உபாகமம் அறிமுகம்

உபாகமம் அறிமுகம்

 

உபாகமம் புஸ்தகம் எழுதப்பட்ட காலம் சுமார் கி.மு 1645 ஆவது வருஷமாகும். எரிகோவிற்கு அருகிலுள்ள யோர்தான் நதிக்கரையில் அமைந்திருக்கும் மோவாபின் சமவெளிகளில் எண்ணாகமம் புஸ்தகம் எழுதப்பட்டது (எண் 36:13) இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பதாக இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. (உபா 1:5; உபா 34:1-12)

 

உபாகமம் புஸ்தகத்தின் ஆசிரியர். மோசே. இவர் இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவர். இவர் எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் தேசத்தாரை விடுவித்து, வனாந்தரத்தில் வழிநடத்திச் சென்றவர்

 

எபிரெய மொழியில் உபாகமம் புஸ்தகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் "மிஸ்நெஹ் என்பதாகும். இதன் பொருள் "இரண்டாம் பிரமாணம் என்பதாகும். ஏனெனில் பத்துக் கற்பனைகளை இந்தப் புஸ்தகம் மறுபடியும் கூறுகிறது. (உபா 5)

 

இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள் மோசே அப்போது அவர்களுக்குக் கூறியுள்ள ஆலோசனைகள் இந்தப் புஸ்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இது தவிர, இந்தப் புஸ்தகத்தில் காணப்படும் செய்திகள்

 

1. வனாந்தரத்தில் அலைந்து திரிந்த சம்பவங்களின் சுருக்கவுரை

2. நாற்பது வருஷங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பிரமாணங்களோடு சேர்க்கப்பட்டிருக்கும் புதிய பிரமாணங்கள்

3. பாவம் செய்வதற்கு பல வாய்ப்புக்கள் இருப்பதினால் பாவத்தைக்குறித்து பல எச்சரிப்புக்கள்.

4. இஸ்ரவேலின் வருங்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

5. பாலஸ்தீன உடன்படிக்கை (உபா 11:13-32; உபா 27:1-30:20)

 

உபாகமம் புஸ்தகத்தில், யாத்திராகமம், லேவியராகமம் எண்ணாகமம் ஆகிய புஸ்தகங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிற சரித்திர சம்பவங்களும், நியாயப்பிரமாணங்களும் மறுபடியுமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் புதிய சரித்திர சம்பவம் எதுவும் சொல்லப்படவில்லை

 

கர்த்தர் ஏற்கெனவே சொல்லியிருக்கிற பிரமாணங்கள் இந்தப் புஸ்தகத்தில் மறுபடியுமாய் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சில பிரமாணங்கள் விரிவுபடுத்தப்பட்டு விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சில பிரமாணங்களில், சில கருத்துக்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது கர்த்தருடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படிய வேண்டியதன் அவசியம் வலியுறுதப்பட்டிருக்கிறது.

 

கிரேக்க மொழி பேசும் வேதபண்டிதர்கள், இந்தப் புஸ்தகத்திற்கு "டியூட்டிரானமி" என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பெயருக்கு "இரண்டாவது பிரமாணம்" அல்லது "பிரமாணத்தின் இரண்டாவது பதிப்பு" என்று பொருள்

 

கர்த்தருடைய பிரமாணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கர்த்தருடைய வார்த்தையை மாற்ற வேண்டிய அவசியம் ஒருபோதும் ஏற்படாது ஆனாலும் கர்த்தருடைய பிரமாணத்தை விளக்குவதற்கு கூடுதலான செய்திகள் சொல்லப்படும் இஸ்ரவேல் புத்திரர் சந்திக்கும் புதிய சூழ்நிலைகளில் அவர்களுக்கு புதிய பிரமாணங்களும், பழைய பிரமாணங்களுக்கு புதிய விளக்கங்களும் கொடுக்கப்படும்

 

தேவனுடைய பிரமாணம் மறுபடியுமாய்ச் சொல்லப்படுவது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். கர்த்தருடைய பிரமாணங்கள் இந்தப் புஸ்தகத்தில் மறுபடியுமாய்ச் சொல்லப்பட்டிருப்பதற்கு விசேஷித்த காரணங்கள் உண்டு. கர்த்தர் தம்முடைய பிரமாணத்தை ஏற்கெனவே சொன்னபோது, அந்தப் பிரமாண வார்த்தைகளை தங்கள் காதுகளால் கேட்ட இஸ்ரவேல் புத்திரர் இப்போது உயிரோடில்லை அவர்கள் எல்லோரும் மரித்துப்போனார்கள். இப்போது இருக்கிறவர்கள் இஸ்ரவேலின் புதிய சந்ததியார்

 

கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலமாக, இஸ்ரவேலின் புதிய சந்ததியாருக்கு, தம்முடைய பிரமாணங்களை மறுபடியுமாய்ச் சொல்லுகிறார் கர்த்தருடைய பிரமாணங்கள் இஸ்ரவேல் புத்திரருடைய மனதிலும் இருதயங்களிலும்

பதிந்திருக்கவேண்டும்.

 

இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்தை

சுதந்தரிக்கப்போவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்கள். அவர்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது தங்கள் மனதில் கர்த்தர் சொன்ன வார்த்தைகளையும் சுமந்து செல்லவேண்டும்.

