மாற்கு முன்னுரை
நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்கும், அவர் நடப்பித்த அற்புதங்களுக்கும் மத்தேயு பிரத்தியட்சமான சாட்சியாக இருந்து, இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார். மத்தேயுவைப்போலவே மாற்கும் இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சி பகர்ந்து இந்த சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார்.
மாற்கு என்னும் பெயர் எபிரெய பெயராகும். இவருடைய ரோமாபுரி பெயர் மார்கஸ் என்பதாகும். புதிய ஏற்பாட்டுக்காலத்தில் மார்கஸ் என்னும் பெயர் ஒரு பொதுவான பெயராக வழக்கத்திலிருந்தது. இவர் பிறப்பினால் ஒரு யூதர். ஆகையினால் மார்கஸ் என்னும் தன்னுடைய ரோம வழக்கத்துப் பெயரை எபிரெய மார்க்கத்தின் பிரகாரம் மாற்கு என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். அப்போஸ்தலர் பவுலின் முந்திய பெயர் சவுல் என்பதாகும். இவர் தன்னுடைய பெயரை பவுல் என்று மாற்றிக்கொண்டார். சவுல் என்பது யூதமார்க்கத்துப் பெயர். பவுல் என்பது ரோமப்பேரரசின் பெயர்.
ƒபுதிய ஏற்பாட்டில் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவானைப்பற்றி வாசிக்கிறோம். இவன் பர்னபாவுடைய சகோதரியின் மகன். தன்னுடைய முதலாவது மிஷினெரி பிரயாணத்தின்போது அப்போஸ்தலர் பவுல் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவான் மீது வெறுப்புற்றவராக இருந்தார் (அப் 15:37,38). அதன்பின்பு அப்போஸ்தலர் பவுலுக்கு மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவான்மீது பிரியம் உண்டாயிற்று. சபைகள் தன்னைப்போலவே இவரையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று திருச்சபைகளுக்கு பவுல் கடிதம் எழுதியிருக்கிறார் (கொலோ 4:10). தன்னுடைய மிஷினெரி பிரயாணத்தில் ஒரு சமயம் தனக்கு உதவிபுரிவதற்காக அப்போஸ்தலர் பவுல் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவானை வரவழைத்திருக்கிறார்.
ஊழியத்தில் மாற்கு அப்போஸ்தலர் பவுலுக்கு பிரயோஜனமுள்ளவனாக இருந்தார் (2தீமோ 4:11). பவுல் மாற்குவை தன்னுடைய உடன்வேலையாள் என்று அழைக்கிறார் (பிலே 24). அப்போஸ்தலர் பேதுரு மாற்குவை தன் குமாரன் என்று அழைக்கிறார் (1பேது 5:13). இந்த மாற்குவும், சுவிசேஷத்தை எழுதிய மாற்குவும் ஒரே நபரா என்பது உறுதிபண்ணப்படவில்லை.
யூதருடைய பராம்பரிய வரலாற்றின்படி, அப்போஸ்தலர் பேதுருவின் வழிநடத்துதலின் பிரகாரம் மாற்கு இந்த சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார் என்று ஒரு கருத்து உள்ளது. மாற்கு பேதுருவின் சீஷராகவும், அவருடைய மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். ரோமாபுரியிலிருந்து இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை சுருக்கமாக எழுதுவதற்காக மாற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். பேதுரு பிரசங்கம்பண்ணிய உபதேசங்களை மாற்கு தன்னுடைய கைப்பட எழுதியிருக்கிறார் என்று தெர்த்தூலியன் என்னும் பெயர் கொண்ட திருச்சபை வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் மாற்கு ஒருவரல்ல. ஆயினும் இவரும் லூக்காவும் எழுபது சீஷர்களில் அங்கத்தினர்கள் என்பது பொதுவான கருத்து. இந்த சுவிசேஷத்தை எழுதிய பின்பு மாற்கு எகிப்து தேசத்திற்கு போனார் என்று திருச்சபை வரலாற்று ஆசிரியர் யோரோம் குறிப்பிட்டிருக்கிறார். அலக்சந்திரியா பட்டணத்தில் மாற்கு சுவிசேஷத்தை முதன்முதலாக பிரசங்கித்து அங்கு ஒரு சபையை ஸ்தாபித்தார். அலக்சந்திரியா பட்டணத்து ஜனங்கள் மத்தியில் பரிசுத்தமாக ஜீவித்து இயேசுவுக்கு சாட்சியாக இருந்தார்.
