மேதியசீமை MEDIA
மேதிய தேசத்தின் மறுபெயர். மேதியசீமை” என்னும் எபிரெய பெயருக்கு - - " Maday - 4074 "மத்திய தேசம்" "middle land" என்று பொருள்
மேதிய தேசம் - MEDES
மேதிய தேசம் கிழக்கு அசீரியாவில் உள்ளது. யாபேத்தின் குமாரனாகிய மாதாயின் சந்ததியில் மேதியர் வந்திருக்கிறார்கள் (ஆதி 10:2) மேதிய தேசம் பெர்சியாவிற்கு வடக்கிலும், ஐபிராத்து நதிக்குக் கிழக்கிலும், காஸ்பியன் கடலுக்கும், அர்மேனியாவிற்கும் தெற்கிலும் அமைந்துள்ளது. யாபேத்தின் குமாரனுடைய பெயர் மாதாய். (ஆதி 10:2). இவனுடைய பெயரால் மேதிய தேசம் பெயர் பெற்றிருக்கிறது.
அசீரியர் மேதியரை ஏற்கெனவே கீழ்ப்படித்தி இருந்தார்கள். 520 வருஷங்களாக மேதியர் அசீரியரின்கீழ் இருந்தார்கள் திகிலாத்பிலேசர், சல்மனாநேசர் ஆகியோரின் காலத்தில் மேதியர்கள் அசீரியாவிற்கு எதிராகக் கலகம் பண்ணினார்கள். இது யூதாவின் ராஜாக்களாகிய எசேக்கியா, ஆகாஸ் ஆகியோரின் காலத்தில் நடைபெற்ற சம்பவம். எசேக்கியாவின் நாட்களில் சனகெரிப்பின் அசீரிய சேனையைக் கர்த்தருடைய தூதனானவர் அழித்தார். (ஏசா 37:38-39) அசீரியரின் இந்த அழிவினால் மேதியர் விடுதலை பெற்றார்கள். ஏசாயா இந்தத் தீர்க்கதரிசனத்தைக் கூறும்போது மேதியர் பாபிலோனைவிட வல்லவர்களாக இருந்தார்கள் (ஏசா 13:17-18; ஏசா 21:2)
அசீரியரிடமிருந்து விடுதலை பெற்ற பின்பு மேதியர் பெர்சியரையும், மேற்கு ஆசிய தேசத்தாரையும் வென்று, அவர்களுடைய தேசங்களையும் தங்களுடைய தேசத்தோடு சேர்த்துக் கொண்டார்கள். பாபிலோனியரின் உதவியினால் அவர்கள் நினிவேயையும் பிடித்தார்கள். இவ்வாறாக அசீரியா மேதியாவிற்கு உட்பட்ட தேசமாயிற்று. மேதிய-பெர்சிய பேரரசு புறஜாதியாரின் காலத்தில் இஸ்ரவேலின்மீது பாரத்தைக் கொடுத்த நான்காவது ராஜ்யமாக விளங்கிற்று. தானி 2:38-44; தானி 7:4-5; தானி 8:20-25 தானி 11:1-5 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களில் இது இரண்டாவது தேசமாகும்.
பல வருஷங்களாக மேதிய தேசம் அசீரியரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. கி.மு. 556 ஆம் வருஷத்தில் கோரேஸ் ராஜா மேதியாவையும், பெர்சியாவையும் இணைத்து மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தை நிறுவினான். (எஸ் 1:314,18; எஸ் 10:2; தானி 6:81215; தானி 91). தீர்க்கதரிசனத்தில் மேதியாவைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது (ஏசா 21:2 ஏசா 13:17; எரே 25:25; எரே 51:1,28; தானி 5.28-31; தானி 8.201.
