இரட்சிப்பு கர்த்தருடையது

இரட்சிப்பு கர்த்தருடையது

இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. சேலா (சங் 3:8).

தாவீதின் இருதயத்தில் பயத்திற்குப் பதிலாக தைரியமும், அவநம்பிக்கைக்குப் பதிலாக நம்பிக்கையும் நிரம்பியிருக்கிறது. தாவீதின் இருதயத்தில் இரண்டுவிதமான சிந்தனைகள் எழும்பியிருக்கிறது. அவையாவன : 1. இரட்சிப்பு கர்த்தருடையது. 2. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

கர்த்தரிடத்தில் இரட்சிக்கும் வல்லமையிருக்கிறது. நமக்கு எப்படிப்பட்ட ஆபத்து வந்தாலும் கர்த்தரால் நம்மை இரட்சிக்க முடியும். அவர் சர்வவல்லமையுள்ள தேவன்

கர்த்தருடைய ஆசீர்வாதம் அவருடைய ஜனத்தின்மேல் எப்போதும் தங்கியிருக்கும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இரட்சிப்பதோடு, அவர்களை ஆசீர்வதிக்கவும் செய்கிறார். நம்மை இரட்சிப்பது கர்த்தருடைய வல்லமை. நம்மை ஆசீர்வதிப்பது அவருடைய கிருபை. கர்த்தர் தம்முடைய வார்த்தையினால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் கர்த்தருடைய ஆசீர்வாதமான வார்த்தையை விசுவாசித்து, அந்த ஆசீர்வாதங்களையெல்லாம் சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை கர்த்தர் சொன்ன ஆசீர்வாதங்கள் நம்முடைய ஜீவியத்தில் நமக்கு பிரத்தியட்சமாய் தெரியாமலிருக்கலாம். ஆனாலும் கர்த்தருடைய ஆசீர்வாதமான வார்த்தை நம்மீது இருக்கிறது என்று நாம் விசுவாசிக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பிரகாரமாக நம்மை நிச்சயம் ஆசீர்வதித்திருக்கிறார் என்று நம்பி அவரைத் துதிக்கவேண்டும்.

தாவீதைச் சுற்றிலும் சத்துருக்கள் சூழ்ந்திருக்கிறார்கள் அவருக்கு விரோதமாக படையெடுத்து வருகிறார்கள் ஆபத்து அவரை நெருங்கி வருகிறது. இந்த வேளையில்கூட, தாவீது தன்னுடைய சூழ்நிலைகளை நோக்கிப் பார்க்காமல், கர்த்தரையும் அவருடைய கிருபையையும் நோக்கிப் பார்க்கிறார். இரட்சிப்பு கர்த்தருடையது" என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார். "தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக" என்று அறிக்கை செய்து கர்த்தருடைய ஆசீர்வாதத்தை விசுவாசத்தோடு சுதந்தரித்துக்கொள்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.