மத்தேயு முன்னுரை
பரிசுத்த வேதாகமத்தில் முதலாவது பகுதி பழைய ஏற்பாடு என்றும், இரண்டாவது பகுதி புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டுக்கு ""நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் புதிய ஏற்பாடு'' என்பது முழுமையான பெயராகும். புதிய ஏற்பாடு என்னும் பெயருக்கு ""புதிய உடன்படிக்கை'' என்றும் பொருள் கூறலாம்.
இயேசுகிறிஸ்துவைப்பற்றி இந்த புஸ்தகத்தின் தலைப்பில் கூறப்படும்போது ""நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய'' என்று கூறப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவை நம்முடைய கர்த்தராக அங்கீகரிக்கவில்லை யென்றால் அவர் நம்முடைய இரட்சகராக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களும் அவருடைய கிரியைகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. எங்கே மரண சாசனமுண்டோ, அங்கே அந்தச்சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும் (எபி 9:16,17). புதிய ஏற்பாடு இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக உறுதிப்பட்டிருக்கிறது.
வேதாகமத்தின் இரண்டாவது பகுதி புதிய ஏற்பாடு என அழைக்கப்படுகிறது. முதலாவது பகுதிக்கு பழைய ஏற்பாடு என்று பெயர். புதிய ஏற்பாடு இயேசுகிறிஸ்துவின் ஏற்பாடாகும். இதை மற்ற ஆசிரியர்கள் எழுதினாலும் இதை எழுதுமாறு இயேசுகிறிஸ்துவே அவர்களுடைய உள்ளத்தில் ஏவினார்.
சுவிசேஷம்
சுவிசேஷம் என்பதற்கு நற்செய்தி என்று பொருள். பாவிகளாகிய மனுஷரை இரட்சிப்பதற்காக இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். இயேசுகிறிஸ்துவின் வருகையே பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்திருக்கும் நற்செய்தியாகும். நற்செய்தி என்னும் பெயரை தேவதூதன் அறிவித்தார். ""இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக் 2:10) என்று தேவதூதன் அறிவித்தார்.
ஏசாயா தீர்க்கதரிசி இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை முன்னறிவித்திருக்கிறார். நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிப்பது (ஏசா 52:7), சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது (ஏசா 61:1) ஆகிய வாக்கியங்களில் சுவிசேஷம் என்னும் வார்த்தையை ஏசாயா தீர்க்கதரிசி பயன்படுத்தியிருக்கிறார்.
புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு புஸ்தகங்களில் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த நான்கு நூல்களுக்கும் சுவிசேஷங்கள் என்று பெயர். ஆதித்திருச்சபையில் சீஷர்களும் விசுவாசிகளும் இந்த நான்கு சுவிசேஷங்களையும் வாசித்து தேவனுடைய ஆலோசனைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேர் எழுதிய சுவிசேஷங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. ஆதித்திருச்சபையின் காலத்தில் மேலும் பல ஆசிரியர்களும் சுவிசேஷங்களை எழுதினார்கள். ஆனால் அந்த நூல்களை ஆதித்திருச்சபை அங்கீகரிக்கவில்லை.
மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் ஆசிரியரான மத்தேயு பிறப்பினால் ஒரு யூதர். ஆயக்காரராக பணிபுரிந்தவர். தம்முடைய சீஷராக வருமாறு இயேசுகிறிஸ்து இவரை அழைத்தார். இயேசுவின் அழைப்பை ஏற்று, இவர் ஆயம் வசூலிப்பதை விட்டுவிட்டு, இயேசுவின் சீஷரானார்.
இயேசுகிறிஸ்து இந்த பூமியில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம், அவரோடு மத்தேயுவும் மற்ற சீஷர்களும் கூட இருந்தார்கள். இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்ததை குறித்து மத்தேயுவும் ஒரு சாட்சியாக ஏற்படுத்தப்பட்டவர் (அப் 1:21,22).
