாட்சி - (7:24-29)
29. இயேசு அவிசுவாசத்தைக் கடிந்து கொள்கிறார் - (7:30-35)
30. இயேசுவின் முதலாவது அபிஷேகம் - பரிசேயனாகிய சீமோன் - (7:36-40)
31. கடன்பட்ட இரண்டு பேரைப் பற்றிய உவமை - (7:41-47)
32. பாவியான ஸ்திரீயை இயேசு மன்னிக்கிறார் - (7:48-50)
33. கலிலேயாவிற்கு இயேசுவின் நான்காவது பிரயாணம் - (8:1-3)
34. விதைப்பவனைப் பற்றிய உவமை - (8:4-8)
35. உவமைகளால் பேசுவதற்கு காரணம் - (8:9-10)
36. விதைப்பவனைப் பற்றிய உவமையின் விளக்கம் - (8:11-15)
37. கொளுத்தப்பட்ட விளக்கைப் பற்றிய உவமை - (8:16-18)
38. இயேசுவின் புதிய உறவினர்கள் - (8:19-21)
39. இயேசு புயல்காற்றை அமைதிப் படுத்துகிறார் - (8:22-25)
40. கதரேனருடைய நாட்டிலிருந்த பிசாசுகள் பிடித்தவன் - (8:26-39)
41. பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமடைகிறாள் - யவீருவின் மகளை இயேசு உயிருடன் எழுப்புகிறார் - (8:40-56)
42. இயேசு பன்னிரெண்டு பேரை ஊழியம் செய்வதற்கு அபிஷேகம் பண்ணுகிறார் - (9:1-6)
43. ஏரோதுவின் கலங்கிய மனச்சாட்சி - யோவான் ஸ்நானனை சிரச்சேதம் பண்ணுகிறான் - (9:7-9)
44. பன்னிரெண்டு சீஷர்களும் திரும்பி வருகிறார்கள் - (9:10)
45. திரளான ஜனங்களை இயேசு சொஸ்தப்படுத்துகிறார் - (9:11)
46. ஐயாயிரம் பேரை இயேசு அற்புதமாக போஷிக்கிறார் - (9:12-17)
47. பேதுருவின் அறிக்கை - (9:18-20)
48. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முற்குறித்துக் கூறுகிறார் - (9:21-22)
49. சீஷத்துவத்திற்குப் பரீட்சை - ஆத்துமாவின் மதிப்பு - (9:23-26)
50. மறுரூபமாதல் - வரப்போகிற இராஜ்ஜியத்திற்கு ஒரு முன்னோட்டம் - (9:27-36)
51. வல்லமையில்லாத சீஷர்களும் சர்வவல்லமையுள்ள கிறிஸ்துவும் - (9:37-43)
52. இயேசு தமது மரணத்தை மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் - (9:44-45)
53. தாழ்மையைப் பற்றிய உபதேசம் - (9:46-48)
54. இயேசு பிரிவினையைக் கடிந்து கொள்கிறார் - (9:49-50)
55. சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை - (9:51-53)
56. பழிவாங்குவதைப் பற்றிய உபதேசங்கள் - (9:54-56)
57. சீஷத்துவத்திற்கு பரீட்சை - (9:57-62)
58. இயேசு எழுபது பேரை அபிஷேகிக்கிறார்
(1) ஊழியத்தைக் கொடுத்து அவர்களை அனுப்புகிறார் - (10:1-4)
(2) போகும் இடங்களில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் - (10:5-8)
(3) செய்தியும் வல்லமையும் - (10:9)
(4) அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (10:10-11)
(5) விசுவாசியாத பட்டணங்கள்மீது இயேசு நியாயத்தீர்ப்பை முன்குறித்துக் கூறுகிறார் - (10:12-16)
(6) எழுபது பேரும் திரும்பி வருகிறார்கள் - சாத்தான்மீது அதிகாரம் - (10:17-20)
59. விசுவாசத்தின் எளிமைக்காக இயேசு ஆவியிலே களிகூருகிறார் - (10:21-22)
60. சுவிசேஷத்தை விசுவாசிப்போருக்கு வெகுமதிகள் - (10:23-24)
61. நியாய சாஸ்திரி இயேசுவிடம் கேள்வி கேட்கிறான் - (10:25-29)
62. நல்ல சமாரியனின் உவமை - (10:30-37)
63. மார்த்தாளும் மரியாளும் - (10:38-42)
64. ஜெபம் - ஜெபம் பண்ண போதிக்குமாறு இயேசுவிடம் விண்ணப்பம் - (11:1)
65. மாதிரி ஜெபம் - (11:2-4)
66. வருந்தி கேட்கும் மனுஷனைப் பற்றிய உவமை - தேவனுடைய நண்பர்களின் தைரியம் - (11:5-8)
67. ஜெபத்திற்கு பதில் கொடுக்கப்படும் என்னும் நிச்சயம் - (11:9-10)
68. தேவன் நமது பரமபிதாவானவர் - (11:11-13)
