பஸ்காவும் தலைபிள்ளை சங்காரமும்
கர்த்தர் இஸ்ரவேல் சபையாருக்கு பல நியமங்களைக் கொடுத்திருக்கிறார். அவைகளில் பஸ்கா நியமம் மிகவும் பிரதானமானது. புதிய ஏற்பாட்டில் பஸ்காவைப்பற்றி பல வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
பஸ்கா நியமத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவையாவன :
1. பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, அதைப் புசிப்பது (யாத் 12:1-6,8-11).
2. அடிக்கப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை, அதைப் புசிக்கும் வீட்டு வாசல் நிலைக்கால்கள் இரண்டிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிப்பது (யாத் 12:7). பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை இவ்வாறு தெளிப்பதற்கான காரணம் (யாத் 12:13).
பஸ்காவை ஆசரிக்கும்போது, ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்படுவது விசேஷித்த சம்பவமாகும். ""விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்'' (எபி 11:28).
3. பஸ்காவை தொடர்ந்து, ஏழுநாட்களுக்கு புளிப்பில்லா அப்பப்பண்டிகை ஆசரிக்கப்படுவது (யாத் 12:14-20).
பஸ்காவைப்பற்றிய நியமம் இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுக்கு கட்டளையிட்ட பிரகாரம் பஸ்காவை ஆசரிக்கிறார்கள்.
முதலாவது பஸ்கா (யாத் 12:21-23). பஸ்காவுக்கு பின்பு (யாத் 12:24-27). இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அப்படியே செய்கிறார்கள் (யாத் 12:28).
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை சங்காரத்திற்கு தப்புவிக்கப்பண்ணுகிறார். இந்த சம்பவம் பரிசுத்த வேதாகமத்தில் பல வசனப்பகுதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவத்தைவிட, பஸ்காவைப்பற்றிய சம்பவமே பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.
கர்த்தர் எகிப்து தேசத்திலிருந்த முதற்பேறு அனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்று அனைத்தையும் அழிக்கிறார் (யாத் 12:29-30).
பார்வோனும், எகிப்தியரும் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து தீவிரமாய் அனுப்பிவிடுகிறார்கள் (யாத் 12:31-33). இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போகிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் பிசைந்த மா புளிக்கும் முன்பாக அதை தங்களோடுகூட எடுத்துக்கொண்டு எகிப்து தேசத்திலிருந்து போகிறார்கள் (யாத் 12:34). அவர்கள் எகிப்தியருடைய பொன்னுடமைகளையும், வஸ்திரங்களையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார்கள் (யாத் 12:35,36).
இஸ்ரவேல் புத்திரரோடுகூட பல ஜாதியான ஜனங்களில் அநேகரும் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போகிறார்கள் (யாத் 12:37,38). இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லா அப்பங்களை சுட்டுப்புசிக்கிறார்கள் (யாத் 12:39). பஸ்காவின் நியமம் (யாத் 12:40-51).
கர்த்தருடைய பஸ்கா யாத் 12:1-20
யாத் 12:1. கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரானையும் நோக்கி:
யாத் 12:2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
யாத் 12:3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
யாத் 12:4. ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்தி-ருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
யாத் 12:5. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.
யாத் 12:6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
யாத் 12:7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
யாத் 12:8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
யாத் 12:9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
யாத் 12:10. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
யாத் 12:11. அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
யாத் 12:12. அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
யாத் 12:13. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும் போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
யாத் 12:14. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
யாத் 12:15. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளி-ருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரி-ருந்து அறுப்புண்டுபோவான்.
யாத் 12:16. முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறவதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
யாத் 12:17. புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்தி-ருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
யாத் 12:18. முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
யாத் 12:19. ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
யாத் 12:20. புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் பஸ்காவைப்பற்றிய நியமத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரானையும் நோக்கி, ""இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக'' (யாத் 12:1,2) என்று சொல்லுகிறார்.
இஸ்ரவேல் புத்திரருக்கு இதுவரையிலும், வருஷத்தின் முதலாவது மாதம் செப்டம்பர் மாதத்தின் நடுவில் வரும். கர்த்தர் முதலாவது மாதத்தை மாற்றுகிறார். இனிமேல் அவர்களுடைய வருஷத்தின் முதலாம் மாதம் மார்ச் மாதத்தின் நடுவில் வரும்.
நாம் ஒவ்வொரு வருஷத்தின் முதல் மாதத்தையும் கர்த்தரோடு ஆரம்பம் பண்ணவேண்டும். நம்முடைய ஜீவியம் கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கும்போது, வருஷத்தின் முதலாம் மாதத்தையும், கர்த்தரோடு ஆரம்பிப்பது நமக்கு ஆசீர்வாதமாயிருக்கும்.
இஸ்ரவேல் புத்திரருக்கு, வருஷத்தின் முதலாம் மாதம் வசந்தகாலமாயிருக்கிறது. மரங்களிலும் தாவரங்களிலும் புதிய இலைகள் துளிக்கிறது. இஸ்ரவேல் ஜனத்தாருக்கு கர்த்தருடைய புதிய கிருபை கிடைத்திருக்கிறது. அவர்களுடைய புதுவாழ்வு இப்போது ஆரம்பமாகிறது.
மோசே கர்த்தருடைய கட்டளையின் பிரகாரமாக எகிப்து தேசத்தின்மீது பத்து வாதைகளை வரப்பண்ணுகிறார். ஒவ்வொரு வாதை வரும்போதும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போகும் நாள் சமீபமாய் வருகிறது. இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்து தேசத்திலே நானூற்று முப்பது வருஷங்கள் அடிமைகளாகயிருந்தார்கள். அவர்கள் இப்போது திடீரென்று விடுவிக்கப்படுகிறார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு தங்களுடைய உடமைகளையெல்லாம் சேகரித்து எடுத்துக்கொண்டுபோக போதுமான காலஅவகாசம் கொடுக்கப்படவில்லை.
இஸ்ரவேல் புத்திரர் அவசரம் அவசரமாக எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகிறார்கள். தங்கள் தேசத்தைவிட்டு சீக்கிரத்தில் புறப்பட்டுப்போகுமாறு, எகிப்தியர்களும் இஸ்ரவேல் புத்திரரை துரிதப்படுத்துகிறார்கள். தங்களுக்கு எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்னும் நம்பிக்கைகூட இஸ்ரவேல் புத்திரருடைய மனதில் இதுவரையிலும் ஏற்படவில்லை. இப்போது இஸ்ரவேல் புத்திரர் விடுவிக்கப்படுவது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாயிருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரருக்கு அவர்களுடைய சுயபலத்தினாலோ அல்லது சுயபராக்கிரமத்தினாலோ எகிப்து தேசத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. கர்த்தருடைய பலத்த புயத்தினால் அவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. ஆகையினால் இஸ்ரவேல் புத்திரர், எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகும் முன்பாக, கர்த்தரை கனம்பண்ணுகிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்டிருக்கிற பஸ்காவை, பயபக்தியோடு ஆசரிக்கிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போவதற்கு, கர்த்தர் ஒரு இரவு வேளையை நியமித்திருக்கிறார். அந்த இரவு வேளையில் தானே, இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும், எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டுப்போகவேண்டும். அந்த நாளிலே அவர்கள் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.
இஸ்ரவேல் சபையார் யாவரும் பஸ்காவை எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்றும் கர்த்தர் கட்டளை கொடுக்கிறார். கர்த்தர் இந்தக் கட்டளையை, மோசே ஆரோன் ஆகியோர் மூலமாக இஸ்ரவேல் சபையார் யாவருக்கும் சொல்லுகிறார்.
பஸ்காவை ஆசரிக்க வேண்டிய விதமாவது இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்தி-ருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம் (யாத் 12:3-5).
பஸ்கா ஆட்டுக்குட்டியை, இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடிக்கவேண்டும் (யாத் 12:6).
பஸ்கா ஆட்டுக்குட்டியை அடிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே, அந்த ஆட்டுக்குட்டியை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை பத்தாம் தேதியிலே தெரிந்துகொண்டு அதை பதினாலாம் தேதி சாயங்காலத்திலே அடிக்கவேண்டும்.
பஸ்கா கர்த்தருடைய நியமம். கர்த்தர் தங்களுக்கு செய்திருக்கிற நன்மைகளை நினைவுகூரும் வண்ணமாக, இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரித்து கர்த்தரை கனம்பண்ணுகிறார்கள். பஸ்காவை எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாரோ, அதன் பிரகாரமாகவே அவர்கள் பஸ்காவை ஆசரிக்கிறார்கள்.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது வாதைகளை வரப்பண்ணுகிறார். அந்த வாதைகள் இஸ்ரவேல் புத்திரர்மீது வரவில்லை. கர்த்தர் தம்முடைய ஜனத்தை வாதைகளுக்கு தப்புவிக்கப்பண்ணுகிறார். எகிப்தியர்மீது வந்த வாதை, இஸ்ரவேல் புத்திரர்மீது வராமலிருப்பது கர்த்தருடைய சுத்தகிருபை. கர்த்தர் தங்களுக்கு செய்த எல்லா நன்மைகளையும் இஸ்ரவேல் புத்திரர் நினைவுகூர்ந்து, பஸ்காவை ஆசரிக்கிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் பதினாலாம்தேதி சாயங்காலத்திலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்க வேண்டும் (யாத் 12:8).
