1 யோவான்
முன்னுரை
இந்த நிருபத்தின் ஆசிரியர் அப்போஸ்தலர் யோவான். அப்போஸ்தலர் யோவான் ஒரு சுவிசேஷமும் எழுதியிருக்கிறார். சுவிசேஷத்திலுள்ள சத்தியமும், அவருடைய நிருபங்களிலுள்ள சத்தியமும் ஒன்றுபோலுள்ளது. இந்த நிருபத்தை வேதபண்டிதர்கள் பொதுவான நிருபம் என்று சொல்லுகிறார்கள். யோவான் இந்த நிருபத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது குறிப்பிட்ட சபைக்கோ எழுதவில்லை. எல்லா சபையிலும் வாசிக்கும்படியாக, இதை ஒரு சுற்றிக்கை நிருபம்போல எழுதியிருக்கிறார்.
அப்போஸ்தலர் யோவான் ஊழியம் செய்த காலத்தில் சபையில் கள்ளப்போதகர்களும் அந்நிக்கிறிஸ்துவும் எழும்பினார்கள். யோவான் இந்த நிருபத்தின் மூலமாக அவர்களைப்பற்றி எச்சரிக்கிறார். விசுவாசிகள் கர்த்தரிடத்தில் அன்புகூரவேண்டும். தங்களிடத்தில் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்புகூரவேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தில் உறுதியாய்த் தரித்திருக்கவேண்டும்.
திருச்சபை வரலாற்றின் பிரகாரம் யோவான் இந்த நிருபத்தை எபேசுவிலிருந்து கி.பி. 90 ஆம் ஆண்டில் எழுதினார்.
மையக்கருத்து
தேவனுடைய அன்பு, கிறிஸ்தவ ஜீவியம், கிறிஸ்தவ நடத்தை ஆகியவற்றைப் பற்றிய நடைமுறை உபதேசம்.
பொருளடக்கம்
ஒ. கிறிஸ்தவ ஐக்கியம்
1. கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட்டதால் ஐக்கியம் சாத்தியமாயிற்று (1:1-2)
2. ஐக்கியத்தின் ஐந்து நிபந்தனைகள்
(1) தேவ வாக்கியத்தின் ஒளியில் நடக்க வேண்டும் (1:3-7)
(2) நமது பாவங்களை அறிக்கையிட வேண்டும் (1:8)
(3) பாவங்களிலிருந்து மனந்திருந்தி தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டும் (1:9)
(4) தேவனுக்கு விரோதமாக நாம் பாவம் செய்ததை அங்கீகரிக்க வேண்டும் (1:10)
(5) பாவம் செய்யாமல் ஜீவித்து ஐக்கியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும் (2:1-2)
ஒஒ. தேவனை அறிந்திருப்பதற்கு பதிமூன்று சான்றுகள்
1. கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் (2:3-5)
2. கிறிஸ்து நடந்த படியே நாமும் தேவபக்தியுடன் நடக்க வேண்டும் (2:6)
3. சகோதரரிடத்தில் அன்புகூரவேண்டும் (2:7-11)
4. பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும் (2:12)
5. இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்க வேண்டும் - பொல்லாங்கனை ஜெயித்திருக்க வேண்டும் (2:13)
6. தேவ வசனம் நம்மில் நிலைத்திருக்க வேண்டும் (2:14)
7. உலகத்திலுள்ளவைகளில் அன்புகூராமல் தேவனுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும் (2:15-17)
8. பரிசுத்தவான்களோடு நிலைத்திருக்க வேண்டும் (2:18-19)
9. பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும் (2:20-21)
10. பிதாவையும் குமாரனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் (2:22-23)
11. கிறிஸ்து நமக்குள் நிலைத்திருக்க வேண்டும் (2:24-25)
12. நாம் கிறிஸ்துவிற்குள் நிலைத்திருக்க வேண்டும் (2:26-28)
13. நீதியைச் செய்ய வேண்டும் (2:29)
ஒஒஒ. தெய்வீக அன்பு
1. தேவனுடைய அன்பினால் நாம் அவருடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுகிறோம் (3:1-2)
2. தெய்வீக அன்பின் விளைவு
(1) கிறிஸ்தவரின் பரிசுத்தம் (3:3-4)
(2) கிறிஸ்தவரின் பாவமில்லாத தன்மை (3:5-10)
(3) நாம் ஒருவரிலொருவர் அன்பு கூரவேண்டும் (3:11-18)
(4) நாம் வேண்டிக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்கிறோம் (3:19-22)
(5) பரிசுத்த ஆவியானவரால் கிறிஸ்துவிற்குள் நிலைத்திருக்கிறோம் (3:23-24)
3. தேவனுடைய அன்பின் பாதுகாப்பு
(1) எல்லா ஆவிகளையும் சோதித்தறிய வேண்டும் (4:1)
(2) ஆவிகளைச் சோதித்தறியும் விதம் (4:2-3)
(3) பிசாசுகளை ஜெயிக்கும் விதம் (4:4)
(4) பிசாசுகளால் ஏவப்பட்டிருக்கும் கள்ளப்போதகரின் அடையாளங்கள் (4:5)
(5) உண்மையான கிறிஸ்தவரின் அடையாளங்கள் (4:6)
4. மறுபடியும் பிறந்திருப்பதற்கு நிருபணம் (4:7-8)
5. மனுஷர்மீது தேவனுடைய அன்பு (4:9-10)
6. நாம் தேவனிடத்தில் வாசமாயிருப்பதும் நமக்குள் தேவனுடைய அன்பும் (4:11-17)
7. அன்பின் உண்மையான தன்மை (4:18)
8. சகோதரரிடத்தில் அன்பு (4:19-21)
ஒய. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உபதேசம்
1. புதிய பிறப்பின் காலம் - தேவனால் பிறக்கும் விதம் (5:1)
2. புதிய பிறப்பின் நிரூபணம் (5:2-5)
3. இயேசு கிறிஸ்துவின் ஐந்து சாட்சிகள் (5:6-9)
4. புதிய பிறப்பை உடையவன் அந்த சாட்சியை தனக்குள்ளே கொண்டிருக்கிறான் (5:10)
5. இயேசு கிறிஸ்துவில் மட்டுமே நித்திய ஜீவன் உண்டு (5:11-12)
6. தேவனிடத்தில் நாம் கேட்டவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது (5:13-15)
7. பின்மாறிப்போனவர்களை இரட்சிக்கும் விதம் (5:16-17)
8. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான் (5:18)
9. பரிசுத்தவான்களுக்கும் பாவிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு (5:19)
10. தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் (5:20-21)