புதிய ஏற்பாட்டி‘ன் மற்ற நூல்களைப்போலவே மத்தேயு எழுதின சுவிசேஷம் முதன்முதலில் கிரேக்கு பாஷையில் எழுதப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் காலத்தில் கிரேக்கு பாஷை யூதர்களுக்கு புரியாத வேற்றுபாஷை அல்ல. ஆதித்திருச்சபை காலத்தில் சபையிலும் அரசாங்கத்திலும் கிரேக்கு பாஷையே பொதுவான பாஷையாக இருந்தது. இக்காலத்தில் ரோமப்பேரரசில் மட்டுமல்லாமல், மற்றும் பல தேசங்களிலும் கிரேக்கு பாஷை அதிகளவில் பயன்பாட்டிலிருந்தது. சுவிசேஷம் உலகம் முழுவதும் பரவுவதற்கு கிரேக்கு பாஷையின் விரிவான பயன்பாடும் ஒரு காரணமாயிற்று.
கி.பி. 37-ஆம் ஆண்டில் யூதேயாவில் இந்த சுவிசேஷம் எழுதப்பட்டது. இந்த சுவிசேஷ புஸ்தகத்தின் ஆசிரியர் மத்தேயு. மறுபெயர் லேவி. அல்பேயுவின் குமாரன். யாக்கோபுவின் சகோதரன். (லூக்கா 6:16) ஆயக்காரன். இயேசுவின் பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவன். பதினைந்து வருஷங்களாக யூதேயாவிலே பிரசங்கம் பண்ணினான். அதன்பின்பு எத்தியோப்பியாவிற்கும், பிற தேசங்களுக்கும் சென்று இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்து வந்தான். (அப் 2:43) இவன் இரத்தச்சாட்சியாக மரிக்கவில்லை.
மையக்கருத்து
இயேசு கிறிஸ்து யூதருடைய இராஜா. உலக இரட்சகர். இந்த சுவிசேஷம் விசேஷமாக இஸ்ரவேல் ஜனத்தாருக்கு எழுதப்பட்டது.
மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் காணப்படும் விசேஷித்த காரியங்கள்
குழந்தைப்பருவம்
1. சாஸ்திரிகளின் வருகை (மத் 2:1-15)
2. இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளைகள் கொல்லப்படுதல் (மத் 2:16-18)
3. எகிப்திற்கு ஓடிப்போதல் (மத் 2:13-15)
4. எகிப்திலிருந்து திரும்பி வருதல் (மத் 2:19-23)
பத்து உவமைகள்
1. களைகள் (மத் 13:24-30)
2. மறைந்திருக்கும் பொக்கிஷம் (மத் 13:44)
3. முத்து (மத் 13:45)
4. வலை (மத் 13:47)
5. இரக்கமில்லாத ஊழியக்காரன் (மத் 18:23-35)
6. வேலையாட்கள் (மத் 20:1-16)
7. இரண்டு குமாரர் (மத் 21:28-32)
8. கலியாண விருந்து (மத் 22:1-14)
9. பத்து கன்னிகைகள் (மத் 25:1-13)
10. தாலந்துகள் (மத் 25:14-30)
அற்புதங்கள்
1. மீன்வாயில் வெள்ளிப்பணம் (மத் 17:24-27)
2. இரண்டு குருடருக்குப் பார்வை கிடைத்த அற்புதம் (மத் 20:30-34)
சம்பாஷணைகள்
1. மலைப்பிரசங்கம் (மத் 5:1-7:29
2. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே (மத் 11:28-30)
3. வீணான வார்த்தைகள் (மத் 12:36-37)
4. இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:17-19)
5. உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம்செய்தால் (மத் 18:15-35)
6. தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். (மத் 21:43)
7. வேதபாரகர், பரிசேயர் ஆகியோரைப் பற்றிய காரியங்கள் (மத் 23:1-33)
8. ஒருகல்லின்மேல் ஒருகல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும். (மத் 24:1-25:46)
9. நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள். (மத் 28:18-20)
பொருளடக்கம்
ஒ. இயேசு கிறிஸ்துவின் ஊழிய காலத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள்
1. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு - (1:1)
2. இயேசுவின் முன்னோர்கள்
(1) இராஜாக்கள் அல்லாத 14 வம்சங்கள் - (1:2-5)
(2) இராஜாக்களாக இருந்த 14 வம்சங்கள் - (1:6-11)
(3) இராஜாக்கள் அல்லாத 14 வம்சங்கள் - (1:12-16)
(4) ஆபிரகாமிலிருந்து இயேசு கிறிஸ்து வரையிலும் - யூத மார்க்கத்து முன்னோர்கள் - (1:17)
3. இயேசு கிறிஸ்துவின் கன்னிகைப் பிறப்பு - (1:18-25)
4. கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் - (2:1-12)
5. இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவம்
(1) எகிப்திற்குப் பிரயாணம் - (2:13-15)
(2) பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள் - இயேசுவைக் கொல்வதற்கு நடந்த முதலாவது சதி - (2:16-18)
(3) எகிப்திலிருந்து திரும்பி வருதல் - (2:19-23)
ஒஒ. யோவான் ஸ்நானனின் ஊழியம்
1. மூன்று அம்ச செய்தி - (3:5-6)
2. யோவான் ஸ்நானனின் எளிய வாழ்வு - (3:4)
3. ஊழியத்தின் வெற்றி - (3:5-6)
4. பதிமூன்று அம்சச் செய்தி - (3:7-12)
ஒஒஒ. இயேசுவின் ஊழிய ஆயத்தம்
1. தண்ணீர் ஞானஸ்நானம் - (3:13-15)
2. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் - (3:16-17)
3. சோதனை - (4:1-11)
ஒய. இயேசு கிறிஸ்துவின் ஊழியமும் உபதேசமும்
1. கலிலேயாவில் ஊழியத்தை ஆரம்பிக்கிறார் - (4:12)
2. நாசரேத்தில் உள்ளவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை - கப்பர் நகூமிற்குச் செல்கிறார் - (4:13-16)
3. இராஜ்ஜியத்தைப் பற்றி பிரசங்கம் பண்ணுகிறார் - (4:17)
4. பேதுரு, அந்திரேகியா ஆகியோரின் அழைப்பு - (4:18-20)
5. யாக்கோபு, யோவான் ஆகியோரின் அழைப்பு - (4:21-22)
6. கலிலேயாவிற்கு இரண்டாவது பிரயாணம் - (4:23-25)
7. மலைப்பிரசங்கம்
(1) முன்னுரை - (5:1-2)
(2) பாக்கியவான்கள் - (5:3-12)
(3) விசுவாசிகளின் ஒப்புமை - (5:13-16)
(4) கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காக வந்தார் - (5:17-18)
(5) இராஜ்ஜியத்தின் பிரமாணங்கள்
(அ) மோசேயின் பிரமாணங்களும் இராஜ்ஜியத்தின் பிரமாணங்களும் - (5:19-20)
(ஆ) இராஜ்ஜியத்தின் பிரமாணங்களுடைய சிறப்பு அம்சம்
(ண்) கொலை செய்யாதிருப்பாயாக - (5:20-22)
(ண்ண்) ஒப்புரவாதலும் ஜெபமும் - (5:23-24)
(ண்ண்ண்) நியாயாதிபதியினிடத்தில் வழக்கு - (5:25-26)
(ண்ஸ்) விபசாரம் செய்யாதிருப்பாயாக - (5:27-30)
(ஸ்) மனைவியைத் தள்ளிவிடுவதும் மறுபடியும் திருமணம் செய்வதும் - (5:31-32)
(ஸ்ண்) ஆணையிடுதல் - (5:33-37)
(ஸ்ண்ண்) கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் - (5:38-42)
(ஸ்ண்ண்ண்) அன்பு கூருதல் - (5:43-48)
(ண்ஷ்) தர்மம் செய்தல் - (6:1-4)
(ஷ்) ஜெபம் - அந்தரங்கத்திலிருக்கிற பிதாவிடம் - (6:5-6)
(ஷ்ண்) பிதாவின் சர்வ வியாபகம் - (6:7-8)
(ஷ்ண்ண்) மாதிரி ஜெபம் - (6:9-13)
(ஷ்ண்ண்ண்) ஜெபம் - பதில் பெறுவதற்கு நிபந்தனை - (6:14-15)
(ஷ்ண்ஸ்) உபவாசம் - (6:16-18)
(6) விசுவாசிகளுக்கு எச்சரிப்புக்கள்
(அ) பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் - (6:19-21)