இஸ்ரவேல் புத்திரர் பஸ்கா ஆட்டுக்குட்டியை எவ்வாறு புசிக்கவேண்டும் என்றும் கர்த்தர் கட்டளை கொடுக்கிறார். ""அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா'' (யாத் 12:11).
இஸ்ரவேல் புத்திரர் அன்று இராத்திரியிலே பஸ்கா ஆட்டுக்குட்டி முழுவதையும் புசித்துவிடவேண்டும். அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும் (யாத் 12:10).
கர்த்தர் நமக்கு அன்றன்றுள்ள அப்பத்தைக் கொடுத்து, நம்மைப் போஷிக்கிறார். நாம் நாளையதினத்து போஜனத்திற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய தெய்வீக பராமரிப்பை உணரவேண்டும். ஆகையினால் அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்கக்கூடாது. கர்த்தரே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்துகிறார். தங்களை வழிநடத்துகிற கர்த்தர், தங்களைப் போஷிப்பார் என்று இஸ்ரவேல் புத்திரர் நம்பவேண்டும்.
பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்க வேண்டும். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிக்கவேண்டும் (யாத் 12:8,9).
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகும் நாளை மறவாமல் நினைவுகூரவேண்டும். அவர்களுடைய பின்சந்ததியாரும் பஸ்கா பண்டிகையை தங்கள் தலைமுறை தோறும் நித்திய நியமமாக ஆசரிக்கவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர் பஸ்கா பண்டிகையை எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்றும் கர்த்தர் அவர்களுக்கு கட்டளை கொடுக்கிறார். அதன் விவரம் வருமாறு :
அந்த நாள் அவர்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கவேண்டும்; அவர்கள் அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிக்கவேண்டும். அதை தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கவேண்டும்.
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கவேண்டும். முதலாம் நாளில்தானே புளித்தமாவை தங்கள் வீடுகளி-ருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரி-ருந்து அறுப்புண்டுபோவான்.
முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறவதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிக்கவேண்டும்; இந்த நாளில்தான் கர்த்தர் இஸ்ரவேல்ƒபுத்திரரின் சேனைகளை எகிப்து தேசத்தி-ருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கவேண்டும்.
முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கவேண்டும்.
ஏழுநாளளவும் தங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் அவர்கள் புசிக்கக்கூடாது. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கவேண்டும் (யாத் 12:14-20).
இஸ்ரவேல் புத்திரர் பஸ்கா பண்டிகையை ஏழுநாட்களுக்கு ஆசரிக்கவேண்டும். இந்த ஏழுநாட்களிலும் அவர்கள் புளிப்பில்லா அப்பத்தை மாத்திரம் புசிக்கவேண்டும். இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போன அந்த இராத்திரியிலே, புளிப்பில்லா அப்பத்தைப் புசித்தார்கள். அந்த நாளை நினைவுகூரும் வண்ணமாக, இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும், ஒவ்வொரு வருஷமும், பஸ்கா பண்டிகையின்போது, ஏழுநாட்களுக்கு புளிப்பில்லா அப்பத்தை மாத்திரம் புசிக்கவேண்டும்.
பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறது. ""ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக ப-யிடப்பட்டிருக்கிறாரே'' (1கொரி 5:7).
பஸ்காவின்போது ஆட்டுக்குட்டி அடிக்கப்படுகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே தேவஆட்டுக்குட்டியாகயிருக்கிறார். ""மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' (யோவா 1:29) என்று சொன்னார்.
வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் ஆட்டுக்குட்டியானவரைப்பற்றி பல வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவானவர் சாந்தகுணமுள்ள ஆட்டுக்குட்டியைப்போல இருக்கிறார். அவர் மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்கு முன்பாக, சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அமைதியாகயிருக்கிறார். அவர் அடிக்கப்படும்போது தம்முடைய பாடுகளை பொறுமையாக சகித்துக்கொள்கிறார்.
பஸ்கா ஆட்டுக்குட்டி பழுதற்றதும், ஆணும், ஒரு வயது உள்ளதுமாயிருக்கவேண்டும் (யாத் 12:5). ஆட்டுக்குட்டிக்கு ஒரு வயது என்பது, அதன் ஜீவியத்தின் பிரதான பகுதி. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய ஜீவியத்தின் பிரதான பகுதியில், தம்மை அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவானவர் பெத்லகேமிலே சிறுபிள்ளையாகயிருந்தபோது, அவர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முப்பத்து மூன்றரை வயதாகும்போது, அவர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார்.
பஸ்கா ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்கவேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் பாவம் எதுவுமில்லை. அவர் பரிசுத்தர்.
""குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே'' (1பேது 1:19).
இஸ்ரவேல் புத்திரரின் வீட்டுத்தலைவர்கள் வருஷத்தின் முதலாம் மாதம் பத்தாம் தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை தெரிந்துகொள்ளவேண்டும். அதை அவர்கள் அந்த மாதத்தின் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, அன்று சாயங்காலத்திலே அதை அடிக்கவேண்டும் (யாத் 12:3,6).
இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளில் பல ஆடுகள் இருந்தாலும், பஸ்கா ஆட்டுக்குட்டியானது, அடிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. இது மற்ற ஆடுகளிலிருந்து வேறுபிரிக்கப்பட்ட ஆடாகயிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்முடைய ஆத்தும இரட்சகராக வேறுபிரிக்கப்பட்டு, விசேஷித்தவராயிருக்கிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பஸ்கா பண்டிகையின்போது, கல்வாரி சிலுவையில் அறையப்பட்டார். பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்படுகிற அதே நாளிலே, நம்முடைய பஸ்காவாகிய இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் அறையப்பட்டது, தெய்வீக சித்தமாகும்.
பஸ்கா ஆட்டுகுட்டி அடிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, அது வேறுபிரிக்கப்பட்டு ஆயத்தமாக வைக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துவானவர் கல்வாரி சிலுவையில் அறையப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக, எருசலேம் நகரத்திற்குள் பிரவேசித்தார். அந்த நாளிலேதானே யூதர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை தெரிந்துகொண்டு, அதை வேறுபிரிப்பது வழக்கம்.
பஸ்கா ஆட்டுக்குட்டி, சாயங்காலத்திலே அடிக்கப்படும். அன்று இராத்திரியிலே ஆட்டுக்குட்டியின் மாம்சம் நெருப்பினால் சுடப்படும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அனுபவித்த மகாவேதனைகளுக்கு, பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சம் நெருப்பினால் சுடப்படுவது அடையாளமாயிருக்கிறது. கிறிஸ்துவானவர் மரணபரியந்தம் வேதனைகளை அனுபவித்தார். அவர் கல்வாரி சிலுவையிலே தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார்.
இஸ்ரவேல் சபையார் யாவரும் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடிக்கவேண்டும். யூதர்கள் எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து, இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். கிறிஸ்துவானவர் இந்த உலகத்தின் கடைசி காலத்திலே, யூதர்களுடைய கையினால் பாடுகளை அனுபவித்தார்.
""பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் ப-யிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே ப-யிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்'' (எபி 9:25,26)
""ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்'' (லூக் 23:18).
இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் விசுவாசிகளாகிய நமக்கு ஜீவன் உண்டாயிருக்கிறது. இஸ்ரவேல் சபையார் யாவரும் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். புதிய ஏற்பாட்டுக்காலத்தில், விசுவாசிகளாகிய நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலராயிருக்கிறோம். நம்முடைய நன்மைக்காக கிறிஸ்துவானவர் கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை, ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்.
பஸ்கா ஆட்டுக்குட்டியில் ஒரு எலும்பையும் முறிக்கப்படாது (யாத் 12:46). இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரிக்கும்போது அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படவில்லை.
""அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை'' (யோவா 19:33)
""அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது'' (யோவா 19:36).
எலும்பு பலத்திற்கும், வல்லமைக்கும் அடையாளம். இயேசுகிறிஸ்துவின் எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படவில்லை என்பது, அவருடைய வல்லமை முறிந்துபோகவில்லை அல்லது குறைந்துபோகவில்லை என்பதற்கு அடையாளமாயிருக்கிறது.
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டு வாசல் நிலைக்கால்கள் இரண்டிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கப்பட வேண்டும். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்படுவது, மிகவும் விசேஷமான ஒரு சம்பவமாகும் (யாத் 12:7).
பஸ்கா ஆட்டுக்குட்டியை அடிக்கும்போது, அதின் இரத்தம் சிந்தப்படும். ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தப்பட்டால் மாத்திரம் போதாது. அந்த இரத்தம் தெளிக்கப்படவும் வேண்டும். இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் நன்மைகள் நம்முடைய ஆத்துமாக்களுக்கும் கிடைக்கவேண்டும். நாம் விசுவாசத்தினால் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய ஆத்துமா இரட்சிக்கப்படும்.
""அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்'' (ரோம 5:11).
