1 சாமுவேல் அறிமுகம்

அஅ

1 சாமுவேல் அறிமுகம்

 

சாமுவேல் தீர்க்கதரிசியின் பிறப்பு, அவருடைய குழந்தைப் பருவம், அவருடைய ஜீவியம், ஆளுகை ஆகியவையெல்லாம் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது

 

சாமுவேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில், அவருடைய ஜீவிய வரலாறு எழுதப்பட்டிருப்பதுபோலவே, சவுல் தாவீது ஆகிய ராஜாக்களின் ஜீவியவரலாறுகளும் எழுதப்பட்டிருக்கிறது. சாமுவேல் தீர்க்கதரிசி இவ்விரண்டு பேரையும் ராஜாக்களாக அபிஷேகம்பண்ணினார்

 

இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட பழைய வேதாகமத்தில், இந்தப் புஸ்தகம் சாமுவேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் என்று அழைக்கப்படாமல், 1,2 இராஜாக்களின் புஸ்தகம் என்று அழைக்கப்பட்டது இராஜாக்களின் புஸ்தகம், 3,4 இராஜாக்களின் புஸ்தகம் என்று அழைக்கப்பட்டது

 

செப்துவஜிந்த் பதிப்பில், சாமுவேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம், முதலாம், இரண்டாம் இராஜ்யங்களின் புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறது

 

சாமுவேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில், ஏலி சாமுவேல் ஆகிய இரண்டு நியாயாதிபதிகளின் ஜீவிய சரித்திரத்தைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் இஸ்ரவேல் தேசத்தில் எழும்பின கடைசி நியாயாதிபதிகள். இவர்கள் மற்ற நியாயாபதிகளைப் போல யுத்தமனுஷரல்ல. இவர்கள் ஆசாரியர்கள்.

 

இஸ்ரவேல் தேசத்தின் முதல் இரண்டு இராஜாக்களாகிய சவுலையும், தாவீதையும் சாமுவேல் தீர்க்கதரிசி இராஜாக்களாக அபிஷேகம்பண்ணினார். இவர்கள் இராஜாக்களின் சரித்திரத்தை ஆரம்பித்து வைக்கிறார்கள்

 

சாமுவேலின் முதலாம் புஸ்தகத்தில் ஏலியினுடைய வீழ்ச்சியும் சாமுவேல் தீர்க்கதரிசியின் எழுச்சியும், நல்ல ஆளுகையும் எழுதப்பட்டிருக்கிறது (1சாமு 1-8 ஆகிய அதிகாரங்கள்)

 

சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரியாமல் தன்னுடைய ஊழியத்திலிருந்து ஓய்வு பெறுகிறார். சவுல் இராஜாவாகிறார். சவுலின் நிர்வாகம் சீராகயில்லை (1சாமு 9-15 ஆகிய அதிகாரங்கள்)

 

சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறார். தாவீதுக்கும் சவுலுக்கும் நடுவே போராட்டமுண்டாகிறது. முடிவில் சவுல் அழிந்துபோகிறார். தாவீது சிங்காசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிகிறார் (1சாமு 16-31 ஆகிய அதிகாரங்கள்)

 

சாமுவேல், 2சாமுவேல் ஆகிய இரண்டு புஸ்தகங்களையும் சாமுவேல், தாவீது, நாத்தான், காத் ஆகியோர் எழுதினார்கள். இவர்கள் இவற்றை பாலஸ்தீன தேசத்தில் சுமார் கி.மு. 1204-1035 ஆகிய வருஷக்காலத்தில் எழுதியிருக்க வேண்டும். இந்தச் சம்பவங்களை ஏசாயா தீர்க்கதரிசி கி.மு. 743-683 ஆவது வருஷங்களில் ஒரே புஸ்தகமாகத் தொகுத்தார்.

