பெர்சியர் - PERSIANS
பெர்சியா தேசத்தை சேர்ந்தவர்கள். அகாஸ்வேரு ராஜா பெர்சியா, மேதியா தேசங்களின் ராஜாவாக ஆட்சிபுரிந்தார். பெர்சியர்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் வளமாக இருந்தார்கள் (எஸ் 11-22). கோரேசு ஒரு பெர்சியன் (தானி 6:28).
பெர்சியா - PERSIA
பெர்சியா” என்னும் எபிரெய பெயருக்கு Parac 6539 - சுத்தமானது, நேர்த்தியானது" "pure" or "splendid" என்று பொருள்
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பிரபலியமாக இருந்த ஒரு பேரரசு. இவர்களுடைய ஆட்சிக்காலம் கி.மு. 539-331 ஆகும். பாபிலோனியப் பேரரசு பெர்சியரிடம் தோற்றுப்போனது. பாபிலோனியரிடம் சிறைப்பட்டிருந்த எபிரெய ஜனங்களை பெர்சியர்கள் விடுதலை செய்து எருசலேமுக்கு திரும்பிப் போக அனுமதித்தார்கள்
பழைய ஏற்பாட்டில் பெர்சிய தேசத்தைப் பற்றியும் அவர்களுடைய ராஜாக்களைப் பற்றியும் பல வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது (எஸ்றா 6.14; 99; தானி 8:20; 10:13) எஸ்தர் புஸ்தகத்தில் மேதிய, பெர்சிய தேசத்து ராஜாக்களைப் பற்றியும், பிரபுக்களைப் பற்றியும், அவர்களுடைய அதிகாரத்தைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது (எஸ் 1:3,14,18). பெல்சாத்ஷாரின் ராஜ்யம் மேதிய, பெர்சிய தேசத்தாரிடம் கொடுக்கப்படும் என்று தானியேல் தீர்க்கதரிசனம் கூறினார் (தானி 5:28)
பெர்சிய ராஜாக்கள் - PERSIAN KINGS
பெர்சிய தேசத்தில் பல ராஜாக்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அந்த ராஜாக்களைப்
பற்றியும், அவர்களுடைய ஆட்சி காலங்களைப் பற்றியும் பல கல்வெட்டுக்களில் எழுதப்பட்டிருக்கிறது. களிமண் உருளைகளில் தங்களுடைய வரலாற்றைப் பெர்சியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பெர்சிய
ராஜாக்களைப் பற்றிய விவரங்களை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது
பாபிலோனின் கிழக்குச் சாலையில் பெஹிஸ்துன் பாறை (Rock of Behistun)
என்னும் 1700 அடி உயரமுள்ள பாறை இருக்கிறது. இந்தப் பாறையில் பெர்சிய ராஜாக்களைப் பற்றிய கல்வெட்டுக்கள் அநேகம் உள்ளன இந்தக் கல்வெட்டுக்களைப் பற்றிய விவரங்கள்
கி.பி. 1846 ஆம் வருஷத்தில் வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இந்தக் கல்வெட்டுக்களில் தரியு ஹிஸ்டாஸ்பிஸைப் பற்றிய வம்சவரலாறு முழுவதுமாகக் காணப்படுகிறது
பெர்சிய தேசத்து ராஜாக்கள் அகாஸ்வேரு, அர்தசஷ்டா, தரியு என்று அழைக்கப் படுகிறார்கள். இவையெல்லாம் அவர்களுடைய உண்மையான பெயர்கள் அல்ல. இவை புனைப்பெயர்களாகும். "அகாஸ்வேரு" என்பதற்கு “மாமல்லன்” "The Mighty" என்று பொருள். "அர்தசஷ்டா" என்பதற்கு "பேரரசன்" "Great King" என்றும், “தரியு” என்பதற்கு "கட்டுப்படுத்துகிறவன்”"TheRestrainer” அல்லது பராமரிக்கிறவன்" "The Maintainer என்றும் பொருள்
எஸ்றா, நெகேமியா ஆகிய புஸ்தகங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவே எஸ்தர் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்து விட்டன. எஸ்றா 1:1 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் கோரேசு ராஜா என்பவன் எஸ்தர், அகாஸ்வேரு ஆகியோருக்குப் பிறந்த குமாரன். இவனைப் பற்றி ஏசாயா முன்னறிவித்திருக்கிறார். ஏசா 44:28-451 ) நெகேமியா புஸ்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் சிலநிகழ்ச்சிகள் (நெகே.1-7:4) எஸ்றா1.1-14 ஆகியவசனங்களுக்கு முன்பு நடைபெற்றவையாகும்
பெர்சியா ராஜாக்களை பற்றிய விவரம் வருமாறு :
1. கோரேசு - இவன் இரண்டு வருஷம் ஆட்சி புரிந்தான். மேதியனாகிய தரியு அல்லது அஸ்திகேசசிற்குப் பின்பு இவன் ஆட்சிப் பொறுப்பேற்கிறான். (தானி 10.11.
2. கம்பைசஸ் இவன் கோரேசின் குமாரன். பெர்சியாவில் இவன் கி.மு. 527 520 ஆகிய ஏழு வருஷங்களுக்கு ஆட்சி புரிந்தான்.
3. முதலாம் தரியு இவன் 35 வருஷங்களுக்கு ஆட்சி புரிந்தான். ஆட்சிக் காலம் கி.மு. 520-485. இவன் கிரேக்கு தேசத்தின்மீது படையெடுத்த முதலாவது பெர்சிய தேசத்து ராஜாவாவான். கி.மு. 490 ஆம் வருஷத்தில் மாரத்தோன் (Marathon) என்னும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் முதலாம் தரியு தோற்றுப்போனான்.
4. சஷ்டா இவன் 21 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 485-464. இவன் பெர்சிய தேசத்து ராஜா. கிரேக்க தேசத்திற்கு எதிராக எல்லா தேசங்களையும் எழுப்பிவிட்டான். தானி 11.2 ஆவது வசனம் இவன் மூலமாக நிறைவேறிற்று. கிரேக்கரோடு நடைபெற்ற யுத்தத்தில் கி.மு. 480-479 ஆவது வருஷத்தில் க்ஷ்டா தோல்வியுற்றான்
சஷ்டாவிற்குப் பின்பு ஆட்சி புரிந்த பெர்சியாவின் ராஜாக்கள்
1. முதலாம் அர்தசஷ்டா - 40 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம்கி.மு. 464-424.
2. இரண்டாம் சஷ்டா - ஒரு வருஷம் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 423
3. இரண்டாம் தரியு - 19 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 423-404
4. இரண்டாம் அர்தசஷ்டா -46வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம்கி.மு. 404-358.
5. மூன்றாம் அர்தசஷ்டா-20 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக் காலம் கி.மு. 358-338.
6. மூன்றாம் தரியு - 8 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 338-330.
மகா அலெக்ஸாண்டர் மூன்றாம் தரியுவை யுத்தத்தில் ஜெயித்தான். மேதிய பெர்சிய பேரரசு கிரேக்கப் பேரரசிற்குக் கீழ் வந்தது. புறஜாதியாரின் காலத்தில் இவர்கள் இஸ்ரவேலை ஒடுக்கிய ஐந்தாவது உலகப்பேரரசாக இருக்கிறார்கள் தானி 2:37-45 தானி 7:3-8; தானி 8:3-8,20-21 ஆகிய வசனங்களில் கிரேக்கு தேசம் மூன்றாவது உலகப் பேரரசாகக் கூறப்பட்டுள்ளது