69. இயேசு பிசாசைத் துரத்துகிறார் - பரிசேயர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தேவதூஷணம் கூறுகிறார்கள் - (11:14-15)
70. பிரிந்திருக்கிற இராஜ்ஜியம் - (11:16-23)
(3) மரித்த பின்பு அவர்களுடைய ஜீவியங்கள் - (16:23-25)
(4) நடுவேயுள்ள பெரும் பிளப்பு - (16:26)
(5) பூமியில் உள்ளவர்களுக்கு சுவிசேஷம் - (16:27-28)
(6) தேவனுடைய வார்த்தை இறுதியான அதிகாரம் உடையவை - (16:29-31)
120. விசுவாசிகளுக்கு இடறல்கள் - (17:1-2)
121. மன்னிப்பது பற்றிய பிரமாணம் - (17:3-4)
122. அளவில்லாத விசுவாசம் - (17:5-6)
123. உண்மையுள்ள ஊழியத்தைப் பற்றிய உவமை - (17:7-10)
124. இயேசு பத்து குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குகிறார் - (17:11-19)
125. தேவனுடைய இராஜ்ஜியம் - (17:20-21)
126. இயேசு தமது இரண்டாம் வருகையை முற்குறித்துக் கூறுகிறார்
(1) அவர் வரும் விதம் - (17:22-25)
(2) அவர் வரும்போது அழிவு உண்டாகும் - (17:26-30)
(3) இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த எச்சரிப்பு - (17:31-33)
(4) அர்மகெதோன் யுத்தம் - (17:34-37)
127. அநீதியான நியாயாதிபதியைப் பற்றிய உவமை - சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணுவதன் வல்லமை - (18:1-8)
128. பரிசேயனையும் ஆயக்காரனையும் பற்றிய உவமை - (18:9-14)
129. இயேசு சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் - (18:15-17)
130. ஐசுவரியமுள்ள வாலிபன் - (18:18-23)
131. ஐசுவரியவான்களுக்கு எச்சரிப்பு - (18:24-27)
132. முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களுக்கு வெகுமதிகள் - (18:28-30)
133. தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் இயேசு மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் - (18:31-34)
134. இயேசு குருடனைக் குணப்படுத்துகிறார் - (18:35-43)
135. சகேயுவின் மனமாற்றம்
(1) இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க விரும்பினான் - (19:1-4)
(2) தயக்கமில்லாத கீழ்ப்படிதல் - (19:5-6)
(3) மார்க்க உபத்திரவங்கள் - (19:7)
(4) பாவம் உணர்த்தப்பட்டு தன்னை அர்ப்பணிக்கிறான் - (19:8)
(5) சகேயுவின் மனமாற்றமும் புதிய பிறப்பும் - (19:9-10)
136. பத்து ராத்தல் திரவியம் பற்றிய உவமை - பரலோக இராஜ்ஜியம் தாமதமாகிறது - (19:11-27)
137. வெற்றிப்பவனி - (19:28-40)
138. இயேசு எருசலேமிற்காக அழுகிறார் - (19:41-44)
139. தேவாலயத்தின் இரண்டாவது சுத்திகரிப்பு - (19:45-48)
140. இயேசுவின் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார்கள் - (20:1-7)
141. திராட்சைத் தோட்டத்தின் எஜமானைப் பற்றிய உவமை - (20:8-18)
142. வரிப்பணத்தைப் பற்றிய கேள்வி - (20:19-26)
143. உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி - (20:27-38)
144. இயேசு பரிசேயரிடம் கேட்ட கேள்விகள் - (20:39-44)
145. பரிசேயரின் அடையாளங்கள் - (20:45-47)
146. விதவை காணிக்கையாக போட்ட இரண்டு காசுகள் - (21:1-4)
147. தேவாலயத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம்
(1) எருசலேமின் அழிவை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (21:5-6)
(2) இரண்டு கேள்விகள் - (21:7-8)
(3) இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பத்து அடையாளங்கள் - (21:8-11)
(4) இந்த அடையாளங்களெல்லாம் நடப்பதற்கு முன்பாக எருசலேம் அழியும், இஸ்ரவேலர்கள் புறஜாதிகளுக்குள்ளே சிறைப்பட்டுப் போவார்கள் - (21:12-24)
