2 நாளாகமம் அறிமுகம்

 



2 நாளாகமம் அறிமுகம்

 

நாளாகமத்தின் இரண்டாம் புஸ்தகம்

சாலொமோனுடைய ராஜ்யபாரத்தோடு ஆரம்பமாகிறது சாலொமோன் கர்த்தருடைய தேவாலயத்தைக் கட்டுகிறார். யூதாவினுடைய ராஜாக்களின் சரித்திரம் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப்போகும் சம்பவம் வரையிலும் இந்தப் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தின் முடிவிலே யூதாதேசத்தாராருடைய ராஜ்யபாரம் முடிவு பெறுவது பற்றியும், கர்த்தருடைய ஆலயம் அழிக்கப்படுவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது

 

யூதாதேசத்தை தாவீதின் வீட்டார்

ராஜ்யபாரம்பண்ணுகிறார்கள். தாவீதுக்கு பின்பு, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யூதாதேசத்தை சுமார் 400 அல்லது 500 வருஷங்களுக்கு ராஜ்யபாரம்பண்ணுகிறார்கள். அதன்பின்பு இஸ்ரவேல் தேசத்தின் ராஜ்யபாரம் நீண்டகாலத்திற்கு மங்கிப்போயிற்று இயேசுகிறிஸ்துவின் காலத்திலே மேசியாவின் ராஜ்யம் மறுபடியும் பிரகாசமாக எழும்புகிறது

 

"அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது" (லூக் 1:33).ராஜாக்களின் முதலாம், இரண்டாம் புஸ்தகங்களில் தாவீது ராஜாவுடைய வீட்டாரைப்பற்றிய சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. தாவீதின் வீட்டார்

யூதாதேசத்தை ராஜ்யபாரம்பண்ணுகிறார்கள். அவர்களுடைய சரித்திரங்களைப்பற்றிச் சொல்லும்போது, இவ்விரண்டு புஸ்தகங்களிலும், அங்கங்கே, அவர்களோடு தொடர்புடைய இஸ்ரவேலின் ராஜாக்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. ராஜாக்களின் புஸ்தகங்களில் யூதாதேசத்து ராஜாக்களைப்பற்றி சொல்லப்பட்டதைவிட, இஸ்ரவேல் தேசத்து ராஜாக்களைப்பற்றிச் சொல்லப்பட்டதே அதிகம்

நாளாகமத்தின் இரண்டு புஸ்தகங்களிலுமே, யூதாதேசத்தின் ராஜாக்களைப்பற்றி மாத்திரமே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ராஜாக்களின் புஸ்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிற சரித்திர சம்பவங்களில் சில, நாளாகமம் புஸ்தகத்திலும் மறுபடியுமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சில சரித்திர சம்பவங்கள் நாளாகமம் புஸ்தகத்திலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் புஸ்தகத்திலே புதிய சரித்திர சம்பவங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது

 

நாளாகமம் புஸ்தகத்தில், யூதாதேசத்தின் ராஜாசன சரித்திரத்தைவிட, கர்த்தருடைய ஆலயத்தின் சரித்திரமும், யூதாமார்க்கத்தின் சரித்திரமும் அதிகமாக விவரிக்கப்பட்டிருக்கிறதுயூதாதேசத்தின் சரித்திரத்திலே கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதை செய்த ராஜாக்கள் எல்லோருமே செழித்திருக்கிறார்கள். துன்மார்க்கமான ராஜாக்கள் எல்லோரும் பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறார்கள்

 

சாலொமோனுடைய ராஜ்யபாரம் மிகவும் அமைதியாகவும், ஆசீர்வாதமாகவும் நடைபெறுகிறது (2நாளா 1-9 ஆகிய அதிகாரங்கள்).

 

சாலொமோனுடைய ஆட்சியைத் தொடர்ந்து ரெகொபெயாமின் துன்மார்க்கமான ஆட்சி நடைபெறுகிறது (2நாளா 10-12 ஆகிய அதிகாரங்கள்). அபியா யூதாதேசத்தை கொஞ்சகாலத்திற்கு ஆட்சி செய்கிறான் (2நாளா 13-ஆவது அதிகாரம்).

 

ஆசாவின் சந்தோஷமான ராஜ்யபாரம். இவன் பல வருஷங்களுக்கு யூதாதேசத்தை

ராஜ்யபாரம்பண்ணுகிறான் (2நாளா 14-16 ஆகிய அதிகாரங்கள்). யோசபாத்தின் பக்தியுள்ள ராஜ்யபாரம். இவனுடைய காலத்தில் இஸ்ரவேல் தேசம் செழித்திருக்கிறது (2நாளா 17-20 ஆகிய அதிகாரங்கள்)

 

