2 சாமுவேல் அறிமுகம்

2 சாமுவேல் அறிமுகம்

 

தாவீது ராஜாவின் ராஜ்யபார சரித்திரத்தைப்பற்றி இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சாமுவேலின் முதலாவது புஸ்தகத்தில், சாமுவேல் தாவீதை ராஜாவாக அபிஷேகம்பண்ணினார். சவுல் தாவீதைக் கொன்றுபோட வகைதேடினார். சாமுவேலின் முதலாம் புஸ்தகம் சவுலின் மரணத்தோடு நிறைவு பெறுகிறது

 

சாமுவேலின் இரண்டாம் புஸ்தகம், தாவீது இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, ராஜ்யபாரம் பண்ணுவது பற்றியும் விவரமாகச் சொல்லுகிறது. தாவீது இஸ்ரவேல் தேசத்தை நாற்பது வருஷமாக ஆட்சி செய்த சம்பவம் இந்தப் புஸ்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஆகையினால் செப்துவஜிந்த் பதிப்பில் இந்தப் புஸ்தகத்திற்கு, "ராஜாக்களின் மூன்றாவது புஸ்தகம்" என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது

 

தாவீதுக்கு கிடைத்த வெற்றிகளைப்பற்றியும், அவர் சந்தித்த நெருக்கங்களையும், பிரச்சனைகளையும் பற்றியும் இந்தப் புஸ்தகம் விரிவாகச் சொல்லுகிறது. தாவீதுக்கு சவுலின் குடும்பத்தார்மீது வெற்றி கிடைக்கிறது (2சாமு 1-4 ஆகிய அதிகாரங்கள்) தாவீதுக்கு எபூசியர்மேலும், பெலிஸ்தர்மேலும் வெற்றி கிடைக்கிறது (2சாமு 5-ஆம் அதிகாரம்).

 

தாவீது கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டு வருகிறார் (2சாமு 6,7 ஆகிய அதிகாரங்கள்)

 

தாவீதுக்கு மேலும் சில ராஜ்யங்கள் மீது வெற்றி கிடைக்கிறது. அண்டை தேசத்தார்மீதும், தனக்கு விரோதமாக எழும்பினவர்கள் மீதும் தாவீதுக்கு வெற்றி கிடைக்கிறது (2சாமு 8-10 ஆகிய அதிகாரங்கள்) இதுவரையிலும் தாவீதின் வெற்றிகளைப்பற்றியும் நல்ல சுபாவங்களைப்பற்றியும் இந்தப் புஸ்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது

 

தாவீதின் ஜீவியத்தில் ஒரு சில மோசமான சம்பவங்களும் நடைபெறுகிறது. தாவீது சில பாவங்களை செய்கிறார். இதன் நிமித்தமாக அவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. தாவீது உரியாவின் மனைவியின்மீது ஆசைப்படுகிறார் (2சாமு 11,12 ஆகிய அதிகாரங்கள்)

 

அம்னோனின் பாவத்தினிமித்தமாக தாவீதுக்கு பிரச்சனைகள் வருகிறது (2சாமு 13-ஆவது அதிகாரம்). அப்சலோம் (1சாமு 14-19 ஆகிய அதிகாரங்கள்) சேபா (2சாமு 20-ஆவது அதிகாரம்) ஆகியோர் தாவீதுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள்

 

கிபியோனியர் நிமித்தமாக தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சமுண்டாயிற்று (2சாமு 21-ஆவது அதிகாரம்).

 

தாவீது கர்த்தருக்கு முன்பாக பாடின பாட்டு (2சாமு 22-ஆவது அதிகாரம்). தாவீதின் கடைசி வார்த்தைகள் (2சாமு 23-ஆவது அதிகாரம்). தாவீது இஸ்ரவேல் புத்திரரை இலக்கம் பார்த்தார். இதனால் இஸ்ரவேல் மீது வாதை வந்தது (2சாமு 24-ஆவது அதிகாரம்)

 

சாமுவேல், 2சாமுவேல் ஆகிய இரண்டு புஸ்தகங்களையும் சாமுவேல், தாவீது, நாத்தான், காத் ஆகியோர் எழுதினார்கள். இவர்கள் இவற்றை பாலஸ்தீன தேசத்தில் சுமார் கி.மு. 1204-1035 ஆகிய வருஷக்காலத்தில் எழுதியிருக்க வேண்டும். இந்தச் சம்பவங்களை ஏசாயா தீர்க்கதரிசி கி.மு. 743-683 ஆவது வருஷங்களில் ஒரே புஸ்தகமாகத் தொகுத்தார்.