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ஈசோப் கொழுந்துகளின் கொத்தை எடுத்து, அதை அந்த இரத்தத்தில் தோய்த்து, வாசல் நிலைக்கால்களின் மேல்சட்டத்தில், வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளிக்கவேண்டும் (யாத் 12:22). ஈசோப் கொழுந்துகளின் கொத்தை கிண்ணியிலிருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதைத் தெளிக்கவேண்டும்.
நம்முடைய விசுவாசம் ஈசோப் கொழுந்துகளின் கொத்திற்கு அடையாளமாயிருக்கிறது. கொத்தை கிண்ணியிலிருக்கும் இரத்தத்தில் தோய்ப்பதுபோல, நம்முடைய விசுவாசத்தை இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களில் தோய்த்து, அவற்றை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்.
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கப்பட வேண்டும். நாம் இயேசுகிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசத்தை வெளிப்படையாக சாட்சியாய் அறிவிப்பதற்கு இந்த சம்பவம் அடையாளமாயிருக்கிறது. நாம் கர்த்தருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிகிறோம் என்பதற்கு இது அடையாளமாகும்.
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கப்படுகிறது. அந்த இரத்தம் வீட்டு வாசற்படியின்மேல் தெளிக்கப்படவில்லை. வாசல்படியின்மீது கால்பதித்து நடக்கிறோம். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் உடன்படிக்கையின் இரத்தமாகயிருப்பதினால், அந்த இரத்தத்தை நாம் காலில் போட்டு மிதித்துவிடக்கூடாது இதற்கு அடையாளமாக, பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வாசல்படியின்மீது தெளிக்கப்படுவதில்லை.
""தேவனுடைய குமாரனைக் கா-ன் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்த மென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்'' (எபி 10:29).
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கப்படுகிறது. இது இஸ்ரவேல் புத்திரருக்கு பாதுகாப்பைத் தருகிறது. சங்காரதூதன், எகிப்து தேசத்திலுள்ள தலைச்சன் பிள்ளைகளை அதம்பண்ணும்போது, எந்த வீட்டின் நிலைக்கால்களிலும், நிலையின் மேற்சட்டத்திலும் இரத்தம் தெளிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த இரத்தத்தைப் பார்த்து, சங்காரதூதன் அந்த வீட்டிலுள்ளவர்களை அழிக்காமல் கடந்துபோவார்.
""அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும் போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்'' (யாத் 12:12,13).
அழிக்கும் வாதை இஸ்ரவேல் புத்திரருக்கு வராதிருக்கும் என்பதற்கு பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம், அடையாளம். எங்கே இரத்தம் தெளிக்கப்பட்டிருக்கிறதோ, அங்கே சங்காரதூதனுக்கு அழிக்கும் வேலை இல்லை.
பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, அதின் மாம்சத்தை புசிக்கவேண்டும். ஆட்டுக்குட்டியின் மாம்சத்தைப் புசிப்பது என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நாம் செய்ய வேண்டிய சுவிசேஷ ஊழியத்திற்கு அடையாளமாயிருக்கிறது.
பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்படவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி வீட்டில் அழகுக்காக கட்டிவைக்கப்படும் ஆடு அல்ல. அல்லது நாம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக பஸ்கா ஆட்டுக்குட்டி தெரிந்துகொள்ளப்படவில்லை. அது அடிக்கப்படுவதற்காகவே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தால் மாத்திரம் போதாது. அதின் மாம்சத்தைப் புசிக்கவும் வேண்டும். அப்போது ஆட்டுக்குட்டியின் மாம்சம், அதைப்ƒƒபுசிக்கிறவர்களோடு ஐக்கியமாயிருக்கும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே நமக்கு பஸ்கா ஆட்டுக்குட்டியாயிருக்கிறார். நம்முடைய விசுவாசத்தினால், நாம் கிறிஸ்துவானவரை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும். பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தைப் புசிப்பதுபோல, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் போஜனமாக புசிக்கவேண்டும். இதனால் நமக்கு ஆவிக்குரிய ஆகாரமும், ஆவிக்குரிய போஜனமும், ஆவிக்குரிய பெலனும் கிடைக்கும். போஜனத்திலிருந்து நமது சரீரத்திற்கு பெலன் கிடைப்பதுபோல, இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தை மூலமாய் நம்முடைய ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் ஆவிக்குரிய பெலன் கிடைக்கிறது.
""அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது'' (யோவா 6:53-55) என்று சொன்னார்.
இஸ்ரவேல் புத்திரர் பஸ்கா ஆட்டுக்குட்டியிலுள்ள யாவையும் ஏகமாய் புசிக்கவேண்டும். அதிலே ஒன்றையும் விடியற்கால மட்டும் மீதியாய் வைக்கக்கூடாது (யாத் 12:9,10).
நாம் விசுவாசத்தினாலே இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை போஜனமாகப் புசிக்கிறோம். கிறிஸ்துவானவருடைய வார்த்தைகளை அரையும் குறையுமாக போஜனம்பண்ணக்கூடாது. அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் நாம் புசிக்கவேண்டும். அப்போதுதான் நமக்குள்ளே கிறிஸ்துவானவர் பூரணமாக உருவாகுவார். நாம் கிறிஸ்துவின் பூரண சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நமக்கு பூரண பலன் உண்டாகும்.
நாம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை பூரணமாய் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய நுகத்தையும் ஏற்றுக்கொள்வோம். அதுபோலவே நாம் கிறிஸ்துவையும் அவருடைய சிலுவையையும் ஏற்றுக்கொள்வோம். அது மாத்திரமல்ல, நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது அவருடைய கிரீடத்தையும் ஏற்றுக்கொள்வோம்.
இஸ்ரவேல் புத்திரர் பஸ்கா ஆட்டுக்குட்டியை புசிக்கும்போது, அதை ஏகமாய் உடனே புசிக்கவேண்டும். அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்கக்கூடாது.
நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து, இன்றைக்கு பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆகையினால் நாம் இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கு காலதாமதம்பண்ணாமல், இன்றைக்கே அவரை நம்முடைய ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரை நாளைக்கு இரட்சகராக ஏற்றுக்கொள்ளலாம் என்று காலதாமதம்பண்ணக்கூடாது.
பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை, கசப்பான கீரையோடு புசிக்கவேண்டும் (யாத் 12:8). இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே 430 வருஷங்களுக்கு அடிமைகளாகயிருந்தார்கள். இது அவர்களுக்கு கசப்பான அனுபவம். எகிப்து தேசத்தில் இஸ்ரவேல் புத்திரர் அனுபவித்த அடிமைத்தனத்தின் கசப்பான அனுபவத்தை நினைவுகூரும் வண்ணமாக, பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை, கசப்பான கீரையோடு புசிக்கவேண்டும்.
நம்முடைய பாவம் நமக்கு கசப்பாயிருக்கிறது. கசப்பான பாவத்திற்கு, கசப்பான கீரை அடையாளமாயிருக்கிறது. நம்முடைய பாவம் கசப்பாகயிருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் ஆத்தும இரட்சிப்பு, நமக்கு மதுரமான அனுபவத்தைக் கொடுக்கும்.
இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை புசிக்கும்போது, தங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், தங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், தங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும், அதை தீவிரமாய் புசிக்கவேண்டும் (யாத் 12:11). இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போக ஆயத்தமாயிருக்கிறார்கள். தீவிரமாக பிரயாணம் ƒபுறப்படுகிறவர்கள், அவசரம் அவசரமாக போஜனம்பண்ணுவார்கள். அதுபோலவே இஸ்ரவேல் புத்திரர் பிரயாண ஆயத்தத்தோடு பஸ்காவை புசிக்க வேண்டும்.
நாம் விசுவாசத்தினாலே இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை புசிக்கும்போது, பாவம் நம்மை ஆளுகை செய்யக்கூடாது. நாம் உலகப்பிரகாரமான ஆசைகளையும், பாவத்தின் சிற்றின்பங்களையும் வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும். கிறிஸ்துவுக்காக பாவமான எல்லாவற்றையும் விட்டு விலகி வரவேண்டும். நாம் மறுபடியும் பாவத்தோடு உடன்படிக்கை செய்து, அதற்கு பங்காளிகளாகிவிடக்கூடாது.
""ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம். நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்'' (எபி 13:13,14).
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாள், அவர்களுக்கு நினைவுகூருதலான நாளாயிருக்கவேண்டும். அதை அவர்கள் கர்த்தருக்கு பண்டிகையாக ஆசரிக்கவேண்டும். இந்தப் பண்டிகை புளிப்பில்லா அப்பப்பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. கர்த்தருக்காக ஆசரிக்கப்படும் இந்தப் பண்டிகையை, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கவேண்டும்.
புளிப்பில்லா அப்பப்பண்டிகை நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்திற்கு அடையாளமாயிருக்கிறது.
""ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக ப-யிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்'' (1கொரி 5:7,8).
விசுவாசிகளாகிய நாம் இயேசுகிறிஸ்துவை நம்முடைய ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆகையினால் நாம் பரிசுத்த சந்தோஷத்தோடே கர்த்தருக்கு பண்டிகையை ஆசரிக்கவேண்டும். இது கர்த்தருடைய பஸ்காவாக இருக்கிறது. ஆகையினால் விசுவாசிகள் எல்லோரும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள், எப்போதும் சந்தோஷமாகயிருந்து, கர்த்தருக்கு பண்டிகையை ஆசரிக்கவேண்டும்.
