வேதாகம நபர்கள்: அகி, அகிசம்மா, அகிக்காம்


வேதாகம நபர்கள்

அகி - AHI

"அகி” என்னும் எபிரெய பெயருக்கு "என் சகோதரர் my brother" என்று பொருள். பழைய ஏற்பாட்டில் “அகி” என்னும் பெயரில் இரண்டு பேர் உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

1. அப்தியேலின் குமாரன். காத் கோத்திரத்தைச் சேர்ந்தவன். (1நாளா 5.15).
 கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான். 1 நாளாகமம் 5:15

2. சோமேரின் குமாரன். ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தவன். (நாளா 7:34).
 சோமேரின் குமாரர், அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள். 1 நாளாகமம் 7:34

அகிசாமா - AHISAMACH

“அகிசாமா” என்னும் எபிரெய பெயருக்கு- (என்) சகோதரர் ஆதரவாயிருக்கிறார்" "my brother is support (has supported)"
தாண் கோத்திரத்தான். அகோலிபாவின் தகப்பன் வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரம் ஸ்தாபிக்கப்பட்ட போது, அதிலுள்ள நுணுக்கமான வேலைகளைச் செய்தவன். (யாத் 31:6)
மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள். 
யாத்திராகமம் 31:6

அகிக்காம் - AHIKAM

“அகிக்காம்” என்னும் எபிரெய பெயருக்கு - “(என்) சகோதரர் நிற்கிறார்” "my brother has risen (arisen)" என்று பொருள்.
சாப்பானின் குமாரன். யோசியாவின் அரமனையில் இருந்த ஒரு அதிகாரி. யோசியா ராஜா தீர்க்கதரிசினியாகிய உல்தாளிடம் விசாரிப்பதற்கு ஒருசில நபர்களை அனுப்பினான் அவர்களில் அகீக்காமும் ஒருவன். (2 இராஜா 22:12-14) 

ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது: 2 இராஜாக்கள் 22:12

 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள், நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான். 2 இராஜாக்கள் 22:13

 அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்துக்குப் போய் அவளோடே பேசினார்கள், அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள். 2 இராஜாக்கள் 22:14

யோயாக்கீம் ராஜா எரேமியா தீர்க்கதரிசியைத் துன்புறுத்தினான். அகீக்காம் ராஜாவின் உபத்திரவங்களிலிருந்து எரேமியாவைப் பாதுகாக்க உதவி புரிந்தான். (எரே 26:24)

 ஆகிலும் எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான். 
எரேமியா 26:24


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.