 

நியாயாதிபதிகள், ரூத், 1சாமுவேல், 2சாமுவேல், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2நாளாகமம் ஆகிய புஸ்தகங்களையும் ஏசாயா தீர்க்கதரிசியே தொகுத்தார் என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள்

 

சாமுவேல், 2சாமுவேல் ஆகிய இரண்டு புஸ்தகங்களும் ஆரம்பத்தில் ஒரே புஸ்தகமாகவே

இருந்தது. மூலஎபிரெய பாஷை சுவடிகளில் இவை இரண்டும் ஒரே புஸ்தகமாகவே உள்ளது. கி.மு 289-294 ஆகிய வருஷங்களில் எபிரெய மொழியின் பழைய ஏற்பாட்டை செப்துவஜிந்த் என்றழைக்கப்படும் கிரேக்க மொழி பழைய ஏற்பாடாக மொழிபெயர்த்தார்கள். ஒன்றாக இருந்த சாமுவேலின் புஸ்தகம் செப்துவஜிந்தில் 1சாமுவேல், 2சாமுவேல்

 

என இரண்டு புஸ்தகங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பின்பு, உண்டான எல்லாப் பதிப்புக்களிலும் சாமுவேலின் புஸ்தகம் இரண்டு புஸ்தகங்களாகவே உள்ளது

 

சாமுவேல் 1சாமு 1-24 ஆகிய அதிகாரங்களையும், தாவீது, நாத்தான், காத் ஆகியோர் 1சாமு 25-2சாமு 24 ஆகிய அதிகாரங்களையும் எழுதினார்கள். (1சாமு 10:25; 1நாளா 29:29). இந்தப் புஸ்தகத்தில் யாசேரின் புஸ்தகத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. (2சாமு 1:18) ஏசாயா இந்தப் புஸ்தகத்தைத் தொகுத்தபோது, அவர் யாசேரின் புஸ்தகத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்

 

சாமுவேல் புஸ்தகத்தில் கீழே கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது

 

1. சாமுவேலின் வாழ்க்கை வரலாறு

2. நியாயாதிபதிகளின் கடைசி நாட்கள்

3. ஏலியின் நாட்களில் ஆசாரியரின் ஒழுக்கக்கேடு

4. சாமுவேலின் காலத்தில் நியாயாதிபதிகளின் ஒழுக்கக்கேடு

5. சவுலின் காலத்தில் ராஜாவினுடைய ஆட்சியின் துவக்கமும், அதன் தோல்வியும்

6. தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப் படுவதும் அவருடைய அனுபவங்களும்

7. சவுலின் முடிவு

 

1சாமுவேல், 2சாமுவேல் ஆகிய இரண்டு புஸ்தகங்களும் மூலபாஷையில் ஒரே புஸ்தகமாகவே உள்ளது. இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டதன் நோக்கம் வருமாறு

 

1. நியாயாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேலின் வரலாற்றை எழுதுவது

2. இஸ்ரவேலில் நியாயாதிபதிகளின் ஆட்சிக்காலம் ராஜாக்களின் ஆட்சிக் காலமாக மாற்றமடைந்ததை விவரிப்பது.

3. மேசியாவின் வம்சவழியில் இடம் பெறுகிறவர்களின் வரலாற்றை விவரிப்பது.

 

பொருளடக்கம்

 

 இஸ்ரவே-ல் நியாயாதிபதிகள் ஆட்சிக் காலம்

 

1. சாமுவேலின் பெற்றோர் (1:1-5)

2. அன்னாளின் பிரச்சனை (1:6-8)

3. அன்னாளின் பொருத்தனை (1:9-11)

4. அன்னாளை தவறாக நினைத்தார் (1:12-16)

5. அன்னாளின் விசுவாசமும், ஆசீர்வாதமும் (1:17-19)

6. சாமுவே-ன் பிறப்பு (1:20-23)

7. அன்னாள் பொருத்தனையை நிறைவேற்றினாள் (1:24-28)

8. அன்னாளின் தீர்க்கதரிசன ஜெபம் (2:1-10)

9. சாமுவேல் தன் ஊழியத்தை ஆரம்பித்தார் (2:11)

10. ஆசாரியர்களின் பாவங்கள் (2:12-17)

11. சாமுவேல் ஆசாரியரானார் (2:18-19)

12. அன்னாளுக்குக் கிடைத்த வெகுமதி (2:20-21)

13. ஆசாரியர்கள் - ஜனங்கள் ஆகியோரின் பாவங்கள் (2:22-26)

14. ஏலிக்கு எதிரான தீர்க்கதரிசனம் (2:27-36)

15. சாமுவேல் தீர்க்கதரிசி (3:1-10)

16. சாமுவேல் கூறிய முதலாவது தீர்க்கதரிசனம் (3:11-14)

17. ஏலியின் வீட்டிற்கு எதிரான தீர்க்கதரிசனம் (3:15-18)

18. சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசி (3:19-21)

19. பெ-ஸ்தருடன் யுத்தம்

 

(1) இஸ்ரவேலரின் தோல்வி (4:1-2)

(2) உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுபோனார்கள் (4:3-4)

(3) வெறுமையான ஆரவாரம் (4:5-6)

(4) இஸ்ரவேலரின் தோல்வி (4:7-11)

(5) ஏ-யின் மரணம் (4:12-18)

(6) இக்கபோத்தின் பிறப்பு (4:19-22)

 

20. உடன்படிக்கைப் பெட்டியைப் பெலிஸ்தர் கைப்பற்றினார்கள்

 

(1) அஸ்தோத்தின்மீது நியாயத்தீர்ப்பு (5:1-6)

(2) காத்தின்மீது நியாயத்தீர்ப்பு (5:7-9)

(3) எக்ரோன்மீது நியாயத்தீர்ப்பு (5:10-12)

(4) பூஜாசாரிகளின் ஆலோசனை (6:1-9)

 

21. பெத்ஷிமேசில் உடன்படிக்கைப் பெட்டி

 

(1) பெலிஸ்தியாவி-ருந்து பிரயாணம் (6:10-12)

(2) இஸ்ரவேலர் உடன்படிக்கைப் பெட்டியைப் பெற்றுக் கொண்டார்கள் (6:13-15)

(3) பெலிஸ்தர் குற்றநிவாரணப- செலுத்தினார்கள் (6:16-18)

(4) கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்ததினால் ஜனங்கள் மடிந்தார்கள் (6:19-21)

 

22. கீரியாத் யாரீமில் கர்த்தருடைய பெட்டி (7:1-3)

23. பெலிஸ்தருடன் யுத்தம்

 

(1) மிஸ்பாவிலே ஆன்மீக எழுப்புதல் (7:4-6)

(2) இஸ்ரவேலரின் பயம் (7:7-8

(3) இஸ்ரவேலரின் அற்புதமான வெற்றி (7:9-14)

 

24. சாமுவேல் இஸ்ரவே-ன் கடைசி நியாயாதிபதி (7:15#17)

 

நியாயாதிபதிகளின் ஆட்சியி-ருந்து இராஜாக்களின் ஆட்சிக்கு மாற்றம்

 

1. இராஜா வேண்டுமென்று இஸ்ரவேலர்கள் கூறினார்கள் (8:1-5)

2. நியாயாதிபதிகளின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை (8:6-10)

3. இராஜாவின் ஆட்சி எப்படி இருக்கும் (8:11-18)

4. இஸ்ரவேலுக்கு இராஜா கொடுக்கப்பட்டார் (8:19-22)

 

சவுல் இஸ்ரவேலின் இராஜா

 

(1) சவு-ன் வருணனை (9:1-2)

(2) சவுல் சாமுவே-டம் விசாரித்தான் (9:3-14)

(3) சாமுவேல் சவுலை வரவேற்றார் (9:15-27)

(4) சாமுவேல் சவுலை இராஜாவாக அபிஷேகம் பண்ணினார் (10:1)

(5) தீர்க்க தரிசனம் (10:2-8)

(6) தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (10:9-13)

(7) சவுலும் அப்னேரும் (10:14-16)

(8) சீட்டுப்போட்டு இராஜாவைத் தேர்ந்தெடுத்தார்கள் (10:17-21)

(9) இராஜா அபிஷேகம் (10:22-24)

(10) இஸ்ரவேல் இராஜாங்கத்தின் முறை (10:25)

(11) சவுலுக்கு எதிர்ப்பு (10:26-27)

 

 இராஜ்ஜியத்தின் ஸ்தாபிதம்

 

1. அம்மோனின்மீது சவு-ன் வெற்றி (11:1-11)

2. சவு-ன் மன்னிக்கும் இருதயம் (11:12-13)

3. கில்கா-ல் இராஜாங்கம் ஸ்திரப் படுத்தப்படுகிறது

 

(1) சந்தோஷம் கொண்டாட கூடினார்கள்

(11:14-15)

(2) ராஜாவின் அறிமுகம் # சாமுவேலின் பதவி ஓய்வு (12:1-5)

(3) தேவனை இராஜாவாக இராதபடி ஜனங்கள் புறக்கணித்தார்கள் (12:6-12)