யோராம், அகசியா ஆகியோரின் துன்மார்க்கமான ராஜ்யபாரங்கள் (2நாளா 21-22 ஆகிய அதிகாரங்கள்) யோவாஸ், அமத்சியா ஆகியோரின் நிலையில்லாத ராஜ்யபாரங்கள் (2நாளா 24-25 ஆகிய அதிகாரங்கள்) உசியாவின் நீண்டகால ராஜ்யபாரம். இவனுடைய காலத்தில் யூதாதேசம் செழித்திருக்கிறது (2நாளா 26#ஆவது அதிகாரம்).யோதாமின் ராஜ்யபாரம் (2நாளா 27-ஆவது அதிகாரம்). ஆகாசின் துன்மார்க்கமான ராஜ்யபாரம் (2நாளா 28-ஆவது அதிகாரம்). யோசியாவின் ராஜ்யபாரத்தில் நடைபெற்ற ஆவிக்குரிய மறுமலர்ச்சிகள் (2நாளா 34#35 ஆகிய அதிகாரங்கள்) யோசியாவின் குமாரருடைய ஆட்சிக்காலத்திலே யூதாதேசம் அழிந்துபோகிறது (2நாளா 36-ஆவது அதிகாரம்)

 

யூதாதேசத்தின் ராஜாக்களையும், அவர்களுடைய ராஜ்யபாரங்களையும், அவர்கள் அனுபவித்த நன்மை தீமைகளையும் தியானித்துப் பார்க்கும்போது, 'என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள்" (1சாமு 2:30) என்று கர்த்தர் சொன்ன சத்தியம் நிருபணமாகிறதுநாளாகமம், 2நாளாகமம் ஆகிய இரண்டு

புஸ்தகங்களும் பாலஸ்தீன தேசத்தில் சுமார் கி.மு. 1279 - 461 ஆகிய வருஷக் காலத்தில்

எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ராஜாக்களின் ஆட்சிக் காலத்திலும் ஊழியம் செய்து வந்த தீர்க்கதரிசிகள் அல்லது சம்பிரதிகள் அந்தந்தக் காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எழுதினார்கள் இந்த ஆவணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, பிற்காலத்து ஆசிரியர்கள் அதை"நாளாகமம்" என்னும் ஒரே புஸ்தகமாகத் தொகுத்தார்கள். கி.மு. 294 - 289 ஆகிய வருஷங்களில் எபிரெய மொழியின் பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு, செப்துவஜிந்த் பதிப்பு வெளிவந்தது. செப்துவஜிந்தில் நாளாகமம் புஸ்தகம் 1 நாளாகமம், 2நாளாகமம் என இரண்டு புஸ்தகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது நாளாகமம் புஸ்தகங்களைத் தொகுத்து எழுதியவர்கள் ஏசாயா, எஸ்றா ஆகியோர் ஆவர். கி.மு. 743 -683 கி.மு. 546 - 461 ஆகிய வருஷக்காலத்தில் நாளாகமம் புஸ்தகம் தொகுத்து நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்ஏசாயாவும், எஸ்றாவும் இஸ்ரவேலுடைய ராஜாக்களின் நடபடிகளைத் தொகுத்தார்கள். நாத்தான், காத், இத்தோ அகியா, யெகூ ஆகியோர் ராஜாக்களின் நடபடிகளை அந்தந்தக் காலத்தில் எழுதி வைத்திருந்தார்கள் இஸ்ரேல், யூதா ஆகிய தேசங்களுடைய ராஜாக்களின் வரலாற்றை ஏசாயா எழுதினார். (2நாளா 32:32) எஸ்றா 2நாளா 33-36 ஆகிய அதிகாரங்களை எழுதி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாற்றை நிறைவு செய்தார் ஜெபாலயத்தின் தலைவராக எஸ்றா ஊழியம் செய்து வந்தார். இந்த ஜெபாலயத்தில் கல்வி அறிவுமிக்க யூதர்கள் இருந்தார்கள். இவர்கள் பழைய ஏற்பாட்டு நூல்களைத் தொகுத்தார்கள். இவர்கள் தொகுத்து வெளியிட்ட நூல்களே பிற்காலத்தில் பழைய ஏற்பாடாக வெளி வந்திருக்கிறது. செப்துவஜிந்த் பதிப்பிலும் இந்த நூல்களின் தொகுப்புக்களே கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

 

இஸ்ரவேல் தேசத்தில் தலைவர்களின் வரலாற்றுப் பின்னணி, வரப்போகிற மேசியாவின் வம்சவரலாறு யூதா ராஜ்யத்தின் வரலாறு, மாம்சத்தின் பிரகாரம் இயேசு கிறிஸ்துவின் முன்னோர் ஆகிய காரியங்களெல்லாம் நாளாகமம் புஸ்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது

 

தாவீதின் ராஜ்யம் தொடர்ந்து நிலைத்து நிற்காமல் போனதற்குக் காரணமும், இஸ்ரவேல் தேசம் அந்நியருடைய சிறையிருப்புக்குப் போனதற்குக் காரணமும் இந்தப் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

 

பொருளடக்கம்

 

 சாலொமோனின் ஆட்சி - நாற்பது வருஷங்கள்

 

1. சாலொமோன் இராஜாவாக ஸ்தாபிக்கப் படுகிறான் (1:1)

2. கிபியோனில் தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது - சாலொமோன் அதில் பலிகளைச் செலுத்தினான் (1:2-6)

3. ஞானம் வேண்டுமென்று சாலொமோன் ஜெபிக்கிறான் (1:7-10)

4. தேவன் பிரியப்படுகிறார் - ஞானம் கொடுக்கப்படுகிறது (1:11-12)

5. சாலொமோனின் மகிமையும் ஐசுவரியங்களும் (1:13-17)

