யோனா புத்தகம் முன்னுரை
யோனாவின் புஸ்தகம் தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களுக்கு நடுவே கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தை தீர்க்கதரிசன புஸ்தகம் என்று சொல்லுவதற்கு பதிலாக, சரித்திர புஸ்தகம் என்று சொல்லுவது சிறப்பாகயிருக்கும். இந்தப் புஸ்தகத்தில், “”இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்’’ (யோனா 3:4) என்னும் ஒரே ஒரு தீர்க்கதரிசன வாக்கியம் மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற மற்ற சம்பங்களெல்லாம், இந்த தீர்க்கதரிசன வாக்கியத்திற்கு முன்னுரையாகவோ அல்லது அதன் பின்னுரையாகவோ எழுதப்பட்டிருக்கிறது.
இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் யோனா. மற்ற தீர்க்கதரிசிகளைப்போலவே, யோனாவும் தன்னுடைய தப்பிதங்களை இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார். இந்தப் புஸ்தகம் தேவனுடைய நாமமகிமைக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. மனுஷருடைய புகழ்ச்சிக்காக இது எழுதப்படவில்லை.
இராஜாக்கள் புஸ்தகத்தில் யோனாவைப்பற்றி ஒரு குறிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.
“”காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்-யிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவே-ன் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்’’ (2இராஜா 14:25).
இரண்டாம் எரொபெயாமின் காலத்தில் யோனா கர்த்தருடைய கிருபையின் செய்தியை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொன்னார். இரண்டாம் எரொபெயாம் ஆமாத் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல் மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளை திரும்பச் சேர்த்துக்கொண்டார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, இரண்டாம் எரொபெயாம் இஸ்ரவேலின் எல்லைகளை திரும்ப சேர்த்துக்கொண்டார்.
யோனா ஒரு பலவீனமான மனுஷன். யோனா தன் பாவங்களுக்காக மனந்திரும்பும்போது, கர்த்தர் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் அவரை மன்னிக்கிறார். மனந்திரும்புகிற பாவிகளை கர்த்தர் மன்னிப்பார் என்பதற்கு யோனாவின் சரித்திரம் ஓர் அத்தாட்சியாயிருக்கிறது.
யோனாவின் புஸ்தகம் கி.மு. 853 - 824 ஆம் வருஷங்களில் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் யோனா தீர்க்கதரிசி ஆவார் (யோனா 1:1).
யோனாவின் வாழ்க்கை வரலாறை இந்தப் புஸ்தகம் விவரிக்கிறது. இவர் பிடிவாதக் குணமுடைய யூதன். இவருடைய கீழ்ப்படியாமையின் நிமித்தம் கர்த்தர் இவரைத் தண்டித்தார். அதன் பின்பு, யோனா நினிவே பட்டணத்தாருக்குப் பிரசங்கம் பண்ணினார். அந்தப் பட்டணத்தார் முழுவதும் மனந்திருந்தினார்கள்.
யோனாவின் புஸ்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கம்:
1. நினிவேயின் அழிவையும், அசீரியப் பேரரசின் அழிவையும் கர்த்தர் சுமார் நூறு வருஷக்காலமாகத் தாமதம் பண்ணியதற்குக் காரணத்தை வெளிப்படுத்துவது.
2. மனந்திருந்தி தம்மிடத்தில் வரும் யூதரையும், புறஜாதியாரையும் கர்த்தர் இரட்சிப்பார், அவர்கள்மீது கிருபையாய் இருப்பார் என்பதை அறிவிப்பது.
3. இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு முன்னடையாளமாக யோனாவின் வரலாற்றை விளக்கிக் கூறுவது. (மத் 12:40)
நினிவே அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாகும். சுமார் 300 ஆண்டுகள் உலக வல்லரசுகளில் ஒன்றாகச் சிறந்து விளங்கியது (சுமார் கி.மு. 900-600).
இவர்கள் இஸ்ரவேலர்களின் எதிரிகளாக இருந்தனர். ஆகையினால் தங்கள் எதிரிகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் உரைக்குமாறு தேவன் யோனாவை அழைத்தார். இறுதியில் அவர்கள் வடக்கு ராஜ்ஜியமான இஸ்ரவேலைக் கைப்பற்றினார்கள்.