(4) கீழ்ப்படியும்போது தேசத்தின்மீது ஆசீர்வாதம் வரும் (12:13-15)

(5) இராஜாவைக் கேட்டது கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பாக இருந்தது # இதற்காக ஒரு அடையாளம் (12:16-19)

(6) தேவனுக்கு கீழ்ப்படியுமாறு இஸ்ரவேலுக்கு எச்சரிப்பு (12:20-25)

 

சவுலின் இராஜ்ஜியபாரம் தள்ளப்படுகிறது

 

1. சவுலின் சேனை (13:1-2)

2. யோனத்தானின் முதலாவது வெற்றி (13:3-5)

3. இஸ்ரவேலரின் பயம் (13:6-7)

4. ஆசாரியர் செய்ய வேண்டிய வேலையை சவுல் செய்தார் (13:8-10)

5. சவுல் இராஜாவாக இராதபடி தேவன் அவனைத் தள்ளினார் (13:11-14)

6. சவு-ன் சேனையும் ஆயுதங்களும் (13:15-23)

7. யோனத்தானின் இரண்டாவது வெற்றி (14:1-14)

8. பெ-ஸ்தரின் தோல்வி (14:15-23)

9. சவு-ன் புத்தியீனமான பொருத்தனை (14:24-26)

10. யோனத்தானின் அறியாமையின் பாவம்

(14:27-31)

11. இஸ்ரவே-ன் பாவம் (14:32-34)

12. யோனத்தான் சாகாதபடிக்கு ஜனங்கள் அவனை தப்புவித்தார்கள் (14:35-45)

13. சவு-ன் மொத்த வெற்றிகள் (14:46-48)

14. சவு-ன் குடும்பத்தார் (14:49-52)

15. அமலேக்கியரோடு யுத்தம்

 

(1) அமலேக்கியரை முற்றிலும் அழிக்குமாறு சவுலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை (15:1-3)

(2) சவுல் முழுமையாகக் கீழ்ப்படியவில்லை (15:4-9)

(3) சவுலை இஸ்ரவே-ன் இராஜாவாக ஆக்கினதற்காக தேவன் மனஸ்தாபப்படுகிறார் (15:10-11)

(4) சவுல் சாமுவே-டம் சொன்ன பொய் (15:12-15)

(5) சாமுவேல் சவுலை கடிந்துகொள்கிறார் (15:16-19)

(6) சவுல் கூறிய சாக்குபோக்கு (15:20-21)

(7) ப-யைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் (15:22-23)

(8) சவு-ன் மனந்திரும்புதல் (15:24-25)

(9) சவுல் முழுவதுமாக தள்ளி வைக்கப்படுகிறான் (15:26-29)

(10) ஜனங்களுக்கு முன்பாக தன்னைக் கனம்பண்ணுமாறு சவுல் சாமுவே-டம் பண்ணிய விண்ணப்பம் (15:30-31)

(11) சவுலுக்குக் கொடுத்த வேலையை சாமுவேல் நிறைவேற்றுகிறார் (15:32-35)

 

தாவீது இராஜாவாக தெரிந்தெடுக்கப் படுகிறார்

 

1. தாவீதை இராஜாவாக அபிஷேகிக்குமாறு சாமுவேல் புறப்பட்டுச் செல்லுகிறார் (16:1-5)

2. சாமுவேல் வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் (16:6-10)

3. சாமுவேல் தாவீதை இராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார் (16:11-13)

4. கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். ஒரு பொல்லாத ஆவி சவுலைப் பிடித்துக்கொண்டது (16:14)

5. சவுண்ட் ஊழியக்காரருடைய ஆலோசனை (16:15-18)

6. தாவீதை அழைத்துவர சவுல் ஆள் அனுப்புகிறான் (16:19-23)

 

தாவீதும், கோலியாத்தும்

 

(1) கோலியாத் இஸ்ரவேலரைத் தூஷிக்கிறான் (17:1-11)

(2) பாளயத்தி-ருக்கிற தன் சகோதரரைப் பார்க்க தாவீது வருகிறான் (17:12-21)

(3) தாவீது கோ-யாத்தைப் பற்றி விசாரிக்கிறான் (17:22-27)

(4) தாவீதின் மூத்த சகோதரன், தாவீதைத் திட்டுகிறான் (17:28#29)