 

நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2சாமுவேல், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள், 1நாளாகமம், 2நாளாகமம் ஆகிய புஸ்தகங்களையும் ஏசாயா தீர்க்கதரிசியே தொகுத்தார் என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள்

 

சாமுவேல், 2சாமுவேல் ஆகிய இரண்டு புஸ்தகங்களும் ஆரம்பத்தில் ஒரே புஸ்தகமாகவே இருந்தது. மூல எபிரெய பாஷை சுவடிகளில் இவை இரண்டும் ஒரே புஸ்தகமாகவே உள்ளது. கி.மு 289-294 ஆகிய வருஷங்களில் எபிரெய மொழியின் பழைய ஏற்பாட்டை செப்துவஜிந்த் என்றழைக்கப்படும் கிரேக்க மொழி பழைய ஏற்பாடாக மொழிபெயர்த்தார்கள். ஒன்றாக இருந்த சாமுவேலின் புஸ்தகம் செப்துவஜிந்தில் 1சாமுவேல், 2சாமுவேல் என இரண்டு புஸ்தகங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பின்பு, உண்டான எல்லாப் பதிப்புக்களிலும் சாமுவேலின் புஸ்தகம் இரண்டு புஸ்தகங்களாகவே உள்ளது

 

சாமுவேல் 1சாமு 1-24 ஆகிய அதிகாரங்களையும், தாவீது, நாத்தான், காத் ஆகியோர் 1சாமு 25-2சாமு 24 ஆகிய அதிகாரங்களையும் எழுதினார்கள். (1சாமு 10:25; 1நாளா 29:29). இந்தப் புஸ்தகத்தில் யாசேரின் புஸ்தகத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. (2சாமு 1:18) ஏசாயா இந்தப் புஸ்தகத்தைத் தொகுத்தபோது, அவர் யாசேரின் புஸ்தகத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்

 

சாமுவேல் புஸ்தகத்தில் ஏலி, சவுல், சாமுவேல் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரவேலில் காணப்பட்ட தோல்வியைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 2சாமுவேல் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கியமான செய்திகள் வருமாறு:

 

1. தாவீதின் மூலமாக இஸ்ரவேலில் அமைதியும்

2. ஒழுங்கும் திரும்புதல்

கர்த்தர் தாவீதைத் தம்முடைய ஜனத்தின்மீது ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருக்கிறார். தாவீதின் காலத்தில் இஸ்ரவேல் ராஜ்யம் பூரணமாக ஸ்தாபிக்கப்படுகிறது. எருசலேம் நகரம் அரசியல் காரியங்களுக்கும், மார்க்கக் காரியங்களுக்கும் மைய ஸ்தலமாயிற்று. (2சாமு 1:1-6:23)

3. தாவீதின் உடன்படிக்கை ஸ்தாபனம் பண்ணப்படுகிறது சாமு 7:1-29)

4. இஸ்ரவேலின் சத்துருக்களையெல்லாம் தாவீது யுத்தத்தில் ஜெயித்தார் (2சாமு 3:1; 2சாமு 5:17-25; 2சாமு 8:1-10:19)

5. தாவீதின் பாவமும், மனந்திரும்புதலும் (2சாமு 11:1-12:31)

6. தாவீதின் குடும்பப் பிரச்சனைகள் (2சாமு 13:1-14:33)

7. அப்சலோமின் கலகம் (2சாமு 15:1-19:43)

8. தாவீதின் கடைசி காலச் சம்பவங்கள். (2சாமு 20:1-24:25).

