1பேதுரு
முன்னுரை
அப்போஸ்தலர் பேதுரு இரண்டு நிருபங்களை எழுதியிருக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை அழைத்து அவர்களுக்கு ஊழியங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவானவர் பேதுருவை அழைத்தபோது பேதுரு மீன்பிடித்துக்கொண்டிருந்தார். இயேசுகிறிஸ்து அவரை மனிதரைப்பிடிக்கும் ஊழியத்திற்கு அழைத்தார்.
இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்களில் பேதுரு மிகவும் விசேஷமானவர். கிறிஸ்துவுக்கு அதிக நெருக்கமானவர். மற்ற சீஷர்களைவிட பேதுரு வித்தியாசமானவர். இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் மனுஷஅவதாரத்தில் இருந்தபோதும், உயிர்த்தெழுந்த பின்பும், அவர் பேதுருவின்மீது அதிக அன்போடிருந்திருக்கிறார்.
பேதுரு தன்னைப்பற்றிச் சொல்லும்போது மிகவும் கண்ணியமாக “”இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்’’ என்றே தன்னைக் குறிப்பிடுகிறார். பேதுரு கிறிஸ்துவின் அப்போஸ்தலராகயிருந்தாலும், அவர் தன்னைப்பற்றி எழுதும்போது, “”உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பன்’’ (1பேது 5:1) என்று சொல்லி தன்னை தாழ்த்துகிறார்.
ஆதித்திருச்சபையில் யூதமார்க்கத்திலிருந்து இயேசுகிறிஸ்துவைத் தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்ட புதிய விசுவாசிகள் இருக்கிறார்கள். இந்த நிருபத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. பேதுரு இந்த நிருபத்தின் முதல் பகுதியில் அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை தெளிவாகவும் விரிவாகவும் எழுதுகிறார். இந்த நிருபத்தின் இரண்டாவது பகுதியில் அவர்கள் பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டும் என்று ஆலோசனை சொல்லுகிறார். இந்த நிருபத்தின் மூன்றாவது பகுதியில் அவர்கள் பாடுகளை அனுபவிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
விசுவாசிகளுக்கு பாடுகளும் உபத்திரவங்களும் உண்டு. அவற்றை நாம் பொறுமையோடு சகித்துக்கொள்ளவேண்டும். பிரச்சனைகள் வரும்போது சோர்ந்துபோய் விசுவாசத்திலிருந்து விலகிப்போய்விடக்கூடாது. கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கவேண்டும். பேதுரு இந்த நிருபத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் விசுவாசிகளுக்கு வரப்போகிற பாடுகளைப்பற்றி குறிப்பிடுகிறார். அவற்றைத் தாங்கிக்கொள்வதற்கு ஒவ்வொரு விசுவாசியும் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெளிவாகச் சொல்லுகிறார்.
கி.பி. 60 ஆம் ஆண்டில் பாபிலோனிலிருந்து இந்த நிருபம் எழுதப்பட்டது. பேதுரு திருமணமானவர். பேதுருவின் ஊழியம் பொதுவாக யூதர் மத்தியில் நடைபெற்றது.
ஆதித்திருச்சபைகளுக்குப் பேதுருவே தலைவர் என்று ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் வேதத்தில் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. மற்ற மூப்பர்களைப் போல பேதுருவும் ஒரு மூப்பர்.
பேதுரு ரோமாபுரிக்குச் சென்றதாக சான்று எதுவுமில்லை. ரோமாபுரியில் பேதுரு ஊழியம் செய்ததாகப் பவுல் தன்னுடைய நிருபங்கள் எதிலும் குறிப்பிடவில்லை. மேற்கு திசையை நோக்கி பிரயாணம் பண்ணுவதற்குப் பதிலாக பேதுரு கிழக்கு திசையை நோக்கிப் பிரயாணம் பண்ணி, பாபிலோனுக்குச் சென்றார். அங்கிருந்து இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார். யோவான் 21:18-19 ஆகிய வசனங்களில் காணப்படும் செய்தியைத் தவிர, பேதுருவின் மரணத்தைப் பற்றி நமக்கு வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 1பேதுரு, 2பேதுரு ஆகிய இரண்டு நிருபங்களையும் பேதுரு எழுதியிருக்கிறார்.
மையக்கருத்து
விசுவாசிகள் எல்லாவிதமான பாடுகளிலும் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். தேவனுடைய மெய்யான கிருபையில் நிலைகொண்டு நிற்க வேண்டும். (1பேதுரு 5:12) 1பேதுரு நிருபத்தில் உள்ள 5 அதிகாரங்களில் 16 இடங்களில் பேதுரு பாடுகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.
