எண்ணாகமம் அறிமுகம்
எண்ணாகமம் புஸ்தகத்தின் ஆசிரியர் மோசே பஞ்சாகமத்தில், எண்ணாகமம் புஸ்தகம் மூன்றாவது புஸ்தகமாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் எண்ணித்தொகையேற்றப்பட்ட சம்பவம் இந்தப் புஸ்தகத்தில் பல வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதினால், இந்தப் புஸ்தகத்திற்கு எண்ணாகமம் என்னும் பெயர்
கொடுக்கப்பட்டிருக்கிறது
கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் திரளாக பலுகிப் பெருகச் செய்வதாக வாக்குப்பண்ணினார். கர்த்தர் சொன்ன பிரகாரமாக, ஆபிரகாமின் சந்ததியார் திரளாய்ப் பலுகிப் பெருகியிருக்கிறார்கள் என்பதற்கு, இந்தப் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற இஸ்ரவேல் புத்திரரின் எண்ணிக்கை ஓர் அடையாளமாகயிருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரரை எண்ணித்தொகையேற்றும் சம்பவம் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. ஒன்று சீனாய் மலையில் (எண்ணாகமம் 1-ஆவது அதிகாரம்). இந்த சம்பவம் நடைபெற்ற முப்பத்தொன்பது வருஷங்களுக்கு பின்பு மோவாபின் சமவெளியில், இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் எண்ணித் தொகையேற்றப்படுகிறார்கள் (எண்ணாகமம் 26-ஆவது அதிகாரம்).
எண்ணாகமம் புஸ்தகத்தில் இஸ்ரவேல் புத்திரருடைய சரித்திர சம்பவங்களும், கர்த்தர் அவர்களுக்கு சொன்ன பிரமாணங்களும் சொல்லப்பட்டிருக்கிறது
இஸ்ரவேல் புத்திரர் எண்ணித்தொகையேற்றப்படுகிற சரித்திரமும், அவர்கள் வனாந்தரத்திலே பாளயமிறங்கியிருக்கிற விதமும் (எண் 1-4 ஆகிய அதிகாரங்கள்). பலிபீடமும், லேவியரும் பிரதிஷ்டைபண்ணப்படுகிற சம்பவம் (எண் 7,8 ஆகிய அதிகாரங்கள்). இஸ்ரவேல் புத்திரர் வரிசையாக அணிவகுத்து செல்லும் விதம் (எண் 9,10 ஆகிய அதிகாரங்கள்)
இஸ்ரவேல் புத்திரரின் அவிசுவாசமும், அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுப்பதும். இஸ்ரவேல் ஜனத்தார் தங்களுடைய பாவங்களினிமித்தமாக வனாந்தரத்திலே நாற்பது வருஷங்களாக சுற்றி அலைகிறார்கள் (எண் 11-14 ஆகிய அதிகாரங்கள்) கோராகுடைய புத்திரரின் கலகம் (எண் 16,17 ஆகிய அதிகாரங்கள்)
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே சுற்றி அலைந்த நாற்பது வருஷங்களில், கடைசி வருஷத்தில் நடைபெற்ற சரித்திர சம்பவங்கள் (எண் 20-26 ஆகிய அதிகாரங்கள்) மீதியானியர் மீது ஜெயமும், இஸ்ரவேலின் இரண்டரைக்கோத்தித்தார் யோர்தானுக்கு அப்புறத்திலே குடியேறின சம்பவம் (எண் 31,32 ஆகிய அதிகாரங்கள்). இஸ்ரவேல் புத்திரரின் பிரயாணம்
நசரேய சம்பந்தமான பிரமாணங்கள் (எண் 5,6 ஆகிய அதிகாரங்கள்). ஆசாரியரின் படைவிடைகள் (எண் 18,19 ஆகிய அதிகாரங்கள்). பண்டிகைகள் (எண் 28,29 ஆகிய அதிகாரங்கள்). பொருத்தனைகள் (எண் 30-ஆவது அதிகாரம்). இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்தில் குடியேறிய சம்பவம் (எண் 27,34-36 ஆகிய அதிகாரங்கள்) எண்ணாகமம் புஸ்தகம் முழுவதிலும் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்கள் சங்கீதம் 95:10-ஆவது வசனத்தில், சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது
நாற்பது வருஷம் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல், என்னுடைய இளைப்பாறுத-ல் அவர்கள்
பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்" (சங் 95:10,11)
சங்கீதம் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற சத்தியம் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு பயனுள்ள உபதேசமாயிருக்கிறது.
"ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுத-ல் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப் போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்" (எபி 4:1).
இந்தப் பிரபஞ்சத்தின் சரித்திரத்தில் ஏராளமான ராஜ்யங்கள் பேரரசாக விளங்கிற்று. மிகப்பெரிய பட்டணங்கள் அரணிப்பானவைகளாக
இருந்திருக்கிறது. இவையெல்லாம் சரித்திர சம்பவங்கள். இக்காலத்தில் அந்த
ராஜ்யங்களைப்பற்றியோ, பட்டணங்களைப்பற்றியோ யாரும் பேசுவதுமில்லை. அவை பற்றிய தெளிவான சரித்திர ஆதாரங்கள் எழுதப்படவுமில்லை .
