ஏசாயா புத்தகம் ஒரு கண்ணோட்டம்




ஏசாயா புத்தகம் ஒரு கண்ணோட்டம்

தீர்க்கதரிசிகள் பரலோகத்தின் காரியங்களோடு  நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள்.  அதே வேளையில் அவர்களுக்கு  பூமியின்மீதும் அதிகாரம் இருந்தது.  பொதுவாக சொப்பனங்கள்,  தரிசனங்கள் ஆகியவை மூலமாய்  தீர்க்கதரிசிகளுக்கு தீர்க்கதரிசனங்கள் வெளிப்படுத்தப்படும். தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு அறிவிப்பார்கள். 
""அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்'' (எண் 12:6).

பழைய ஏற்பாட்டு ஆகமங்கள்  எழுதப்படுவதற்கு முன்பாக  தீர்க்கதரிசிகள்  தேவனுடைய  வார்த்தைகளை  ஜனங்களுக்கு அறிவித்து வந்தார்கள்.  திருச்சபைகளில்  வேதாகமத்திற்குப் பதிலாக  தீர்க்கதரிசிகளே  கர்த்தரைப்பற்றி வெளிப்படுத்தினார்கள். 
நம்முடைய  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  ஆபேலையும்  தீர்க்கதரிசிகளின்   பட்டியலில் சேர்த்துக்கொண்டார் (மத் 23:31,35).  ஏனோக்கு ஒரு தீர்க்கதரிசி.  நோவா  நீதியை பிரசங்கித்தவர். தேவன் ஆபிரகாமைப்பற்றிச் சொன்னபோது ""அவன் ஒரு தீர்க்கதரிசி''  (ஆதி 20:7)  என்று சொன்னார். யாக்கோபு    வரப்போகிற காரியங்களை முன்னறிவித்தார் (ஆதி 49:1). 

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில்  மோசே  மிகவும்  விசேஷித்தவர்.  மோசே கர்த்தரை  முகமுகமாய் அறிந்திருந்தார்        (உபா 34:12).  மோசேயின் மரணத்திற்குப் பின்பு  கர்த்தருடைய ஆவியானவர்  இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில்  தொடர்ந்து கிரியை நடப்பித்தார். ஆனால்  அவர் தீர்க்கதரிசன ஆவியானவராக  ஊழியம் செய்யாமல்,  தம்முடைய ஜனங்களை  கண்டித்து உணர்த்தும் ஆவியானவராக  ஊழியம் செய்தார். 

நியாயாதிபதிகளின் காலத்தில்  தேவனுடைய ஆவியானவர்  ஜனங்களோடு  அதிகமாய்ப் பேசவில்லை. ஆனாலும் அவர் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அற்புதமாய் கிரியை நடப்பித்தார்.  ஒத்தினியேல், கிதியோன், சிம்சோன்  போன்ற நியாயாதிபதிகள் மீது  கர்த்தருடைய ஆவியானவர் வந்திறங்கினார்.   இவர்கள்  தங்கள்  தேசத்திற்கு சேவை செய்தார்கள். நியாயாதிபதிகள் தங்கள் வாயினால் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை.  தங்கள் எழுதுகோல்களால்  தீர்க்கதரிசன வார்த்தைகளை எழுதவில்லை.  இவர்கள்  தங்கள் பட்டயங்களால்  இஸ்ரவேல்   தேசத்தை இரட்சித்தார்கள்.

நியாயாதிபதிகளின் புஸ்தகத்தில், ஒரு வசனத்தில்கூட  ""தீர்க்கதரிசி'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.   தெபொராள்  ஒரு தீர்க்கதரிசி.  இவள்  பெண்ணாயிருந்தபடியினால்,  இவளை ""தீர்க்கதரிசினி'' என்றே அழைத்தார்கள். 
நியாயாதிபதிகளின் காலத்திற்குப் பின்பு கர்த்தருடைய வசனம்  அபூர்வமாயிருந்தது. பிரத்தியட்சமான  தரிசனமும் இருந்ததில்லை (1சாமு 3:1). இக்காலத்தில்  கர்த்தர்  சாமுவேலை  எழுப்பினார்.  தீர்க்கதரிசன ஊழியம் மறுபடியும் உயிர்பெற்றது.  இவருடைய காலத்தில்  இஸ்ரவேல் ஜனங்களுக்கு  ஆவிக்குரிய   வெளிப்பாடு கிடைத்தது.  சாமுவேலின் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு  தடை எதுவும் உண்டாகவில்லை. 

சாமுவேலுக்குப் பின் வந்த தீர்க்கதரிசிகளும்  கர்த்தருடைய வெளிப்பாடுகளை  முன்னறிவித்தார்கள். தீர்க்கதரிசன ஊழியம்  சிறையிருப்பின் காலம் வரையிலும் சிறப்பாய் நடைபெற்றது.  சிறையிருப்புக் காலத்திற்குப் பின்பு பழைய ஏற்பாட்டு ஆகமங்கள்  ஒரே கோர்வையாக  கோர்க்கப்பட்டன. அதுவரையிலும் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள்,  தேவனுடைய இரகசியங்களை  வெளிப்படுத்தினார்கள்.  இனிமேல் வரப்போகிற சம்பவங்களை முன்னிறிவித்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட  காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில்,  ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக,  கர்த்தர் தீர்க்கதரிசிகளை எழுப்பினார்.   இவர்களில்  எலியா,  எலிசா ஆகியோர் முக்கியமானவர்கள்.  இவர்கள்  இருவரும்  இஸ்ரவேல் தேசத்தில்  தீர்க்கதரிசன ஊழியம் செய்துவந்தார்கள்.
பழைய ஏற்பாட்டில்  எலியாவின்  தீர்க்கதரிசன ஆகமமோ  அல்லது எலிசாவின்  தீர்க்கதரிசன ஆகமமோ கோர்க்கப்படவில்லை.  

 தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபத்தைப்பற்றி  வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது (2நாளா 21:12).  யூதேயா, இஸ்ரவேல் ஆகிய தேசங்களில் கடைசிக்காலத்தில்,  கர்த்தர் விசேஷித்த தீர்க்கதரிசிகளை எழுப்பினார்.  தங்களுடைய  தீர்க்கதரிசன வாக்கியங்களையும்,  பிரசங்கங்களையும்  ஆகமங்களாக  எழுதுமாறு  தேவஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். 

பழைய ஏற்பாட்டில்  பல தீர்க்கதரிசிகள்  கர்த்தருடைய ஊழியத்தை  செய்திருக்கிறார்கள்.  அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் எப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது  என்று சரியாகத் தெரியவில்லை.  தீர்க்கதரிசனங்களில்  மிகவும் பழமையானது  யூதாவின் ராஜாவாகிய  உசியாவின் நாட்களில் எழுதப்பட்டதாகும்.  இதன் பின்பு  உசியாவின் காலத்தில்,  இஸ்ரவேலின் ராஜாவாக ஆட்சிபுரிந்த யெரொபெயாமின் காலத்திலும்  தீர்க்கதரிசன ஆகமம் எழுதப்பட்டது.  இவர்களுடைய காலம்  சிறையிருப்புக்கு சுமார் 200 வருஷங்களுக்கு முந்திய காலமாகும். 

