1 peter intro

 


 

ஒரு அறிமுகம் (1 பேதுரு)

 

பேதுரு நிருபத்தில் உள்ளாக அமைந்துள்ள இரு ஆய்வுக் கருத்துக்கள் காணப்படுகின்றன. முதலாவது, தங்கள் விசுவாசத்திற்கு விலைசெலுத்திக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களைப் பேதுரு உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் அவர்கள் பாடு அனுபவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையானது பாடக்கருத்தின் முக்கியத்துவத்தில் இருந்து ஒருக்காலும் தொலைவில் இருப்பதில்லை, ஆனால் அது 1:6-9, 3:13-17, 4:12-19 மற்றும் 5:9, 10 ஆகிய வசனங்களில் தெளிவாகக் காணப்பட முடியும். இரண்டாவது ஆய்வுக்கருத்து தவறு காண இயலாததாக உள்ளது: "எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” (4:7). 1:7ல் பேதுரு, “உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” என்று கூறுகையில் இவ்விரு ஆய்வுக் கருத்துக்களும் ஒன்றுகலக்கின்றன. சிரமங்களையும் பின்னடைவுகளையும் எவ்வாறு கையாள்வது என்று கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு போதித்தார், மேலும் கர்த்தர் மறுபடியும் வருவார் மற்றும் அவரது மக்கள் வெற்றிகொள்வார்கள் என்பதை அவர்களுக்கு இடைவிடாது நினைவூட்டினார்

 

சுவிசேஷங்கள் மற்றும் நடபடிகள் ஆகிய புத்தகங்களில் இருந்து நாம், பேதுருவை நன்கு தெரிந்து கொண்டிருக்கிறோம். அவரது அழைப்பையோ அல்லது சீஷத்துவத்தில் அவரது இடறுதலுக்கான முதல் முயற்சிகளைத் திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவருதலோ தேவையற்றது (காண்க மத்தேயு 4:18-22; 14:22-33; 16:13-23; 17:1-8; 26:31-46, 69-75). பெந்தெகொஸ்தே நாளன்று சபை தொடங்கிய போது, மற்றும் அதற்குப் பின்பு, பேதுருவின் நடத்துவத்துவப் பண்புகள் வெளிப்படையாகத் தெரிய வந்தன. நிச்சயமற்ற தன்மைகள் சீஷர்களை வாரிக்கொண்டு சென்றபோது, கடினமான கேள்விகள் அவர்களைக் கிழித்துப் பிரித்துப் போடுவதாக அச்சுறுத்தியபோது, கிறிஸ்தவர்கள் வாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது, பேதுரு ஒரு தூணாக, பலத்தின் கோபுரமாக இருந்தார். (காண்க: நடபடிகள் 1:15, 16; 2:14:39; 3:1-26; 4:1-22 9:32-43; 10:1-48.) அப்போஸ்தலர்களிடையே பேதுருவின் நடத்துவத்துவப் பணிப்பொறுப்பு தரப்பட்ட நிலையில் நாம், அவர் செய்துள்ளதைக் காட்டிலும் அதிகமாகப் புதிய ஏற்பாட்டில் மாபெரும் பகுதியை எழுதியிருக்கும்படி எதிர்பார்ப்போம். பேதுருவின் எழுத்துப் பணியின் அளவானது, பவுல் அல்லது யோவான் ஆகியோரின் எழுத்துப் பணிக்குச் சமமாக இருப்பது இல்லை, ஆனால் அவரது இரண்டு சிறிய நிருபங்களிலும் அவர், கிறிஸ்துவுக்கும் அவரது மக்களுக்கும் இடையில் உள்ள உறவிற்குள்ளான உட்கண்ணோக்குகளை அளித்தார், இவை வேறு எவ்விடத்திலும் காணப்படுவதில்லை

 

பேதுரு ஏன் இந்த நிருபத்தை எழுதினார்? அவர் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவர்கள் யார்? அவர்கள் எங்கே வாழ்ந்தனர்? அவர்களின் சோதனைகளைப் பற்றிப் பேதுரு எவ்வாறு அறிந்தார்? அவர்களுக்கு இந்த நிருபத்தை எழுதும்போது அவர் எங்கே இருந்தார்? மற்றும் அவர் எந்த சூழ்நிலைகளின்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தார்? நிருபமானது அதன் செய்தியை நமக்குத் திறக்கும் மற்றும் நாம், பேதுரு மற்றும் அவர் இந்த நிருபத்தை யாருக்கு எழுதினாரோ, அந்தக் கிறிஸ்தவர்கள் ஆகியோரின் இடத்தில் நம்மை வைக்கும் போது, இந்த நிருபத்தின் தைரியம், நம்பிக்கை மற்றும் சந்தோஷம் ஆகியவற்றில் இணைந்துகொள்வோம்.

 

எழுதிய வேளை

 மேலும் படிக்க........






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.