மாற்கு எழுதின சுவிசேஷம் அளவில் சிறியது. மத்தேயு எழுதின சுவிசேஷத்தைப்போல இந்த சுவிசேஷத்தில் இயேசுகிறிஸ்துவின் பிரசங்கங்கள் விரிவாக எழுதப்படவில்லை. ஆயினும் இயேசுகிறிஸ்து நடப்பித்த அற்புதங்களுக்கு இந்த சுவிசேஷத்தில் அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாற்கு எழுதின சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கும் காரியங்களில் பல இந்த சுவிசேஷத்திலும் மறுபடியும் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வரலாற்றைப்பற்றி மத்தேயு எழுதின சம்பவங்களில் மாற்கு மேலும் பல குறிப்பிட்ட கருத்துக்களை சேர்த்திருக்கிறார். ஆயினும் இந்த சுவிசேஷத்தில் மாற்கு புதிய சம்பவம் எதுவும் எழுதவில்லை.
முக்கியமான சத்தியத்தை திரும்ப திரும்ப கூறுவதும், அடிக்கடி எழுதுவதும் மிகவும் நல்லது. இதனால் ஜனங்கள் சுவிசேஷத்தை மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பார்கள். மாற்கு இந்த சுவிசேஷத்தை ரோமாபுரியில் கிரேக்க பாஷையில் எழுதினார். இக்காலத்தில் கிரேக்க பாஷை எல்லா தேசங்களிலும் பேசப்பட்ட பொதுவான பாஷையாக வழக்கத்திலிருந்தது. அப்போஸ்தலர் பவுல் ரோமபுரிக்கு எழுதின நிருபத்தை கிரேக்க பாஷையிலேயே எழுதினார்.
மாற்கு சுவிசேஷம் எழுதப்பட்ட காலம் கி.பி. 57-63 ஆகும். இது எழுதப்பட்ட இடம் சரியாகத் தெரியவில்லை. இந்த சுவிசேஷத்தின் ஆசிரியர் யோவான் மாற்கு ஆவார்.
மாற்கு எழுதின சுவிசேஷம் முழுவதிலுமே கர்த்தருடைய ஊழியக்காரரின் சுபாவம் இயேசு கிறிஸ்துவிடம் வெளிப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு இந்த சுவிசேஷத்தில் கூறப்படவில்லை. ஊழியக் காரருக்கு வம்ச வரலாறு தேவையில்லை. என்று நினைத்திருக்கலாம். இந்தச் சுவிசேஷம் வார்த்தைகளின் சுவிசேஷம் அல்ல. கிரியைகளின் சுவிசேஷம். தெய்வீக ஏவுதலினால் மாற்கு இந்த சுவிசேஷ நூலை எழுதியிருக்கிறார். (லூக்கா 1:3; கலா 1:12-16; கலா 2:2)
இயேசு கிறிஸ்து கர்த்தருடைய ஊழியக்காரர்
இந்த சுவிசேஷத்தில் ஒரு ஊழியக்காரருடைய சுபாவங்கள் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவையாவன:
1. கிறிஸ்துவின் களைப்பு (மாற்கு 4:38; மாற்கு 11:12; மாற்கு 14:36)
2. இரக்கங்கள் (மாற்கு 6:34; மாற்கு 8:2)
3. அன்பு (மாற்கு 10:21)
4. தன்னிறைவு (மாற்கு 4:38-40; மாற்கு 15:5)
5. தனிமை (மாற்கு 1:35; மாற்கு 6:3-32)
6. ஆச்சரியம் (மாற்கு 6:6)
7. துக்கம் (மாற்கு 3:5)
8. பெருமூச்சு (மாற்கு 7:34; மாற்கு 8:12)
9. கோபம் (மாற்கு 3:5; மாற்கு 10:14)
10. ஊழியக்காரரின் இதர சுபாவங்கள் (மாற்கு 1:35; மாற்கு 3:7; மாற்கு 4:1,38; மாற்கு 6:7, 40; மாற்கு 12:41; மாற்கு 13:3; மாற்கு 15:39)
பொருளடக்கம்
ஒ. யோவான் ஸ்நானனின் ஊழியம் - (1:1-8)
ஒஒ. தமது ஊழியத்திற்காக இயேசுவின் இறுதி ஆயத்தம் - (1:9-13)
ஒஒஒ. இயேசுவின் ஊழியமும் உபதேசமும்
1. இயேசு தமது ஊழியத்தை கலிலேயாவில் ஆரம்பிக்கிறார் - (1:14-15)
2. பேதுரு, அந்திரேயா ஆகியோரின் அழைப்பு - (1:16-18)
3. யாக்கோபு, யோவான் ஆகியோரின் அழைப்பு - (1:19-20)