பொருளடக்கம்
ஒ. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-2)
ஒஒ. பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
1. புதிய பிறப்பிற்காகவும் நான்கு அம்ச சுதந்தரத்திற்காகவும் (1:3-4)
2. இரட்சிப்பிற்கு ஏதுவாக காக்கப் படுவதற்காக (1:5)
3. பாடுகளின் மூலமாக விசுவாசத்தின் பரிபூரணத்திற்காக (1:6-7)
4. சொல்லி முடியாத சந்தோஷத்திற்காகவும் இரட்சிப்பிற்காகவும் (1:8-9)
5. தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த இரட்சிப்பின் பரிபூரணத்திற்காக - இதை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள் (1:10-12)
ஒஒஒ. இரட்சிப்பின் பரிபூரணத்தைக் குறித்த புத்திமதிகள்
1. ஏழு கட்டளைகள் (1:13-17)
2. மனுஷர் எவ்வாறு மீட்கப்படாமல் இருக்கிறார்கள் (1:18)
3. மனுஷர் எவ்வாறு மீட்கப்படுகிறார்கள்
(1) இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் வைக்கும் விசுவாசத்தினால் (1:19:20)
(2) கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் வைக்கும் விசுவாசத்தினால் (1:21)
(3) பரிசுத்த ஆவியானவரால் (1:22)
(4) கர்த்தருடைய வசனத்தினால் (1:23)
4. சுவிசேஷம் என்றைக்கும் நிலைத்திருக்கும் (1:24-25)
5. ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணும் ஐந்து காரியங்கள் (2:1)
6. ஆவிக்குரிய ரீதியாக எவ்வாறு வளர்ச்சி பெறுவது (2:2)
7. கிறிஸ்துவும் விசுவாசிகளும் (2:3-4)
8. விசுவாசியும் தேவனும் (2:5)
9. கிறிஸ்துவும் விசுவாசியும் (2:6)
10. கிறிஸ்துவும் பாவிகளும் (2:7-8)
11. விசுவாசிகளும் தேவனும் (2:9-10)
ஒய. கிறிஸ்தவரின் உறவுகள்
1. கிறிஸ்தவரும் பாவிகளும் (2:11-12)
2. கிறிஸ்தவரும் அதிகாரிகளும் (2:13-17)
3. கிறிஸ்தவ வேலைக்காரரும் எஜமான்களும் (2:18-20)
4. பாடுபட்டதற்கு கிறிஸ்து நமக்கு முன்மாதிரி (2:21-25)
5. கிறிஸ்தவ மனைவிகளும் புருஷரும் (3:1-6)
6. கிறிஸ்தவ புருஷரும் மனைவிகளும் (3:7)
7. கிறிஸ்தவ சகோதரர்கள் - பதினான்கு கட்டளைகள் (3:8-13)
ய. கிறிஸ்தவரின் பாடுகள்
1. நீதியின் நிமித்தமாக பாடுபடுவதும் அதன் விளைவும் (3:14-16)
2. தேவனுடைய சித்தமும் பாடுஅனுபவிப்பதில் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டும் (3:17-18)
3. கிறிஸ்து காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார் (3:19-20)
4. ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல் தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது (3:21)
5. கிறிஸ்து தேவதூதர்களுக்கும் அவருடைய சத்துருக்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டார் (3:22)
6. கிறிஸ்தவர்கள் பாவங்களை விட்டோய்ந்திருந்து பாடுகளை அனுபவிக்க வேண்டும் (4:1-2)
7. சென்ற வாழ்நாட்காலத்தின் ஏழு பாவங்கள் (4:3-4)
8. எல்லா மனுஷரும் கணக்கு ஒப்புவிப்பார்கள் (4:5-6)
9. நியாயத்தீர்ப்பின் நிமித்தம் நான்கு கட்டளைகள் (4:7-9)
10. ஆவிக்குரிய வரங்கள் (4:10-11)
11. கிறிஸ்தவர்கள் பாடு அனுபவிக்க வேண்டிய நான்கு காரியங்களும் பாடு அனுபவிக்க வேண்டாத காரியங்களும் - பாடு அனுபவிக்கும்போது செய்ய வேண்டிய நான்கு காரியங்கள் (4:12-16)
12. தற்கால நியாயத்தீர்ப்பும் வருங்கால நியாயத்தீர்ப்பும் - தண்டனையிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது (4:17-19)
யஒ. கிறிஸ்தவருக்கு பதினான்கு கட்டளைகள்
1. போதகருக்கு ஏழு கட்டளைகள் (5:1-4)
2. எல்லா கிறிஸ்தவருக்கும் ஏழு கட்டளைகள் (5:5-9)
யஒஒ. முடிவுரையும் ஆசீர்வாதமும் (5:10-14)