6. தேவனுடைய ஆலயம் கட்டுவதற்கு ஆயத்தங்கள்

 

(1) வேலையாட்கள் - 153, 600 பேர்கள் # எல்லோரும் மறுஜாதிக்காரர்கள் (2:1-2)

(2) கேதுரு மரங்களுக்காக ஈராமிடம் விண்ணப்பம் (2:3-10)

(3) சாலொமோனின் விண்ணப்பத்தை ஈராம் அங்கீகரிக்கிறான் (2:11-16)

(4) இஸ்ரவேலில் மறுஜாதியாரின் எண்ணிக்கை - 153, 600 பேர்கள் (5) தேவாலயப்பணியைச் செய்தார்கள் (2:17-18)

 

7. தேவாலயம் கட்டப்படுகிறது

 

(1) நாளும் இடமும் (3:1-2)

(2) தேவாலயத்தின் அளவுகள் (3:3-4)

(3) தேவாலயத்தின் உள் அலங்காரங்கள் (3:5-7)

(4) மகா பரிசுத்த ஸ்தலம் (3:8)

(5) மேலறைகள் (3:9)

(6) மகா பரிசுத்த ஸ்தலத்தில் கேருபீன்கள்

(3:10-13)

(7) பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் திரை (3:14)

(8) இரண்டு முன்தூண்க ள் (3:15-17)

(9) தேவாலய வாசலுக்கு முன்பாக வெளிப்பிரகாரத்தில் வெண்கலப் பலிபீடம் (4:1)

(10) வெண்கல கடல்தொட்டி (4:2-5)

(11) பத்து வெண்கல கொப்பரைகள் (4:6)

(12) பத்து பொன்விளக்குத்தண்டுகள், பத்து மேஜைகள், நூறு பொன்கலங்கள் (4:7-8)

(13) பிரகாரங்களும் தேவாலயத்து வாசல்களும் (4:9-10)

(14) ஈராமின் உலோக வேலையும் அவை வார்க்கப்பட்ட இடமும் (4:11-22)

(15) தேவாலயம் கட்டுமானப் பணி நிறைவுபெற்றது (5:1)

 

8. தேவாலய பிரதிஷ்டை

 

(1) இஸ்ரவேலின் தலைவர்கள் கூடினார்கள் (5:2-3)

(2) சீயோனிலிருந்து பெட்டி தேவாலயத்திற்குக் கொண்டு வரப்படுகிறது (5:4-10)

(3) தேவனுடைய மகிமை வெளிப்படுகிறது (5:11-14)

(4) சாலொமோனின் செய்தி (6:1-11)

(5) செய்தி கொடுப்பவருக்கு வெண்கல மேடை (6:12-13)

(6) அர்ப்பணிப்பின் ஜெபம்

 

(அ) தேவன் உண்மையுள்ளவர் என்பது அங்கீகரிக்கப்படுகிறது (6:14-15)

(ஆ) தொடர்ந்து உண்மையுள்ளவராக இருக்கவேண்டும் என்னும் விண்ணப்பம் (6:16-17)

(இ) தேவனுடைய சர்வவியாபகம் (6:18)

(ஈ) தேவாலயத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு பதில் கிடைக்க வேண்டுமென்னும் விண்ணப்பம் (6:19-21)

(உ) நீதியான நியாயத்தீர்ப்பு வேண்டுமென்று விண்ணப்பம் (6:22-23)

(ஊ) சிறையிருப்பிலிருந்து மீட்கப்பட வேண்டும் மன்னிக்கப்பட வேண்டும் என்னும் விண்ணப்பம் (6:24-25)

(எ) மன்னிப்புக்காகவும் வானத்திலிருந்து மழைக்காகவும் ஜெபம் (6:26-27)

(ஏ) வாதை, யுத்தம், கொள்ளைநோய் ஆகியவற்றில் உதவி வேண்டுமென்னும் விண்ணப்பம் (6:28-31)

(ஐ) இஸ்ரவேலுடைய தேவனிடம் விண்ணப்பம் பண்ணும் மறுஜாதியாரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்னும் விண்ணப்பம் (6:32-33)

 

ஒ. (பாவமில்லாமல் இருக்கும்போது ஏற்படும் யுத்தத்தில் உதவி வேண்டுமென்னும் விண்ணப்பம் (6:34-35)

(ஓ) பாவத்தினால் ஏற்படும் யுத்தத்தில் உதவி வேண்டுமென்னும் விண்ணப்பம் (6:36-39)

(ஓள) தேவனுடைய பிரசன்னமும் ஆசீர்வாதமும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்னும் விண்ணப்பம் (6:40- 42)

 

(7) சாலொமோனின் ஜெபத்திற்கு தெய்வீக அங்கீகரிப்பும் பலிகளும் (7:1-3)

(8) சாலொமோனின் பலிகள் (7:4-7)

(9) இஸ்ரவேலின் மகா பெரிய பண்டிகை (7:8-11)

 

9. தேவன் சாலொமோனுக்கு இரண்டாம் முறை தரிசனம் தருகிறார்

 

(1) எல்லா ஜெபங்களுக்கும் பதில் தருவதாக தேவன் வாக்குப் பண்ணுகிறார் (7:12-16)

(2) தாவீதின் உடன்படிக்கை சாலொமோனுக்கு உறுதிபண்ண ப் படுகிறது (7:17-18)