தீர்க்கதரிசிகள்  கர்த்தருடைய வார்த்தைகளை  ராஜாக்களுக்கு  அறிவித்தார்கள்.  ராஜாக்கள்   சில செய்திகளைக் கேட்டு  சந்தோஷப்பட்டார்கள்.  ராஜாக்கள் தங்களைப் பாதிக்கும்  செய்திகளைக் கேட்டு  கோபப்பட்டார்கள்.   சில ராஜாக்கள்  மிகவும் கோபப்பட்டு, தங்களுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் சொன்ன  தீர்க்கதரிசிகளையே கொன்றுபோட்டார்கள். ராஜாக்கள்  தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டாலும், அவர்கள் சொன்ன தீர்க்கதரிசன  வார்த்தைகளை அவர்களால்  அழிக்க முடியவில்லை.  தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள்  அவர்களைக் கொலை செய்த  ராஜாக்களுக்கு விரோதமாய்  சாட்சி பகர்ந்தது.

தீர்க்கதரிசிகளின் ஆகமங்களில்  ஓசியா  தீர்க்கதரிசன ஆகமமே  முதன் முதலில் எழுதப்பட்டது.  இதே காலத்தில், யோவேல்,  ஆமோஸ்,  ஒபதியா  ஆகியோரும்  தங்கள் தீர்க்கதரிசன ஆகமங்களை எழுதி வெளியிட்டார்கள்.  இவர்களுடைய காலத்திற்கு  சிறிது காலம் சென்ற பின்பு,  ஏசாயா  தீர்க்கதரிசன ஊழியத்தை ஆரம்பித்தார்.  ஆனாலும், பரிசுத்த வேதாகமத்தில்,  இவருடைய  தீர்க்கதரிசன ஆகமமே,  தீர்க்கதரிசிகளின் வரிசையில் முதலாவது புஸ்தகமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. 

மற்ற தீர்க்கதரிசிகளின் ஆகமங்களைவிட  ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமம் அளவில் பெரியது. எல்லா தீர்க்கதரிசிகளும்  ஏசாயா  தீர்க்கதரிசியைப்பற்றி  சாட்சியாகச் சொல்லுகிறார்கள். மற்ற தீர்க்கதரிசிகளைவிட  ஏசாயா தீர்க்கதரிசியே இயேசுகிறிஸ்துவைப்பற்றி  அதிகமாய் முன்னிறிவித்திருக்கிறார்.  வேதபண்டிதர்கள் ஏசாயாவை  ""சுவிசேஷக தீர்க்கதரிசி'' என்று  அழைக்கிறார்கள். ஏசாயாவுக்கு, ""ஐந்தாவது சுவிசேஷகர்'' என்னும் பட்டப்பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  நான்கு சுவிசேஷங்களைப்போல ஏசாயாவின் தீர்க்கதரிசன புஸ்தகத்தையும்,  ஒரு  சுவிசேஷ புஸ்தகமாக  வேதபண்டிதர்கள் பாவிக்கிறார்கள். 
ஏசாயா தீர்க்கதரிசி ராஜகுடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தகப்பனார் உசியா ராஜாவின் சகோதரர் என்று  யூதருடைய பாரம்பரிய வரலாறு சொல்லுகிறது. இவர் எசேக்கியாவின் காலத்தில்,  அரண்மனையில் தங்கியிருந்தார். இவர் கல்வியறிவு மிகுந்தவர்.  தேவனுடைய ஆவியானவர்,  தம்முடைய இரகசியங்களை,  ஏசாயாவுக்கு வெளிப்படுத்தினார்.

 தீர்க்கதரிசிகள் சத்தமிடுகிற  எக்காளங்களல்ல. ஆவியானவர்   தீர்க்கதரிசிகள்  மூலமாய் பேசினாலும், தீர்க்கதரிசிகள் தேவனுடைய வெளிப்பாட்டை  தங்களுடைய  மொழிநடையிலேயே வெளிப்படுத்தினார்கள்.  ஏசாயாவின்  மொழிநடை இலக்கிய நயம் மிகுந்தது.  கர்த்தருடைய ஆவியானவர்  ஏசாயாவின்  சிறந்த இலக்கிய நடையை  பயன்படுத்தியிருக்கிறார்.

ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் மனுஷருடைய பாவத்தை உணர்த்துகிறது.  நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு  பிரயோஜனமாயிருக்கிறது.  நம்முடைய கடமைகளை  நேர்த்தியாய்ச் செய்து முடிக்க வேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறது.  ஆபத்துக்காலத்தில்  கர்த்தரை அண்டிக்கொள்ளவேண்டும் என்று  ஆலோசனை சொல்லுகிறது. 

ஏசாயாவின் காலத்தில்  யூதஜனங்களுக்கு இரண்டு பிரச்சனைகள் உண்டாயிற்று.  முதலாவது பிரச்சனை  யூதேயா தேசத்தின்மீது  சனகெரிப் படையெடுத்து வந்த சம்பவம். இது  ஏசாயாவின் நாட்களிலேயே நடைபெற்றது.  இதற்குப்  பல வருஷங்களுக்குப் பின்பு, யூதஜனங்கள்  பாபிலோனின் சிறையிருப்புக்குப் போனார்கள்.   இக்காலத்தில்  ஜனங்களுக்கு தேவனுடைய கிருபையும்,  ஆறுதலும் அதிமாய்த் தேவைப்பட்டது.  ஆவியானவருடைய  உற்சாகமான வார்த்தைகளை  ஏசாயா  யூதஜனங்களுக்கு அறிவித்தார். 

புதிய ஏற்பாட்டிலுள்ள சுவிசேஷப் புஸ்தகங்களில், ஏசாயா தீர்க்கதரிசன ஆகமத்திலிருந்து பல வசனங்கள்  மேற்கோளாக  சொல்லப்பட்டுள்ளன. கிறிஸ்துவைப்பற்றி ஏசாயா சாட்சியாக முன்னறிவித்திருக்கிறார்.  இயேசுகிறிஸ்து  ஒரு கன்னிகையினிடத்தில் பிறப்பார் என்றும்,  அவர் பல பாடுகளை அனுபவிப்பார் என்றும்  ஏசாயா முன்னிறிவித்தார். 

ஏசாயா தீர்க்கதரிசன ஆகமத்தின் முதல் பகுதியில், யூதஜனங்களின் பாவம்  கண்டித்து உணர்த்தப்படுகிறது. தங்கள் பாவங்களுக்கு அவர்கள் மனந்திரும்பவில்லையென்றால் தேவனுடைய தண்டனை அவர்கள்மீது வரும் என்னும் எச்சரிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.  இந்த ஆகமத்தின் பின்பகுதியில்   யூதஜனங்களுக்குத் தேவையான ஆறுதலின் நல்வார்த்தைகள்  ஏராளமாய்ச் சொல்லப்பட்டுள்ளன. 

கிறிஸ்துவின் ஆவியானவர்,  தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசன முறைமைகளை  அங்கீகரித்து, அதே பாணியில்,  இப்போதும், தம்முடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார்.  முதலாவதாக ஆவியானவர்  நம்முடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்துகிறார்.  அதன் பின்பு நமக்கு  ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறார்.  தேவனுடைய  ஆறுதல்களினால்  ஆசீர்வதிக்கப்படவேண்டும்  என்று விரும்புகிறவர்கள்,  ஆவியானவர்  கண்டித்து உணர்த்தும் காரியங்களுக்கு செவிகொடுத்து    கீழ்ப்படியவேண்டும்.  

ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம்  கி.மு. 792-722 ஆம் வருஷத்தில் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் ஏசாயா (ஏசா 1:1; ஏசா 2:1; ஏசா 7:3) 

ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம்  இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா என்னும் பெயரில் இரண்டு பேர் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் முதலாவது பகுதியாகிய ஏசா 1-39 ஆகிய அதிகாரங்களை எழுதியதாகவும், இரண்டாவது நபர் இரண்டாவது பகுதியாகிய ஏசா 40-66 ஆகிய அதிகாரங்களை எழுதியதாகவும் ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால் இதற்கு வலுவான ஆதாரம் எதுவுமில்லை. ஏசாயா என்பவர் ஒருவரே. அவரே இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகம் முழுவதையும் எழுதியவர்.

ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் முழு வேதாகமத்தையும் பிரதிபலிக்கிறது. வேதாகமத்தில் 66 புஸ்தகங்கள் உள்ளன. ஏசாயாவில் 66 அதிகாரங்கள் உள்ளன. ஏசாயாவின் முதலாவது பிரிவில் 39 அதிகாரங்கள் உள்ளன. இவை நியாயப் பிரமாணம், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை விளக்கிக் கூறுகிறது. இந்த 39 அதிகாரங்களும் பழைய ஏற்பாட்டின் 39 புஸ்தகங்களைப் பிரதிபலிக்கிறது. 

ஏசாயாவின் இரண்டாவது பகுதியில் 27 அதிகாரங்கள் உள்ளன. இவை புதிய ஏற்பாட்டின் 27 புஸ்தகங்களைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரிவில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பு, ஆறுதலின் செய்தி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஏசாயாவின் முதலாவது பகுதியில் காணப்படும் முக்கியமான கருத்துக்களின் விவரம் வருமாறு:

1. இஸ்ரவேல்மீது வரப்போகும் நியாயத்தீர்ப்பு.
2. இஸ்ரவேலின் பாவத்தின் நிமித்தமாகவும், அவர்கள் கர்த்தரை விட்டு விலகிப் போனதின் நிமித்தமாகவும் அவர்களுக்கு வரப்போகும் சிறையிருப்பு. 
3. புறஜாதி தேசங்களின் நியாயத்தீர்ப்பு.
4. மேசியாவின் காலத்தில் கர்த்தருடைய நாளில் இஸ்ரவேல் தேசம் மீட்கப்படுவது.
ஏசாயாவின் இரண்டாவது பிரிவில் காணப்படும் முக்கியமான கருத்துக்களின் விவரம் வருமாறு:

1. இரக்கம்
2. ஆறுதல்
3. மேசியாவின்கீழ் நித்திய மீட்பு

ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் எழுதப்பட்டதன் முக்கிய நோக்கம் வருமாறு:

1. தேவனுடைய செய்தியை இஸ்ரவேலருக்கு தெளிவுபடுத்துவது.
2. இஸ்ரவேலரின் தொடர்ந்த பாவத்தின் நிமித்தமாக அவர்களுக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து அவர்களை எச்சரிப்பது.
3. மேசியாவின்கீழ் இஸ்ரவேலர் நித்தியமாக மீட்கப்படுவது பற்றிய வெளிப்பாட்டை அறிவிப்பது. (ஏசா 9:6-7; ஏசா 11:10-12;        ஏசா 66:22-24).

பொருளடக்கம்

பகுதி - ஒ  சிறையிருப்புக்களுக்கு முன்பான தரிசனம்

 ஒ. பிரசங்கங்கள் - தீர்க்கதரிசனங்கள் - உசியா இராஜாவின் ஆட்சியில்  

1. ஆசிரியர், நூலின் பெயர், பொருள், வரலாற்று பின்னணி (1:1)
2. யூதாவுக்கு எதிராக தேவனுடைய வழக்கு  

(1) யூதாவின் கலகம்  
(2) யூதாவின் அறியாமை (1:2-3)
(3) யூதாவின் ஏழு பாவங்கள் (1:4)
(4) நீதிநெறி நிலைமையின் மூன்று அம்சங்கள் (1:5-6)
(5) யூதாவின் அழிவும் பலவீனமும் (1:7-8)
(6) மீதியாக இருப்பவர்கள் இரட்சிக்கப் பட்டார்கள் (1:9)
(7) மாய்மாலத்தின் பன்னிரெண்டு அம்சங்கள் (1:10-15)
(8) தேவனுடைய பத்து கோரிக்கைகள் (1:16-18)
(9) நிபந்தனையுள்ள ஆசீர்வாதங்கள் (1:19-20)
(10) இருக்கும் நிலைமையின் பத்து அம்சங்களும், காரணங்களும் (1:21-23)

3. யூதாவின் மீட்பின் பத்து அம்சங்கள் (1:24-27)
4. யூதாவின் பத்து அம்ச நியாயத்தீர்ப்பு (1:28-31)
5. கடைசி நாட்களின் தீர்க்கதரிசனங்கள்  

(1) ஆயிர வருஷம் (2:1-4)
(2) ஆசீர்வாதத்திற்கு முன்பு சிட்சை  

(அ) சிட்சையைத் தவிர்ப்பதற்கு வாய்ப்பு (2:5)
(ஆ) மறுப்பு - எட்டு தேசிய அளவிலான பாவங்கள் (2:6-9)
(இ) கர்த்தரின் நாள்  

(ண்) கட்டாயமான தாழ்மை (2:10-17)
(ண்ண்) விக்கிரகாராதனையின் அழிப்பு   (2:18-21)

(ஈ) சிட்சையைத் தவிர்க்கும் வாய்ப்பு (2:22)
(உ) உடனடியான நியாயத்தீர்ப்பு -  பாபிலோனால் ஏற்படும் அழிவின் இருபது அம்சங்கள் (3:1-7)
(ஊ) அழிவின் நான்கு அம்ச காரணங்கள் (3:8-9)
(எ) யூதாவின் ஆறு வகுப்புக்கள்  

(ண்) நீதிமான்கள் - ஆசீர்வாதம் (3:10)
(ண்ண்) துன்மார்க்கர் - சாபம் (3:11)
(ண்ண்ண்) ஜனங்கள் - ஒடுக்கப்பட்டவர்கள் (3:12-13)
(ண்ஸ்) ஆட்சி புரிபவர்கள் - ஒடுக்குகிறவர்கள் (3:14-15)
(ஸ்) குமாரத்திகள் - நியாயம் தீர்க்கப்படுகிறவர்கள் (3:16-24)
(ஸ்ண்) குமாரர்கள் - யுத்தத்தில் வெட்டுண்டு போகிறவர்கள் (3:25-26)

(3) ஆயிர வருஷம்  

(அ) ஒரு சில புருஷர்கள் - குமாரத்திகள் தாழ்த்தப்பட்டார்கள் (4:1)
(ஆ) மேசியா ஆளுகை செய்கிறார் (4:2)
(இ) ஜனங்களின் பரிசுத்தம் (4:3-4)
(ஈ) தேவனுடைய மகிமை  (4:5-6)