 

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். மோசே அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை இஸ்ரவேல் ஜனத்தாருக்கு முன்பாக வாசிக்கவேண்டும். இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தருடைய உடன்படிக்கையின் வார்த்தைகளையும்

 

அந்த உடன்படிக்கையில் சொல்லப்பட்டிருக்கிற நிபந்தனைகளையும் அறிந்துகொள்ளவேண்டும்

இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்தை சுதந்தரிக்கும்போது, அந்த தேசத்தில் அவர்கள் நிலைத்திருக்கவேண்டுமென்றால், அவர்கள் அந்த தேசத்தின் நன்மைகளை அனுபவிக்கவேண்டுமென்றால், அவர்கள்

கர்த்தருடைய உடன்படிக்கைக்கும், அவர் சொல்லியிருக்கிற நிபந்தனைகளுக்கும் பரிபூரணமாக கீழ்ப்படிய வேண்டும்.

 

இஸ்ரவேல் புத்திரர் இப்போது உடனே அறிந்துகொள்ளவேண்டிய பிரமாணங்கள் அவர்களுக்கு இப்போதே பிரயோஜனமாயிருக்கிற கர்த்தருடைய வார்த்தைகள் ஆகியவையெல்லாம் அவர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும்.

 

ஆசாரியர், லேவியர் ஆகியோரைப்பற்றியும், அவர்களுடைய ஊழியங்களைப்பற்றியும் கர்த்தர் சொன்ன பிரமாணங்கள் இந்தப் புஸ்தகத்தில் மறுபடியுமாய்ச் சொல்லப்படவில்லை. இஸ்ரவேல் புத்திரர் அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படை சத்தியங்கள் அவர்களுக்கு மறுபடியுமாய்ச் சொல்லப்படுகிறது

 

கர்த்தருடைய ஊழியக்காரர்கள் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஜனங்களுக்கு மறுபடியும் மறுபடியுமாய் அறிவிக்கவேண்டும்

 

மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளேயே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்" (பிலி 3:1) என்று அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார்

 

கர்த்தர் ஒரு தரம் சொன்னதை, நாம் இரண்டு தரம் கேட்பதற்கு ஆயத்தமாயிருக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளை அநேகந்தரம் கேட்பதற்கு நாம் விரும்பவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளை திரும்ப திரும்ப கேட்பது நமக்கு கிடைத்திருக்கிற சிலாக்கியம்

 

இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம், உபாகமம் புஸ்தகத்தைப்போல, நமக்கு இரண்டாவது பிரமாணமாயிருக்கிறது. சுவிசேஷமானது ஆவிக்குரிய பிரமாணம். இது விசுவாசத்தின் பிரமாணம்.

 

இஸ்ரவேல் புத்திரர் சீனாய் மலையிலிருந்து புறப்பட்ட பிரயாணத்தைப்பற்றி, உபாகமம் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நான்காவது அதிகாரத்தில் கீழ்ப்படிதலின் அவசியத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. பன்னிரண்டாவது அதிகாரம் முதல், இருபத்தேழாவது அதிகாரம் வரையிலும், ஒரு சில பிரமாணங்கள் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் இந்தப் பிரமாணங்களை உறுதிபண்ணுகிறார் (உபா 27,28 ஆகிய அதிகாரங்கள்)

 

கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களையும், நிபந்தனைகளையும், தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது வரும் ஆசீர்வாதங்களையும், கீழ்ப்படியாவிட்டால் வரும் சாபங்களையும் இந்தப் புஸ்தகத்தில் சொல்லியிருக்கிறார் (உபா 29,30 ஆகிய அதிகாரங்கள்)

 

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பிரமாணங்களை ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும் (உபா 31-ஆவது அதிகாரம்). கர்த்தருடைய வார்த்தைகள் ஒரு பாடலின் மூலமாக நினைவுகூரப்படுகிறது (உபா 32-ஆவது அதிகாரம்). மோசேயின் ஆசீர்வாதத்தோடு இந்தப் புஸ்தகம் முடிவு பெறுகிறது (உடா 33-ஆவது அதிகாரம்)

 

தன்னுடைய ஜீவியத்தின் கடைசி மாதத்தில், மோசே இந்தப் புஸ்தகத்திலுள்ள வார்த்தைகளையெல்லாம் எழுதி இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுக்கிறார் மோசேயின் மரணத்தைப்பற்றியும், அவர் அடக்கம்பண்ணப்படுவது பற்றியும் இந்தப் புஸ்தகத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது (உபா 34-ஆவது அதிகாரம்).

 

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இயேசுபிசாசினால் சோதிக்கப்படுவதற்கு, ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார். பிசாசானவன் தம்மிடத்தில் கேட்ட கேள்விகளுக்கு கிறிஸ்துவானவர் பிரதியுத்தரம் சொன்னபோது "எழுதியிருக்கிறதே" என்று மூன்று இடங்களில் சொல்லியிருக்கிறார் (மத் 4:4,7,10). கிறிஸ்துவானவர் மேற்கோளாகச் சொன்ன வசனங்களையெல்லாம் உபாகமம் புஸ்தகத்திலிருந்து எடுத்து மேற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார்

 

உபாகமம் என்னும் பெயருக்கு இரண்டாம் பிரமாணம் என்பது பொருள். இந்தப் புஸ்தகத்திற்கு,

 

நியாயப்பிரமாணத்தின் பிரதி ( 17:20) என்றும் பொருள் கூறலாம். பிரதி என்பதற்கான எபிரெய வார்த்தை ""மிஸ்நெஹ்" என்பதாகும். இதற்குத் திரும்ப கூறுதல், இரட்டிப்பு" என்பது பொருளாகும்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.