அவர்கள் மனந்திரும்புவார்கள் என்றும், தேவன் அவர்களை அழிக்கமாட்டார் என்றும் யோனா பயந்து, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் தர்ஷீசுக்குச் செல்லும் கப்பல் ஏறி, பயணம் செய்தார்.
யோனா இஸ்ரவே-ல் காத்தேப்பார் என்னும் ஊரில் வசித்து வந்தார். யெரொபெயாமின் ஆட்சிக் காலத்தில் அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவே-ன் எல்லைகளைத் திரும்பச்சேர்த்துக் கொண்டான் (2 இராஜாக்கள் 14:25). ஆகையினால், தேவன் தம்முடைய விரோதிகள் மீது மனதுருக்கமாய் இருப்பதை யோனா விரும்பவில்லை. தேவன் யோனாவின் மீதும் நினிவே பட்டணத்தார் மீதும் இரக்கம் காண்பித்த நிகழ்ச்சிகள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
புத்தகத்தின் பொதுவான சுருக்க வருணனை
1. யோனாவின் கீழ்ப்படியாமை, காற்று, பெரிய மீன் (அதிகாரம் 1)
2. யோனாவின் ஜெபமும், மீனின் வயிற்றி-ருந்து யோனா விடுவிக்கப் படுதலும் (அதிகாரம் 2)
3. நினிவேயின் ஜனங்களுக்கு யோனா பிரசங்கம் பண்ணுவதும் அவர்கள் மனந்திரும்புவதும் (அதிகாரம் 3)
4. நினிவே பட்டணத்தார் மனந் திரும்பியதற்காக யோனாவின் கோபம் (அதிகாரம் 4)
பொருளடக்கம்
ஒ. யோனாவின் முதலாவது ஊழியம் (1:1-2)
ஒஒ. யோனாவின் கீழ்ப்படியாமையும் நியாயத்தீர்ப்பும்
1. கீழ்ப்படியாமை - தேவனிடத்திலிருந்து விலகிப்போவதன் இரண்டு அம்சங்கள் (1:3)
2. கர்த்தருடைய பெருங்காற்று (1:4)
3. கப்பற்காரரின் ஜெபங்கள் (1:5)
4. ஜெபிக்குமாறு யோனாவிற்கு அழைப்பு (1:6)
5. சீட்டுப்போட்டார்கள் - சீட்டு யோனா பெயரில் விழுந்தது (1:7)
6. யோனாவின் பாவ அறிக்கை (1:8-9)
7. பெருங்காற்றிற்கு தீர்வு (1:10-12)
8. யோனாவைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் - தோல்வி (1:13-14)
9. யோனாவை சமுத்திரத்தில் தூக்கிப் போட்டார்கள் - விளைவு (1:15)
10. யோனாவின் பாவத்திலிருந்து ஆசீர்வாதம் (1:16)
11. தேவன் பெரிய மீனை ஆயத்தம் பண்ணினார் (1:17)
ஒஒஒ. யோனாவின் மறுபொருத்தனை
1. யோனாவின் ஜெபம் (2:1-7)
2. பலியும் பொருத்தனைகளும் (2:8-9)
3. யோனாவின் வெளியேற்றம் (2:10)
ஒய. யோனாவின் இரண்டாம் ஊழியம்
1. யோனாவின் கீழ்ப்படிதல் (3:1-4)
2. நினிவேயின் மனந்திரும்புதல் - இரக்கம் (3:5-10)
ய. யோனாவின் திருத்தம்
1. யோனாவின் கோபம் (4:1)
2. யோனாவின் முறையீடு - பதில் (4:2-4)
3. யோனாவின் குடிசை (4:5)
4. தேவனுடைய ஆமணக்குச் செடி - யோனாவின் மகிழ்ச்சி (4:6)
5. தேவனுடைய பூச்சி - யோனாவின் வருத்தம் (4:7-8)
6. யோனா கற்றுக்கொண்ட பாடம் (4:9-11)