6. தேவனுடைய திராட்சைத்தோட்டத்தைக் குறித்து பாட்டு  

(1) ஏழு அம்ச பராமரிப்பு (5:1-2)
(2) தேவனுடைய விசாரிப்பு (5:3-4)
(3) பதிலுரை - ஒன்பது அம்ச நியாயத்தீர்ப்பு    (5:5-6)
(4) யூதாவின் பாவங்கள் (5:7)

7. யூதாவின்மீது ஆறு ஐயோக்கள்  

(1) பேராசைக்கு ஐயோ (5:8-10)
(2) மதுபானம் குடிப்பதற்கு ஐயோ (5:11-17)
(3) அக்கிரமத்திற்கு ஐயோ (5:18-19)
(4) தேவதூஷணத்திற்கு ஐயோ (5:20)
(5) பெருமைக்கு ஐயோ (5:21)
(6) அநீதிக்கும் மதுபானம் அருந்துவதற்கும் ஐயோ (5:22-23)

8. நியாயத்தீர்ப்பினால் யூதா அழிந்து போகிறது (5:24-25)
9. உடனடியான நியாயத்தீர்ப்பு - பாபிலோனால் ஏற்படும் அழிவின் இருபது அம்சங்கள் (5:26-30)

 ஒஒ. ஏசாயாவின் புதிய தரிசனமும் அழைப்பும்  

1. தரிசனம் - யோதாமின் ஆட்சி (6:1-4)
2. இதன் விளைவு (6:5)
3. மாற்றம் (6:6-7)
4. தேவாலயத்திலிருந்து சப்தம் (6:8)
5. புதிய கட்டளை (6:9-13)

 ஒஒஒ. யூதாவின்மீது படையெடுப்புக்கள் - வரலாறும் தீர்க்கதரிசனமும் - ஆகாசின் ஆட்சி  

1. சீரியா, இஸ்ரேல் ஆகியோரின் படையெடுப்பு  

(1) யூதாவுக்கு எதிராக சீரியாவும் இஸ்ரவேலும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி (7:1-2)
(2) தெய்வீக தலையீடு  

(அ) நான்கு அம்ச புத்திமதி (7:3-6)
(ஆ) நிபந்தனையுள்ள தீர்க்கதரிசனத்தின் மூன்று அம்சங்கள் (7:7-9)
(இ) ஆகாசுக்கு ஏராளமான வாய்ப்புக்கள்    (7:10-11)
(ஈ) ஆகாசின் தவறான பக்தி (7:12)
(உ) தேவனுடைய தீர்க்கதரிசனக் கடிந்துரை - கன்னிகை கர்ப்பவதியாகும் அடையாளம் (7:13-16)

2.  யூதாவின்மீது அசீரியப் படையெடுப்பு  

(1) படையெடுப்பின் அறிவிப்பு (7:17)
(2) ஈ, தேனீ - திரளான சேனை (7:18-19)
(3) சவரகன் கத்தி - சுத்தமான அழிவு (7:20)
(4) மீதியாக இருப்பவர்கள் (7:21-22)
(5) முழுமையான நாசம் (7:23-25)

3. சீரியா, இஸ்ரேல் ஆகியோரின்மீது அசீரியரின் படையெடுப்பு (8:1-7)
4. யூதாவின்மீதும் படையெடுப்பு (8:8)
5. தெய்வீக தலையீடு  

(1) தவறான சார்ந்திருத்தல் (8:9-12)
(2) உண்மையான சார்ந்திருத்தல் - இரண்டு அம்சம் (8:13-17)
  (3) விசுவாசத்திற்கு அடையாளங்கள் (8:18)
(4) தவறான சார்ந்திருத்தலும் மெய்யான சார்ந்திருத்தலும் (8:19-20)
(5) தவறான சார்ந்திருத்தலின் விளைவு (8:21-22)
(6) இஸ்ரவேலின் இரண்டு அம்ச நம்பிக்கை         

(அ) மேசியாவின் முதலாவது வருகையில் மீட்பு     (9:1-5)
(ஆ) மேசியாவின் இரண்டாவது வருகையில் தாவீதின் இராஜ்ஜியம் புதுப்பிக்கப்படுகிறது (9:6-7)

6. நான்கு பாவங்களும் நியாயத்தீர்ப்பும்  

(1) இஸ்ரவேல்மீது நியாயத்தீர்ப்பு  

(அ) பாவம் - சுயநம்பிக்கை (9:8-10)
(ஆ) நியாயத்தீர்ப்பு (9:11-12)
(இ) பாவம் - இரக்கமின்மை (9:13-16)
(ஈ) நியாயத்தீர்ப்பு (9:17)

(2) யூதாவின்மீது நியாயத்தீர்ப்பு  

(அ) பாவம் - பிரமாணமின்மை (9:18)
(ஆ) நியாயத்தீர்ப்பு (9:19-21)
(இ) தலைவர்களின் ஆறு பாவங்கள் (10:1-2)
(ஈ) நியாயத்தீர்ப்பு (10:3-4)

7. அசீரியா இஸ்ரவேலை சிட்சிப்பதற்கு தேவனுடைய கோல்  

(1) அசீரியரின் கட்டளை (10:5-6)
(2) அசீரியரின் வரம்பு மீறுதல் (10:7-11)
(3) அசீரியரின் நியாயத்தீர்ப்பு (10:12-19)
(4) வருங்கால அசீரியன் - அந்திக்கிறிஸ்து (10:20-27)
(5) அந்திக்கிறிஸ்துவினால் ஏற்படும் அழிவு  (10:28-34)

8. தெய்வீகத் தலையீடு - ஆயிர வருஷ அரசாட்சி  

(1) மேசியாவின் வம்சவரலாறு (11:1)
(2) மேசியாவின் ஏழு அம்ச அபிஷேகம் (11:2)
(3) அவருடைய ஆளுகையின் ஒன்பது அம்ச பண்பு (11:3-5)
(4) அவருடைய ஆளுகையின் ஒன்பது அம்ச தகுதி (11:6-8)
(5) அவருடைய ஆளுகையின் விஸ்தாரம் (11:9)
(6) அவருடைய ஆளுகையின் ஏழு அம்ச நிறுவனம்  

(அ) சமாதானமும் மார்க்கமும் (11:10)
(ஆ) இஸ்ரவேலரை மறுபடியும் கூட்டிச்சேர்த்தல் (11:11-12)
(இ) யூதாவும் இஸ்ரவேலும் ஒன்று சேருதல்  (11:13)
(ஈ) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் முழுமையாக சுதந்தரித்தல் (11:14)
(உ) இஸ்ரவேல் தெய்வீக வல்லமையினால் ஒன்று சேருதல் (11:15-16)

(7) ஆயிர வருஷ ஆராதனையின் பதினைந்து அம்சங்கள் (12:1-6)

 ஒய. இஸ்ரவேலின் ஆசீர்வாதங்களும் பன்னிரெண்டு பாரங்களும்  

1. பாபிலோனின் பாரம்  

(1) மேதிய பெர்சியர்களினால் உடனடி நியாயத்தீர்ப்பு (13:1-5)
(2) கர்த்தருடைய நாளில் உண்டாகும் நியாயத்தீர்ப்பின் இருபத்தெட்டு அம்சங்கள் (13:6-16)
(3) மேதிய பெர்சியர்களினால் உடனடி நியாயத்தீர்ப்பு (13:17-18)
(4) இறுதி அழிவின் பத்து அம்சங்கள் (13:19-22)
(5) ஆயிர வருஷம் - இஸ்ரவேல் மறுபடியும் கட்டப்பட்டு உயர்த்தப் படுகிறது (14:1-3)
(6) அந்திக்கிறிஸ்துவின்மீது வருங் காலத்தில் இஸ்ரவேலர் பாடும் வெற்றியின் பாடல்  