(3) ஜனங்கள் மீதும் தேவாலயத்தின்மீதும் நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பு (7:19-22)

 

10. சாலொமோனின் வீரமும் புகழும்

 

(1) தேவனுடைய ஆலயமும் அவனுடைய அரண்மனையும் கட்டி முடிக்கப்பட்டது (8:1)

(2) ஈராம் தனக்கு வெகுமதியாக கொடுக்கப்பட்ட 20 பட்டணங்களை சாலொமோனிடம் திருப்பி கொடுக்கிறான் - சாலொமோன் அவைகளை இஸ்ரவேலுக்காக திரும்பக்கட்டுகிறான் (8:2)

(3) சாலொமோன் ஆமாத் சோபாவை வென்று பட்டணங்களைக் கட்டுகிறான் (8:3-6)

(4) மறுஜாதியார் அனைவரையும் பகுதிப்பணம் கட்டவும் வேலை செய்யவும் சாலொமோன் நியமிக்கிறான் (8:7-9)

(5) இஸ்ரவேல் அனைத்திலும் சாலொமோனுக்கு 250 தலைவர்கள் இருந்தார்கள் (8:10)

(6) பரிசுத்த ஸ்தலங்கள் மீதும் பொருட்கள் மீதும் சாலொமோனின் பக்தி (8:11)

(7) ஆராதனையில் சாலொமோன் உண்மையுள்ளவனாக இருந்தான் (8:12-13)

(8) சாலொமோன் தனது மார்க்கக் கொள்கைகளைத் தொடர்ந்து செய்துவந்தான் (8:14-16)

(9) சாலொமோனின் கப்பற்படை - இஸ்ரவேலின் முதலாவது கப்பற்படை (8:17-18)

(10) சாலொமோனின் ஞானம் - சேபாவின் இராஜஸ்திரீ (9:1-13)

(11) சாலொமோனின் ஐசுவரியங்கள் (9:14-27)

(12) சாலொமோனின் மரணம் - ரெகொபெயாம் ஆட்சிக்கு வருகிறான் (9:28-31)

 

ரெகொபெயாமின் ஆட்சி # பதினேழு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் அவனுடைய மோசமான கூட்டமும் (10:1-11)

2. இராஜ்ஜியத்தின் நான்காவது பிரிவு - உள்நாட்டு குழப்பம் (10:12-19)

3. யூதாவை கூட்டினான் - உள்நாட்டுக் கலகம் தவிர்க்கப்படுகிறது (11:1-4)

4. ரெகொபெயாமின் அரணான பட்டணங்கள் (11:5-12)

5. யெரொபெயாமுடைய பாவத்தின் நிமித்தமாக இஸ்ரவேலிலுள்ள ஆசாரியர்களும், லேவியர்களும் ரெகொபெயாமைச் சேர்ந்து கொள்கிறார்கள் (11:13-15)

6. யெரொபெயாமுடைய பாவத்தின் நிமித்தமாக பத்து கோத்திரத்தாரில் தெய்வபக்தி மிகுந்தவர்கள் அனைவரும் ரெகொபெயாமைச் சேர்ந்து கொள்கிறார்கள் (11:16)

7. ரெகொபெயாம் தேவனை மூன்று வருஷங்கள் மட்டுமே சேவிக்கிறான் (11:17)

8. ரெகொபெயாமின் குடும்பம் -78 மனைவிகளும் மறுமனையாட்டிகளும் - 88 குமாரர்களும் குமாரத்திகளும் (11:18-23)

9. ரெகொபெயாம் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டான் (12:1)

10. யூதாவின்மீது எகிப்தியரின் படையெடுப்பு

 

(1)எருசலேமைத் தவிர அரணான பட்டணங்கள் யாவும் பிடிபட்டன (12:2-4)

(2) தீர்க்கதரிசியாகிய செமாயா பிரசங்கம் பண்ணுகிறான் # ரெகொபெயாம் தன்னைத் தாழ்த்துகிறான் (12:5-6)

(3) ரெகொபெயாம் மனந்திரும்பியதினால் தேவன் அவனை அழிக்காமல் விட்டுவிடுகிறார் (12:7-12)

 

11. ரெகொபெயாமின் ஆட்சிக் காலம் (12:13-14)

12. ரெகொபெயாமின் மரணம் - அபியா ஆட்சிக்குவருகிறான் (12:15-16)

 

அபியாவின் ஆட்சி - மூன்று வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் ஆட்சி புரிவதும் (13:1-2)

2. யெரொபெயாமோடு யுத்தம் - அபியாவின்

பிரசங்கம் (13:3-12)

3. அபியாவின் வெற்றி - 5 இலட்சம் இஸ்ரவேலரை சங்காரம் பண்ணினார்கள் (13:13-20)

4. அபியாவின் குடும்பம் -14 மனைவிகள் # 38 குமாரர்களும், குமாரத்திகளும் (13:21-22)

 

ஆசாவின் ஆட்சி - நாற்பத்தியொரு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் அவனுடைய சுபாவமும் - பத்து வருஷங்கள் - அமைதியான காலம் (14:1-5)

2. ஆசாவின் கட்டுமானப் பணிகள் (14:6-7)

