பிரகாசிக்கப்பண்ணும்



 

 

பிரகாசிக்கப்பண்ணும்

 

எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் (சங் 4:6).

 

உலகப்பிரகாரமான ஜனங்கள் புத்தியீனராயிருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் அநேகராயிருக்கிறார்கள். அவர்கள் "கர்த்தரை நம்புகிறவர்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்" என்று சொல்லுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு யாரும் நன்மை செய்யமாட்டார்கள் என்றும், கர்த்தருடைய பிள்ளைகள் நன்மையைக் காண்பதற்கு யாரும் உதவிசெய்யமாட்டார்கள் என்றும் உலகப்பிரகாரமான ஜனங்கள் சொல்லுகிறார்கள்.

 

உலகப்பிரகாரமான ஜனங்களுக்கு, "நன்மை" என்பது "உலகப்பிரகாரமான ஆசீர்வாதம்" ஆகும். தானியமும் திராட்சரசமும் பெருகியிருந்தால் அதுவே நன்மையென்று உலகத்தார் சொல்லுகிறார்கள். இந்த உலகத்தில் தங்களுக்கு ஐசுவரியம் மிகுந்திருந்தால் அதுவே பெரிய நன்மை என்று உலகப்பிரகாரமான ஜனங்கள் சிந்திக்கிறார்கள். தாங்கள் இச்சித்ததைப் பெற்றுக்கொண்டால் அதுவே தங்களுக்கு அதிக நன்மை என்று உலகத்தார் சொல்லுகிறார்கள்

 

உலகப்பிரகாரமான ஜனங்கள் தங்கள் கண்களால் பார்ப்பதை மாத்திரமே நன்மையென்று சொல்லுவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ, நம்முடைய கண்கள் காணாததை நாம் விசுவாசிக்கிறோம். இவற்றை மாம்சத்தின் கண்களால் காணமுடியாது. விசுவாசக்கண்களால் மாத்திரமே இந்த நன்மைகளைக் காணமுடியும். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற நன்மைகளைக் காண்பதற்கு நம்முடைய மனக்கண்கள்

பிரகாசமுள்ளதாயிருக்கவேண்டும்.

 

மேலும் படிக்க......





 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.