(ஆ) இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது - (6:22-24)
(இ) கவலைப்படுவதினால் பயனில்லை - (6:25-34)
(ஈ) உன் கண்ணிலிருக்கிற உத்திரம் - (7:1-5)
(உ) பரிசுத்தமானதைக் கவனமாகக் கையாளவேண்டும் - (7:6)
(ஊ) பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பார் - (7:7-11)
(எ) தங்கச்சட்டம் - மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் - (7:12)
(ஏ) இடுக்கமான வாசல் வழியும் விசாலமான வாசல் வழியும் - (7:12-14)
(ஐ) கள்ளத்தீர்க்கதரிசிகள் - (7:15-20)
(ஒ) தேவனுடைய சித்தத்தைச் செய்யாமல் கர்த்தாவே, கர்த்தாவே என்று கூறுவது - (7:21-23)
(ஓ) கன்மலையின்மேல் அஸ்திபாரமும் மணலின்மேல் அஸ்திபாரமும் - (7:24-29)
8. இயேசு குஷ்டரோகியைச் சுத்தமாக்குகிறார் - (8:1-4)
9. நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் குணமானான் - (8:5-13)
10. பேதுருவின் மாமி சொஸ்தமானாள் - (8:14-15)
11. பிசாசுகளைத் துரத்தினார் - பிணியாளிகள் எல்லாரையும் சொஸ்தமாக்கினார் - (8:16-17)
12. சீஷத்துவத்திற்குப் பரீட்சை - (8:18-22)
13. இயேசு பெருங்காற்றை அமைதிப் படுத்துகிறார் - (8:23-27)
14. இயேசு பிசாசு பிடித்திருந்த இரண்டு பேரைச் சொஸ்தமாக்குகிறார் - (8:28-34)
15. கப்பர்நகூமிற்குத் திரும்பி வருகிறார் - திமிர்வாதக்காரனைக் குணப்படுத்துகிறார் - (9:1-8)
16. மத்தேயு அல்லது லேவியின் அழைப்பு - (9:9)
17. பரிசேயருக்குப் பதிலுரைகள் - (9:10-13)
18. யோவான் ஸ்நானனின் சீஷர்களுக்குப் பதிலுரை - (9:14-15)
19. வஸ்திரம், துருத்திகள் ஆகியவற்றின் உவமை - (9:16-17)
20. பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமடைகிறாள் - மரித்த சிறுபெண்ணை இயேசு உயிருடன் எழுப்புகிறார் - (9:18-26)
21. இரண்டு குருடரைக் குணமாக்குகிறார் - (9:27-31)
22. ஊமையனைக் குணப்படுத்துகிறார் - பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக முதலாவது தூஷணம் - (9:32-34)
23. கலிலேயாவிற்கு மூன்றாவது முறையாக பிரயாணம் - (9:35-38)
24. பன்னிரெண்டு சீஷர்களின் அபிஷேகம்
(1) சீஷர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார் - (10:1)
(2) அப்போஸ்தலர்களின் பெயர்கள் - (10:2-4)
(3) முதலாவது ஊழிய ஸ்தலம் - (10:5-6)
(4) செய்தியும் வல்லமையும் - (10:7-8)
(5) வேலையாள் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான் - (10:9-10)
(6) ஊழியக்காரர்களை ஏற்றுக் கொள்கிறவர்கள் - (10:11-13)
(7) ஊழியக்காரர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் - (10:14-15)
(8) சுவிசேஷத்திற்கு வரும் எதிர்ப்பைப் பற்றிய முன்னறிவிப்பு
(அ) ஜெபாலயத் தலைவர்களின் பகை - (10:16-17)
(ஆ) அதிபதிகளின் பகை - (10:18-20)
(இ) உறவினர்களின் பகை - (10:21)
(ஈ) உலகத்தின் பகை - (10:22-23)
(9) கிறிஸ்துவோடு சமம் - (10:24-25)
(10) மாய்மாலத்திற்கு எதிரான எச்சரிப்பு - (10:26-27)
(11) மனுஷ பயத்திற்கு எதிரான எச்சரிப்பு - (10:28-33)
(12) சுவிசேஷத்திற்கு வரும் எதிர்ப்பு பற்றி மறுபடியும் முன்னறிவிக்கப்படுதல் - (10:34-36)