மேதியனாகிய தரியு - DARIUS THE MEDIAN
மேதியனாகிய தரியு" - (தானி 5:31; தானி 6:1-27; தானி 9.1). மேதியனாகிய தரியு என்னும் பெயரில் யாருமே இல்லை என்று ஒருசிலர் கூறுகிறார்கள். தரியு என்னும் பெயருக்கு பாதுகாவலர் என்று பொருள். சஷ்டாவிற்கும் மேலும் பலருக்கும் தரியு என்னும் பட்டம் வழங்கப்பட்டிருப்பதாக ஒருசிலர் கருத்து சொல்லுகிறார்கள் வரலாற்றில் மேதியனாகிய தரியு என்னும் பெயர் எங்கும் காணப்படவில்லை. இவன் ஒருவேளை அஸ்திகேஜசாக (Astyages) இருக்கலாம். முதலாம் தரியு, இரண்டாம் தரியு, மூன்றாம் தரியு ஆகியோருக்கு முன்பு இவன் பாபிலோன் தேசத்தை ஆட்சி புரிந்தான். தானியேல் புஸ்தகத்தை தவிர மேதியனாகிய தரியு என்னும் பெயர் வேறு எந்தப் புஸ்தகத்திலும் காணப்படவில்லை. யோசபஸ் என்னும் திருச்சபை வரலாற்றின் ஆசிரியர் இவனைப் பற்றி கூறும் போது இவன் அஸ்தகேஜசின் குமாரன் என்றும் கோரேசின் உறவினன் என்றும் குறிப்பிடுகிறார். இவன் தானியேலை மேதிய தேசத்திற்கு அழைத்துச் சென்று தன்னுடைய மாநிலம் முழுவதற்கும் அவனை பிரதான அதிகாரியாக நியமித்தான். தன்னுடைய தேசத்தில் அவனுக்கு எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்தான். பாபிலோனியருக்கும் மேதியருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தைப் பற்றி தானியேல் எதுவும் கூறவில்லை. மற்ற தீர்க்கதரிசிகள் இந்த யுத்தத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள் (ஏசா 13, ஏசா 14, ஏசா 45, ஏசா 46 ஏசா 47; எரே 1, எரே 51). இந்த யுத்தத்தில் மேதியரும், பெர்சியரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். மேதியர் தரியுவின் கீழும், பெர்சியர் கோரேசின் கீழும் இருந்தார்கள் பாபிலோன் தேசத்தை இவர்கள் கைப்பற்றிய போது இவ்விரண்டு பிரபுக்களும் இருந்தார்கள் என்பது பொதுவான கருத்தாகும்
மேதியாவை பற்றிய கூடுதல் தகவல்கள்
ஆசியாவிலுள்ள பழங்காலத்து தேசம். இது ஒரு மலைப்பிரதேசம். இங்கு விளைச்சல் நிலமும் இருந்தது. மேதியா தேசம் வரலாற்றில் பல சமயங்களில் உயர்ந்தும், தாழ்ந்தும் நிலையில்லாமல் இருந்தது
புதிய ஏற்பாட்டில் மேதியாவைப்பற்றி ராஜாக்களின் புஸ்தகத்தில் முதன்முதலாகக்கூறப்பட்டிருக்கிறது. அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசர் கி.மு. 721ஆம் வருஷத்தில் இஸ்ரவேலரை சமாரியாவிலிருந்து நாடுகடத்தினான் (2 இராஜா 17.6; 18:111. எஸ்றாவின் புஸ்தகத்திலும் தரியுவோடு தொடர்புபடுத்தி மேதியாவைப்பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
(எஸ்றா 6:2). மேதியருடைய பிரமாணங்களைப்பற்றி எஸ்தரிலும் (எஸ் 1:19) தானியேலிலும் (தானி 6:8,15) கூறப்பட்டுள்ளது.
தானியேல் தீர்க்கதரிசி பெல்சாத்சாரின் பாபிலோனிய ராஜ்யம் மேதியர் - பெர்சியர் ஆகியோரின் கைகளில் வீழ்ச்சியடையும் என்று தீர்க்கதரிசனம் கூறினார் (தானி 5:28). பெந்கொஸ்தே நாளில் எருசலேமில் கூடியிருந்த பலதேசத்தாரில் மேதியரும் இருந்தார்கள் (அப் 2.9).