கர்த்தருடைய பண்டிகையை நித்திய நியமமாக ஆசரிக்கவேண்டும். கர்த்தருடைய பண்டிகை எப்போதும் தொடர்ந்து ஆசரிக்கப்படவேண்டும். கர்த்தருடைய பண்டிகை என்பது, விசுவாசிகள் கர்த்தருக்குள் சந்தோஷமாகயிருப்பதற்கு அடையாளம். விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பண்டிகையை தொடர்ந்து ஆசரித்து, கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருக்கவேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தம்.
நாம் கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாயில்லையென்றால், அதற்கு கிறிஸ்துவானவர் காரணமல்ல. நாம் கர்த்தருடைய பண்டிகையை தொடர்ந்து ஆசரிக்கவில்லை என்பதே காரணம்.
கர்த்தருடைய பண்டிகையில் புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கவேண்டும். ஆகையினால் இது புளிப்பில்லா அப்பப்பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகை நாளின்போது நம்முடைய வீடுகளில் புளித்த மா இருக்கக்கூடாது. அவை நம்மைவிட்டு நீக்கப்படவேண்டும். துர்க்குணம், பொல்லாப்பு, மாய்மாலம் ஆகியவையெல்லாம் புளித்த மாவுக்கு அடையாளம். கர்த்தருடைய பண்டிகையை ஆசரிக்கிறவர்கள், தங்களிடத்திலுள்ள அசுத்தத்தை நீக்கிவிட்டு, அதை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும்.
ஆட்டுக்குட்டியின் இரத்தம் யாத் 12:21-28
யாத் 12:21. அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
யாத் 12:22. ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாச-ன் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம்வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்.
யாத் 12:23. கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாச-ன் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
யாத் 12:24. இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
யாத் 12:25. கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
யாத் 12:26. அப்பொழுது உங்கள் பிள்ளைகள்; இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
யாத் 12:27. இது கர்த்தருடைய பஸ்காவாகிய ப-; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்தி-ருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
யாத் 12:28. இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
இஸ்ரவேல் சபையார் மத்தியில் மோசே கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரராகயிருக்கிறார். கர்த்தர் தன்னிடத்தில் பஸ்காவைப்பற்றி கட்டளையிட்டு சொன்ன எல்லாவற்றையும், மோசே இஸ்ரவேலின் மூப்பர் யாவரையும் அழைப்பித்து, அவர்களுக்கு சொல்லுகிறார்.
மோசே இஸ்ரவேலின் மூப்பரை நோக்கி, ""நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாச-ன் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்'' (யாத் 12:21,22) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எப்பொழுது போகச்சொல்லுகிறாரோ அப்பொழுது அவர்கள், எகிப்தைவிட்டு புறப்பட்டுப்போகவேண்டும். அதற்கு முன்பு இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரும் தங்கள் வீட்டு வாசலை விட்டு புறப்பட்டுப்போகக்கூடாது.
இஸ்ரவேல் புத்திரர் பஸ்கா ஆட்டுக்குட்டியை இந்த மாதம் பதினாலாம் தேதி, சாயங்காலத்திலே, அடித்து, இரவிலே அதைப் புசிக்கவேண்டும். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் தெளிக்கவேண்டும்.
அன்று இரவிலே கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாச-ன் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை அவர்கள் வீடுகளில் அவர்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார் (யாத் 1:23).
இந்த நாள் இஸ்ரவேல் புத்திரருக்கு நினைவுகூருதலான நாளாயிருக்கவேண்டும். அதை அவர்கள் கர்த்தருக்கு பண்டிகையாக ஆசரிக்கவேண்டும். அதை அவர்கள் தங்களுடைய தலைமுறை தோறும் நித்திய நியமமாக ஆசரிக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டிருக்கிறார். கர்த்தர் தனக்கு கட்டளையிட்டதை, மோசே இஸ்ரவேலின் மூப்பர் யாவரையும் அழைப்பித்து அவர்களுக்கு சொல்லுகிறார்.
மோசே இஸ்ரவேலின் மூப்பரை நோக்கி, ""இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள். கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்'' (யாத் 12:24,25) என்று சொல்லுகிறார்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஆசரிக்கும் இந்தப் பண்டிகையை தங்களுடைய பின்சந்ததியாருக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்கள் கானான் தேசத்தில் போய்ச் சேர்ந்த பின்பு புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஏழுநாளுக்கு ஆசரிப்பார்கள். அப்பொழுது அவர்களுடைய பிள்ளைகள், ""இந்த ஆராதனையின் கருத்து என்ன'' (யாத் 12:26) என்று அவர்களைக் கேட்பார்கள்.
தங்களுடைய பிள்ளைகள் தங்களிடத்தில் பஸ்கா பண்டிகையின் கருத்தைப்பற்றிக் கேட்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் அந்த ஆராதனையின் கருத்தை தங்கள் பிள்ளைகளுக்கு விளக்கமாக சொல்லித்தரவேண்டும். பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், பெற்றோர் அதன் தாற்பரியத்தை அறிந்திருக்கவேண்டும்.
மோசே இஸ்ரவேலின் மூப்பருக்கு புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் கருத்தை விளக்கமாகக் கற்றுக்கொடுக்கிறார். இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று பிள்ளைகள் தங்களிடத்தில் கேட்கும்போது, பெற்றோர் அவர்களை நோக்கி, ""இது கர்த்தருடைய பஸ்காவாகிய ப-; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்தி-ருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார்'' (யாத் 12:27) என்று அவர்கள் சொல்லவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லா அப்பப்பண்டிகையின்போது பஸ்கா ஆட்டின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, அதை புளிப்பில்லா அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் புசிப்பார்கள். பஸ்காவின்போது ஏன் இப்படி புசிக்கவேண்டுமென்று, அவர்களுடைய பிள்ளைகள் கேள்வி கேட்கும்போது, பெற்றோருக்கு விளக்கம் சொல்ல தெரிந்திருக்கவேண்டும்.
கர்த்தர் நமக்கு பரிசுத்தமான நியமங்களைக் கொடுத்திருக்கிறார். நாம் கர்த்தரை ஆராதிக்கும்போது, கர்த்தருடைய நியமங்களுக்கு கீழ்ப்படிந்து, அவற்றை ஆசரிக்கிறோம். அந்த நியமங்களின் கருத்து என்ன என்பது விசுவாசிகள் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கவேண்டும். நாம் கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் கருத்தோடும் தொழுதுகொள்ளவேண்டும். ஆராதனையின் கருத்து என்ன என்பது நமக்கு தெரியவில்லையென்றால், அதைப்பற்றி நம்மால் மற்றவர்களுக்கு விளக்கி சொல்லமுடியாது.
இஸ்ரவேல் புத்திரர் தங்களுடைய பிள்ளைகளுக்கு, பஸ்காவின் கருத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி'' என்று விளக்கமாக சொல்லவேண்டும். இஸ்ரவேல் புத்திரர், பஸ்கா பண்டிகையின்போது, பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து கர்த்தருக்கு பலிசெலுத்துகிறார்கள். இதன் மூலமாக கர்த்தர் தங்களுடைய முற்பிதாக்களுக்கு செய்த அற்புதத்தையும், கர்த்தர் அவர்களுக்கு காண்பித்த விசேஷித்த கிருபைகளையும் நினைவுகூருகிறார்கள்.
கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணினார். அவர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பண்ணினார். கர்த்தர் எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருகஜீவன்கள் மட்டும் முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணினார். கர்த்தர் எகிப்தியரின் தலைப்பிள்ளைகளையெல்லாம் சங்காரம்பண்ணினார். இதனால் இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு வாசல் திறக்கப்பட்டது.
கர்த்தருடைய பார்வையில் இஸ்ரவேல் புத்திரரும் பாவிகளாயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக ஏராளமான பாவங்களை செய்திருக்கிறார்கள். ஆனாலும் கர்த்தர் தமது பெரிதான கிருபையினால் இஸ்ரவேல் புத்திரரின் பாவங்களை மன்னிக்கிறார். இஸ்ரவேல் புத்திரரின் ஒவ்வொரு குடும்பத்தாரும், தங்களுடைய எண்ணிக்கைக்கு தக்கதாக ஆட்டுக்குட்டியை தெரிந்துகொண்டு பஸ்காவை அடித்து, அதை கர்த்தருக்கு பலிசெலுத்துகிறார்கள்.
கர்த்தர் பஸ்கா ஆட்டுக்குட்டியின் பலியை ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் தலைச்சன் பிள்ளைகளை சங்காரம்பண்ணாமல், அவர்களை இரட்சிக்கிறார். சங்காரக்காரன் இஸ்ரவேல் புத்திரரின் வீடுகளுக்கு முன்பாக வரும்போது, அவர்களுடைய வீட்டு நிலையின் மேற்சட்டத்திலும், வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதை பார்ப்பார். அப்போது கர்த்தர் சங்காரக்காரனை இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளில், அவர்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகி கடந்துபோகப்பண்ணுவார்.