3. ஆசாவின் இராணுவம் - 580,000 புருஷர்கள் (14:8)

4. 10 இலட்சம் யுத்த வீரர்கள் - 300 இரதங்கள் - யூதாவின்மீது போர்தொடுத்தார்கள் (14:9-10)

5. தேவனுடைய உதவிக்காக ஆசா கெஞ்சினான் - தேவன் அவனுக்கு வெற்றி தந்தார் (14:11-15)

6. அசரியா தீர்க்கதரிசியின்மூலமாக ஆசாவுக்கு கூறப்பட்ட தேவனுடைய செய்தி (15:1-7)

7. ஆசாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆவிக்குரிய எழுப்புதல்

 

(1) தீர்க்கதரிசிக்கு கீழ்ப்படிகிறான் - யூதாவிலிருந்து விக்கிரகாராதனையை அகற்றுகிறான் # தேவனுடைய ஆராதனையைப் புதுப்பிக்கிறான் (15:8)

(2) பத்து கோத்திரத்தாரில் ஏராளமானோர் ஆசாவோடு சேர்ந்துகொள்கிறார்கள் # தேவனை ஆராதிப்பதாக உடன்படிக்கை பண்ணுகிறார்கள் (15:9-15)

(3) தன்னுடைய தாய் விக்கிரகாராதனை செய்தததினால் அவளை இராணியாக இராதவாறு இராஜா அகற்றுகிறான் (15:16)

(4) தன்னுடைய தந்தையின் காலத்திலிருந்த தேவாலயத்து பணிமுட்டுகளை ஆசா மறுபடியும் பிரதிஷ்டை பண்ணுகிறான் # 25 வருஷங்கள் சமாதானம் (15:17-19)

 

8. பாஷாவோடு யுத்தம் - சீரியாவோடு உடன்படிக்கை (16:1-6)

9. சீரியாவைச் சார்ந்திருப்பதற்காக அனானி தீர்க்கதரிசி ஆசாவைக் கடிந்து கொள்கிறான் (16:7-9)

10. தேவனுடைய செய்தியை ஆசா ஏற்றுக் கொள்ளாமல் ஜனங்களை ஒடுக்குகிறான் (16:10-11)

11. வியாதியும் மரணமும் - மறுபடியும் தேவனைச் சார்ந்திருக்க தவறுகிறான் (16:12-14)

 

யோசபாத்தின் ஆட்சி # இருபத்தைந்து வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (17:1-6)

2. யோசபாத்தின் ஆட்சியில் ஏற்பட்ட முதலாவது ஆவிக்குரிய எழுப்புதல் (17:7-9)

3. யோசபாத்தின் வலிமை பெருகுகிறது - விருத்தியடைகிறான் (17:10-13)

4. யோசபாத்தின் இராணுவம் -1,160,000 புருஷர்கள் - இவர்கள்தவிர யூதாவின் அரணான பட்டணங்களிலும் வீரர்கள் இருந்தார்கள் (17:14-19)

5. சீரியாவுக்கு எதிராக யுத்தம் பண்ணுவதற்கு ஆகாபோடு சேர்ந்து கொள்கிறான் (18:1-3)

6. ஆகாபின் பொய் கூறும் தீர்க்கதரிசிகள் (18:4-5)

7. யோசபாத் இதை ஏற்றுக்கொள்ளாமல் உண்மையான தீர்க்கதரிசியைத் தேடுகிறான் (18:6-8)

8. கள்ளத்தீர்க்கதரிசிகள் தொடர்ந்து பொய் கூறுகிறார்கள் (18:9-11)

9. ஆகாபின் கள்ளத்தீர்க்கதரிசிகளோடு ஒத்துப்போகுமாறு மிகாயா தீர்க்கதரிசிக்கு ஆலோசனை கூறப்படுகிறது (18:12-13)

10. ஆகாபின் வெற்றியைக் குறித்து மிகாயாவின் தீர்க்கதரிசனம் - ஆகாப் அவனைக் கடிந்து கொள்கிறான் (18:14-15)

11. மிகாயாவின் உண்மையான தீர்க்கதரிசனம் (18:16)

12. உண்மையான தீர்க்கதரிசனத்தின்மீது ஆகாப் பிரியப்படவில்லை (18:17)

13. ஆகாபின் தீர்க்கதரிசிகளிடத்தில் பொய்யின் ஆவி இருந்ததை மிகாயா தரிசனமாக காண்கிறான் (18:18-22)

14. நல்ல தீர்க்கதரிசிகளுக்கும், கள்ளத் தாரிசிகளுக்கும் இடையே தகராறு (18:23-24)

15. மிகாயாவை திரும்ப சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்கள் (18:25-26)

16. ஆகாபுக்கு மிகாயா கூறிய கடைசி தீர்க்கதரிசனம் (18:27)

17. கீலேயாத்திலுள்ள ராமோத்தில் நடைபெற்ற யுத்தம் - ஆகாபின் தோல்வியும் - மரணமும் (18:28-34)

18. ஆகாபோடு சேர்ந்து கொண்டதற்காக யோசபாத்தை யெகூ கடிந்து கொள்கிறான் (19:1-3)

19. யோசபாத்தின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஆவிக்குரிய எழுப்புதல் (19:4-11)