 

பொருளடக்கம்

 

கில்போவா மலையில் நடைபெற்ற யுத்தத்தைப்பற்றிய அறிக்கை

 

1. தாவீதிடம் வெகுமதி பெறலாம் என்று நினைத்து சவு-ன் மரணச் செய்தியை அறிவித்த அமலேக்கிய மனுஷன் (1:1-10)

2. இஸ்ரவே-ன் தோல்விக்காகத் துக்கம் (1:11-12)

3. அமலேக்கியன் வெட்டப்பட்டு மரித்தான் (1:13-16)

4. தாவீது சவு-ன் பேரிலும் யோனத்தானின் பேரிலும் பாடிய புலம்பல் (1:17-27)

 

 தாவீது இஸ்ரவே-ன் இராஜாவானான்

 

1. யூதாவின் இராஜாவானான் (2:1-4)

2. சவுலை அடக்கம் பண்ணியதற்காக கீலேயாத் தேசத்து யாபேசின் மனுஷருக்கு ஆசீர்வாதம் (2:5-7)

3. இஸ்ரவேல் ராஜ்யத்தில் முதல் பிரிவினை (2:8-11)

4. உள்நாட்டுக் குழப்பம்

 

(1) கிபியோனில் யுத்தம் (2:12-17)

(2) அப்னேர் ஆசகேலைக் கொன்றான் (2:18-24)

(3) பெரிய கலவரம் தவிர்க்க ப்பட்டது (2:25-32)

(4) மறுபடியும் உள்நாட்டுக் குழப்பம் (3:1)

 

5. எப்ரோனிலே தாவீதின் குடும்பத்தார் (3:2-5)

6. அப்னேர் தாவீதோடே சேர்ந்து கொண்டான்

 

(1) அப்னேரின் கோபத்திற்குக் காரணம் (3:6-8)

(2) சவு-ன் ராஜ்யபாரத்தை தாவீதிடம் கொடுப்பதாக அப்னேரின் சபதம் (3:9-11)

(3) இஸ்ரவேலையெல்லாம் தாவீதிடம் திருப்புவதில் உதவிபுரிய அப்னேரின் விருப்பம் (3:12)

(4) தாவீதின் நிபந்தனை - தன் மனைவியாகிய மீகாளை அழைத்து வருமாறு தாவீது அப்னேரிடம் கூறினான் (3:13)

(5) மீகாள் தாவீதிடம் மறுபடியும் சேர்க்கப்படுகிறாள் (3:14-16)

(6) தாவீதை தங்கள் மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு அப்னேர் இஸ்ரவே-ன் மூப்பரோடே பேசுகிறான் (3:18-19)

(7) தாவீதும் அப்னேரும் சமாதானத்தோடு பிரிகிறார்கள் (3:20-21)

(8) யோவாபுக்கு அப்னேரின் வருகை தெரிய வருகிறது (3:22-23)

(9) யோவாப் தாவீதோடு வாக்குவாதம் பண்ணுகிறான். அப்னேர் வேவுபார்க்க வந்ததாகக் குற்றம் சுமத்துகிறான் (3:24-25)

(10) யோவாப் அப்னேரை இரகசியமாய் அழைத்து வந்து கொன்று போடுகிறான் (3:26-27)

(11) தாவீது யோவாபைச் சபிக்கிறான் (3:28-30)

(12) தாவீது அப்னேருக்காக அழுகிறான் (3:31 -39)

 

7. இஸ்போசேத் ராஜாவின் மரணம்

 

(1) ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தைக் கொல்கிறார்கள் (4:1-7)

(2) தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக் கொண்டு வருகிறார்கள் (4:8)

(3) கொலைசெய்த ரேகாபையும், பானாவையும் கொன்று போடுகிறார்கள் (4:9-12)

 

8. இராஜ்யம் ஒன்று சேர்கிறது # தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கு இராஜாவாகிறான் (5:1-3)

9. தாவீதின் வயது #40 வருஷ ஆட்சி (5:4-5)

10. சமஸ்த ராஜ்யத்திற்கு எருசலேம் தலைநகரமாயிற்று (5:6-10)

11. ஈராம் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறான் (5:11-12)

12. எருசலேமில் தாவீதின் குடும்பத்தார் (5:13-16)

13. பெ-ஸ்தர் மீது முதலாவது வெற்றி (5:17-21)

14. பெ-ஸ்தர்மீது இரண்டாவது வெற்றி (5:22-25)

 

 தாவீதின் ஆராதனை ஒழுங்குகள்

 

1. தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வருமாறு தாவீது கூறுகிறான் (6:1-5)

2. தேவனுடைய பெட்டியைத் தொட்டதினால் ஊசா மரித்துப் போகிறான் (6:6-7)