4. இயேசு கப்பர்நகூமை தமது ஊழிய ஸ்தலமாக ஆக்குகிறார் - (1:21-22)
5. இயேசு அசுத்த ஆவியை துரத்துகிறார் - (1:23-28)
6. பேதுருவின் மாமியை சொஸ்தமாக்குகிறார் - (1:29-31)
7. பிசாசுகளைத் துரத்துகிறார் - அநேகரை சொஸ்தமாக்குகிறார் - (1:32-34)
8. இயேசு கிறிஸ்துவின் அதிகாலை ஜெபம் - (1:35-37)
9. கலிலேயாவிற்கு இயேசுவின் முதலாவது பிரயாணம் - (1:38-39)
10. இயேசு குஷ்டரோகியைச் சுத்தமாக்குகிறார் - (1:40-45)
11. கப்பர்நகூமிற்குத் திரும்பி வருகிறார் - திமிர்வாதக்காரனை குணமாக்குகிறார் - (2:1-12)
12. லேவி என்னும் மத்தேயுவை அழைக்கிறார் - (2:13-14)
13. பரிசேயருக்கு பதிலுரை - (2:15-17)
14. யோவான் ஸ்நானனின் சீஷர்களுக்கு பதிலுரை - (2:18-20)
15. வஸ்திரம், துருத்திகள் ஆகியவற்றின் உவமை - (2:21-22)
16. இயேசு ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் - (2:23-28)
17. ஓய்வுநாளில் சூம்பின கையையுடைய ஒரு மனுஷனைச் சொஸ்தமாக்குகிறார் - (3:1-5)
18. இயேசுவை கொலைசெய்வதற்கு சதியாலோசனை - (3:6)
19. திரளான ஜனங்களை சொஸ்தமாக்குகிறார் - (3:7-12)
20. பன்னிரெண்டு பேரை பிரதிஷ்டை பண்ணுகிறார் - (3:13-15)
21. அப்போஸ்தலர்களின் பெயர்கள் - (3:16-19)
22. இயேசு மதிமயங்கியிருக்கிறார் என்று அவர்மீது குற்றச்சாட்டு - (3:20-21)
23. பரிசேயர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தேவதூஷணம் கூறுகிறார்கள் - பிரிந்திருக்கும் இராஜ்ஜியம் - (3:22-27)
24. மன்னிக்கப்படாத பாவம் - (3:28-30)
25. இயேசுவின் புதிய உறவினர்கள் - (3:31-35)
26. விதைக்கிறவனைப் பற்றிய உவமை - (4:1-9)
27. உவமைகளாக பேசுவதற்கு காரணம் - (4:10-13)
28. விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கம் - (4:14-20)
29. விளக்கைப் பற்றிய உவமை - (4:21-25)
30. விதையைப் பற்றிய உவமை - (4:26-29)
31. கடுகு விதையைப் பற்றிய உவமை - (4:30-34)
32. இயேசு புயல்காற்றை அமைதிப் படுத்துகிறார் - (4:35-41)
33. கதரேனருடைய நாட்டில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன் - (5:1-20)
34. பன்னிரெண்டு வருஷமாக பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமடைகிறாள் - யவீருவின் மகளை இயேசு உயிருடன் எழுப்புகிறார் - (5:21-43)
35. நாசரேத்தில் இயேசு - ஜனங்கள் இயேசுவை மறுபடியும் ஏற்றுக் கொள்ளவில்லை - (6:1-5)
36. இயேசு மறுபடியும் கலிலேயாவிற்கு பிரயாணம் பண்ணுகிறார் - (6:6)
37. இயேசு பன்னிரெண்டு சீஷர்களை ஊழியம் செய்வதற்கு வெளியே அனுப்புகிறார் - (6:7-13)
38. ஏரோதுவின் கலங்கிய மனச்சாட்சி - யோவான் ஸ்நானனை சிரச்சேதம் பண்ணுகிறான் - (6:14-29)
39. பன்னிரெண்டு சீஷர்களும் திரும்பி வருகிறார்கள் - (6:30-31)
40. இயேசு ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக போஜனம் கொடுக்கிறார் - (6:32-44)
41. இயேசு தண்ணீரின்மீது நடக்கிறார் - (6:45-52)
42. கெனேசரேத்து நாட்டில் வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்குகிறார் - (6:53-56)