20. மோவாபியர், அம்மோன் புத்திரர், ஏதோமியர் ஆகியோர் யூதாவின்மீது படையெடுக்கிறார்கள்

 

(1) தேவனிடத்திலிருந்து உதவி வேண்டுமென்று ஜெபமும் உபவாசமும் (20:1-4)

(2) யோசபாத்தின் ஜெபம் (20:5-13)

(3) யாகாசியேல் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் கொடுத்த பதில் (20:14-17)

(4) யாகாசியேலின் தீர்க்க தரிசனத்திற்காக தேவனை ஆராதிக்கிறார்கள் (20:18-19)

(5) தேவனிடத்திலும் அவருடைய தீர்க்கதரிசிகளிடத்திலும் நம்பிக்கை வைத்து கர்த்தரை ஆராதிக்க வேண்டுமென்று யோசபாத் யூதாவுக்கு ஆலோசனை கூறுகிறான் (20:20-21)

(6) யூதாவின் விரோதிகள் தோற்றுப்போகிறார்கள் - தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (20:22-25)

(7) தேவனுடைய உதவிக்காக யூதாவில் மிகப்பெரிய சந்தோஷம் (20:26-28)

(8) மற்ற தேசங்களிலும் தேவனைப் பற்றிய பயம் வந்தது (20:29-30)

(9) யோசபாத்தின் ஆட்சியும் குணாதிசயமும்

(20:31-34)

(10) இஸ்ரவேலின் இராஜாவாகிய அகசியாவோடு யோசபாத்தின் தொடர்பு (20:35-37)

 

 யோராமின் ஆட்சி - எட்டு வருஷங்கள்

 

1. யோசபாத்தின் மரணம் - யோராம் ஆட்சிக்கு வருவதும் அவனுடைய குணாதிசயமும் (21:1-7)

2. ஏதோமின் கலகம் (21:8-9)

3. லீப்னாவின் கலகம் (21:10)

4. யோராம் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை (21:11)

5. எலியாவின் தீர்க்கதரிசனம் - யோராமின் வியாதியும் மரணமும் (21:12-15)

6. அராபியரும் பெலிஸ்தரும் யூதாவின்மீது படையெடுத்து வருகிறார்கள் (21:16-17)

7. யோராமின் குணமாகாத வியாதியும் மரணமும் (21:18-20)

 

அகசியாவின் ஆட்சி - ஒரு வருஷம்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (22:1-4)

2. சீரியாவுக்கு எதிராக இஸ்ரவேலின் இராஜாவாகிய யோராமுக்கு அகசியா உதவி புரிகிறான் (22:5)

3. யூதாவின் இராஜாவாகிய யோராம் வியாதியாக இருக்கையில் அகசியா அவனைச் சந்திக்கிறான் (22:6)

4. அகசியாவும் அவனுடைய குமாரரும் கொல்லப்படுகிறார்கள் (22:7-9)

 

 அத்தாலியாளின் ஆட்சி - ஆறு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (22:10-11)

2. ஆசாரியனாகிய யோய்தாவின் கலகம் (23:1-11)

3. அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (23:12-15)

4. ஆசாரியனாகிய யோய்தாவுக்குக்கீழ் ஆவிக்குரிய மறுமலர்ச்சி (23:16-21)

 

 யோவாசின் ஆட்சி # நாற்பது வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (24:1-3)

2. யோவாசின் ஆட்சியில் ஆவிக்குரிய மறுமலர்ச்சி

 

(1) விசுவாசமில்லாத ஆசாரியர்கள் (24:4-7)

 

3. தேவாலயம் பழுதுபார்க்கப்படுகிறது (24:8-14)

4. யோய்தாவின் மரணம் (24:15-16)

5. யோவாசும் யூதாவும் தேவனை விட்டு விலகிப் போகிறார்கள் (24:17-19)

6. யோவாஸ் சகரியாவைக் கொன்று போடுகிறான் (24:20-22)

7. யூதாவைச் சீரியர்கள் வெற்றி கொள்கிறார்கள் (24:23-24)

8. யோவாசின் மரணம் (24:25-27)

 

 அமத்சியாவின் ஆட்சி - இருபத்தொன்பது வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவது குணாதிசயமும் (25:1-4)

2. பூதாவை ஒன்று கூட்டுதல் - ஏதோமுக்கு எதிராக யுத்தம் செய்ய 300,000 பேர்கள் (25:5)

3. ஏதோமின்மீது யுத்தம் செய்ய ஒரு இலட்சம் இஸ்ரவேல் வீரர்கள் கூலிக்கு அமர்த்தப்படுகிறார்கள் (25:6)

4. இஸ்ரவேலரை அமர்த்தியதற்காக தேவன் அமத்சியாவை கடிந்து கொள்கிறார் (25:7-9)

5. அமத்சியா தேவனுக்கு கீழ்ப்படிந்து இஸ்ரவேலரை வீட்டுக்கு அனுப்பி விடுகிறான் (25:10)

6. ஏதோமின்மீது அமத்சியாவின் வெற்றி (25:11-12)

7. இஸ்ரவேலர்கள் கோபத்தினால் யூதாவின் பட்டணங்களை அழித்துப் போடுகிறார்கள் (25:13)

8. ஏதோமின் தேவர்களை ஆராதிக்கிறான் தேவன் அவனைக் கடிந்து கொள்கிறார் (25:14-16)