(5) இக்காலத்தின் முடிவு - இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை - புறஜாதியாருடைய காலங்களின் முடிவு - (21:25-28)
(6) அத்தி மரத்தைப் பற்றிய உவமை - (21:29-31)
(7) அடையாளங்களெல்லாம் ஒரே சந்ததியில் நிறைவேறும் - (21:32-33)
(8) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த எச்சரிப்புக்கள் - (21:34-35)
(9) இரண்டாம் வருகைக்கு முன்பாக சபை எடுத்துக் கொள்ளப்படும் - (21:36)
(10) இயேசு தேவாலயத்தில் உபதேசம் பண்ணுகிறார் - (21:37-38)
148. இயேசுவைக் கொல்வதற்கு சதியாலோசனை - (22:1-2)
149. இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒப்புக்கொள்கிறான் - (22:3-6)
150. பஸ்காவின் ஆயத்தம் - (22:7-13)
151. கடைசி பஸ்கா
(1) கர்த்தருடைய பந்தி - (22:14-20)
(2) தாம் காட்டிக்கொடுக்கப்படப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (22:21-23)
(3) தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்னும் வாக்குவாதம் - (22:24-27)
(4) இராஜ்ஜியத்தில் அப்போஸ்தலரின் வருங்கால ஸ்தலம் - (22:28-30)
152. பேதுரு தம்மை மறுதலிக்கப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (22:31-34)
153. புதிய பொருட்களுக்கு அனுமதி - (22:35-38)
யஒ. கிறிஸ்துவின் பாடுகள்
1. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் துக்கமும் வியாகுலமும் - (22:39-46)
2. இயேசுவை கொல்வதற்கு முயற்சி - யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான் - இயேசு காதை சொஸ்தப்படுத்துகிறார் - (22:47-53)
3. பேதுரு மறுதலிக்கிறான் - (22:54-62)
4. இயேசுவின் வழக்கு விசாரணையும் பரியாசமும் - (22:63-71)
5. பிலாத்துவிற்கு முன்பாக இயேசு - (23:1-5)
6. ஏரோது இயேசுவை பரியாசம் பண்ணுகிறான் - (23:6-12)
7. இயேசுவிற்கு தண்டனையும் பரபாசிற்கு விடுதலையும் - (23:13-26)
8. அழும் ஸ்திரீகள் - (23:27-31)
9. இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் - (23:32-38)
10. சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் மனந்திருந்துகிறான் - (23:39-43)
11. இயேசுவின் மரணம் - (23:44-49)
12. இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ணுகிறார்கள் - (23:50-56)
யஒஒ. உயிர்த்தெழுந்த பின்பு இயேசுவின் ஊழியம்
1. உயிர்த்தெழுதலுக்கு கர்த்தருடைய தூதனின் சாட்சி - (24:1-8)
2. உயிர்த்தெழுதலுக்கு ஸ்திரீகளின் சாட்சி - (24:9-11)
3. வெறுமையான கல்லறை - (24:12)
4. இயேசு இரண்டு சீஷர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் -
(1) எம்மாவு என்னும் கிராமத்திற்குப் பிரயாணம் - (24:13-14)
(2) இயேசு தரிசனம் தந்து சீஷர்களிடம் கேள்வி கேட்கிறார் - (24:15-17)
(3) நிகழ்ச்சிகளின் வரலாறு - (24:18-24)
(4) இயேசு அவர்களுடைய அவிசுவாசத்தைக் கடிந்து கொள்கிறார் - (24:25-27)
(5) இயேசு அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார் - (24:28-32)
(6) அப்போஸ்தலர்களிடம் அவர்களுடைய அறிவிப்பு - (24:33-35)
5. இயேசு பத்து பேருக்கு தரிசனம் தருகிறார் - தோமா அங்கில்லை - (24:36-37)
(1) இயேசு கிறிஸ்துவின் சரீர உயிர்த்தெழுதலுக்கு சான்று - (24:38-45)
6. பிரதான கட்டளை - (24:46-48)
7. உன்னதத்திலிருந்து வரும் பெலன் - (24:49)
8. இயேசு பரமேறுகிறார் - (24:50-51)
9. பரிசுத்த ஆவியானவருக்காக கீழ்ப்படிதலோடு காத்திருக்கிறார்கள் - (24:52-53)