சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின்
சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் (சங் 4:7,8).
கர்த்தர் நமக்கு அநேக ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். அவர் நம்முடைய இருதயத்தில் கொடுக்கும் சந்தோஷமே, நமக்கு மெய்யான ஆசீர்வாதம். நம்முடைய ஜீவியத்தில் நமக்கு பல சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவங்களில் பல நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தில் கர்த்தரை நம்புகிறவர்களுக்கும், அவரை நம்பாதவர்களுக்கும் சந்தோஷமுண்டாகும். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இது மெய்யான சந்தோஷமல்ல. உலகப்பிரகாரமான ஜனங்களுக்கு இந்த சந்தோஷத்தைத் தவிர வேறு சந்தோஷம் எதுவுமில்லை
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு, உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களினால் உண்டாகும் சந்தோஷத்தைத் தவிர, அதிக சந்தோஷத்தை அவர் நம்முடைய இருதயத்தில் தருகிறார். இந்த சந்தோஷத்தைப் பார்க்கிலும் சந்தோஷமல்ல. இது உள்ளான சந்தோஷம். இந்த சந்தோஷம் சூழ்நிலைகளுக்கேற்ற பிரகாரம் கூடுவதோ குறைவதோ இல்லை. கர்த்தர் நம்முடைய இருதயத்தில் கொடுக்கிற