9. ஏதோமின்மீது வெற்றி பெற்ற ஆணவத்தில் அமத்சியா இஸ்ரவேல் மீது யுத்தம் பண்ணுகிறான் (25:17-19)

10. ஏதோமின் தெய்வங்களை வழிபட்டதினால் அமத்சியா யுத்தத்தில் தோற்றுப்போகிறான் (25:20-24)

11. அமத்சியாவின் மரணம் (25:25-28)

 

உசியாவின் ஆட்சி # ஐம்பத்திரெண்டு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (26:1-4)

2. பெலிஸ்தர், அராபியர், அம்மோனியர்

ஆகியோர்மீது உசியாவின் வெற்றிகள் (26:5-8)

3. உசியாவின் கட்டுமானப் பணிகளும் செல்வமும் (26:9-10)

4. உசியாவின் இராணுவம் #310,100 பேர்கள் (26:11-15)

5. உசியாவின் பாவமும் தண்டனையும் (26:16-21)

6. உசியாவின் மரணம் (26:22-23)

 

 யோதாமின் ஆட்சி - பதினாறு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (27:1-2)

2. யோதாமின் கட்டுமானப்பணி (27:3-4)

3. அம்மோன் புத்திரர்மீது யோதாமின் வெற்றி (27:5-6)

4. யோதாமின் மரணம் (27:7-9)

 

 ஆகாசின் ஆட்சி # பதினாறு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (28:1-4)

2. சீரியரும் இஸ்ரவேலரும் ஆகாசை வெற்றி கொள்கிறார்கள் (28:5-8)

3. யூதாவின் 200,000 பேரை இஸ்ரவேலர் அடிமையாகக் கொண்டு போனார்கள் - இதற்காக ஓதேத் என்னும் தீர்க்கதரிசி இஸ்ரவேலைக் கடிந்து கொள்கிறான் (28:9-11)

4. சிறைப்பட்ட 200,000 பேரை வீட்டிற்குப் போக இஸ்ரவேலர் அனுமதிக்கிறார்கள் (28:12-15)

5. ஆகாஸ் அசீரியருடைய உதவியை நாடுகிறான் (28:16)

6. ஏதோமியரும் பெலிஸ்தரும் ஆகாசை வெற்றி கொள்கிறார்கள் (28:17-19)

7. ஆகாசையும் யூதாவையும் அசீரியர்கள் ஒடுக்குகிறார்கள் (28:20-21)

8. தனது தோல்விக்கு காரணமான பாவங்களை ஆகாஸ் தொடர்ந்து செய்து வருகிறான் (28:22-25)

9. ஆகாசின் மரணம் (28:26-27)

 

 எசேக்கியாவின் ஆட்சி - இருபத்தொன்பது வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (29:1-2)

2. எசேக்கியாவின் ஆட்சியில் ஆவிக்குரிய

எழுப்புதல்

 

(1) தேவாலயம் பழுதுபார்க்கப்படுகிறது (29:3)

(2) ஆசாரியர்கள் தங்களையும் தேவாலயத்தையும் சுத்திகரித்து தேவனுடைய ஆராதனையைத் தொடர வேண்டுமென்று எசேக்கியா கட்டளையிடுகிறான் (29:4-11)

(3) தேவாலயம் சுத்திகரிக்கப்படுகிறது - ஆராதனைக்கான ஆயத்தம் நிறைவு பெறுகிறது (29:12-19)

(4) தேவாலய ஆராதனை மறுபடியுமாகத் தொடருகிறது (29:20-36)

(5) எசேக்கியா பஸ்கா பண்டிகையை மறுபடியும் கொண்டு வருகிறான்

 

(அ) ஆயத்தங்கள் (30:1-14)

(ஆ) பஸ்கா அனுசரிக்கப்படுகிறது (30:15-17)

 

(6) எசேக்கியேலின் ஜெபத்தினால் இஸ்ரவேலர்கள் மன்னிக்கப்பட்டு குணப்படுத்தப்படுகிறார்கள் (30:18-20)

(7) புளிப்பில்லா அப்பப் பண்டிகையை எசேக்கியா மறுபடியும் கொண்டு வருகிறான் (30:21-22)

(8) பண்டின் பின் வேறே ஏழு நாட்கள் கர்த்தருக்காக கடைப்பிடிக்கப்படுகிறது (30:23-27)

(9) இஸ்ரவேல் முழுவதிலும் விக்கிரகாராதனை அழிக்கப் படுகிறது (31:1)

(10) தாவீது நியமித்த ஊழிய ஒழுங்கு மறுபடியும் கடைப்பிடிக்கப்படுகிறது (31:2)(11) அன்றாடக பலிகள் மறுபடியும் செலுத்தப்படுகிறது (31:3)

(12) ஊழியர்களுக்கு மறுபடியும் தசமபாகம் கொடுக்கப்படுகிறது (31:4-10)

(13) தசமபாகங்களின் திரட்சியை வைப்பதற்கு பண்டக சாலைகள் கட்டப்பட்டு விசாரிப்புக்காரர்கள் நியமிக்கப்படுகிறார்கள் (31:11-15)

(14) மூன்று வயதும் அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் தசமபாகம் கொடுக்கப்படுகிறது (31:16-21)