43. வேதபாரகரையும் பரிசேயரையும் இயேசு கடிந்து கொள்கிறார் - (7:1-13)
44. மனுஷனை தீட்டுப்படுத்தும் காரியம் - பாவங்கள் ஆத்துமாவை அழிக்கும் - (7:14-23)
45. சீரோபேனிக்கேய ஸ்திரீயின் மகளை இயேசு குணப்படுத்துகிறார் - (7:24-30)
46. கொன்னை வாயுடைய செவிடனை சொஸ்தமாக்குகிறார் - (7:31-37)
47. நான்காயிரம் பேருக்கு இயேசு அற்புதமாக போஜனம் கொடுக்கிறார் - (8:1-9)
48. பரிசேயரை இயேசு மறுபடியும் கடிந்து கொள்கிறார் - (8:10-13)
49. பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளித்தமாவைப் பற்றிய விளக்கம் - (8:14-21)
50. இயேசு குருடனை சொஸ்தப்படுத்துகிறார் - (8:22-26)
51. பேதுருவின் அறிக்கை - (8:27-30)
52. தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (8:31)
53. இயேசுவும் பேதுருவும் ஒருவரையொருவர் கடிந்து கொள்கிறார்கள் - (8:32-33)
54. சீஷத்துவத்திற்குச் சோதனை - ஆத்துமாவின் மதிப்பு - (8:34-38)
55. மறுரூபமாதல் - வரப்போகும் இராஜ்ஜியத்திற்கு ஒரு முன்னோட்டம் - (9:1-10)
56. யோவான் ஸ்நானனும், எலியாவும் - (9:11-13)
57. வல்லமையில்லாத சீஷர்களும் சர்வ வல்ல கிறிஸ்துவும் - (9:14-27)
58. ஜெபமும் உபவாசமும் - (9:28-29)
59. தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலைக் குறித்து இயேசு மறுபடியும் முன்குறித்துக் கூறுகிறார் - (9:30-32)
60. தாழ்மையைப் பற்றிய உபதேசம் - (9:32-37)
61. இயேசு பிரிவினையைக் கடிந்து கொள்கிறார் - (9:38-41)
62. விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்குகிறவன் - (9:42)
63. இடறல் உண்டாக்கும் சரீரத்தின் அவயவங்கள் - (9:43-50)
64. மனைவியைத் தள்ளிவிடுதல் சம்பந்தமான பிரமாணம் - (10:1-9)
65. மனைவியைத் தள்ளிவிடுவதினால் ஏற்படும் விளைவுகள் - (10:10-12)
66. இயேசு சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் - (10:13-16)
67. மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபன் - (10:17-22)
68. ஐசுவரியவான்களுக்கு எச்சரிப்பு - (10:23-27)
69. முழுமையான அர்ப்பணிப்பிற்கு வெகுமதிகள் - (10:28-31)
70. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மறுபடியும் முன்குறித்துக் கூறுகிறார் - (10:32-34)
71. யாக்கோபு, யோவான் ஆகியோரின் மாம்ச சுபாவம் - (10:35-40)
72. மற்ற பத்து பேரின் மாம்ச சுபாவம் - (10:41-45)
73. இயேசு குருடனைக் குணப்படுத்துகிறார் - (10:46-52)
74. வெற்றிப்பவனி - (11:1-11)
75. கனிதராத அத்தி மரத்தை சபிக்கிறார் - (11:12-14)
76. தேவாலயத்தின் இரண்டாம் சுத்திகரிப்பு - (11:15-19)
77. ஜெபிக்கும்போது விசுவாசம் தேவை - (11:20-24)
78. ஜெபத்திற்கு பதில் கிடைப்பதற்கு நிபந்தனை - (11:25-26)
79. இயேசுவின் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார்கள் - (11:27-33)
80. திராட்சைத் தோட்டத்திற்கு எஜமானைப் பற்றிய உவமை - (12:1-12)
81. வரிப்பணத்தைப் பற்றிய உவமை - (12:13-17)
82. உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி - (12:18-27)
