முன்னுரை
அப்போஸ்தலர் யோவான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே சிறைவைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரிசித்தார். தான்கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுதுமாறு கர்த்தர் யோவானுக்குச் சொன்னார். அதன் பிரகாரமாக இந்த வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்டிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தை பரிசுத்த வேதாகமத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டுமா என்று ஒரு சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இவர்கள் தெளிந்த சிந்தனையில்லாதவர்கள். இந்தப் புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடைய சபையார் எல்லோரும் இந்தப் புஸ்தகத்தை அங்கீகரித்திருக்கிறார்கள். இந்தப் புஸ்தகத்தில் விசுவாசிகளுக்கு நன்மையான ஆலோசனைகள் பல உள்ளன. ஆறுதலான பல செய்திகள் உள்ளன.
இயேசுகிறிஸ்து தாமே எருசலேமின் அழிவை முன்னறிவித்தார். எருசலேம் அழிகிற காலத்தில்தான், இயேசுகிறிஸ்து அப்போஸ்தலராகிய யோவானிடம் இந்தப் புஸ்தகத்தை எழுதும் ஊழியத்தை ஒப்புக்கொடுத்தார். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரம் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் இப்பொழுது நடைபெறுகிற சம்பவங்களும், இவைகளுக்குப் பின்பு நடைபெறப்போகிற சம்பவங்களும் எழுதப்பட்டிருக்கிறது.
கி.பி. 96 ஆம் ஆண்டில் அப்போஸ்தலர் யோவான் பத்மு தீவிலிருந்து இந்த நிருபத்தை எழுதினார் ( வெளி 1:9).
மையக்கருத்து
இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவிற்கு ஒப்புவித்ததை அவர் வெளிப்படுத்திக் காண்பித்தார். (வெளி 1:1). “”சம்பவிக்க வேண்டியவைகள்’’ என்பது யோவானுடைய நாளிலிருந்து புதிய வானம், புதிய பூமி உண்டாகும் நிகழ்ச்சி வரையிலும் சம்பவிக்கும் காரியங்களாகும்.
இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக தொடர்ந்து நடைபெறும். இந்த முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இடையில் வேறுசில இணை நிகழ்ச்சிகளும் கோர்க்கப்பட்டுள்ளன. இவை முக்கிய நிகழ்ச்சிகளோடு நடைபெறும் துணை நிகழ்ச்சிகளாகும்.
வெளிப்படுத்தின விசேஷத்தை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். (வெளி 1:19) ஒவ்வொரு பிரிவிலும் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:
1. “”நீ கண்டவைகள்’’ ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே காணப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தரிசனம். (வெளி 1:12-20) இந்தத் தரிசனமும் இந்தப் புஸ்தகத்தின் முன்னுரையும் சேர்ந்து முதலாவது பிரிவாகும்.
2. “”இருக்கிறவைகள்’’ ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டிருக்கும் ஏழு நிருபங்கள். இந்தப் புஸ்தகம் முழுவதும் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது. (வெளி 2:1-3:22). இந்தச் சபைகளுக்குக் கூறப்பட்டிருக்கும் செய்திகள் சபைக் காலத்திலுள்ள எல்லாச் சபைகளுக்கும் பொருந்தும். சபை எடுத்துக் கொள்ளப் படும் காலம் வரையிலும் இந்தச் செய்திகளை எல்லாச் சபைகளுக்கும் கூறலாம். வருங்கால உபத்திரவக்காலம், அந்திக்கிறிஸ்துவின் வருகை ஆகியவற்றிற்கு முன்பு வரையிலும் ஏழு சபைகளுக்கும் கூறப்பட்டிருக்கும் செய்திகளை எல்லாச் சபைகளுக்கும் கூறலாம். இக்காலத்தின் கடைசி ஏழு வருஷங்களில் அந்திக்கிறிஸ்து பூமியில் இருப்பான். (தானி 9:27; 2தெச 2:7-12; வெளி 6:1-19:21).
3. “”இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகள்’’ சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு நடைபெறும் நிகழ்ச்சிகள். (வெளி 4:1-22:5) பரலோகத்தில் காணும் காட்சிகள் (வெளி 4-5), ஏழு முத்திரைகளும் அவற்றோடு தொடர்புடைய வாக்கியங்களும் (வெளி 14:1-19:21), ஆயிரம் வருஷ அரசாட்சி (வெளி 20), புதிய வானமும், புதிய பூமியும் (வெளி 21:1-22:5), முடிவில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகள் (வெளி 22: 6-21) ஆகியவை இந்தப் பிரிவில் அடங்கும்.