(அ) பாபிலோன் அழிந்தது (14:4)
(ஆ) அந்திக்கிறிஸ்து அழிந்தான் (14:5-6)
(இ) ஆயிர வருஷ இளைப்பாறுதல் (14:7-8)
(ஈ) அந்திக்கிறிஸ்துவுக்கு நரகத்தின் ஆறு அம்ச சாபம் (14:9-11)
(உ) லூசிபருக்கு நரகத்தின் ஒன்பது அம்ச சாபம்  (14:12-15)
(ஊ) அந்திக்கிறிஸ்துவுக்கு தேசங்களின் சாபம் (14:16-20)
(எ) பாபிலோனுடைய அழிவின் பத்து அம்சம்     (14:21-23)

(7) அந்திக்கிறிஸ்துவை அழிப்பதாக தேவனுடைய ஆறு அம்ச உறுதிமொழி (14:24-27)

2. பெலிஸ்தியாவின் பாரம் (14:28-32)
3. மோவாபின் பாரம்  

(1) திடீரென்று அழிவு (15:1)
(2) மோவாபின் புலம்பல் (15:2-9)
(3) உபத்திரவக் காலத்தில் மோவாப் இஸ்ரவேலை பாதுகாப்பவன் (16:1-5)
(4) மோவாபுக்காக புலம்பல் (16:6-12)
(5) அசீரியரினால் திடீர் அழிவு (16:13-14)

4. தமஸ்குவின் பாரம்  

(1) அழிவு (17:1-5)
(2) சீரியாவில் மீதியாக இருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் (17:6)
(3) விளைவு - தேவனிடத்தில் திரும்புவார்கள்  (17:7-8)
(4) அழிவு - பஞ்சம் - காரணங்கள் (17:9-11)
(5) இஸ்ரவேலின் விரோதிகளுக்கு சாபம் (17:12-14)

5. எத்தியோப்பியாவின் பாரம்  

(1) சாபம் - காரணம் (18:1-2)
(2) நியாயத்தீர்ப்பு (18:3-6)
(3) மறுபடியும் கூடுவார்கள் (18:7)

6. எகிப்தின் பாரம்  

(1) உடனடி நியாயத்தீர்ப்பு  

(அ)  எட்டு அம்ச குழப்பம் (19:1-4)
(ஆ) பத்து அம்ச அழிவு (19:5-10)
(இ) எட்டு அம்ச காரணம் (19:11-15)

(2) கர்த்தருடைய நாளில்  

(அ) பலவீனம் (19:16-17)
(ஆ) எகிப்து மாறும் (19:18)
(இ) ஆயிர வருஷம் ஆசீர்வாதங்கள் (19:19-22)
(ஈ) சமாதானத்தில் பெரும்பாதை (19:23)
(உ) பழைய விரோதிகளின் கூட்டணி (19:24-25)

7. எகிப்து, எத்தியோப்பியா ஆகியவற்றின் பாரம்  

(1) ஏசாயாவின் அடையாளம் (20:1-2)
(2) ஏசாயாவின் கணிப்பு (20:3-6)

8. பாபிலோனின் பாரம்  

(1) பாழாக்குகிறவர்கள் (21:1-2)
(2) காலமும் விளைவும் (21:3-5)
(3) வீழ்ச்சி (21:6-10)

9. தூமாவின் பாரம் (21:11-12)
10. அரபியாவின் பாரம்  

(1) அசீரியரின் படையெடுப்பு (21:13-15)
(2) காலம் - விளைவு (21:16-17)

11. எருசலேமின் பாரம்  

(1) நான்கு அம்ச நியாயத்தீர்ப்பு (22:1-3) 
(2) எருசலேமிற்காக புலம்புதல் (22:4-5)
(3) படையெடுத்து வந்தவர்கள் (22:6-7)
(4) பாதுகாக்க வீணான ஆயத்தங்கள் (22:8-11)
(5) பாவம் - இரக்கமின்மை (22:12-14)
(6) செப்னா தன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான் (22:15-19)
(7) எலியாக்கீம் அந்த வேலைக்கு உயர்த்தப்பட்டான் (22:20-24)
(8) செப்னாவின் பாதுகாப்பு உடைந்தது (22:25)

12. தீருவின் பாரம்  

(1) அலறுங்கள் - மொத்த அழிவு (23:1-5)
(2) அலறுங்கள் - பாழாக்குகிறவன் (23:6-13)
(3) அலறுங்கள் - அழிவின் காலம் (23:14-18)

 ய. உபத்திரவமும் ஆயிர வருஷ அரசாட்சியும்  

1. உபத்திரவம்  

(1) தேசம் - நான்கு அம்ச அழிவு (24:1)
(2) ஜனம் - நியாயத்தீர்ப்பின் பன்னிரெண்டு அம்சங்கள் (24:2)
(3) தேசம் - இரண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (24:3)
(4) ஜனம் - மூன்று அம்ச நியாயத்தீர்ப்பு (24:4)
(5) மூன்று அம்ச காரணம் - நியாயத்தீர்ப்பு   (24:5)
(6) இருபது அம்ச சாபம் (24:6-12)
(7) மகிழ்ந்து களிகூருதல் - யூதர்களில் மீதியாக இருப்பவர்கள் (24:13-15)
(8) புலம்புதல் - இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்கள் (24:16-18)
(9) தேசம் - எட்டு அம்ச நியாயத்தீர்ப்பு (24:19-20)
(10) அர்மகெதோன் - சாத்தானின் தோல்வி (24:21-22)

2. ஆயிர வருஷம்  

(1) மேசியாவின் ஆளுகை (24:23)
(2) ஆயிர வருஷ ஆராதனையின் இருபது அம்சங்கள்  

(அ) தேவனுடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதங்கள் (25:1)
(ஆ) விரோதிகளுக்கு நியாயத்தீர்ப்பு (25:2-3)
(இ) தேவனுடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதங்கள் (25:4)
(ஈ) விரோதிகளுக்கு நியாயத்தீர்ப்பு (25:5)
(உ) தேவனுடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதங்கள் (25:6)
(ஊ) விரோதிகளுக்கு நியாயத்தீர்ப்பு - சாத்தான் துரத்தப்படுகிறான், சாபம் நீங்கிற்று (25:7-8)
(எ) தேவனுடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதங்கள் (25:9)
(ஏ) விரோதிகளுக்கு நியாயத்தீர்ப்பு (25:10-12)

(3) ஆயிர வருஷ பாட்டு  

(அ) நீதிமானின் இரட்சிப்பு (26:1-4)
(ஆ) துன்மார்க்கனின் தண்டனை (26:5-6)
(இ) நீதிமானின் வழி (26:7-9)
(ஈ) துன்மார்க்கனின் வழி (26:10-11)
(உ) நீதிமானின் ஜெபம் (26:12-18)
(ஊ) நீதிமானின் உயிர்த்தெழுதல் (26:19)
(எ) நீதிமான் பாதுகாக்கப்படுதல் (26:20)
(ஏ) துன்மார்க்கனின் அழிவு (26:21)