(13) சீஷர்களின் பரிசோதனை - (10:37-39)
(14) சிறிய சேவைகளுக்கும் வெகுமதி அளிக்கப்படும் - (10:40-42)
25. கலிலேயாவிற்கு நான்காவது பிரயாணம் - (11:1)
26. யோவான் ஸ்நானன் இயேசுவிடம் கேட்ட கேள்வி - (11:2-3)
27. இயேசு வார்த்தைகளால் பதில் கூறாமல் கிரியைகளால் பதில் கூறுகிறார் - (11:4-6)
28. யோவான் ஸ்நானனைப் பற்றி இயேசு கூறிய சாட்சி - (11:7-15)
29. இயேசு அவிசுவாசத்தைக் கடிந்து கூறுகிறார் - (11:16-19)
30. விசுவாசியாத பட்டணங்கள்மீது வரும் நியாயத்தீர்ப்பை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (11:20-24)
31. சத்தியத்தின் எளிமைக்காக இயேசு களிகூருகிறார் - (11:25-27)
32. வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அழைப்பு - (11:28-30)
33. இயேசு ஓய்வுநாட்களுக்கும் ஆண்டவராக இருக்கிறார் - (12:1-8)
34. ஓய்வுநாளில் இயேசு சூம்பின கையையுடைய மனுஷனைச் சொஸ்தமாக்குகிறார் - (12:9-13)
35. இயேசுவைக் கொலைசெய்யும்படி நடைபெற்ற முதலாவது ஆலோசனை - (12:14)
36. திரளான ஜனங்களைச் சொஸ்தமாக்குகிறார் - (12:15-21)
37. குருடும் ஊமையுமான ஒருவனைச் சொஸ்தமாக்குகிறார் - (12:22-23)
38. பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான இரண்டாவது தூஷணம், பிரிந்த ராஜ்யம் - (12:24-30)
39. மனுஷருக்கு மன்னிக்கப்படாத பாவம் - (12:31-32)
40. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் - (12:33-37)
41. யோனாவின் அடையாளம் - (12:38-40)
42. இயேசு யூதர்களைக் கடிந்து கூறுகிறார் - (12:41-42)
43. இஸ்ரவேலைப் பற்றிய தீர்க்கதரிசனம் - (12:43-45)
44. இயேசுவின் உறவினர்கள் - (12:46-50)
45. பிரசங்கம் - பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்கள்
(1) இடம் - கலிலேயாக்கடல் - (13:1-2)
(2) விதைக்கிறவனைப் பற்றிய உவமை - (13:3-9)
(3) இயேசு உவமைகளாகப் பேசியதற்கு காரணம் - (13:10-17)
(4) விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கம் - (13:18-23)
(5) கோதுமை, களைகள் ஆகியவற்றின் உவமை - (13:24-30)
(6) கடுகு விதையின் உவமை - (13:31-32)
(7) புளித்தமாவின் உவமை - (13:33)
(8) இயேசு உவமைகளாகப் பேசியதற்குக் காரணம் - (13:34-35)
(9) கோதுமை, களைகள் ஆகியவற்றின் உவமை பற்றிய விளக்கம் - (13:36-43)
(10) புதைத்திருக்கிற பொக்கிஷத்தின் உவமை - (13:44)
(11) விலையுயர்ந்த ஒரு முத்தின் உவமை - (13:45-46)
(12) மீன்களைச் சேர்த்து வாரிக் கொள்ளும் வலையின் உவமை - (13:47-48)
(13) மீன்களைச் சேர்த்து வாரிக் கொள்ளும் வலையின் உவமையின் விளக்கம் - (13:49-50)
(14) வீட்டெஜமானாகிய மனுஷனின் உவமை - (13:51-52)
46. நாசரேத்தில் இயேசு - இந்த ஊரிலுள்ள ஜனங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள் - (13:53-58)
47. ஏரோதுவின் குற்ற மனச்சாட்சி - யோவான் ஸ்நானனின் சிரச்சேதம் - (14:1-12)
48. இயேசு மறுபடியும் கலிலேயாவின் வழியாகப் பிரயாணம் செய்கிறார் - வியாதியஸ்தராயிருந்தவர்களைச் சொஸ்தமாக்குகிறார் - (14:13-14)