வெளி 4:1 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் சபை காலத்திற்குப்பின்பு நடைபெறும். அதாவது வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு நிறைவேறும். தற்பொழுது நடைபெறும் காரியங்களோ, அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளோ வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்படவில்லை.
பொருளடக்கம்
1. தலைப்பும் ஆசிரியரும் (1:1)
2. யோவான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான் (1:2)
3. பாக்கியவான்கள் (1:3)
4. ஏழு சபைகளுக்கும் வாழ்த்துக்கள் (1:4-6)
5. வெளிப்படுத்தின விசேஷத்தின் மையக்கருத்து (1:7)
6. ஆதியும் அந்தமுமாக இருக்கிற இயேசு கிறிஸ்து (1:8)
7. தீர்க்கதரிசி - யோவான் (1:9-10)
8. யோவான் காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதவேண்டும் என்னும் கட்டளை (1:11)
ஒ. கண்ட காரியங்கள்
1. கிறிஸ்துவின் தரிசனம்
(1) கிறிஸ்துவின் எட்டு குணங்கள் (1:12-16)
(2) தரிசனத்தினால் யோவான்மீது ஏற்பட்ட விளைவு (1:17-18)
(3) வியாக்கியானத்தின் திறவுகோல் (1:19)
(4) அடையாளங்களின் வியாக்கியானம் (1:20)
ஒஒ. இருக்கிறவைகள் - சபை எடுத்துக் கொள்ளப்படும் வரையிலும் சபைகளைக் குறித்த காரியங்கள்
1. எபேசு சபைக்கு எழுதின நிருபம் (2:1-7)
2. சிமிர்னா சபைக்கு எழுதின நிருபம் (2:8-11)
3. பெர்கமு சபைக்கு எழுதின நிருபம் (2:12-17)
4. தியத்தீரா சபைக்கு எழுதின நிருபம் (2:18-29)
5. சர்தை சபைக்கு எழுதின நிருபம் (3:1-6)
6. பிலதெல்பியா சபைக்கு எழுதின நிருபம் (3:7-13)
7. லவோதிக்கேயா சபைக்கு எழுதின நிருபம் (3:14-22)
ஒஒஒ. இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகள் - சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு
1. பரலோகத்தின் தேவாலயம் - எடுத்துக் கொள்ளப்பட்ட விசுவாசிகள் தேவனோடு இருக்கிறார்கள்
(1) பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசல் (4:1)
(2) பரலோகத்தில் ஒரு சிங்காசனம் (4:2-3)
(3) இருபத்தினான்கு மூப்பர்கள் (4:4)
(4) ஏழு ஆவிகள் (4:5)
(5) கண்ணாடிக் கடல் (4:6-8)
(6) பரலோகத்தில் ஆராதனை (4:9-11)
(7) பரலோகத்தில் ஒரு புஸ்தகம் (5:1-4)
(8) பரலோகத்தின் ஆட்டுக்குட்டி (5:5-7)
(9) ஜீவன்களும் மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவரை ஆராதிக்கிறார்கள் (5:8-10)
(10) தேவனையும் ஆட்டுக் குட்டியானவரையும் எல்லோரும் ஆராதிக்கிறார்கள் (5:11-14)
2. தானியேலின் எழுபதாவது வாரமும் உபத்திரவக்காலமும்
(1) முதலாம் முத்திரை - அந்திக்கிறிஸ்து புறப்பட்டான் (6:1-2)
(2) இரண்டாம் முத்திரை - அந்திக்கிறிஸ்து புறப்பட்டதினால் ஏற்பட்ட யுத்தம் (6:3-4)
(3) மூன்றாம் முத்திரை - முதலாவது முத்திரைகளினால் ஏற்பட்ட பஞ்சம் (6:5-6)
(4) நான்காம் முத்திரை - முதல் மூன்று முத்திரைகளினால் ஏற்பட்ட மரணமும் பாதாளமும் (6:7-8)
(5) ஐந்தாம் முத்திரை - தானியேலின் எழுபதாவது வாரத்தின் உபத்திரவக் காலத்தில் இரத்தச்சாட்சியாக மரித்தவர்கள் (6:9-11)
(6) ஆறாம் முத்திரை - தேவனுடைய கோபாக்கினை ஆரம்பமாகிறது (6:12-17)
மீட்கப்பட்டவர்கள்
1. முத்திரைப்போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் (7:1-8)
2. மகா உபத்திரவக்காலம் (7:9-17)
(7) ஏழாம் முத்திரை - பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று (8:1-6)