(4) அர்மகெதோன் - சாத்தானின் தோல்வி (27:1)
(5) ஆயிர வருஷ பாட்டு  

(அ) ஏழு அம்ச பராமரிப்பு (27:2-6)
(ஆ) தேவனுடைய விசாரிப்பு (27:7)
(இ) பதிலுரை - ஒன்பது அம்ச நியாயத்தீர்ப்பு    (27:8-11)
(ஈ) இஸ்ரவேலர் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள் (27:12-13)

 யஒ.  ஏழு ஐயோக்கள் - உபத்திரவமும் ஆயிர வருஷமும்  

1. எப்பிராயீமுக்கு ஐயோ  

(1) பாவங்களும் நியாயத்தீர்ப்பும் (28:1-4)
(2) மீதியாக இருப்பவர்கள் (28:5-6)

2. யூதாவுக்கு ஐயோ  

(1) யூதாவின் பாவங்கள் (28:7-13)
(2) யூதாவின்மீது நியாயத்தீர்ப்பு (28:14-22)
(3) பரியாசம் பண்ணுகிறவர்கள் கடிந்து கொள்ளப்படுகிறார்கள் (28:23-29)

3. எருசலேமிற்கு ஐயோ  

(1) யூதாவின்மீது நியாயத்தீர்ப்பு (29:1-6)
(2) யூதாவின் விரோதிகள்மீது நியாயத்தீர்ப்பு  (29:7-8)
(3) திகைப்பும் காரணமும் (29:9-14)

4. லீபனோனுக்கு ஐயோ  

(1) நியாயத்தீர்ப்பு (29:15-16)
(2) பௌதீக மீட்பின் ஆறு அம்சம் (29:17-19)
(3) ஆறு அம்ச காரணம் (29:20-21)
(4) ஆவிக்குரிய மீட்பின் ஆறு அம்சம் (29:22-24)

5. எகிப்தியருக்கு ஐயோ  

(1) மூன்று அம்ச கலகம் (30:1-2)
(2) நான்கு அம்ச ஏமாற்றம் (30:3-5)
(3) யூதரின் பயனில்லாத வெகுமதிகள் (30:6-7)
(4) எட்டு அம்ச கலகம் (30:8-11)
(5) ஏழு அம்ச நியாயத்தீர்ப்பு (30:12-14)
(6) பாதுகாப்பின் வாக்குத்தத்தம் (30:15)
(7) மறுப்பு - நியாயத்தீர்ப்பு (30:16-17)

6. ஆயிர வருஷம்  

(1) பத்து அம்ச ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் (30:18-22)
(2) பத்து அம்ச பௌதீக ஆசீர்வாதங்கள் (30:23-26)
(3) இஸ்ரவேலின் விரோதிகள்மீது நடைபெறும் ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பின் முறைகள் (30:27-28)
(4) இஸ்ரவேலின்மீது ஏற்படும் விளைவின் இரண்டு அம்சம் (30:29)
  (5) அந்திக்கிறிஸ்துவின்மீது நடைபெறும் ஏழு அம்ச நியாயத்தீர்ப்பின் முறைகள் (30:30-33)

7. எகிப்தியருக்கு ஐயோ  

(1) ஆறு அம்ச கலகம் (31:1)
(2) தேவனைப் பற்றிய ஐந்து சத்தியங்கள் (31:2)
(3) எகிப்தை நம்புவது வீண் (31:3)
(4) பாதுகாப்பின் வாக்குத்தத்தம் (31:4-9)

8. ஆயிர வருஷம்  

(1) ஆட்சி புரிபவர்கள் (32:1)
(2) பத்து அம்ச ஆசீர்வாதம் (32:2-5)
(3) மூடனைப் பற்றிய விளக்கம் (32:6-8)
(4) யூதாவின் அழிவு (32:9-14)
(5) அதுமட்டும் - மூன்று அம்ச ஆசீர்வாதம் (32:15)
(6) அப்பொழுது - எட்டு அம்ச மீட்பு (32:16-20)

9. அந்திக்கிறிஸ்துவுக்கு ஐயோ  

(1) சுபாவமும் நியாயத்தீர்ப்பும் (33:1)
(2) யூதாவின் ஜெபம் (33:2)
(3) அந்திக்கிறிஸ்து பெறும் வெற்றி (33:3-4)
  (4) யூதாவின் தேவன் (33:5-6)
(5) அந்திக்கிறிஸ்துவின் வரம்புமீறுதல் (33:7-9)
(6) அந்திக்கிறிஸ்துமீது நியாயத்தீர்ப்பு (33:10-12)

10. ஆயிர வருஷம்  

(1) மேசியா ஆளுகை செய்கிறார் - நீதிமானின் சுபாவம் (33:13-17)
(2) விரோதிகளைக் காணவில்லை (33:18-19)
(3) இஸ்ரவேலின் பௌதீக மீட்பு (33:20-24)

11. அர்மகெதோன்  

(1) தேசங்கள் கூடிவந்தன (34:1)
(2) தேசங்கள் அழிந்தன (34:2-8)
(3) தேசம் பாழாயிற்று (34:9-17)

12. ஆயிர வருஷம்  

(1) தேசத்தின் மீட்பு (35:1-2)
(2) ஜனங்கள் குணமாக்கப்பட்டார்கள் (35:3-6)
(3) தேசம் மீட்கப்பட்டது (35:7)
(4) பரிசுத்தத்தின் பெரும்பாதை (35:8-10)

 யஒஒ. வரலாற்று இடைக்காட்சி  

1. அசீரியப் படையெடுப்பு  

(1) யூதாவின்மீது படையெடுப்பு (36:1-3)
(2) யூதாவின் அவமதிப்பு  

(அ) எசேக்கியாவிற்கு செய்தி (36:4-10)
(ஆ) யூதாவின் பதில் (36:11)
(இ) ஜனங்களுக்கு செய்தி (36:12-21)

(3) எசேக்கியாவிற்கு அறிவித்தார்கள் (36:22)
(4) எசேக்கியாவிடம் காணப்பட்ட விளைவு (37:1-4)
(5) தேவன் வெற்றியை உறுதி பண்ணுகிறார் (37:5-7)
(6) தேவனுக்கும் யூதாவிற்கும் மேலும் அவமதிப்பு    (37:8-13)
(7) எசேக்கியாவின் ஜெபம் (37:14-20)
(8) தேவனுடைய பதில்  
(அ) சனகெரிப்பிற்கு கடிந்துரை (37:21-28)
(ஆ) சனகெரிப்பிற்கு எதிரான தீர்க்கதரிசனம்  (37:29)
  (இ) அடையாளம் - எசேக்கியாவிற்கு தீர்க்கதரிசனம் (37:30-35)
(9) அசீரியாவின் அழிவு (37:36-38)

2. எசேக்கியாவின் வியாதியும் அவன் குணமாவதும்  

(1) வியாதியும் தீர்ப்பும் (38:1)
(2) ஜெபமும் மனந்திரும்புவதும் (38:2-3)
(3) பதிலும் உறுதியும் (38:4-8)
(4) எழுத்தும் சாட்சியும் (38:9-20)
(5) எசேக்கியாவின் அத்திப்பழத்து அடை (38:21-22)
(6) எசேக்கியாவின் மதியீனம் (39:1-2)
(7) பாபிலோனிய சிறைப்பிடிப்பு முன்னறிவிக்கப்படுகிறது (39:3-8)  

