1 தீமோதேயு ஒரு கண்ணோட்டம்




1தீமோத்தேயு
முன்னுரை

அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய நிருபங்களைப் பொதுவாக சபைகளுக்கு எழுதுவது வழக்கம். ஆனாலும் அவர் ஒருசில நிருபங்களை தனிநபர்களுக்கும் எழுதியிருக்கிறார். தீமோத்தேயுவுக்கு இரண்டு நிருபங்களும், தீத்துவுக்கு ஒரு நிருபமும், பிலேமோனுக்கு ஒரு நிருபமும்  எழுதியிருக்கிறார். தீமோத்தேயுவும் தீத்துவும் சுவிசேஷ ஊழியர்கள். இவர்களுடைய ஊழியம் அப்போஸ்தலருடைய ஊழியத்தைப் போன்றது.  தீமோத்தேயு பவுலுடைய ஊழியத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறார். ஆகையினால் அவர் தீமோத்தேயுவைப்பற்றிச் சொல்லும்போது “”விசுவாசத்தில் உத்தம குமாரன்’’ என்று குறிப்பிடுகிறார். 

பவுல் தீமோத்தேயுவுக்கு இரண்டு நிருபங்களை எழுதுகிறார்.  இந்த நிருபங்கள் எழுதப்படும்போது தீமோத்தேயு எபேசுவில் தங்கியிருந்து, அங்கு சுவிசேஷ ஊழியம் செய்கிறார். தீமோத்தேயு                 தன்னுடைய ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்றவேண்டுமென்று, பவுல்   இவ்விரண்டு நிருபங்கள் மூலமாக, அவருக்கு ஆலோசனை சொல்லுகிறார்.   

கி.பி. 67-ஆம் ஆண்டில் இந்த நிருபத்தை மக்கெதோனியாவிலிருந்து எழுதினார். (1தீமோ 1:3).

மையக்கருத்து

1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து ஆகிய மூன்று நிருபங்களும் போதக நிருபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபதேசம், சபையின் ஆரோதனை ஒழுங்குகள் ஆகியவற்றைப் பற்றிய உபதேசங்கள் போதக நிருபங்களில் உள்ளன.

போதக நிருபங்களில் 1தீமோத்தேயு முதலாவது எழுதப்பட்ட நிருபமாகும்.

பொருளடக்கம்

 ஒ.  முன்னுரை - ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-2)  

 ஒஒ. வேற்றுமையான உபதேசங்களும் கட்டுக்கதைகளும்         

1. கள்ள உபதேசம் (1:3)

2. கட்டுக்கதைகளும் முடிவில்லாத வம்ச வரலாறுகளும் (1:4)

3. கிறிஸ்தவருடைய சுபாவம் (1:5)

4. விலகிப்போவதற்கு காரணம் (1:6-7)

5. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் (1:8-10)

6. பவுல் ஓர் எடுத்துக்காட்டு  

(1) நம்பிக்கையும் உண்மையுமுள்ள ஊழியக்காரன் (1:11-12)

(2) பாவிகளில் பிரதான பாவி (1:13-15)

(3) எல்லா பாவிகளும் இரட்சிக்கப் படுவதற்கு திருஷ்டாந்தம் (1:16)

7. பரிபூரணமான இரட்சிப்பிற்காக உண்மையான தேவனுக்கு ஸ்தோத்திரம் (1:17)

8. தீமோத்தேயுவிற்குக் கட்டளை (1:18-20)

 ஒஒஒ. ஜெபமும் ஸ்திரீகளும்  

1. எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும் (2:1-3)

2. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் (2:4)

3. தேவனுக்கும் மனுஷனுக்கும் கிறிஸ்து ஒருவரே மத்தியஸ்தராக இருக்கிறார் (2:5-6)

4. சுவிசேஷத்தை பிரபலியப்படுத்தும் தேவனுடைய முறைமை (2:7)

5. எங்கு எப்படி ஜெபிக்க வேண்டும் (2:8)

6. ஸ்திரீகள் தங்களை தகுதியான வஸ்திரங்களினால் அலங்கரித்து எளிமையாய் இருக்க வேண்டும் (2:9-10)

7. ஸ்திரீயானவள் அடக்கமுடையவளாயிருக்க வேண்டும் (2:11-14)

8. பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப் படுவதற்கு நிபந்தனையுள்ள வாக்குத்தத்தம் (2:15)

 ஒய. சபையின் கண்காணிகளுக்கு தகுதிகள்  

1. ஊழியக்காரரின் பதினேழு தகுதிகள் (3:1-7)

2. உதவிக்காரரின் பதிமூன்று தகுதிகள் (3:8-13)

 ய. ஊழியக்காரருக்கு கட்டளைகள்  

1. ஊழியக்காரர்கள் முன்மாதிரியாக ஜீவிக்க வேண்டும் (3:14-15)

2. ஊழியக்காரரின் செய்தி (3:16)

3. ஊழியக்காரருக்கு எதிர்ப்பு - பிற்காலங்களிலே வரும் பின்மாற்றமும் பிசாசுகளின் உபதேசங்களும் (4:1-5)

4. நல்ல ஊழியக்காரனாக எவ்வாறு இருப்பது (4:6-11)

5. ஊழியக்காரர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் (4:12)

6. ஊழியக்காரருக்கு ஒன்பது கட்டளைகள் (4:13-16)

 யஒ. சமுதாயத்திலுள்ள வெவ்வேறு பிரிவினர்  

1. புருஷரும் ஸ்திரீகளும்  (5:1-2)

2. முதிர் வயதுள்ள விதவைகள் (5:3-10)

3. இளவயதுள்ள விதவைகள் (5:11-15)

4. உத்தம விதவையானவர்களுக்கு உதவி (5:16)

5. சபையின் மூப்பர்கள் (5:17-19)

6. சபையில் பாவம் செய்கிறவர்கள் (5:20)

7. தீமோத்தேயுவிற்குக் கட்டளை (5:21-25)

8. வேலைக்காரர்களின் கடமைகள் (6:1)

9. எஜமான்களின் கடமைகள் (6:2)

10. கள்ளப்போதகர்களின் பதினைந்து அடையாளங்கள் (6:3-5)

11. பண ஆசை, ஐசுவரியம் ஆகியவற்றின் ஆபத்துக்கள் (6:6-10)

12. தீமோத்தேயுவிற்குப் பத்து கட்டளைகள் (6:11-14)

13. தேவனுடைய பிரசன்னமாகுதலும் அவரைப் பற்றிய விளக்கமும் (6:15-16)

14. தீமோத்தேயுவிற்கு கடைசி கட்டளை - ஐசுவரியமுள்ளவருக்கு ஆலோசனைகள் (6:17-21

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.