3 யோவான்
முன்னுரை
அப்போஸ்தலர் யோவான் இந்த நிருபத்தை அவருடைய சிநேகிதராகிய காயுவுக்கு எழுதுகிறார். இந்த நிருபத்தில் காயுவின் நற்குணங்களை யோவான் புகழ்ந்து பேசுகிறார். தியோத்திரேப்பு என்பவர் ஊழியக்காரரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊழியக்காரர்களுக்கு விரோதமாக பொல்லாத வார்த்தைகளை அலப்புகிறார். அவருடைய துர்க்குணத்தைக் குறித்தும் அப்போஸ்தலர் யோவான் இந்த நிருபத்தில் எழுதுகிறார். தேமேத்திரியு என்பவர் எல்லாராலும் நற்சாட்சி பெற்றிருக்கிறார். அவருடைய நற்குணத்தைப்பற்றி அப்போஸ்தலர் யோவான் இந்த நிருபத்தில் ƒபுகழ்ந்து எழுதுகிறார்.
யோவான் இந்த நிருபத்தை எபேசுவிலிருந்து கி.பி. 90 ஆம் ஆண்டில் எழுதினார்.
மையக்கருத்து
உண்மையான ஊழியக்காரரையும், பொய்யான ஊழியக்காரரையும் பற்றிய விளக்கங்கள்.
பொருளடக்கம்
ஒ. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1)
ஒஒ. எல்லா பரிசுத்தவான்களைக் குறித்தும் தேவனுடைய சித்தம் (1:2)
ஒஒஒ. காயுவு சத்தியத்தில் நடந்து கொள்வதற்காக சந்தோஷம் (1:3-4)
ஒய. ஊழியக்காரர்களை உபசரிக்க வேண்டும் (1:5-8)
ய. தியோத்திரேப்பைக் குறித்து எச்சரிப்பு (1:9-10)
யஒ. பரிசுத்தவான்களையும் பாவிகளையும் தெரிந்து கொள்ளும் விதம் (1:11)
யஒஒ. தேமேத்திரியுவின் நற்சாட்சி (1:12)
யஒஒஒ. முடிவுரையும் ஆசீர்வாதமும் (1:13-14)