(8) முதலாம் எக்காளம் - பரலோகத்திலிருந்து இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி பூமியிலே கொட்டப் பட்டது (8:7)
(9) இரண்டாம் எக்காளம் - பரலோகத்திலிருந்து அக்கினியால் எரிகிற பெரிய மலை போன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது (8:8-9)
(10) மூன்றாம் எக்காளம் - பெரிய நட்சத்திரம் தண்ணீரை எட்டியைப்போல கசப்பாக்கிற்று (8:10-11)
(11) நான்காம் எக்காளம் - கிரகங்களில் மூன்றில் ஒரு பங்கு இருளடைந்தது (8:12)
மனுக்குலத்தின்மீது மூன்று ஐயோக்கள் (8:13)
(12) ஐந்தாம் எக்காளம் - பாதாளத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டது
(அ) பாதாளக்குழியை திறந்தான் - புகை எழும்பிற்று (9:1-3)
(ஆ) தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை சேதப்படுத்த அவர்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது (9:4-6)
(இ) பிசாசுகளின் விளக்கம் (9:7-10)
(ஈ) பிசாசுகளின் இராஜா (9:7-10)
மேலும் இரண்டு ஐயோக்கள் (9:11-12)
(13) ஆறாம் எக்காளம்
(அ) கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்படுகிறார்கள் (9:13-15)
(ஆ) அவர்களுடைய தொகை - இருபது கோடி (9:16-19)
(இ) மனுஷரின் கடின இருதயம் (9:20-21)
1. பலமுள்ள தூதன்
(1) அவனுடைய வர்ணனையும் அவன் கையிலிருந்த திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகமும் (10:1-2)
(2) அவனுடைய ஆர்ப்பரிப்பும் ஏழு இடிகளின் சத்தமும் (10:3-4)
(3) அவனுடைய ஆணையும் ஏழாம் எக்காளமும் (10:5-7)
(4) சிறு புஸ்தகம் புசிக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் (10:8-10)
(5) சிறிய புஸ்தகத்தில் உள்ள காரியங்கள் (10:11-12)
2. தேவனுடைய ஆலயத்தையும் எருசலேமையும் அந்திக்கிறிஸ்து கைப்பற்றுகிறான் (11:1-2)
3. இரண்டு சாட்சிகள்
(1) அவர்களுடைய தீர்க்கதரிசனத்தின் காலம் (11:3)
(2) அவர்களுடைய அடையாளம் (11:4)
(3) அவர்களுடைய அதிகாரம் ((11:5-6)
(4) அவர்களுடைய மரணம் (11:7-8)
(5) அவர்களுடைய மரணத்தின் நிமித்தம் உண்டாகும் சந்தோஷம் (11:9-10)
(6) மரணத்தின்மீது அவர்களுடைய வெற்றி (11:11-12)
4. பூமி அதிர்ச்சி (11:13)
5. மூன்றாம் ஆபத்து சிக்கிரமாய் வருகிறது (11:14)
(14) ஏழாம் எக்காளம்
(அ) வானத்தில் உண்டான கெம்பீர சத்தங்கள் (11:15)
(ஆ) இருபத்தினான்கு மூப்பர்களின் அறிக்கை (11:16-18)
(இ) பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது (11:19)
(ஈ) சூரியனை அணிந்திருந்த ஒரு ஸ்திரீ (12:1)
(உ) இஸ்ரவேலின் வேதனை (12:2)
(ஊ) சிவப்பான பெரிய வலுசர்ப்பம் (12:3)
(எ) பிள்ளையின்மீது வலுசர்ப்பத்தின் யுத்தம் (12:4)
(ஏ) சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளை (12:5)
(ஐ) ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள் (12:6)
(ஒ) வானத்திலே யுத்தம் உண்டாயிற்று (12:7-9)
(ஓ) மூன்றாவது ஐயோ (12:10-12)
(ஒள) ஸ்திரீயின் துன்பம் (12:13-14)
(ஃ) சாத்தானின் அழிவு (12:15-16)
(க) வலுசர்ப்பம் ஸ்திரீயின் சந்ததியுடன் யுத்தம் பண்ணப்போயிற்று (12:17)
(ங) சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வந்தது (13:1)
(ச) மிருகத்தின் இராஜ்ஜியம் (13:2-3)
(ஞ) மிருகத்தின் அதிகாரம் (13:4)
(ட) பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் மிருகத்தின் வாய் - அதன் காலம் (13:5-6)
(ண) பரிசுத்தவான்களோடே மிருகத்தின் யுத்தம் (13:7)