49. ஐயாயிரம்பேருக்கு அற்புதமாகப் போஜனம் கொடுக்கிறார் - (14:15-21)
50. இயேசு தண்ணீரின்மீது நடக்கிறார் - பேதுருவால் தண்ணீரின்மீது நடக்க முடியவில்லை - (14:22-33)
51. இயேசு கெனேசரேத்து நாட்டில் பிணியாளிகள் எல்லாரையும் சொஸ்தமாக்குகிறார் - (14:34-36)
52. இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் கடிந்து கொள்கிறார் - (15:1-9)
53. மனுஷனைத் தீட்டுப்படுத்தும் காரியம் - பாவங்கள் ஆத்துமாவை அழிக்கும் - (15:10-20)
54. சீரோபேனிக்கேயா ஸ்திரீயின் குமாரத்தியை இயேசு குணப்படுத்துகிறார் - (15:21-28)
55. கலிலேயாவில் இயேசு வியாதியஸ்தர்கள் அனைவரையும் சொஸ்தப்படுத்துகிறார் - (15:29-31)
56. நான்காயிரம் பேருக்கு அற்புதமாகப் போஜனம் கொடுக்கிறார் - (15:32-39)
57. இயேசு பரிசேயரைக் கடிந்து கொள்கிறார் - (16:1-5)
58. பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைப் பற்றிய விளக்கம் - (16:6-12)
59. பேதுருவின் அறிக்கை - (16:13-16)
60. புதிய ஏற்பாட்டு சபையைக் குறித்து இயேசுவின் அறிவிப்பு - (16:17-18)
61. பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களைப் பேதுரு பெறுகிறான் - (16:19-20)
62. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முற்குறித்துக் கூறுகிறார் - (16:21)
63. இயேசுவும் பேதுருவும் ஒருவரையொருவர் கடிந்து கொள்கிறார்கள் - (16:22-23)
64. சீஷத்துவத்திற்குப் பரீட்சை - ஆத்துமாவின் மதிப்பு - (16:24-25)
65. இரண்டாம் வருகையை முற்குறித்துக் கூறுகிறார் - (16:26-27)
66. மறுரூபமாதலை முற்குறித்துக் கூறுகிறார் - (16:28)
67. மறுரூபமாதல் - வரப்போகும் இராஜ்ஜியத்திற்கு ஒரு முன்னோட்டம் - (17:1-9)
68. யோவான் ஸ்நானனும், எலியாவும் - (17:10-13)
69. வல்லமையில்லாத சீஷர்களும் சர்வ வல்லமையுள்ள கிறிஸ்துவும் - (17:14-18)
70. ஜெபமும் உபவாசமும் - (17:19-21)
71. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் - (17:22-23)
72. வரிப்பணம் - மீனின் வாயில் வெள்ளிப்பணம் - (17:24-27)
73. சீஷத்துவத்தைப் பற்றிய உபதேசம்
(1) மாம்சமான மனுஷனின் பிரதான கேள்வி - (18:1)
(2) இயேசுவின் பதிலுரை - (18:1-4)
(3) விசுவாசிகளுக்கு உலகத்திலிருந்து இடறல்கள் - (18:5-7)
(4) இடறல் உண்டாக்கும் சரீர உறுப்புக்கள் - (18:8-9)
(5) எல்லோருக்கும் எச்சரிப்பு - (18:10)
(6) காணாமல்போன ஆடு - (18:11-14)
(7) விசுவாசிகளின் ஒழுக்கக் கட்டுப்பாடு - (18:15-17)
(8) விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படும் வல்லமை - (18:18)
(9) ஒன்றுகூடி ஜெபிப்பதின் வல்லமை - (18:19)
(10) ஸ்தலசபைகளின் எளிமையும் கிறிஸ்தவ ஆராதனையும் - (18:20)
(11) மன்னிப்பின் பிரமாணம் - (18:21-22)
(12) மன்னிப்பு - இரக்கமில்லாத ஊழியக்காரனைப் பற்றிய உவமை - (18:23-35)
74. இயேசு திரளான ஜனங்களைச் சுத்தமாக்குகிறார் - (19:1-2)
75. மனைவியைத் தள்ளிவிடுவது, மறுவிவகாரம் பண்ணுவது ஆகியவை பற்றிய பிரமாணம் - (19:3-9)
76. மனைவியைத் தள்ளிவிடுவதினால் ஏற்படும் விளைவுகள் - (19:10-12)
77. இயேசு சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் - (19:13-15)
78. மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபன் - (19:16-22)
79. ஐசுவரியவான்களுக்கு எச்சரிப்பு - (19:23-26)
80. நித்திய இராஜ்ஜியத்தில் அப்போஸ்தலர்களுக்கு உரிய இடம் - (19:27-28)
81. முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களுக்கு வெகுமதிகள் - (19:29-30)
82. தாழ்மை - திராட்சைத்தோட்டத்து வேலையாட்களைப் பற்றிய உவமை - (20:1-16)
83. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் - (20:17-19)
84. யாக்கோபு, யோவான் ஆகியோரின் மாம்ச சுபாவம் - (20:20-23)
85. மற்ற பத்துப் பேரின் மாம்ச சுபாவம் - (20:24-28)
86. இயேசு இரண்டு குருடரை சொஸ்தமாக்குகிறார் - (20:29-34)
87. வெற்றிப்பவனி - (21:1-11)
88. தேவாலயத்தின் சுத்திகரிப்பு - (21:12-16)
89. கனிகொடாத அத்திமரத்தை இயேசு சபிக்கிறார் - (21:17-20)
90. சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் - (21:21-22)
91. இயேசுவின் அதிகாரத்தைக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி - (21:23-27)
92. இரண்டு குமாரர்களைப் பற்றிய உவமை - (21:28-32)
93. வீட்டெஜமானைப் பற்றிய உவமை - (21:33-46)
94. கலியாண விருந்தைப் பற்றிய உவமை - (22:1-14)
95. வரிக்காசைப் பற்றிய உவமை - (22:15-22)
96. உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி - (22:23-33)
97. பிரதான கற்பனையைப் பற்றிய கேள்வி - (22:34-40)
98. இயேசு பரிசேயரிடம் கேள்வி கேட்கிறார் - (22:41-46)
99. பரிசேயரின் குணங்கள் - (23:1-7)
100. பரிசேய உபதேசத்திற்கு எதிரான எச்சரிப்புக்கள் - (23:8-12)
101. பரிசேயர்மீது எட்டு “”ஐயோ’’க்கள் -
(1) தேவனுக்கு விரோமாகக் கிரியை செய்து பரலோகத்தைப் பூட்டிப் போடுகிறார்கள் - (23:13)
(2) ஒடுக்குகிறார்கள் - மாய்மாலக் காரர்கள் - (23:14)
(3) ஆத்துமாக்களை அழித்துப் போடுகிறார்கள் - (23:15)
(4) பொய்யான ஆணையிடுகிறார்கள் - (23:16-22)
(5) வெளிவேஷம் போடுகிறார்கள் - (23:23-24)
(6) தவறான சுத்திகரிப்புக்கள் - (23:25-26)
(7) சுயநீதி - (23:27-28)
(8) பெருமை - (23:29-33)
102. கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப் படுவார்கள் என்று இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (23:34-36)
103. இயேசு எருசலேமிற்காக அழுகிறார் - (23:37-39)
104. இயேசு ஒலிவமலையில் கூறிய தீர்க்கதரிசனம்
(1) எருசலேமின் அழிவை முற்குறித்துக் கூறுகிறார் - (24:1-2)
(2) மூன்று முக்கியமான கேள்விகள் - (24:3)
(3) கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு அடையாளங்கள்
(அ) எட்டு அடையாளங்கள் - யூதர்களின் வருத்தங்கள் - (24:4-8)
(ஆ) இஸ்ரவேலின் வருத்தங்களின்போது எட்டு அடையாளங்கள் - (24:9-14)
(இ) பாழாக்குகிற அருவருப்பு - (24:15)
(ஈ) அந்திக்கிறிஸ்துவிடம் இஸ்ரவேல் தோற்றுப்போதல் - (24:16-20)
(உ) மகா உபத்திரவம் - (24:21-22)
(ஊ) மகா உபத்திரவத்தின்போது நடைபெறும் ஆறு அடையாளங்கள் - (24:23-26)
(4) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும் விதமும் காலமும் - (24:27-31)
