சங்கீதம் 12 விளக்கம்

 




 சங்கீதம் 12 விளக்கம்

 

(செமினீத்தென்னும் எண்ணரம்புக் கிண்ணாரத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்கீதம்.)

 

இந்த சங்கீதம் சங்கீத புத்தகத்தில் வரும் நான்காவது நெருக்கத்தின் ஜெபம் என்று அழைக்கப்படுகிறது.

 

பொருளடக்கம்.

 

1. ஜெபம்  துன்மார்க்கனின் மூன்று பாவங்கள்  (வசனம்1முதல்2).

2. ஐந்துவிதமான நியாயத்தீர்ப்புக்கள் துன்மார்க்கனின் ஐந்து பாவங்கள்  தேவனுடைய வார்த்தைக்கும் துன்மார்க்கனுக்கும் இடையிலுள்ள ஒப்புமை (வசனம்3முதல்8).

 

சவுல் ராஜா இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி புரிந்தபோது, தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். தேசத்தில் பொதுவாகவே ஜனங்கள் மத்தியில் கர்த்தர்மீது வைத்திருக்கும் பக்தி குறைந்துபோயிற்று. தேசத்தில் விசுவாசக்குறைவு காணப்படுகிறது. தாவீது இந்தப் பிரச்சனைகளையெல்லாம் கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். தாவீதுக்கு விரோதமாக அவருடைய சத்துருக்கள் எழும்பியிருக்கிறார்கள். ஒரு சிலர் தாவீதுக்கு சிநேகிதர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களும் தாவீதுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமையே செய்கிறார்கள்.

 

கர்த்தர்தாமே தனக்கு உதவிபுரியவேண்டுமென்று தாவீது தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதால் ஒரு மனுஷனையும் நம்பமுடியவில்லை. அவர்களிடத்தில் உண்மையில்லை (சங்கீதம் 12வசனம்1,2). தாவீதின் சத்துருக்கள் அவரை பயமுறுத்துகிறார்கள். அவர்கள் இருதயத்தில் பெருமையான சிந்தனை நிரம்பியிருக்கிறது. அப்படிப்பட்ட துன்மார்க்கருக்கு அழிவு வருமென்று தாவீது முன்னறிவிக்கிறார் (சங்கீதம் 12வசனம்3,4).

 

தற்பொழுது மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கிறார்கள். ஆகையினால் துன்மார்க்கர் சுற்றித்திரிகிறார்கள் (சங்கீதம் 12வசனம்8). கர்த்தர் தாமே தன்னையும் தம்முடைய ஜனங்களையும், தம்முடைய நாமத்தினிமித்தம் பாதுகாக்கவேண்டுமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார் (சங்கீதம் 12வசனம்5,7). கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல வார்த்தைகளை வாக்குப்பண்ணியிருக்கிறார் (சங்கீதம் 12வசனம்12).

 

இரட்சியும் கர்த்தாவே. சங்கீதம் 12வசனம்1.

 

 இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.


இந்த வசனத்தின் விளக்கம்.


மேலும் படிக்க.....



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.