சங்கீதம் 11 விளக்கம்

 




சங்கீதம் 11

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்) விளக்கம்

 

முதலாவது நம்பிக்கையின் சங்கீதம் இது ஆகும்.

 

பொருளடக்கம்

 

1. கர்த்தரை நம்புவதற்குக் காரணங்கள் - (11:1-3)

2. நீதிமான் சோதிக்கப்படுகிறான் - (11:4-5)

3. துன்மார்க்கன் தண்டிக்கப்படுகிறான், நீதிமான் பாதுகாக்கப்படுகிறான் - (11:6-7)

 

தாவீது மிகுந்த போராட்டத்திலிருக்கிறார் தேவன்மீது தான் வைத்திருக்கிற நம்பிக்கையை விட்டுவிடும் அளவுக்கு, தாவீதுக்கு சோதனை உண்டாயிற்று. இந்தச் சோதனையில் தாவீது ஜெயம் பெறுகிறார் கர்த்தரை விசுவாசத்தோடு உறுதியாகப் பற்றிக்கொள்கிறார். சவுல் தாவீதுக்கு விரோதமாக எழும்பியபோது, தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். தாவீதை கொல்லுவதற்காக சவுல் அவர்மீது பட்டயத்தை எறிந்தார் அப்போது தாவீதின் சிநேகிதர்கள் தன்னுடைய தேசத்தைவிட்டு தப்பித்து ஓடிப்போகுமாறு அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.

 

ஆனால் தாவீதோ அவர்களுடைய வார்த்தையின் பிரகாரம் தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள தேசத்தைவிட்டு ஓடிப்போகவில்லை. அவர் கர்த்தரை நம்பியிருக்கிறார் கர்த்தர் தன்னுடைய அஸ்திபாரத்தைக் காத்துக்கொள்வார் என்று தாவீது விசுவாசிக்கிறார்.

 

தனக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சனையை தாவீது கர்த்தரிடத்தில் அறிவிக்கிறார். தான் கர்த்தரை நம்பியிருப்பதாக விசுவாசத்தோடு சொல்லுகிறார் (சங் 11:1-3). தேசத்தைவிட்டு ஓடிப்போகுமாறு தனக்கு ஆலோசனை சொல்லுகிறவர்களுக்கு தாவீது பிரதியுத்தரம் சொல்லுகிறார். கர்த்தருடைய பாதுகாப்பும் பராமரிப்பும் தனக்கு இருப்பதாக தாவீது விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார் (சங் 11:4) கர்த்தர் நீதியுள்ளவர். அவர் நீதியின்மேல் பிரியப்படுகிறவர். நீதிமானை சோதித்தறிகிறவர். துன்மார்க்கனை அழித்துப்போகிறவர் (சங் 11:5-7)

 

தாவீதுக்கு வந்த பிரச்சனையைப்போல கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும் பிரச்சனைகள் வரலாம் நமக்கு விரோதமாகவும், கர்த்தருடைய சபைக்கு விரோதமாகவும் சத்துருக்கள் எழும்பி தூஷணமான வார்த்தைகளைப் பேசலாம். கர்த்தர் நம்மை கைவிட்டுவிட்டார் என்று சொல்லி, சத்துருக்கள் நம்முடைய விசுவாசத்தை பலவீனம் பண்ணலாம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பதினோராவது சங்கீதத்தை தியானிப்பது நமக்கு ஆறுதலாகவும் பிரயேஜனமாகவும் இருக்கும்.

 தாவீதின் நம்பிக்கை 11:1-3

கர்த்தரை நம்பியிருக்கிறேன்


மேலும் படிக்க......


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.