பகுதி -  ஒஒ சிறையிருப்புகளுக்கு பின்பான தரிசனம்

 யஒஒஒ. ƒசிறையிருப்பிலிருந்து திரும்பி வருவதை நினைத்து ஆறுதல்  

1. மேசியாவின் முதல் இரண்டு வருகைகள்  

(1) ஆறுதல் - பாவமில்லை (40:1-2)
(2) சத்தம் - முதல் இரண்டு வருகைகள் (40:3-5)
(3) சத்தம் - தேவனுடைய வார்த்தை, மனுஷனுடைய பலவீனம் (40:6-8)
(4) இரண்டாவது வருகை (40:9-11)

2. தேவனுடைய மகத்துவம்  

(1) சர்வ வல்லமையின் ஐந்து அம்சம் (40:12)
(2) சர்வ ஞானத்தின் ஏழு அம்சம் (40:13-14)
(3) ஐந்து அம்ச ஒப்புமை (40:15-17)
(4) அறைகூவல் - ஒப்புமை (40:18-20)
(5) அறைகூவல் - அறிவு (40:21)
(6) ஏழு அம்ச ஒப்புமை (40:22-24)
(7) ஐந்து அம்ச சமநிலை (40:25-26)
(8) அறைகூவல் - அறிவு (40:27-28)
(9) ஆறு அம்ச சர்வ வல்லமை (40:29-31)
(10) தீவுகளுக்கு ஐந்து அம்ச அழைப்பு (41:1)
(11) கோரேசின்மீது ஒன்பது அம்ச தீர்க்கதரிசனம் (41:2-3)
(12) தேவனுடைய சர்வ ஞானம் (41:4)
(13) கோரேசிற்கு எதிராக தீவுகள் ஒன்று சேருதல் (41:5-7)
(14) இஸ்ரவேலுக்கு ஏழு அம்ச அழைப்பு (41:8-9)
(15) நான்கு கட்டளைகள் - எட்டு வாக்குத்தத்தங்கள் - இருபது கணிப்புக்கள் (41:10-19)
(16) ஆசீர்வாதங்களுக்கு காரணங்கள் (41:20)
(17) அறைகூவல் - கணிப்பு (41:21-24)
(18) கோரேசின்மீது ஐந்து அம்ச தீர்க்கதரிசனம்   (41:25)
(19) கணிப்புக்கு அறைகூவல் (41:26-29)

3. முரண்பாடு - தேவனும் இஸ்ரவேலும்  

(1) மேசியாவின் முதலாவது வருகை - பத்து அம்ச அறிமுகம் (42:1-4)
(2) மேசியாவிடம் எட்டு அம்ச சம்பாஷணை  (42:5-7)
(3) தேவனுடைய மகிமை (42:8)
(4) பூர்வ காலத்துக் காரியங்கள் நிறைவேறிற்று (42:9)
(5) தேவனுக்கு மகிமை செலுத்தவேண்டும் (42:10-12)
(6) மேசியாவின் இரண்டாம் வருகை  

(அ) பன்னிரெண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (42:13-15)
(ஆ) எட்டு அம்ச மீட்பு (42:16-17)

(7) எட்டு அம்ச அழிவும் பலவீனமும் (42:18-22)
(8) சிட்சிப்பதற்கு காரணங்கள் (42:23-25)
(9) பத்து அம்ச பாதுகாப்பு (43:1-4)
(10) மறுபடியும் கூட்டிச்சேர்ப்பதன் பத்து அம்சங்கள் (43:5-7)
(11) கணிப்புக்கு அறைகூவல் (43:8-9)
(12) இஸ்ரவேலின் ஊழியம் (43:10-12)
(13) தேவனுடைய பதினெட்டு அறிவிப்புக்கள் (43:13-21)
(14) இஸ்ரவேலின் எட்டு தோல்விகள் (43:22-24)
(15) ஒப்புரவாகுதலின் வாக்குத்தத்தம் (43:25-26)
(16) தற்போதுள்ள சாபத்திற்கு காரணங்கள்    (43:27-28)
(17) பத்து அம்ச மீட்பு (44:1-5)
(18) தேவனும் விக்கிரகங்களும்  

(அ) தேவனுடைய பன்னிரெண்டு அறிவிப்புக்கள் (44:6-8)
(ஆ) விக்கிரகாராதனைக்காரரின் மதியீனம்    (44:9-11)
(இ) விக்கிரகம் மாயை என்பதற்கு இருபது ஆதாரங்கள் (44:12-17)
(ஈ) விக்கிரகாராதனைக்காரரின் மதியீனம்       (44:19-20)

(19) ஆவிக்குரிய மீட்பு (44:21-23)
(20) பௌதீக மீட்பின் பதினாறு அம்சங்கள் (44:24-27)
(21) கோரேசின்மீது கூறப்பட்ட பதினாறு அம்ச தீர்க்கதரிசனம் (44:28-45:3)
(22) கோரேசிற்கு உதவிபுரிவதற்கு காரணங்கள்  (45:4-6)
(23) தேவனுடைய சர்வ ஆளுகையின் பன்னிரெண்டு அம்சங்கள் (45:7-10)
(24) தேவனுடைய சர்வ வல்லமை (45:11-12)
(25) கோரேசின்மீது கூறப்பட்ட ஐந்து அம்ச தீர்க்கதரிசனம் (45:13)
(26) இஸ்ரவேலின் மீட்பு (45:14-17)
(27) சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய தேவன் (45:18-19)
(28) தேசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டன (45:20-22)
(29) கலகக்காரர்கள் தாழ்மைப்படுத்தப் பட்டார்கள் (45:23-25)

4. தேவனும் விக்கிரகங்களும்  

(1) விக்கிரகங்களிடம் வல்லமையில்லை     (46:1-2)
(2) தேவனுடைய சர்வ வல்லமை (46:3-4)
(3) ஒப்பிடுவதற்கு அறைகூவல்  

(அ) விக்கிரகம் மாயை என்பதற்கு பத்து சான்றுகள் (46:5-7)
(ஆ) தேவனுடைய சர்வ வல்லமைக்கு பத்து சான்றுகள் (46:8-11)
(4) இஸ்ரவேலின் மீட்பு (46:12-15)

5. பாபிலோனின் அழிவு  

(1) பதினான்கு அம்ச நியாயத்தீர்ப்பு (47:1-5)
(2) நியாயத்தீர்ப்புக்கு பதினைந்து காரணங்கள்    (47:6-11)
(3) தன்னைத் தான் இரட்சித்துக் கொள்வதற்கு அறைகூவல் (47:12-17)

6. முரண்பாடு - தேவனும் இஸ்ரவேலும்  

(1) இஸ்ரவேலின் மாய்மாலம் (48:1-2)
(2) தேவனுடைய பன்னிரெண்டு அம்ச சர்வ வல்லமை - இஸ்ரவேலின் பத்து அம்ச கலகம் (48:3-8)
(3) தேவனுடைய பொறுமை (48:9-11)
(4) இஸ்ரவேலுக்கு தேவனுடைய அழைப்பு (48:12-17)
(5) தேவனுடைய வருத்தம் - இஸ்ரவேலின் இழப்பு (48:18-19)
(6) பாபிலோனிலிருந்து மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள் (48:20-22)

