தீத்து
முன்னுரை
அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவுக்கு நிருபம் எழுதியதுபோலவே, தீத்துவுக்கும் நிருபம் எழுதுகிறார். இவ்விரண்டு நிருபங்களும் உபதேசத்தில் ஒத்திருக்கிறது. தீத்துவுக்கு எழுதின நிருபத்தில் தீத்துவைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது. தீத்து கிரேக்கனாயிருந்தவன் (கலா 2:3). பவுல் தீத்துவை உத்தம குமாரன் (தீத்து 1:1) என்றும், தன் சகோதரன் (2கொரி 2:13) என்றும், தனக்கு கூட்டாளியும், தன்னுடைய உடன்வேலையாளுமாயிருக்கிறான் (2கொரி 8:23) என்றும் குறிப்பிடுகிறார்.
தீத்து அப்போஸ்தலர்களோடு எருசலேமிலிருந்த சபைக்குப் போனார் (கலா 2:1). கொரிந்து சபையிலே தீத்து கர்த்தருடைய வார்த்தையைக் கருத்தாய்ப் பிரசங்கம்பண்ணினார். கொரிந்தியருக்காக தீத்து மிகுந்த ஜாக்கிரதையுள்ளவராகயிருந்தார் (2கொரி 8:16).
அப்போஸ்தலர் பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாவது நிருபத்தை, அவர் தீத்துவின் கையில் கொடுத்தனுப்பினார் (2கொரி 8:16-18,23; 9:2-4; 12:18). அப்போஸ்தலர் பவுலோடு தீத்து ரோமாபுரியிலிருந்தார். அதன்பின்பு அவர் தல்மாத்தியா நாட்டிற்குப்போனார் (2தீமோ 4:10). இதன்பின்பு தீத்துவைப்பற்றி வேதாகமத்தில் எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.
கிரேத்தா தீவிலே சுவிசேஷம் வல்லமையாய்ப் பிரசங்கிக்கப்பட்டது. ஜனங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக இருதயங்களிலே ஏற்றுக்கொண்டார்கள். ஒரு சமயம் பவுலும் தீத்துவும் கிரேத்தா தீவுக்கு பிரயாணம் செய்திருக்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலர் பவுலால் கிரேத்தா தீவிலே அநேக நாட்கள் தங்கியிருந்து ஊழியம் செய்ய முடியவில்லை. அவர் மற்ற இடங்களுக்கும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியதாயிற்று.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்போஸ்தலர் பவுல் தீத்துவை கிரேத்தா தீவிலே சிறிதுகாலம் தங்கியிருக்குமாறு சொல்லுகிறார். அப்போஸ்தலர்கள் அந்தத் தீவிலே ஆரம்பித்து வைத்த ஊழியத்தைத் தொடர்ந்து செய்யுமாறு பவுல் தீத்துவுக்கு ஊழியப்பொறுப்பை ஒப்புக்கொடுக்கிறார்.
தீத்து பவுலின் ஆலோசனையின் பிரகாரம் கிரேத்தா தீவிலே தங்கியிருந்து கர்த்தருடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார். தீத்துவின் ஊழியத்திற்கு சில பிரச்சனைகள் உண்டாயிற்று. மற்ற இடங்களில் காணப்பட்டதுபோல அல்லாமல், கிரேத்தா தீவிலே விசேஷித்த பிரச்சனைகள் உண்டாயிற்று. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பவுல் தீத்துவுக்கு இந்த நிருபத்தை எழுதுகிறார். தீத்து கிரேத்தா தீவார் மத்தியிலே கர்த்தருக்கு தீவிரமாய் ஊழியம் செய்யவேண்டும். சோர்வடைந்து விடாமல் உற்சாகத்தோடு ஊழியம் செய்யவேண்டும்.
அப்போஸ்தலர் பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபத்தில், அவருக்கு ஆலோசனை சொல்வதோடு, சபையிலுள்ள ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் எப்படி புத்திசொல்லவேண்டும் என்றும் இந்த நிருபத்தில் எழுதுகிறார்.
கி.பி. 67 ஆம் ஆண்டில் பவுல் இந்த நிருபத்தை மக்கெதோனியாவிலிருந்து எழுதினார். (1தீமோ 1:3)
மையக்கருத்து
போதக நிருபங்களில் தீத்து இரண்டாவது எழுதப்பட்ட நிருபமாகும். சபையின் ஆராதனை ஒழுங்குகள், உபதேசங்கள், கிறிஸ்தவரிடம் காணப்படவேண்டிய தகுதிகள் ஆகியவற்றை இந்த நிருபம் விளக்குகிறது. தீத்துவிற்கு எழுதப்பட்ட நிருபமும், 1தீமோத்தேயு நிருபமும் பல விஷயங்களில் ஒத்திருக்கின்றன. சபை ஒழுங்கு, ஆரோக்கியமான உபதேசம் ஆகியவற்றில் இவ்விரு நிருபங்களும் கவனம் செலுத்துகின்றன. விசுவாசத் துரோகமும், கள்ள உபதேசமும் உண்டாகும் காலங்களில் ஒரு விசுவாசி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து 2தீமோத்தேயு நிருபம் விளக்குகிறது.
பொருளடக்கம்
ஒ. முன்னுரை - ஆசிரியரும் வாழ்த்துதலும் (1:1-4)
ஒஒ. ஊழியக்காரரின் பதினேழு தகுதிகள் (1:5-9)
ஒஒஒ. ஊழியக்காரரிடம் இருக்கக்கூடாத பதினேழு குணங்கள் (1:10-16)
ஒய. ஊழியம் செய்யுமாறு கட்டளைகள்
1. தீத்துவிற்கு முப்பது கட்டளைகள்
(1) முதிர் வயதுள்ள புருஷர்களுக்கு உபதேசிக்க வேண்டிய காரியம் (2:1-2)
(2) முதிர் வயதுள்ள ஸ்திரீகளுக்கு உபதேசிக்க வேண்டிய காரியம் (2:3)
(3) பாலிய ஸ்திரீகளுக்கு உபதேசிக்க வேண்டிய காரியம் (2:4-5)
(4) பாலிய புருஷருக்கு உபதேசிக்க வேண்டிய காரியம் (2:6-8)
(5) வேலைக்காரருக்கு உபதேசிக்க வேண்டிய காரியம் (2:9-10)
2. சுவிசேஷத்திற்கு எல்லா மனுஷரும் கீழ்ப்படிய வேண்டும் - தேவகிருபையைக் குறித்து பத்து உபதேசங்கள் (2:11-13)
3. கிறிஸ்துவின் ஊழியத்தின் நோக்கம் (2:14)
4. தீத்துவிற்கு பத்து கட்டளைகள் (2:15)
5. பாவிகளின் ஒன்பது அம்ச விளக்கம் (3:1-2)
6. மனுஷர் ஏன் எவ்வாறு இரட்சிக்கப் படுகிறார்கள் (3:3-7)
7. தீத்துவிற்கு எட்டு கட்டளைகள் (3:8-14)
8. முடிவுரையும் ஆசீர்வாதமும் (3:15