3. தாவீது தேவனுக்குப் பயந்து, தேவனுடைய பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைக்கிறான் (6:8-10)

4. ஓபேத் ஏதோமைக் கர்த்தர் ஆசீர்வதித்ததினால் தாவீது தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வருகிறான் (6:11-15)

5. மீகாளின் பாவம் (6:16)

6. தாவீது போட்ட புதிய கூடாரத்திற்குள் தேவனுடைய பெட்டியை வைக்கிறார்கள் (6:17-19)

7. மீகாளின் பாவமும் சாபமும் (6:20-23)

8. தேவனுக்கு ஆலயம் கட்ட தாவீதின் விருப்பம் (7:1-3)

9. தாவீதோடு உடன்படிக்கை

 

(1) உடன்படிக்கை செய்த வேளை (7:4-7)

 (2) கர்த்தர் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கொடுப்பார் (7:8-11)

(3) தாவீதின் குமாரன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவான் (7:12)

(4) தாவீதின் குமாரன் தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவான் (7:13)

(5) தாவீதின் வீடும் இராஜ்யமும் என்றென்றைக்கும் ஸ்திரப் பட்டிருக்கும் (7:14-17)

(6) தாவீதின் ஜெபம் (7:18-29)

 

 தாவீதின் இராஜ்யம் பூரணமாக ஸ்தாபிக்கப்படுகிறது

 

1. பெ-ஸ்தரின்மீது வெற்றி (8:1)

2. மோவாபியரின்மீது வெற்றி (8:2-3)

3. சோபாவின்மீதும், சீரியாவின்மீதும் வெற்றி (8:4-8)

4. ஆமாத்தின் ராஜாவாகிய தோயீயோடு சமாதானம் (8:9-12)

5. ஏதோமின்மீது வெற்றி (8:13-14)

6. தாவீதின் ஆளுகையின் சிறப்பு (8:15)

7. தாவீதின் அதிகாரிகள் (8:16-18)

8. சவு-ன் குடும்பத்தாருக்கு இரக்கம் (9:1-13)

9. அம்மோனியர் # சீரியரோடு யுத்தம்

 

(1) தாவீதின் நல்ல எண்ணத்தை ஆனூன் தவறாகப் புரிந்து கொள்கிறான் (10:1-3)

(2) தாவீதின் ஊழியக்காரருக்கு அவமானம் (10:4-5)

(3) முதலாவது யுத்தம் - அம்மோனியர் மீதும் சீரியர்மீதும் வெற்றி (10:6-14)

(4) இரண்டாவது யுத்தம் # சீரியர் தோற்று ஓடுகிறார்கள் (10:15-19)

(5) மூன்றாவது யுத்தம் # அம்மோன்மீது வெற்றி (11:1)

 

தாவீதின் பாவமும் மனந்திருந்துவதும்

 

1. தாவீதின் சோதனை (11:2-3)

2. தாவீது பத்சேபாளுடன் செய்த பாவம் (11:4)

3. பத்சேபாள் கர்ப்பம் தரிக்கிறாள் (11:5)

4. பத்சேபாளையும் உரியாவையும் இணைக்க தாவீது முயற்சி பண்ணுகிறான் (11:6-8)

5. உரியாவின் நல்ல பண்பு (11:9-11)

6. உரியாவைக் குடித்து வெறிக்கப் பண்ணுகிறான் (11:12-13)

7. உரியாவைக் கொல்ல சூழ்ச்சி (11:14-15)

8. உரியாவின் மரணம் (11:16-17)

9. யோவாப் தாவீதுக்கு செய்தி அனுப்புகிறான் (11:18-21)

10. உரியாவின் மரணச் செய்தியும் தாவீதின் கடின இருதயமும் (11:22-25)

11. தாவீது பத்சேபாளை மனைவியாகச் சேர்த்துக்கொள்கிறான் (11:26-27)

12. தாவீது தன்பாவத்துக்காக மனம் வருந்துகிறான்

 

(1) நாத்தானின் உவமை (12:1-4)

(2) தாவீதின் கோபம் (12:5-6)

(3) நீயே அந்த மனுஷன் (12:7-9)

(4) தாவீதின் மீது சாபம் (12:10-14)

 

தாவீதின் பாவத்திற்குத் தண்டனைகள்

 

