2 யோவான்
முன்னுரை
அப்போஸ்தலர் யோவான் தன்னுடைய இரண்டாவது நிருபத்தை ஒரு தனிநபருக்கு எழுதுகிறார். தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கு இந்த நிருபத்தை பிரதானமாக எழுதுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் ஆண் என்றும், பெண் என்றும் வித்தியாசமில்லை. எல்லோரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். யோவானுடைய காலத்தில் இந்த அம்மாள் கர்த்தருக்குள் பக்திவைராக்கியமாகயிருந்தவள். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தவள். இப்படிப்பட்ட இந்த அம்மாளுக்கு யோவான் இந்த நிருபத்தை எழுதி அவளைக் கனப்படுத்துகிறார்.
யோவான் இந்த நிருபத்தை எபேசுவிலிருந்து கி.பி. 90 ஆம் ஆண்டில் எழுதினார்.
மையக்கருத்து
விசுவாசிகளின் நடத்தை, வஞ்சகர்களைப் பற்றிய காரியங்கள், அவர்கள் ஏமாற்றும் விதமும், நாம் எச்சரிப்போடு இருக்க வேண்டிய விதமும்.
பொருளடக்கம்
ஒ. ஆசிரியரும் தெரிந்துகொள்ளப் பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் வாழ்த்துரை (1:1-3)
ஒஒ. அம்மாளின் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறதற்காக சந்தோஷம் (1:4)
ஒஒஒ. ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் (1:5-6)
ஒய. வஞ்சகர், அந்திக்கிறிஸ்து ஆகியோருக்கு எதிரான எச்சரிப்பு (1:7-8)
ய. கிறிஸ்துவின் உபதேசத்தை மீறி நடக்கிறவனுக்கு எதிரான எச்சரிப்பு (1:9)
யஒ. கள்ளப்போதகர்களுக்கு என்ன செய்ய வேண்டும் (1:10-11)
யஒஒ. முடிவுரையும் வாழ்த்துரையும் (1:12-13)