பஸ்கா என்னும் வார்த்தைக்கு கடந்துபோவது என்று பொருள். சங்கார தூதன் இஸ்ரவேல் புத்திரரை சங்காரம்பண்ணாமல், அவர்களுடைய வீட்டைக் கடந்துபோகிறார். இஸ்ரவேல் புத்திரரின் வீடுகளின் நிலைக்கால்களிலும் நிலையின் மேற்சட்டத்திலும் பஸ்காவின் இரத்தம் தெளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிலுள்ளவர்கள் பஸ்காவை அடித்து கர்த்தருக்கு பலிசெலுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு, அந்த இரத்தமே அடையாளம்.
ஆபிரகாம் ஈசாக்கை பலியிடாமல் ஒரு ஆட்டுக்கடாவைப் பலியிட்டார். கர்த்தர் அந்தப் பலியை ஏற்றுக்கொண்டார். அதுபோலவே இப்போது கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரின் தலைச்சன் பிள்ளைகளை சங்காரம்பண்ணாமல், பஸ்கா ஆட்டுக்குட்டியின் பலியை ஏற்றுக்கொள்கிறார். இஸ்ரவேல் புத்திரரை சங்காரத்திற்கு தப்புவிக்கப்பண்ணுகிறார்.
காலம் நிறைவேறும்போது தேவஆட்டுக்குட்டியானவர் மகாசங்காரமாக பலியிடப்படுவார் என்பதற்கு, பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு பலியிடப்படுவது அடையாளமாயிருக்கிறது. நமக்கு பதிலாகவும், நம்முடைய முதற்பேறுகளுக்கு பதிலாகவும், தேவஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையிலே அடிக்கப்பட்டார். கிறிஸ்துவானவர் நம்மை இரட்சிப்பதற்காக தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய பாவங்களை நீக்கும் பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவானவர் நம்மை இரட்சிப்பதற்காக தம்முடைய திருஇரத்தத்தையே மீட்பின் கிரயமாக செலுத்தினார்.
புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நமக்கு இயேசுகிறிஸ்துவே கர்த்தருடைய பஸ்காவாகிய பலியாகயிருக்கிறார். அவர் நமக்காக அடிக்கப்பட்டார். இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் நமக்கு ஜீவன் கிடைத்திருக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே உலகம் உண்டானது முதற்கொண்டு அடிக்கப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியாயிருக்கிறார்.
""அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே ப-யிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்'' (எபி 9:26).
மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு பஸ்காவைப்பற்றிய பிரமாணங்களை தெளிவாக எடுத்துச் சொல்லுகிறார். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கி பணிந்துகொள்கிறார்கள் (யாத் 12:27).
இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்கிறார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் புத்திரர் செய்கிறார்கள் (யாத் 12:28). அவர்களில் ஒருவரும் மோசேக்கு விரோதமாகவோ ஆரோனுக்கு விரோதமாகவோ முறுமுறுக்கவில்லை.
இஸ்ரவேல் புத்திரரிடத்தில் கலககுணமும், முறுமுறுக்கும் குணமும் இருந்தாலும், இப்போது அவர்களில் ஒருவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுக்கவில்லை. கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்ட படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் செய்கிறார்கள்.
""அவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு, அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்றார்கள்'' (யாத் 5:20,21).
இஸ்ரவேல் புத்திரரிடத்தில் காணப்பட்ட இப்படிப்பட்ட கலககுணம், இப்போது காணப்படவில்லை. எகிப்து தேசத்தில் கர்த்தர் வரப்பண்ணின வாதைகள் அவர்களை பக்குவப்படுத்தியிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரருடைய தீயசுபாவங்கள் அவர்களை விட்டு நீங்கிப்போயிற்று. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கர்த்தர் தங்களை விடுவிப்பார் என்னும் எதிர்பார்ப்பு இஸ்ரவேல் புத்திரருடைய மனதில் உண்டாயிற்று.
இதற்கு முன்பு, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு வழியும் வாய்ப்பும் இல்லை என்று இஸ்ரவேல் புத்திரர் நினைத்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் ஆவியிலே சோர்ந்துபோயிருந்தார்கள். அப்படிப்பட்ட வேளைகளில் அவர்கள் மோசேயின் வார்த்தைக்கு செவிகொடுக்காமல், அவருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள். முறுமுறுத்தார்கள். இப்போதோ தங்களுடைய விடுதலையை விசுவாசத்தோடு எதிர்பார்க்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் கவனமாய்க் கீழ்ப்படிகிறார்கள்.
தலைப்பிள்ளைகளின் மரணம் யாத் 12:29-36
யாத் 12:29. நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கி-ருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
யாத் 12:30. அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.
யாத் 12:31. இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.
யாத் 12:32. நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
யாத் 12:33 எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்-, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்தி-ருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
யாத் 12:34. பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
யாத் 12:35. மோசே சொல்-யிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
யாத் 12:36. கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
கர்த்தர் எகிப்து தேசத்திலுள்ள, எகிப்தியரின் முதற்பேறு அனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்று அனைத்தையும் சங்காரம்பண்ணப்போகிறார். இஸ்ரவேல் புத்திரரோ இந்த அழிவுக்கு தப்பித்துக்கொள்வார்கள். கர்த்தர் எகிப்து தேசத்திலே செய்யப்போகிறதை, மோசே ஆரோன் ஆகியோர் மூலமாக ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.
அவர்கள் இருவரும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, ""கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாச-ன் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்'' (யாத் 12:23) என்று சொன்னார்கள்.
மோசே சொன்னது கர்த்தருடைய வார்த்தை. மோசேயும் ஆரோனும் தங்கள் சுயமாய்ப் பேசாமல், கர்த்தருடைய வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரருக்கு அப்படியே அறிவித்தார்கள். கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பிரகாரமாக கிரியை செய்கிறார்.
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கி-ருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழிக்கிறார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருக்கிறார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருக்கவில்லை (யாத் 12:29,30).
எகிப்தியரின் முதற்பேறு அனைத்தையும் கர்த்தர் அழிக்கப்போகிறார் என்னும் எச்சரிப்பு பார்வோனுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பார்வோனோ கர்த்தருடைய எரிச்சரிப்பின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கவில்லை. அவன் கர்த்தருடைய கிருபையையும், கர்த்தர் இதுவரையிலும் வரப்பண்ணின வாதைகளையும் அசட்டைபண்ணினான். பார்வோன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அனுப்ப மறுத்துவிட்டான்.
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் ஒருவேளை, கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, இஸ்ரவேல் புத்திரரை, கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பியிருந்தால், எகிப்து தேசத்தில் இவ்வளவு பெரிய மரண அழிவு ஏற்பட்டிருக்காது.
கர்த்தரிடத்தில் பட்சபாதமில்லை. கர்த்தர் நடுஇராத்திரியிலே பார்வோனுடைய தலைப்பிள்ளையையும், காவல்கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளையையும் அழித்துப்போடுகிறார். ராஜாவின் வீட்டிலும் சாவு உண்டாயிற்று. சாதாரண ஜனங்களுடைய வீடுகளிலும் சாவு உண்டாயிற்று. எகிப்து தேசத்திலே எல்லா வீடுகளிலும் மகாகூக்குரல் உண்டாயிற்று. எகிப்தியரின் வீடுகளில் சாவு இல்லாத வீடு ஒன்றுமில்லை. எல்லா வீடுகளிலும் சாவு வந்திருக்கிறது.
கர்த்தர் பட்சபாதமில்லாமல் இஸ்ரவேல் ஜனத்தாரை நியாயந்தீர்க்கிறார். சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற பார்வோனுக்கும் நியாயத்தீர்ப்பு வருகிறது. எகிப்து தேசத்திலே விவசாய வேலைகளை செய்கிற விவசாயிகளின் குடும்பத்திலுள்ளவர்களுக்கும் நியாயத்தீர்ப்பு வருகிறது.
""இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே. இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்'' (யோபு 34:19,20).
பார்வோன்மீது வந்த நியாயத்தீர்ப்பு விசுவாசிகளாகிய நமக்கு எச்சரிப்பாக இங்கு எழுதப்பட்டிருக்கிறது. நாம் தேவனுக்கு முன்பாக நடுக்கத்தோடும், பயத்தோடும், பக்தியோடும் நிற்கவேண்டும். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து விசுவாசிகள் ஒவ்வொருவரும் பயப்படவேண்டும்.
""உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சி-ர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்'' (சங் 119:120).
கர்த்தர் தம்முடைய நீதியினால் எகிப்தியரை அதம்பண்ணினாலும், அவர் தமது கிருபையினால் இஸ்ரவேல் புத்திரரை பாதுகாக்கிறார். கர்த்தர் ஒவ்வொரு நாளும் நம்மையும், நம்முடைய குடும்பத்தாரையும் பாதுகாத்து பராமரிப்பதற்காக, நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
எகிப்து தேசத்திலே, எகிப்தியரின் எல்லா வீடுகளிலும் இருக்கிற தலைப்பிள்ளைகள் எல்லாம் செத்துப்போயிற்று. கர்த்தர் அவர்களுடைய தலைப்பிள்ளைகளெல்லாம் அழித்துப்போடுகிறார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும், எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருக்கிறார்கள். எகிப்தியரின் எல்லா வீடுகளிலும் சாவு உண்டாயிருக்கிறது. அவர்களால் தூங்க முடியவில்லை. கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணினார் என்பதை பார்வோன் அறிந்துகொள்கிறான்.