(த) மிருகத்தின் இராஜ்ஜியத்தின் விஸ்தாரம் (13:8-10)
(ந) வேறோரு மிருகம் பூமியிலிருந்து எழும்பியது (13:11-13)
(ப) மிருகத்தின் சொரூபம் (13:14-15)
(ம) மிருகத்தின் முத்திரை, அதின் நாமம், அதின் நாமத்தின் இலக்கம் (13:16-17)
(ய) மிருகமும் மிருகத்தின் இலக்கமும் (13:18)
1. ஆட்டுக்குட்டியானவரும் தங்கள் நெற்றிகளில் பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்களும் (14:1-5)
2. முதலாம் தூதனின் பிரசங்கம் (14:6-7)
3. இரண்டாம் தூதனின் பிரசங்கம் (14:8)
4. மூன்றாம் தூதனின் பிரசங்கம் (14:9-11)
5. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் (14:12-13)
6. அறுவடைக்காலம் (14:14-16)
7. திராட்சப் பழங்களின் அறுவடை (14:17-20)
8. ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்கள் (15:1)
9. கண்ணாடிக்கடல் (15:2-4)
10. பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது (15:5-8)
(15) முதலாவது கோபக்கலசம் - மனுஷர்களுக்கு பொல்லாத கொடிய புண் உண்டாயிற்று (16:2)
(16) இரண்டாம் கோபக்கலசம் - சமுத்திரம் செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று (16:3)
(17) மூன்றாம் கோபக்கலசம் - ஆறுகளும் நீரூற்றுகளும் இரத்தமாயின (16:4-7)
(18) நான்காம் கோபக்கலசம் - சூரியன் தீயினால் மனுஷரை தகித்தது (16:8-9)
(19) ஐந்தாம் கோபக்கலசம் - மிருகத்தின் இராஜ்ஜியம் இருளடைந்தது (16:10-11)
(20) ஆறாம் கோபக்கலசம் - ஐபிராத்து நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று (16:12)
மூன்று அசுத்த ஆவிகள் (16:13-16)
(21) ஏழாம் கோபக்கலசம் - சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின (16:17-21)
மகாவேசியும் மிருகமும்
1. மகா வேசி
(1) மகா வேசியின் ஆக்கினை (17:1)
(2) மகா வேசியின் பாவங்களும் அவளோடு வேசித்தனம் பண்ணினவர்களும் (17:2)
(3) மகா வேசியின் ஆளுகை (17:3)
(4) மகா வேசியின் சிங்காரமும் பாவங்களும் (17:4)
(5) மகா வேசியின் நாமம் (17:5)
(6) மகா வேசியின் குடிவெறி (17:6)
2. மகா வேசியின் இரகசியமும் மிருகத்தின் இரகசியமும் (17:7)
3. மிருகம்
(1) மிருகம் பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப்போகிறது (17:8)
(2) மிருகத்தின் ஏழு தலைகளும் ஏழு இராஜாக்களாம் (17:9-10)
(3) மிருகம் - எட்டாவதானவன் (17:11)
(4) பத்துக் கொம்புகளும் பத்து இராஜாக்களாம் (17:12)
(5) ஏழு இராஜாக்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள் (17:13-14)
(6) தண்ணீர்கள் - ஜனக்கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும் (17:15)
(7) மிருகத்தின்மீது இருக்கும் பத்து கொம்புகளானவர்கள் (17:16-17)
4. ஸ்திரீ - மகா நகரம் (17:18)
ஏழாம் கோபக்கலசம்
1. மகா பாபிலோன் விழுந்தது (18:1-3)
2. பாபிலோன்மீது நியாயத்தீர்ப்பு (18:4-8)
3. பாபிலோனுக்காக அழுது புலம்புதல்
(1) பூமியின் இராஜாக்கள் (18:9-10)
(2) பூமியின் வர்த்தகர்கள் (18:11-16)
(3) மாலுமிகள், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள், கப்பலாட்கள், சமுத்திரத்திலே தொழில் செய்கிறவர்கள் (18:17-19)
5. பாபிலோனின் அழிவுக்காக களிகூருதல் (18:20)
6. பாபிலோனின் அழிவும் அதன் காரணமும் (18:21-24)
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக பரலோகத்தின் காட்சிகள்
1. பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் கர்த்தரைத் துதிக்கிறார்கள் (19:1-3)
