கர்த்தர் செவிகொடுத்தார்

கர்த்தர் செவிகொடுத்தார்

 

கர்த்தர் செவிகொடுத்தார்

 

நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்தி-ருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா) (சங் 3:4).

 

தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள். தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். ஆனால் தாவீதின் சத்துருக்களோ, கர்த்தருடைய சமுகத்திலிருந்து தாவீதுக்கு உதவி வராது என்று சொல்லுகிறார்கள். அவர்கள் தாவீதை கர்த்தரிடமிருந்து பிரித்து விடுவதற்கு சூழ்ச்சியாய்ப் பேசுகிறார்கள்.

 

தாவீது தனக்கு ஏற்பட்டிருக்கிற இக்கட்ட ட்டான சூழ்நிலைகளையும், தன்னைச் சூழ்ந்திருக்கிற சத்துருக்களையும் நோக்கிப் பார்த்தால், அவருடைய இருதயம் கலங்கும். இருதயத்தில் சோர்வு உண்டாகும் ஆனால் தாவீதோ தன்னுடைய சத்துருக்களை நோக்கிப் பார்க்காமல், தனக்கு உதவி செய்கிற கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார். தன்னைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கிற பகைஞரைப் பார்க்காமல், பரலோகத்தில் வீற்றிருக்கிற கர்த்தரை ஏறிட்டுப்பார்க்கிறார்.

 

கர்த்தர் தாவீதின் ஜீவியத்தில் இதுவரையிலும் அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். அவையெல்லாம் தாவீதுக்கு பசுமையான அனுபவங்கள். கர்த்தர் தாவீதுக்கு அதே நன்மைகளை இனிமேலும் செய்வார் தாவீது தன்னைச் சூழ்ந்திருக்கிற சத்துருக்களைப்பற்றி சிந்திக்காமல், கர்த்தர் தனக்கு இதுவரையிலும் செய்த நன்மைகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்.

 

தன்னைச் சூழ்ந்திருக்கிற சத்துருக்கள், தனக்கு இனிமேல் என்ன செய்வார்களோ என்று தாவீது பயப்படவில்லை. தாவீது அதைப்பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, கர்த்தர் தனக்கு இனிமேல் செய்யப்போகிற நன்மைகளை நினைத்து சந்தோஷப்படுகிறார் தாவீதுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற துக்கமான அனுபவம் சீக்கிரத்தில் முடிந்துபோகும். தாவீதைச் சுற்றிலும் இப்போது எல்லாம் இருளாயிருக்கிறது. கர்த்தரே அவருக்கு வெளிச்சமாகயிருக்கிறவர். இப்போது ஏற்பட்டிருக்கிற துக்கமும் இருளும் சீக்கிரத்தில் கடந்துபோகும். சந்தோஷமும் வெளிச்சமும் அவருக்கு சீக்கிரத்தில் உண்டாகும்

 

தாவீது அநேக துன்பங்களை அனுபவித்திருக்கிறார் அவருடைய சத்துருக்கள் தாவீதை வெகுமாக ஒடுக்கியிருக்கிறார்கள். தாவீதின் இருதயம் சோர்ந்துபோயிருக்கிறது. மிகுந்த வேதனையோடிருக்கிறார். இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையிலும், கர்த்தர் தனக்கு எல்லா விதத்திலும் போதுமானவராகயிருக்கிறார் என்பதை தாவீது கண்டுகொள்கிறார்.

 

தாவீதுக்கு எப்போதெல்லாம் துன்பங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம், அவர் தன்னுடைய துன்பங்களை நோக்கிப் பார்ப்பதில்லை. தன்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நோக்கிப் பார்ப்பதில்லை இந்தத் துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கிற கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார். தனக்குத் துன்பம் வரும்போதெல்லாம் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் முழங்கால் படியிட்டு ஜெபிக்கிறார்

 

தாவீதுக்கு அவருடைய சத்துருக்கள் மூலமாய் அநேக ஆபத்துக்கள் உண்டாயிற்று. ஏராளமான துன்பங்கள் உண்டாயிற்று. இப்படிப்பட்ட துக்கமான சூழ்நிலைகளில், தாவீது கர்த்தராகிய தேவனை நோக்கிப் பார்த்து, தேவனே தன்னுடைய ஜீவியத்திற்கு ஆண்டவராகவும், எஜமானராகவும் இருப்பதை பயபக்தியோடு அங்கீகரிக்கிறார். இருதயத்தில் பாரம் மிகுந்திருந்தாலும், தாவீது தன்னுடைய இருதயத்தைக் கர்த்தருக்கு நேராகத் திருப்புகிறார்

 

தாவீது தன்னுடைய பிரச்சனைகளையும், துக்கங்களையும் மனுஷரிடத்தில் போய்

புலம்புவதில்லை. அதற்குப் பதிலாக தாவீது கர்த்தரை நோக்கி சத்தமிட்டுக் கூப்பிடுகிறார். கர்த்தர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து தாவீதுக்குச் செவிகொடுக்கிறார்.

 

தேவன் தம்முடைய பிள்ளைகளின் ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிறவர். தாவீது எப்போதெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம்பண்ணுகிறாரோ, அப்போதெல்லாம் அவர் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்க ஆயத்தமாயிருப்பதை தாவீது உணர்ந்து அனுபவித்திருக்கிறார். கர்த்தர் பரலோகத்திலிருக்கிறார். அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருக்கிறார். உன்னதமான தேவன் தம்முடைய பரிசுத்த பர்வதத்திலிருந்து தாவீதின் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார்

 

சீயோன் மலை பரிசுத்த பர்வதம். அந்த மலையில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி இருக்கிறது ஜனங்கள் கர்த்தரைத் தேடி, அவருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணும்போது, கர்த்தர் தம்முடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மலையிலிருந்து, தம்முடைய பிள்ளைகளின் ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் பதில் கொடுப்பது வழக்கம்

 

பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை, பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில், தம்முடைய ராஜாவாக அபிஷேகம்பண்ணி வைத்திருக்கிறார் (சங் 2:6). நம்முடைய ஜெபங்களை நாம் இயேசுகிறிஸ்துவின் மூலமாய், பிதாவாகிய தேவனிடத்தில் ஏறெடுக்கவேண்டும். நாம் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் ஜெபிக்கும்போது பிதாவானவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு அவற்றிற்கு பதில் கொடுக்கிறார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.