அந்த இராத்திரியிலே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, ""நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள். நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள்'' (யாத் 12:31,32) என்று சொல்லுகிறான்.
இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் எழுந்து எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டுப்போகவேண்டும். பார்வோன் இதற்கு முன்பு, மோசேயை நோக்கி, ""உன் முகத்தை நான் இனிமேல் பார்ப்பதில்லை'' என்று கடினமாகப் பேசினான். இப்போதோ அதே பார்வோன், மோசேயையும் ஆரோனையும் தன்னிடத்திலே அழைப்பித்து, அவர்களுடைய முகத்தைப் பார்க்கிறான்.
மோசேயையும் ஆரோனையும் பார்க்கும்போது பார்வோனுக்கு இப்போது அவர்கள்மீது கோபம் வரவில்லை. அவர்கள்மீது வெறுப்போ அல்லது விரோதமோ உண்டாகவில்லை. பார்வோன் இப்போது மோசேயையும் ஆரோனையும் பார்த்து பயப்படுகிறான். பார்வோன் அவர்களுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துகிறான். பார்வோன் அவர்களை நோக்கி, ""என்னையும் ஆசீர்வதியுங்கள்'' என்று பணிவாக வேண்டிக்கொள்கிறான்.
கர்த்தர் வரப்பண்ணின வாதை எகிப்து தேசத்தின்மீது வந்திருக்கிறது. அந்த வாதை நிறுத்தப்படவேண்டுமென்றால், மோசேயும் ஆரோனும் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும். கர்த்தர் பார்வோனை ஆசீர்வதிக்கவேண்டுமென்றால், கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய மோசேயும் ஆரோனும் அவனை ஆசீர்வதிக்கவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போன பின்பு, கர்த்தர் தன்மீது வாதைகளை வரப்பண்ணுவாரோ என்னும் பயம் பார்வோனுக்கு உண்டாயிற்று. பார்வோன் இப்போது கர்த்தர் வரப்பண்ணும் வார்த்தையை நினைத்து பயப்படுகிறான். கர்த்தர் பார்வோனுடைய தலைப்பிள்ளையை அழித்துப்போட்டார். தனக்கும், தன்னுடைய குடும்பத்தாருக்கும் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் வரும் என்பது பார்வோனுக்கு தெரியவில்லை. ஆகையினால் பார்வோன் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ""என்னையும் ஆசீர்வதியுங்கள்'' என்று வேண்டிக்கொள்கிறான்.
பார்வோனைப்போலவே, எகிப்தியரும் இஸ்ரவேல் புத்திரரைப் பார்த்து பயப்படுகிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே இனிமேலும் தங்கியிருக்கக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் தேசத்தைவிட்டு உடனே புறப்பட்டுப்போகவேண்டும் என்றும் எகிப்தியர்கள் கூக்குரலிடுகிறார்கள்.
எகிப்தியருடைய எல்லா வீடுகளிலும் சாவு ஏற்பட்டிருக்கிறது. எகிப்திலே எல்லா வீடுகளிலும் மகாகூக்குரல் உண்டாயிருக்கிறது. அவர்கள், ""நாங்கள் எல்லாரும் சாகிறோமே'' என்று கூக்குரலிடுகிறார்கள். அவர்கள் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து தீவிரமாய் அனுப்பிவிடவேண்டும் என்று தீர்மானித்து, அவர்கள் எல்லோரும் தங்கள் தேசத்தைவிட்டு சீக்கிரமாய் வெளியேறிப்போகவேண்டுமென்று, அவர்களை மிகவும் துரிதப்படுத்துகிறார்கள் (யாத் 12:33).
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே 430 வருஷங்களாக அடிமைகளாக பாடுகளை அனுபவித்திருக்கிறார்கள். எகிப்தியர்களும் அவர்களை கடினமாய் ஒடுக்கி கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு இதுவரையிலும் சரியான போஜனமோ, வேலைக்கு தகுந்த சம்பளமோ கொடுக்கப்படவில்லை. ஆனால் எகிப்தியர்கள் இப்போது, இஸ்ரவேல் புத்திரரை, தங்கள் தேசத்திலிருந்து தீவிரமாய் புறப்பட்டுப்போகவேண்டுமென்று துரிதப்படுத்துகிறார்கள்.
கையில் பணமில்லாமல் இஸ்ரவேல் புத்திரரால் நீண்ட பிரயாணத்தை மேற்கொள்ள முடியாது. எகிப்தியர்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயமான சம்பளத்தைக் கொடுத்தால், அதுவே இஸ்ரவேல் புத்திரருக்கு போதுமானதாயிருக்கும்.
மோசே சொல்-யிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்கிறார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிடுகிறார்கள் (யாத் 12:35,36).
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தாரை, கொள்ளையர்களைப்போல கொள்ளையிடவில்லை. எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இதுவரையிலும் கடினமாக வேலை வாங்கி, சரியான சம்பளம் கொடுக்காமல் அவர்களை வஞ்சித்து வந்தார்கள். இப்போதோ இஸ்ரவேல் புத்திரர், தங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சம்பளத்தை எகிப்தியரிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்கிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர், பிசைந்தமா புளிக்குமுன் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போகிறார்கள். கர்த்தருடைய ஜனம் எகிப்து தேசத்தை விட்டுப் புறப்பட்டுப்போகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரரின் பிரயாணம் யாத் 12:37-42
யாத் 12:37. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
யாத் 12:38. அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
யாத் 12:39. எகிப்தி-ருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.
யாத் 12:40. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
யாத் 12:41. நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றையத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்தி-ருந்து புறப்பட்டது.
யாத் 12:42. கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்தி-ருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டுப்போகிறார்கள். பார்வோனுடைய மனதிலும் நல்ல மாற்றம் உண்டாயிருக்கிறது. அவன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்தைவிட்டு துரிதமாய்ப் புறப்பட்டு போகுமாறு சொல்லுகிறான். அவனுடைய மனதில் ஏற்பட்டிருக்கிற மாற்றம் நிலைத்திருக்குமா என்பது இஸ்ரவேல் புத்திரருக்கு தெரியவில்லை. பார்வோன் பல சமயங்களில் மாறி மாறி பேசியிருக்கிறான்.
இதற்கு முன்பு பார்வோன் பல சமயங்களில் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகுமாறு சொல்லியிருக்கிறான். எகிப்து தேசத்தின்மீது வாதைகள் வந்ததினால், பார்வோன் இஸ்ரவேல் புத்திரரை அனுப்புவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறான். வாதை முடிந்த பின்பு, எகிப்து தேசத்திலே இலகு உண்டாகும். அப்போது பார்வோனுடைய மனதும் மாறும். அவனுடைய இருதயம் கடினப்படும். அதன் பின்பு பார்வோன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்தை விட்டு அனுப்ப மறுத்துவிடுவான்.
அதுபோலவே இப்போதும், பார்வோனுடைய மனம் மாறிவிடுமோ என்றும், அவனுடைய இருதயம் மறுபடியும் கடினப்படுமோ என்றும் இஸ்ரவேல் புத்திரர் சந்தேகப்படுகிறார்கள். ஆகையினால் அவர்கள் காலத்தை வீணாக்க விரும்பவில்லை. எகிப்தியரும் இஸ்ரவேல் புத்திரரை தங்கள் தேசத்திலிருந்து புறப்பட்டுப்போகுமாறு துரிதப்படுத்துகிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, எகிப்துதேசத்தைவிட்டு துரிதமாய்ப் புறப்பட்டுப்போகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருக்கிறார்கள் (யாத் 12:37).
எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரரின் எண்ணிக்கை ஆறுலட்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையில் ஸ்திரீகளும், பிள்ளைகளும் சேர்க்கப்படவில்லை. இவர்கள் எல்லோரையும் கணக்கில் சேர்த்தால், எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரரின் மொத்த எண்ணிக்கை சுமார் பன்னிரண்டு லட்சமாக இருக்கும்.
யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் எகிப்து தேசத்திற்கு வந்தபோது அவர்களுடைய எண்ணிக்கை எழுபது பேர் மாத்திரமே. சுமார் இருநூறு வருஷகாலத்தில் இஸ்ரவேல் புத்திரரின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கர்த்தர் வாக்குப்பண்ணின பிரகாரமாக, இஸ்ரவேல் புத்திரர் வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பலுகிப்பெருகியிருக்கிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரரோடே பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று (யாத் 12:38). பல ஜாதியான ஜனங்களின் எண்ணிக்கையும் திரளாயிருக்கிறது. இவர்கள் ஒருவேளை எகிப்து தேசத்தைவிட்டு வெளியேறிப்போக வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கலாம். கர்த்தர் வரப்பண்ணின வாதைகளினால் எகிப்து தேசம் பாழ்நிலமாய்க் கிடக்கிறது. தேசத்தில் விவசாயம் பண்ண முடியவில்லை. போஜனம் பண்ணுவதற்கு தானியமும் தாராளமாயில்லை. இந்த சூழ்நிலைகளில், பல ஜாதி ஜனங்கள் எகிப்து தேசத்தில் தங்கியிருந்து கஷ்டங்களை அனுபவிப்பதற்கு பதிலாக, இஸ்ரவேல் புத்திரரோடுகூட எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே கர்த்தருக்கு பலிசெலுத்தப்போகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட பலிகளை செலுத்துவார்கள் என்பதையும், வனாந்தரத்திலே அவர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்பதையும் அறிந்துகொள்ள பல ஜாதி ஜனங்கள் ஆர்வமாயிருக்கிறார்கள். அந்த அதிசய சம்பவங்களையெல்லாம் தங்கள் கண்களால் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வத்தோடு, பல ஜாதி ஜனங்களில் அநேகர் இஸ்ரவேல் புத்திரரோடு கூடப்போகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே கர்த்தருக்கு பலி செலுத்தப்போவது பற்றி, எகிப்து தேசத்திலுள்ள ஜனங்கள் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தருடைய மகிமை வனாந்தரத்திலே பிரத்தியட்சமாக வெளிப்படும் என்னும் எதிர்பார்ப்பு இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே இருக்கிறது. அவர்கள் தங்கள் எதிர்பார்ப்பை பல ஜாதி ஜனங்களிடத்தில் சொல்லும்போது, கர்த்தருடைய மகிமையைக் காணவேண்டும் என்னும் ஆர்வம் பல ஜாதி ஜனங்களுடைய மனதிலும் உண்டாயிற்று. இதற்காகவும் பல ஜாதி ஜனங்களில் அநேகர் இஸ்ரவேல் புத்திரரோடுகூட எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகிறார்கள்.
பல ஜாதி ஜனங்களில் அநேகருக்கு, இஸ்ரவேல் புத்திரரோடு தாங்களும் ஏன் போகவேண்டும் என்பதுகூட தெரியவில்லை. இஸ்ரவேல் புத்திரர் திரளான எண்ணிக்கையில் புறப்பட்டுப்போகும்போது, பல ஜாதி ஜனங்களும், காரணம் தெரியாமலேயே கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கொள்கிறார்கள்.
பல ஜாதி ஜனங்கள் தங்களோடுகூட எகிப்து தேசத்தைவிட்டு ஏன் புறப்பட்டு வருகிறார்கள் என்பது இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியவில்லை. பிற்காலத்தில் இந்த பல ஜாதி ஜனங்கள், தங்களுக்கு கண்ணிகளாக ஆவார்கள் என்பது இஸ்ரவேல் புத்திரருக்கு தெரியவில்லை.
""பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்'' (எண் 11:4-6).
எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரர், வனாந்தரத்திலே கர்த்தருக்கு பலிசெலுத்திவிட்டு, ஒரு சில நாட்களில் எகிப்து தேசத்திற்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்று பல ஜாதி ஜனங்கள் நினைத்தார்கள். ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ வனாந்தரத்திலே நாற்பது வருஷங்களாக பிரயாணம்பண்ணுகிறார்கள். பல ஜாதி ஜனங்களில் அநேகர் இஸ்ரவேல் புத்திரரோடு நீண்ட பிரயாணம் பண்ண மனதில்லாமல், எகிப்து தேசத்திற்கு திரும்பி வந்துவிடுகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டுப்போகும்போது, அவர்களோடுகூட மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
பிசைந்தமா புளிக்குமுன் இஸ்ரவேல் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போகிறார்கள். எகிப்தி-ருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுடுகிறார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருக்கிறது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை (யாத் 12:34,39).
எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகிற இஸ்ரவேல் புத்திரரிடத்தில் நேர்த்தியான போஜனம் எதுவுமில்லை. அவர்களுக்கு விசேஷமான உணவோ, அல்லது தாராளமான போஜன வகைகளோ இல்லை. அவர்கள் பாத்திரத்திலே புளிக்காத பிசைந்த மாவை மாத்திரம் கொண்டு போகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுவதற்கு முன்பாக மாவை பிசைந்து வைக்கிறார்கள். மறுநாள் காலையிலே தாங்கள் எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்குள் பிசைந்த மா புளித்துவிடும் என்றும், எகிப்து தேசத்தைவிட்டு புறப்படுவதற்கு முன்பாக புளித்த மாவிலே அப்பங்களை சுட்டு புசிக்கலாம் என்றும் இஸ்ரவேல் புத்திரர் தீர்மானம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ, தாங்கள் எதிர்பார்த்ததைவிட சீக்கிரத்திலேயே எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகிறார்கள். எகிப்து தேசத்தாரும் இஸ்ரவேல் ஜனங்களை தங்கள் தேசத்திலிருந்து துரிதமாய் அனுப்பிவிடுகிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டு தீவிரமாய் புறப்பட்டுப்போக வேண்டியதாயிற்று. பிசைந்த மா புளிக்கும் வரையிலும் இஸ்ரவேல் ஜனத்தாரால் எகிப்து தேசத்திலே தங்கியிருக்க முடியவில்லை. அவர்கள் பிசைந்த மா புளிக்கு முன், அந்த மாவை பாத்திரத்துடனே, தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு, எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டுப்போகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டு கால்நடையாய் பிரயாணம்பண்ணி சுக்கோத்திற்கு வருகிறார்கள். அங்கே அவர்களுக்கு போஜனம் தேவைப்படுகிறது. அவர்களிடத்திலுள்ள மாவோ புளிப்பில்லாத மாவாகயிருக்கிறது. ஆனாலும் எகிப்திலிருந்து தாங்கள் கொண்டு வந்த பிசைந்த மாவை புளிப்பில்லாத அப்பங்களாக சுட்டு, அதைப் புசிக்கிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் சுக்கோத்திலே மிகவும் எளிமையான போஜனத்தை புசிக்கிறார்கள். ஆனாலும் அந்தப் போஜனத்தை அவர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு புசிக்கிறார்கள். அவர்கள் இதுவரையிலும் எகிப்து தேசத்திலே அடிமைத்தனத்தின் வேதனைகளை அனுபவித்து போஜனம்பண்ணினார்கள். இப்போதோ விடுதலையோடு போஜனம்பண்ணுகிறார்கள். இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்து தேசத்தைவிட்டு புறப்பட்டு, விடுதலையோடு போஜனம்பண்ணுவது இதுவே முதலாவது சம்பவமாகும்.
கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம்பண்ணி 430 வருஷமாயிற்று. அந்த வாக்குத்தத்தம் இப்போதுதான் நிறைவேறுகிறது. இஸ்ரவேல் புத்திரர் 430 வருஷங்களாக, கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று காத்திருக்கிறார்கள். பல வருஷங்களாக நிறைவேறாத வாக்குத்தத்தம், இப்போது நிறைவேறுகிறது. கர்த்தர் வாக்குமாறாதவர்.
""ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது'' (கலா 3:17).
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றையத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்தி-ருந்து புறப்படுகிறது (யாத் 12:40,41).
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்த கடைசி இராத்திரியிலே, தங்கள் வீடுகளிலே பஸ்காவை புசித்தார்கள். அது கர்த்தருடைய பஸ்கா (யாத் 12:11). நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, கடைசியாக இராப்போஜனம்பண்ணினார்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பஸ்காவை புசிக்கும்போது, அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நம்மை, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நம்முடைய பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்திருக்கிறார்.
எகிப்து தேசத்தில் அடிமைகளாகயிருந்தவர்கள், கானான் தேசத்தை நோக்கி பிரயாணமாய்ப் புறப்பட்டுப்போனார்கள். புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாமோ பரம கானானை நோக்கி பிரயாணம்பண்ணுகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மை கரம்பிடித்து அழைத்துக்கொண்டு போகிறார். நாம் இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பரமகானானை நோக்கி பிரயாணமாய்ப்போகிறோம்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்தி-ருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே (யாத் 12:42).
பஸ்காவின் நியமம் யாத் 12:43-51
யாத் 12:43. மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
யாத் 12:44. பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
யாத் 12:45. அந்நியனும் கூ-யாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
யாத் 12:46. அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டி-ருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
யாத் 12:47. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
யாத் 12:48. அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.
யாத் 12:49. சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
யாத் 12:50. இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
யாத் 12:51. அன்றையத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்தி-ருந்து புறப்படப்பண்ணினார்.
பஸ்காவின் நியமத்தைப்பற்றி மேலும் சில செய்திகள் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் இனிமேல் வரப்போகிற நாட்களில், பஸ்காவை ஆசரிக்கும்போது, கர்த்தர் அது குறித்து தங்களுக்கு கட்டளையிட்டிருக்கிற பிரகாரம் அதை ஆசரிக்கவேண்டும்.
இஸ்ரவேல் சபையார் எல்லோரும் பஸ்காவை ஆசரிக்கவேண்டும் (யாத் 12:47). கர்த்தருடைய கிருபைகளையும் இரக்கங்களையும் யாரெல்லாம் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் எல்லோருமே கர்த்தரைத் துதிப்பதில் பங்குபெறவேண்டும். கர்த்தர் இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் நன்மை செய்திருக்கிறார். ஆகையினால் அவர்கள் எல்லோரும் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிடுகிறார்.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தருடைய பந்தியானது. பஸ்காவுக்கு அடையாளமாக ஆசரிக்கப்படுகிறது. விசுவாசிகள் கர்த்தருடைய பந்தியிலே பயபக்தியோடு பங்குபெறவேண்டும். விசுவாசிகளில் ஒருவரும் கர்த்தருடைய பந்தியை அசட்டைசெய்து, அதில் பங்குபெறாமல் இருந்துவிடக்கூடாது.