 ஒல. மேசியாவின் முதலாவது வருகையினால் ஆறுதல்           

1. மேசியாவின் அழைப்பும் ஊழியமும்  
(1) அவருடைய அழைப்பும் தகுதியும் (49:1-3)
(2) மேசியாவின் தாழ்மை (49:4)
(3) அவருடைய ஆறு அம்ச ஊழியம் (49:5-6)
(4) அவருடைய தாழ்மையும் உயர்வும் (49:7)
(5) மேசியாவின் எட்டு அம்ச உதவி (49:8)
(6) அவருடைய பத்து அம்ச ஊழியம் (49:9-12)
(7) இஸ்ரவேலின் மீட்பு (49:13-21)
(8) இஸ்ரவேலின் விரோதிகள் அழிக்கப்படுகிறார்கள் (49:22-26)
(9) தேவன் இஸ்ரவேலைத் தள்ளி வைக்கிறார் (50:1)
(10) மீட்பதற்கு தேவனுடைய வல்லமை (50:2-3)
(11) அவருடைய தகுதிகள் (50:4-5)
(12) அவருடைய பாடும் உதவியும் (50:6-9)
(13) அவருடைய வரவேற்பு (50:10-11)

2. ஆறு அழைப்புகளும் ஆறுதலும்  

(1) செவிகொடுங்கள் - நீதிமானாக இருக்குமாறு அழைப்பு (51:1-2)
  (2) ஆறுதல் - சீயோன் மீட்கப்பட்டது (51:3)
(3) செவிகொடுங்கள் - இஸ்ரவேலுக்கு அழைப்பு (51:4)
(4) ஆறுதல் - நித்திய இரட்சிப்பு (51:5-6)
(5) செவிகொடுங்கள் - நீதிமானாக இருக்குமாறு அழைப்பு (51:7)
(6) ஆறுதல் - நித்திய நீதி (51:8)
(7) எழும்பு - தேவனுக்கு அழைப்பு (51:9-10)
(8) ஆறுதல் - மீட்பு (51:11-16)
(9)  எழும்பு - எருசலேமிற்கு அழைப்பு (51:17-20)
(10) ஆறுதல் - விரோதிகள் நியாயந் தீர்க்கப்படுகிறார்கள் (51:21-23)
(11) எழும்பு - சீயோனுக்கு அழைப்பு (52:1-2)
(12) ஆறுதல் - மீட்பு (52:3-12)

3. மேசியாவின் பாவ நிவாரண கிரியை  

(1) அவருடைய மூன்று அம்ச அறிமுகம் (52:13)
(2) அவருடைய இரண்டு அம்ச பாடு (52:14)
(3) அவருடைய இரண்டு அம்ச உயர்வு (52:15)
(4) அவருடைய வரவேற்பு (53:1)
(5) மேசியாவின் முப்பத்தியாறு அம்ச பாடுகள் (53:2-12)

4. ஏழு புத்திமதிகளும் காரணங்களும்  

(1) பாடு - காரணங்கள் (54:1)
(2) விசாலமாக்கு - காரணம் (54:2-3)
(3) பயப்படாதே - காரணம் (54:4-10)
(4) ஆறுதலடை - காரணம் (54:11-17)
(5) வா - காரணம் (55:1-5)
(6) தேடு - காரணம் (55:6-13)
(7) நீதியைச் செய் - காரணம் (56:1-9)

5. வேறுபட்ட பிரிவுகள்  

(1) துன்மார்க்கரின் பன்னிரெண்டு அம்ச விளக்கம் (56:10-12)
(2) நீதிமான் - நான்கு ஆசீர்வாதங்கள் (57:1-2)
(3) துன்மார்க்கன் - இருபது பாவங்கள் (57:3-12)
(4) நீதிமான் - பத்து ஆசீர்வாதங்கள் (57:13-19)
(5) துன்மார்க்கன் - சமாதானமில்லை (57:20-21)

 ல. மேசியாவின் இரண்டாவது வருகையினால் ஆறுதல்     

1. இஸ்ரவேலின் தேவதூஷணம்  
(1) நான்கு அம்ச சுயநீதி (58:1-2)
(2) பத்து அம்ச மாய்மாலம் (58:3-5)
(3) உபவாசத்தின் இருபத்திமூன்று அம்சம் - இருபது வெகுமதிகள் (58:6-14)
(4) இருபத்தைந்து பாவங்கள் (59:1-8)
(5) முப்பது அம்ச நிலைமையும் காரணமும் (59:9-15)

2. இஸ்ரவேலின் மீட்பு  

(1) மேசியாவின் கிரியை (59:16-19)
(2) மேசியாவின் இரண்டாம் வருகை - புதிய உடன்படிக்கை (59:20-21)
(3) மீட்பின் அறுபத்திநான்கு அம்சம்  
(அ) புறஜாதியார் கிட்டிச்சேருகிறார்கள் (60:1-7)
(ஆ) புறஜாதியாரின் ஊழியம் (60:8-11)
(இ) புறஜாதியாரின் கீழ்ப்படிதல் (60:12-13)

(ஈ) புறஜாதியாரின் புகழுரை (60:14-16)
(உ) தேவனுடைய ஆசீர்வாதங்கள் (60:17-22)

(4) மேசியாவின் முதலாம் வருகை - ஐந்து அம்ச ஊழியம் (61:1-2)
(5) மேசியாவின் இரண்டாம் வருகை - ஆறு அம்ச ஊழியம் (61:3)
(6) மீட்பின் ஐம்பத்தி நான்கு அம்சம்   
(அ) கட்டிடம் கட்டுதல் (61:4)
(ஆ) மறுஜாதி வேலையாட்கள் (61:5)
(இ) மார்க்கத்தலைவர்கள் (61:6)
(ஈ) உயர்வும் சந்தோஷமும் (61:7-11)
(உ) ஜெபம் (62:1-7)
(ஊ) மீட்பின் வாக்குத்தத்தம் (62:8-12)

(7) மேசியாவின் இரண்டாம் வருகை (63:1-6)
(8) கடந்த கால ஆசீர்வாதங்களுக்காக துதி செலுத்துதல் (63:7-14)

(9) மீட்புக்காக ஐம்பது அம்ச ஜெபம் (63:15-64:12)
(10) தேவனுடைய தீர்க்கதரிசன பதிலுரை  
(அ) இஸ்ரவேலின் இருபது அம்ச ஆய்வு  (65:1-7)

(ஆ) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு வித்து (65:8-10)
(இ) இஸ்ரவேலிலிருந்து கலகக்காரர்கள் ஒழிக்கப் படுகிறார்கள் (65:11-16)
(ஈ) புதிய வானமும் புதிய பூமியும் (65:17)  
(உ) ஆயிர வருஷம் (65:18-25)
(ஊ) நீதிமான் மதிக்கப்படுவான் (66:1-2)
(எ) கலகக்காரர்கள் இஸ்ரவேலிலிருந்து ஒழிக்கப் படுவார்கள் (66:3-6)
(ஏ) வித்து கொடுக்கப்படுகிறது (66:7-14)   
(ஐ) கலகக்காரர்கள் இஸ்ரவேலிலிருந்து ஒழிக்கப்படுவார்கள் (66:15-17)
(ஒ) ஆயிர வருஷம் (66:18-21)
(ஓ) புதிய வானமும் புதிய பூமியும் (66:22-24)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.