1. தாவீதின் பிள்ளை செத்துப் போயிற்று (12:15-19)

2. தேவன் மீதுள்ள விசுவாசத்தைத் தாவீது புதுப்பிக்கிறான் (12:20-23)

3. சாலொமோனின் பிறப்பு (12:24-25)

4. அம்மோனியரோடு யுத்தம் (12:26-31)

5. தாவீதின் குடும்பப் பிரச்சனைகள்

 

(1) அம்னோன் தாமார்மீது மோகங் கொள்கிறான் (13:1-4)

(2) தாமாரைக் கற்பழிக்க அம்னோனின் திட்டம் (13:5)

(3) தாவீது உண்மை நிலவரம் தெரியாமல் தாமாரை அம்னோனிடம் அனுப்புகிறான் (13:6-7)

(4) அம்னோனின் பாவம் (13:8-14)

(5) அம்னோன் தாமாரை வெறுக்கிறான் (13:15-17)

(6) தாமாரின் துக்கம் (13:18-20)

(7) தாவீதின் கோபம் (13:21)

(8) அம்னோனைக் கொல்ல அப்சலோமின் திட்டம் (13:22-27)

(9) அம்னோனின் மரணம் (13:28-29)

(10) அம்னோனுக்காகத் தாவீதின் துக்கம் (13:30-36)

(11) அப்சலோம் தப்பியோடிப் போகிறான்

(13:37-39)

(12) தாவீதையும் அப்சலோமையும் ஒன்று சேர்க்க யோவாபின் திட்டம்

 

(அ) யோவாப் தீட்டிய திட்டம் (14:1-3)

(ஆ) புத்தியுள்ள ஸ்திரீ கூறிய உவமை (14:4-12)

(இ) தாவீதும், அப்சலோமும் உவமையும் (14:13-17)

(ஈ) யோவாபின் மீது சந்தேகம் (14:18-20)

(உ) அப்சலோமை அழைத்துவர உத்தரவு (14:21-24)

(ஊ) அப்சலோமின் அழகும் குடும்பமும் (14:25-27)

(எ) தாவீதும் அப்சலோமும் முழுவதுமாக ஒப்புரவாகுகிறார்கள் (14:28-33)

 

6. உள்நாட்டுக் குழப்பம்

 

(1) அப்சலோம் இஸ்ரவேலரின் இருதயத்தைக் கவர்ந்து கொள்கிறான் (15:1-6)

(2) குழப்பம் அதிகரிக்கிறது (15:7-12)

(3) தாவீது எருசலேமை விட்டு ஓடிப்போகிறான் (15:13-18)

(4) ஈத்தாய்க்கு தாவீதின் ஆலோசனை (15:19-23)

(5) சாதோக்குக்கும் லேவியருக்கும் தாவீதின் ஆலோசனை (15:24-29)

(6) தாவீதின் துக்கமும் ஜெபமும் (15:30-31)

(7) ஊசாய்க்குத் தாவீதின் ஆலோசனை (15:32-37)

(8) மேவிபோசேத்தைப் பற்றி சீபா கூறிய பொய் (16:1-4)

(9) சீமேயி தாவீதை சபிக்கிறான் (16:5-14)

(10) அப்சலோம் எருசலேமுக்கு வருகிறான் (16:15-23)

(11) அகித்தோப்பேல், ஊசாய் ஆகியோரின் முரண்பட்ட ஆலோசனைகள் (17:1-13)

(12) அகித்தோப்பே-ன் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை (17:14)

(13) ஊசாய் தாவீதுக்குக் கூறிய ஆலோசனை (17:15-22)

(14) அகித்தோப்பே-ன் மரணம் (17:23)

(15) அப்சலோம் தாவீதைத் துரத்துகிறான் (17:24-26)

(16) மக்னாயீமில் தாவீதுக்குக் கிடைத்த உதவி (17:27-29)

(17) எப்பிராயீம் காட்டிலே யுத்தம் (18:1-8)

(18) அப்சலோமின் மரணம் (18:9-18)

(19) தாவீதுக்கு யுத்தச் செய்தி வருகிறது (18:19-28)

(20) அப்சலோமுக்காக தாவீதின் துக்கம் (18:29-33)

(21) தாவீதுக்கு யோவாபின் ஆலோசனை (19:1-8)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.