 

3. அசீரியாவின் இராஜாவாகிய சனகெரிப் யூதாவின்மீது படையெடுக்கிறான்

 

(1) எசேக்கியா எருசலேமைப் பாதுகாக்க ஆயத்தம் பண்ணுகிறான் (32:1-6)

(2) தேவனுடைய உதவி கிடைக்குமென்று யூதாவுக்கு உறுதி கூறுகிறான் (32:7-8)

(3) சனகெரிப் யூதாவைப் பயமுறுத்துகிறான் (32:9-16)

(4) சனகெரிப் தேவனை நிந்திக்கிறான் (32:17-19)

(5) எசேக்கியா, ஏசாயா ஆகியோர் தேவனிடம் ஜெபிக்கிறார்கள் (32:20)

(6) தேவனுடைய தூதன் அசீரியருடைய இராணுவத்தை அழிக்கிறான் (32:21)

 

4. எசேக்கியாவின் செல்வம் (32:22-23)

5. எசேக்கியாவின் வியாதியும் அது குணமாவதும் (32:24-26)

6. எசேக்கியாவின் பொதுநல வேலைகளும் செல்வமும் (32:27-30)

7. எசேக்கியாவின் பிரச்சனை (32:31)

8. எசேக்கியாவின் மரணம் (32:32-33)

 

மனாசேயின் ஆட்சி # ஐம்பத்தைந்து வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (33:1-2)

2. மனாசேயின் பதினாறு பாவங்கள் (33:3-10)

3. மனாசே பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்படுகிறான் (33:11)

4. மனாசே தேவனிடம் மனந்திரும்புகிறான் # தன்னுடைய இராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறான் (33:12-13)

5. மனாசேயின் பாதுகாப்பு ஆயத்தங்கள் (33:14)6. மனாசேயின் ஆட்சியில் 6. ஆவிக்குரிய எழுப்புதல் (33:15-19)

7. மனாசேயின் மரணம் (33:20)

 

ஆமோனின் ஆட்சி - இரண்டு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (33:21-23)

2. ஆமோனின் மரணம் (33:24-25)

 

யோசியாவின் ஆட்சி # முப்பத்தொரு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (34:1-2)

2. யோசியாவின் ஆட்சியில் ஆவிக்குரிய மறுமலர்ச்சி

 

(1) விக்கிரகாராதனை அழிக்கப்படுகிறது (34:3-7)

(2) யோசியா தேவாலயத்தைப் பழுது பார்க்கிறான் (34:8-14)

(3) நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடிக்கிறார்கள் (34:15-17)

(4) நியாயப்பிரமாணத்தினால் பாவம் வெளிப்படுகிறது (34:18-21)

(5) உல்தாள் என்னும் தீர்க்கதரிசினியின் மூலமாக நியாயத்தீர்ப்பைக் குறித்த தீர்க்கதரிசனம் (34:22-28)

(6) ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை வாசிக்கிறார்கள் (34:29-30)

(7) யோசியா தேவனோடும் ஜனங்களோடும் உடன்படிக்கை பண்ணுகிறான் (34:31-32)

(8) யோசியாவின் மற்ற சீர்திருத்தங்கள் (34:33)

(9) பஸ்கா ஆசரிக்கப்படுகிறது (35:1-16)

(10) புளிப்பில்லா அப்பப் பண்டிகையை யோசியா கடைப்பிடிக்கிறான் (35:17-19)

 

3. எகிப்தின் இராஜாவாகிய நேகோவோடு யோசியா யுத்தம் பண்ணுகிறான் - அதில் கொல்லப்படுகிறான் (35:20-24)

4. யோசியாவுக்காக புலம்பல் (35:25-27)

 

யோவாகாசின் ஆட்சி - மூன்று மாதங்கள்

 

1. அவன் ஆட்சிக்கு வருவது (36:1-2)

2. யோவாகாஸ் யுத்தத்தில் தோல்வியடைகிறான் # எகிப்துக்கு அடிமையாக கொண்டு செல்கிறார்கள் (36:3-4)

 

 யோயாக்கீமின் ஆட்சி - பதினொறு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (36:5)

2. நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு யோயாக்கீமைச் சிறைப்பிடித்துச் செல்கிறான் (36:6-8)

 

 யோயாக்கீனின் ஆட்சி - மூன்று மாதங்களும் பத்து நாட்களும்

 

1. ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (36:9) 

2. நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு யோயாக்கீனைச் சிறைப்பிடித்துச் செல்கிறான் (36:10)

 

 சிதேக்கியாவின் ஆட்சி - பதினொறு வருஷங்கள்

 

1. ஆட்சிக்கு வருவது குணாதிசயமும் (36:11-12)

2. நேபுகாத்நேச்சாருக்கு எதிராக சிதேக்கியா கலகம் பண்ணுகிறான் (36:13)

3. பாபிலோனுக்குச் சென்ற கடைசி சிறையிருப்பு - பாபிலோன் சிறைப் பட்டதற்கு காரணமான எட்டு பாவங்கள் (36:14-21)

 

 பாபிலோனிலிருந்து இஸ்ரவேலர்கள் மறுபடியும் மீட்கப்படுகிறார்கள் - கோரேசின் கட்டளை (36:22-23)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.