யூதா
முன்னுரை
யூதா எழுதின நிருபம் பொதுவான நிருபம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நிருபம் ஒரு தனிப்பட்ட நபருக்கோ, அல்லது ஒரு தனிப்பட்ட குடும்பத்தாருக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட சபைக்கோ எழுதப்படவில்லை. இந்த நிருபம் எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவாக எழுதப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர் பேதுரு எழுதிய இரண்டாவது நிருபத்திலுள்ள இரண்டாவது அதிகாரமும், யூதா எழுதின இந்த நிருபமும் பொதுவான கருத்துடையவை. கள்ளப்போதகர்களுக்கு விரோதமாக இந்த நிருபத்தில் எச்சரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் விசுவாசிகளிடத்தில் அன்பு, சகோதர சிநேகம், உண்மை, பரிசுத்தம் ஆகியவை நிரம்பியிருக்கவேண்டும் என்னும் பொதுவான ஆலோசனைகளும் இந்த நிருபத்தில் உள்ளன.
யூதா இந்த நிருபத்தை கி.பி. 66 ஆம் ஆண்டு எழுதினார். எழுதப்பட்ட இடம் தெரியவில்லை.
மையக்கருத்து
விசுவாசத்திற்காகத் தைரியமாகப் போராட வேண்டும். (யூதா 1:3).
பொருளடக்கம்
ஒ. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-2)
ஒஒ. நிருபத்தின் நோக்கம் (1:3-4)
ஒஒஒ. நியாயத்தீர்ப்பின் எடுத்துக்காட்டுக்கள் (1:5-7)
ஒய. பின்மாறிப்போனவர்களின் விபச்சாரமும் பாவங்களும் (1:8)
ய. மிகாவேலின் தாழ்மை (1:9)
யஒ. பின்மாறிப்போனவர்களின் சுபாவங்கள் (1:10-13)
யஒஒ. ஏனோக்கின் தீர்க்கதரிசனம் (1:14-15)
யஒஒஒ. பின்மாறிப்போனவர்கள் சுய பெருமைக்காரர்கள், இரக்கமற்றவர்கள் (1:16)
ஒல. பேதுருவின் தீர்க்கதரிசனம் (1:17-18)
ல. பின்மாறிப்போனவர்கள் தேவபக்தியற்றவர்கள் (1:19)
லஒ. கிறிஸ்துவிற்குள் நமது பாதுகாப்பை உறுதிபண்ணும் ஏழு கிறிஸ்தவ நடத்தைகள் (1:20-25)