(5) அத்திமரத்தைப் பற்றிய உவமை - (24:32-33)
(6) இந்தத் தீர்க்கதரிசனத்தின் எல்லா அடையாளங்களும் ஒரு சந்ததியில் சம்பவிக்கும் - (24:34-35)
(7) அவருடைய வருகையின் குறிப்பிட்ட காலம் அறிவிக்கப்படவில்லை - (24:36)
(8) கிறிஸ்துவின் வருகை துன்மார்க்கருக்கு அழிவைக் கொண்டு வரும் - (24:37-39)
(9) அர்மகெதோன் - சிலர் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் - சிலர் கைவிடப்படுவார்கள் - (24:40-42)
(10) வீட்டெஜமானைப் பற்றிய உவமை - (24:43-44)
(11) உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனைப் பற்றிய உவமை - (24:45-51)
(12) பத்துக் கன்னிகைகள் பற்றிய உவமை - (25:1-13)
(13) தாலந்துகளைப் பற்றிய உவமை - (25:14-30)
(14) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது தேசங்கள்மீது நியாயத் தீர்ப்பு - (25:31-46)
105. இயேசு தமது மரணத்தை மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் - (26:1-2)
106. இயேசுவைக் கொல்வதற்குச் சதியாலோசனை - (26:3-5)
107. இயேசுவின்மீது அபிஷேகம் - (26:6-13)
108. இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒப்புக்கொள்கிறான் - (26:14-16)
109. பஸ்காவிற்கு ஆயத்தம் - (26:17-19)
110. கடைசி பஸ்கா
(1) தாம் காட்டிக்கொடுக்கப்படப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (26:20-25)
(2) கர்த்தருடைய பந்தி - (26:26-30)
(3) தம்மைப் பேதுரு மறுதலிக்கப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (26:31-35)
ய. கிறிஸ்துவின் பாடுகள்
1. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் துக்கமும் வியாகுலமும் - (26:36-46)
2. இயேசுவைக் கொல்வதற்கு முயற்சி - காட்டிக்கொடுக்கப்படுவதும் கைதுபண்ணப்படுவதும் - (26:47-56)
3. இயேசுவின் வழக்கு விசாரணையும் பரியாசமும் - (26:57-68)
4. பேதுரு மறுதலிக்கிறான் - (26:69-75)
5. இயேசுவைப் பிலாத்துவிடம் அனுப்புகிறார்கள் - (27:1-2)
6. யூதாஸ் நான்றுகொண்டு செத்துப் போகிறான் - (27:3-10)
7. பிலாத்துவிற்கு முன்பாக இயேசு - (27:11-14)
8. இயேசுவிற்கு தண்டனையும் பரபாசிற்கு விடுதலையும் - (27:15-26)
9. இயேசுவின் சிரசின்மீது முள்முடி - (27:27-32)
10. இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள் - (27:33-44)
11. இயேசுவின் மரணம் - (27:45-56)
12. இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ணுகிறார்கள் - (27:57-61)
13. கல்லுக்கு முத்திரைபோட்டு இயேசுவின் கல்லறையைப் பத்திரப்படுத்துகிறார்கள் - (27:62-66)
யஒ. உயிர்த்தெழுந்த பின்பு இயேசுவின் ஊழியம் -
1. உயிர்த்தெழுதலுக்கு கர்த்தருடைய தூதனின் சாட்சி - (28:1-7)
2. உயிர்த்தெழுதலுக்கு ஸ்திரீகளின் சாட்சி - (28:8-10)
3. உயிர்த்தெழுதலுக்கு காவல்சேவகரின் சாட்சி - (28:11)
4. இயேசுவின் உயிர்த்தெழுதல்மீதுள்ள விசுவாசத்தை அழிப்பதற்கு சதியாலோசனை - (28:12-15)
5. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சீஷர்களின் சாட்சி - (28:16-17)
6. பிரதான கட்டளை - (28:18-20)