அந்நிய புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கூடாது. விருத்தசேதனமில்லாத அந்நியருக்கு பஸ்காவை ஆசரிக்க அனுமதியில்லை.
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ""பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்'' என்றும், ""அந்நியனும் கூ-யாளும் அதிலே புசிக்கவேண்டாம்'' என்றும்,
""அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்'' (யாத் 12:43,45,48) என்றும் சொல்லுகிறார்.
கர்த்தருடைய பந்தியிலே பங்குபெறுகிற விசுவாசிகள் எல்லோரும், கர்த்தருடைய வார்த்தையினால் மறுபடியும் பிறந்தவர்களாகயிருக்க வேண்டும். நம்முடைய இருதயம் முதலாவதாக விருத்தசேதனம் பண்ணப்பட்டிருக்கவேண்டும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பஸ்காவில் பங்குபெறுகிறவர்கள், விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும் என்னும் நியமம் இருந்தது.
புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நமக்கு, மாம்சத்தில் விருத்தசேதனம் நியமிக்கப்படவில்லை. ஆனால் நம்முடைய இருதயம் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டியது அவசியமாயிருக்கிறது.
""அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்'' (கொலோ 2:11).
கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுகிற விசுவாசிகள், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபாதார பலிமரணத்தினால் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களுக்கு பங்குள்ளவர்களாகயிருக்கிறார்கள்.
விருத்தசேதனம்பண்ணப்பட்ட அந்நியன் பஸ்காவை ஆசரிக்கலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது ""பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்'' (யாத் 12:44).
நாம் கர்த்தருக்கு நம்மை முற்றிலுமாய் ஒப்புக்கொடுக்கவேண்டும். நம்முடையது எல்லாமே கர்த்தருடையது என்று அவருக்கு அர்ப்பணிக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய கிருபையினால் அந்நியரும் பஸ்காவை ஆசரிப்பதற்கு அனுமதி கொடுக்கிறார். கர்த்தருடைய பஸ்காவிலே, இஸ்ரவேல் புத்திரர் மாத்திரம் என்றல்லாமல், விருத்தசேதனம்பண்ணப்பட்ட அந்நியரும் பங்குபெறுவதற்கு, கர்த்தர் அனுமதி கொடுக்கிறார்.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் புறஜாதியாரும் கர்த்தருடைய சபையிலே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதற்கு, இந்த சம்பவம் அடையாளமாயிருக்கிறது. கர்த்தருடைய சபையிலே யூதரென்றும் புறஜாதியாரென்றும் வித்தியாசமில்லை. எல்லோரும் கர்த்தருடைய பார்வையில் சமமாகயிருக்கிறார்கள்.
""சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது'' (யாத் 12:49) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மோசேயின் பிரமாணம் இஸ்ரவேலருக்கு மட்டுமே உரியது. (உபா 4:6-8,44-45; ரோமர் 2:12-16; ரோமர் 3:1-2) இஸ்ரவேலர்கள் மோசேயின் பிரமாணங்கள் அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். (எண் 15:16). புறஜாதியார் இஸ்ரவேலரைப்போல மோசேயின் பிரமாணத்திற்குட்பட விரும்பினால், அவர்களுடைய ஆண்பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.
புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாம், ஆவிக்குரிய இஸ்ரவேலராயிருக்கிறோம். இதன் பிரகாரமாக, நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறோம். கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தங்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் நிறைவேறும்.
பஸ்காவை ஆசரிக்கும்போது அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டி-ருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது (யாத் 12:46).
பஸ்காவை ஆசரிக்கும்போது, வீட்டிலுள்ளோர் அனைவரும் சந்தோஷமாயும் ஐக்கியமாயும் இருக்கவேண்டும். அப்போது ஒருவருக்கொருவர் பஸ்காவைக் குறித்து, ஆவிக்குரிய விளக்கங்களையும், புத்திமதிகளையும் சொல்லி, ஒருவரையொருவர் பலப்படுத்தவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போகிற சம்பவம் இங்கு மறுபடியுமாக சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறார்கள். இஸ்ரவேல் சபையார் எல்லோரும் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள் என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்கிறார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்கிறார்கள் (யாத் 12:50).
பரிசுத்த வேதாகமத்தில் பஸ்காவின் நியமத்தைப்பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. நிசான் மாதம் 10ஆம் தேதி. இது வருஷத்தின் முதலாம் மாதம். ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொண்டு அதைப் பதினாலாம் தேதி வரையிலும் வைத்திருக்க வேண்டும். (யாத் 12:3-6).
2. ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிப்பதற்கு வீட்டில் போதுமான நபர்கள் இல்லையென்றால், அவர்கள் அயல்வீட்டுக்காரரைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டுக்குட்டி வீணாகக் கூடாது. (யாத் 12:4).
3. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும். (யாத் 12:5).
4. அந்த ஆட்டுக்குட்டி ஆணும், ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். (யாத் 12:5).
5. நிசான் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலத்தில் அந்த ஆட்டுக்குட்டியை அடிக்க வேண்டும். (யாத் 12:6)
6. அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வீட்டு வாசல் நிலைக்கால்கள் இரண்டின் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (யாத் 12:7,22-23).
7. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்க வேண்டும். (யாத் 12:8-9)
8. பச்சையாயும், தண்ணீரில் அவிக்கப் பட்டதாயும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:9).
9. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும். (யாத் 12:10).
10. அதைத் தீவிரமாய் புசிக்கவேண்டும். அரைகளில் கச்சை கட்டிக்கொண்டு, கால்களில் பாதரட்சை தொடுத்துக் கொண்டு பிரயாணத்திற்கு ஆயத்தமாக அதைப்புசிக்க வேண்டும். (யாத் 12:11).
11. ராத்திரியில் அதைப் புசிக்க வேண்டும் (யாத் 12:8,10,18).
12. பஸ்கா நியமம் இஸ்ரவேலருக்கு நித்திய நினைவுகூருதலாக இருக்க வேண்டும். (யாத் 12:14,17,24; எசே 45:17).
13. வீடுகளிலிருந்து புளித்த மாவை நீக்க வேண்டும். புளிப்பில்லா அப்பத்தை மாத்திரம் புசிக்க வேண்டும். (யாத் 12:15,19லி-20; யாத் 13:3-7).
14. பஸ்காவின்போது, புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிக்கத் துவங்க வேண்டும். (யாத் 12:15-20).
15. புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்க வேண்டும். (யாத் 12:15).
16. முதலாம் நாளிலும், ஏழாம் நாளிலும் ஒரு வேலையும் செய்யப்படலாகாது. அந்த நாட்களில் பரிசுத்த சபை கூடுதல் இருக்க வேண்டும். (யாத் 12:16).
17. ஏழு நாளளவும் வீடுகளில் புளித்தமா காணப்படலாகாது. (யாத் 12:18-19).
18. அந்நிய புத்திரன் ஒருவனும் பஸ்காவைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:43).
19. விருத்தசேதனம் பண்ணாத எந்த மனுஷனும் பஸ்காவைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:44-48).
20. அந்நியனும், கூலியாளும் பஸ்காவைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:45).
21. பஸ்காவை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டி-ருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது. (யாத் 12:46).
22. பஸ்கா ஆட்டுக்குட்டியின் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. (யாத் 12:46; யோவான் 19:33,36).
23. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் பஸ்காவை ஆசரிக்கவேண்டும். (யாத் 12:47).
24. ஆபிப் அல்லது நிசான் மாதத்தில் பஸ்காவை ஆசரிக்க வேண்டும். (யாத் 13:5) பஸ்காவை ஒவ்வொரு வருஷமும் ஆசரிக்க வேண்டும் (எண் 9:2-6).
25. பஸ்காவை ஆசரிக்க வேண்டிய நாளில், ஜனங்கள் தீட்டுப்பட்டிருந்தால், அதை அவர்கள் ஒருமாதத்திற்குப் பின்பு புசிக்கலாம். (எண் 9:2-14).
26. பஸ்கா ஆட்டுக்குட்டியை ஆசரிப்புக் கூடாரத்தில் மட்டுமே அடிக்க வேண்டும். (உபா 16:5-6).
அன்றையத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்தி-ருந்து புறப்படப்பண்ணுகிறார் (யாத் 12:51). ""அன்றையத்தினமே'' என்பது நிசான் மாதம் பதினைந்தாம் நாளைக் குறிக்கிறது (யாத் 12:41,51; எண் 33:3).
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்தி-ருந்து புறப்படப்பண்ணுகிறார். இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்தாலும், அவர்கள் யுத்தம் பண்ணுவதில் பழக்கம் உள்ளவர்கள். எகிப்தியர்களுக்காக அவர்கள் யுத்தம் பண்ணியிருக்கிறார்கள்.
ஆகையினால் குறைந்த கால அவகாசத்தில் இஸ்ரவேல் புத்திரர் போர்வீரர்களைப்போல அணியணியாகப் புறப்பட்டுப்போக ஆயத்தமாக இருக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் ஒவ்வொருவரும் தங்களுடைய ஸ்தானத்தையும், கடமையையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.