2. இருபத்தினான்கு மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் தேவனைத் தொழுதுகொண்டார்கள் (19:4)
3. கர்த்தரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது (19:5)
4. திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் (19:6)
5. ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் (19:7-9)
6. யோவான் தூதனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தான் (19:10)
தெய்வீக ஆளுகை - ஆயிர வருஷ அரசாட்சி
(1) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (19:11-14)
(2) தேவன் ஆலையை மிதிக்கிறார் - அர்மகெதோன் யுத்தம்
(அ) உருவகம் - மதுவுள்ள ஆலை (19:15)
(ஆ) இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா (19:16)
(இ) மகா தேவன் கொடுக்கும் விருந்து (19:17)
(ஈ) விருந்துக்கு கூடிவாருங்கள் (19:18)
(உ) விருந்துக்கு கூடி வருகிறார்கள் (19:19)
(ஊ) பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன (19:20-21)
(3) சாத்தானை ஒரு தூதன் பாதாளத்திலே தள்ளி அடைத்தான் (20:1-3)
(4) பூமியில் ஆயிர வருஷ அரசாட்சி (20:4-6)
(5) ஆயிரம் வருஷம் முடிந்தபின்பு சாத்தானுடைய கிரியைகள் (20:7-9)
(6) சாத்தான் அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான் (20:10)
(7) இறுதி நியாயத்தீர்ப்பு (20:11-15)
8. வரப்போகிற காலங்கள்
(1) புதிய வானமும் புதிய பூமியும் (21:1)
(2) புதிய எருசலேம் (21:2-3)
(3) முந்தினவைகள் ஒழிந்து போகும் - கர்த்தர் சகலத்தையும் புதிதாக்குவார் (21:4-7)
(4) இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் - எரிகிற கடலிலே பங்கடைவோர்கள் (21:8)
(5) ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி
(அ) மணவாட்டியின் அடையாளம் (21:9-10)
(ஆ) புதிய எருசலேமின் வெளித்தோற்றம் (21:11)
(இ) மதில், வாசல்கள், அஸ்திபாரக்கற்கள் (21:12-15)
(ஈ) நகரம் சதுரமாயிருந்தது (21:16-17)
(உ) புதிய எருசலேமில் பயன்படுத்தப் பட்டுள்ள பொருட்கள் (21:18-21)
(ஊ) தேவாலயம்(21:22)
(எ) புதிய எருசலேமின் வெளிச்சம் (21:23)
(ஏ) புதிய எருசலேமில் நடைபெறும் காரியங்கள் (21:24-27)
(ஐ) புதிய எருசலேமின் நதி, வீதி, கனி (22:1-2)
(ஒ) புதிய எருசலேமில் அரசாளுகிறவர்கள் (22:3-5)
முடிவுரை
1. வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம் உண்மையும் சத்தியமுமானது (22:6)
2. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்கிறவன் பாக்கியவான் (22:7)
3. தூதனை தொழுதுகொள்ளக்கூடாது - தேவனை மட்டுமே தொழுதுகொள்ள வேண்டும் (22:8-9)
4. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம் (22:10)
5. அநியாயம் செய்கிறவர்கள், நீதியுள்ளவர்கள் ஆகியோரின் நித்திய முடிவு (22:11)
6. இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் (22:12-13)
7. இயேசு கிறிஸ்துவினுடைய கற்பனைகளின் படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் (22:13-14)
8. பாவத்தையும், நித்திய ஆக்கினையையும் குறித்த கடைசி எச்சரிப்பு (22:15)
9. வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தின் உறுதி பண்ணப்பட்ட சாட்சி (22:16)
10. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்னும் அழைப்பு (22:17)
11. எல்லா மனுஷருக்கும் ஓர் எச்சரிப்பு (22:18-19)
12. முடிவுரையும் ஆசீர்வாதமும் (22:20-21)