இஸ்ரவேல் ஜனத்தாரோ ஆரம்பத்தில் சொற்ப எண்ணிக்கையுள்ள ஜனமாயிருந்தார்கள். அவர்கள் கூடாரங்களில் வாசம்பண்ணினார்கள். வனாந்தரத்திலே அலைந்து திரிந்தார்கள். ஆனாலும் இஸ்ரவேல் புத்திரரைப்பற்றிய சரித்திரம் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரரை யாரும் மறக்கவில்லை. அவர்களைப்பற்றி இன்றும் உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருடைய விசேஷமான ஜனத்தார் ஆவார்கள். கர்த்தர் அவர்களோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். ஆகையினால் அவர்கள் உடன்படிக்கையின் ஜனமாகயிருக்கிறார்கள். இதன் நிமித்தமாகவே இஸ்ரவேல் புத்திரர், இந்த உலகத்திலே மிகவும்
விசேஷமானவர்களாகயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய சுதந்தரமாக இருக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பிள்ளைகளாக இருப்பதினால், அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தில் அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது
எரிகோவிற்கு அருகிலுள்ள யோர்தான் நதிக்கரையில் அமைந்திருந்த மோவாபின் சமவெளிகளில் எண்ணாகமம் புஸ்தகம் எழுதப்பட்டது (எண் 36:13) கானான் தேசத்திற்குள் இஸ்ரவேல் புத்திரர்கள் பிரவேசிப்பதற்கு முன்பதாக இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. யோர்தானுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள ஓக், சீகோன் ஆகிய ராஜ்யங்களை இஸ்ரவேல் புத்திரர் முறியடித்த நிகழ்ச்சிகள் இந்தப் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது (எண் 21:1-35)
இஸ்ரவேலைச் சபிப்பதற்காகக் கிழக்கிலிருந்து வந்த பிலேயாமின் அனுபவமும் எண்ணாகமம் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது (எண் 22:1-24:25) இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்ட சமயத்தில் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர்கள் இரண்டு முறை எண்ணித்தொகையேற்றப்படுகிறார்கள். எகிப்து தேசத்திலிருந்து வெளியேறி வந்த இரண்டாம் வருஷத்தில் முதல் முறையாகவும் (எண் 1:1-10:36), வனாந்தரத்தில் அலைந்து திரிந்து முடிந்து, கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக இரண்டாம் முறையாகவும் (எண் 26:1-65) இஸ்ரவேல் புத்திரர்கள் எண்ணித்தொகையேற்றப் படுகிறார்கள் இவ்விரண்டு எண்ணிக்கைக்கும் இடையில் 38 வருஷம் கால இடைவெளி இருந்தது
யாத்திராகமம் புஸ்தகத்தில், இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறி, வனாந்தரத்திற்கு வந்த வரலாறு கூறப்பட்டிருக்கிறது எண்ணாகமம் புஸ்தகம் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரின் வரலாற்றைத் தொடர்ந்து கூறுகிறது.
காதேஸ்பர்னேயாவிலிருந்து இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டும். தங்கள் அவிசுவாசத்தின் நிமித்தமாக அவர்கள் கானான் தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு விசுவாசத்தோடு எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இஸ்ரவேல் புத்திரருக்கு ஏற்பட்ட மோசமான விளைவுகள் எண்ணாகமம் புஸ்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது (எண் 13:1-14:45)
எண்ணாகமம் புஸ்தகத்தின் எபிரெய பெயர் பேபி பார்" என்பதாகும். இதற்கு "வனாந்தரத்தில்
என்று பொருள் (எண் 1:1) இஸ்ரவேல் புத்திரருக்கு வனாந்தரத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் இந்தப் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. அவர்களுக்குப் பல அனுபவங்கள் உண்டாயிற்று. அவர்கள் இரண்டு முறை எண்ணப்பட்டது அவர்களுடைய அனுபவங்களில் ஒன்றாகும்
ஆதியாகமம் புஸ்தகம் ஆரம்பங்களின் புஸ்தகமாகும். இதில் சிருஷ்டிப்பும், மனுஷனுடைய வீழ்ச்சியும் விவரிக்கப்பட்டிருக்கிறது. யாத்திராகமம் புஸ்தகம் தேவனுடைய ஜனங்களின் மீட்பைப் பற்றி கூறுகிறது லேவியராகமம் புஸ்தகம் ஆராதனையின் புஸ்தகம் தேவனோடு எவ்வாறு ஐக்கியமாக இருப்பது நிவாரணபலிகளை எவ்வாறு செலுத்துவது ஆகிய காரியங்களை லேவியராகமம் புஸ்தகம் விரிவாகக் கூறுகிறது
எண்ணாகமம் புஸ்தகத்தில் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு முன்பாக எவ்வாறு ஜீவிக்க வேண்டும் அவருக்கு எவ்வாறு ஊழியம் செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் இஸ்ரவேலருக்கு மேலும் பல புதிய பிரமாணங்களும் கூறப்பட்டிருக்கிறது. கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு அவர்கள் ஆயத்தமாக இருந்தபடியினால், அதற்குரிய விசேஷித்த பிரமாணங்கள் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. (எண் 6,15,27,28 29,30,31,35,36).