83. பிரதான கற்பனை - (12:28-34)
84. இயேசு பரிசேயரிடம் கேட்ட கேள்விகள் - (12:35-37)
85. வேதபாரகரின் ஆறு பாவங்கள் - (12:38-40)
86. விதவை காணிக்கையாக போட்ட ஒரு துட்டு - (12:41-44)
87. ஒலிவமலையின்மேல் இயேசு கூறிய தீர்க்கதரிசனம் - (மத் 24-25; மாற்கு 13; லூக் 21)
(1) எருசலேமின் அழிவை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (13:1-2)
(2) இரண்டு பெரிய கேள்விகள் - (13:3-4)
(3) அடையாளங்கள் - இயேசுவின் இரண்டாம் வருகை -
(அ) யூதர்களுடைய வருத்தங்களின் ஆரம்பத்தில் எட்டு அடையாளங்கள் - (13:5-8)
(ஆ) இஸ்ரவேலின் வருத்தங்களின்போது எட்டு அடையாளங்கள் - (13:9-13)
(இ) பாழாக்குகிற அருவருப்பு - (13:14)
(ஈ) இஸ்ரவேல் அந்திக்கிறிஸ்துவிடம் தோற்றுபோகிறார்கள் - (13:15-18)
(உ) மகா உபத்திரவம் - (13:19-20)
(ஊ) மகா உபத்திரவத்தின் ஆறு அடையாளங்கள் - (13:21-23)
(4) இரண்டாம் வருகையின் விதமும் காலமும் - (13:24-27)
(5) அத்தி மரத்தைப் பற்றிய உவமை - (13:28-29)
(6) இந்த தீர்க்கதரிசனத்தின் எல்லா அடையாளங்களும் ஒரே சந்ததியில் நடைபெறும் - (13:30-31)
(7) இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும் நேரம் யாருக்கும் அறிவிக்கப் படவில்லை - (13:32-36)
88. இயேசுவை கொலைசெய்ய முயற்சி - (14:1-2)
89. இயேசுவின் அபிஷேகம் - (14:3-9)
90. இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் ஒப்புக்கொள்கிறான் - (14:10-11)
91. பஸ்காவின் ஆயத்தம் - (14:12-16)
92. கடைசி பஸ்கா
(1) தாம் காட்டிக்கொடுக்கப்படப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (14:17-21)
(2) கர்த்தருடைய பந்தி - (14:22-26)
(3) பேதுரு தம்மை மறுதலிக்கப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் - (14:27-31)
ஒய. கிறிஸ்துவின் பாடுகள்
1. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் துக்கமும் வியாகுலமும் - (14:32-42)
2. இயேசுவை கொல்வதற்கு முயற்சி - காட்டிக் கொடுக்கப்படுவதும் கைதுபண்ணப்படுவதும் - (14:43-52)
3. இயேசுவின் வழக்கு விசாரணையும் பரியாசமும் - (14:53-65)
4. பேதுரு மறுதலிக்கிறான் - (14:66-72)
5. பிலாத்துவிற்கு முன்பாக இயேசு - (15:1-6)
6. இயேசுவிற்கு தண்டனையும் பரபாசிற்கு விடுதலையும் - (15:7-15)
7. இயேசுவின் சிரசின்மீது முள்முடி - (15:16-21)
8. இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் - (15:22-32)
9. இயேசுவின் மரணம் - (15:33-41)
10. இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ணுகிறார்கள் - (15:42-47)
ய. உயிர்த்தெழுந்த பின்பு இயேசுவின் ஊழியம்
1. உயிர்த்தெழுதலுக்கு கர்த்தருடைய தூதனின் சாட்சி - (16:1-7)
2. உயிர்த்தெழுதலுக்கு ஸ்திரீகளின் சாட்சி - (16:8-11)
3. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சீஷர்களின் சாட்சி - (16:12-14)
4. பிரதான கட்டளை - (16:15-18)
5. இயேசு பரமேறுகிறார் - (16:19)
6. அப்போஸ்தலருடைய நடபடிகளும் ஆதிகால விசுவாசிகளும் - (16:20)