(5) தாவீதைச் சவுலுக்கு முன்பாக அழைத்துவருகிறார்கள் (17:30-33)

(6) தனது பராக்கிரமச் செயல்களைப் பற்றி தாவீது சவு-டம் விளக்கிக் கூறுகிறான் (17:34-37)

(7) தாவீதுக்குப் பழக்கமில்லாத இராணுவ அலங்காரம் (17:38-39)

(8) தடியும், கவணும், கூழாங்கற்களும் கர்த்தரிடத்தில் விசுவாசமும் (17:40)

(9) கோ-யாத் தாவீதைச் சபித்தான் (17:41-44)

(10) தாவீதின் விசுவாசம், தீர்க்கதரிசனமும் (17:45-47)

(11) தாவீது கோ-யாத்தை ஜெயித்தான் (17:48-51)

(12) இஸ்ரவேலரின் வெற்றி (17:52-54)

(13) தாவீதைச் சவுலுக்கு முன்பாக அழைத்து வருகிறார்கள் (17:55-58)

 

 சவு-லின் அரண்மனையில் தாவீது

 

1. தாவீதும், யோனத்தானும் நண்பர்கள் (18:1-5)

2. தாவீதைப் புகழ்ந்து ஸ்திரீகள் பாடிய பாடல் (18:6-7)

3. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட இரண்டு முயற்சிகள் (18:8-11)

4. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட மூன்றாவது முயற்சி (18:12-19)

5. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட நான்காவது முயற்சி (18:20-30)

6. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட ஐந்தாவது முயற்சி (19:1-7)

7. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட ஆறாவது முயற்சி (19:8-10)

8. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட ஏழாவது முயற்சி (19:11-14)

9. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட எட்டாவது, முயற்சி (19:15-16)

10. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட ஒன்பதாவது, பத்தாவது பதினொறாவது முயற்சிகள் (19:17-21)

11. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட பன்னிரெண்டாவது முயற்சி (19:22-24)

12. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இடையில் நட்பின் உடன்படிக்கை (20:1-23)

13. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல்

எடுத்துக்கொண்ட பதிமூன்றாவது, பதினான்காவது பதினைந்தாவது முயற்சிகள் (20:24-34)

14. யோனத்தானும், தாவீதும் பிரிதல் (20:35-42)

 

 தாவீதின் பராக்கிரமங்களும், அலைந்து திரிந்த அனுபவங்களும்

 

1. தாவீது நோபுவுக்கு போனான் (21:1)

2. தாவீது ஆசாரியரை வஞ்சிக்கிறான் (21:2-5)

3. தாவீது சமுகத்தப்பத்தைப் புசிக்கிறான் (21:6)

4. தாவீது தப்பியோடியதால் ஆசாரியர்களுடைய உயிருக்கு ஆபத்து (21:7)

5. தாவீது கோ-யாத்தின் பட்டயத்தை எடுத்துக் கொள்கிறான் (21:8#9)

6. தாவீது காத்துக்கு ஓடிப்போய், பித்தங்கொண்டவனைப்போல் நடிக்கிறான் (21:10-15)

7. தாவீது தனக்கு பராக்கிரமசா-களைச் சேர்த்துக் கொண்டான் (22:1-2)

8. தாவீது மோவாபிலே தன் பெற்றோரை விட்டுச்செல்கிறான் (22:3-4)

9. காத் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் தாவீதைப் பாதுகாக்கிறார் (22:5)

10. தாவீதைக் கொல்லுமாறு சவு-ன் விண்ணப்பம் (22:6-8)

11. தோவேக்கு தாவீதைக் காட்டிக் கொடுத்தான் (22:9-10)

12. சவுல் தன்கோபத்தினால் ஆசாரியர்களைக் கொன்றான் (22:11-19)

13. அபியத்தார் தாவீதிடம் தப்பியோடி வந்தான் (22:20-23)

14. கேகிலாவில் தாவீதின் வெற்றி (23:1-5)

15. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட பதினாறாவது முயற்சி (23:6-8)

16. சவு-ன் பொல்லாப்பை தாவீது அறிந்துகொள்கிறான் (23:9-12)

17. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட பதினெழாவது முயற்சி (23:13-15)

18. தாவீதுக்கும், யோனத்தானுக்கும் இடையில் நட்பின் இறுதி உடன்படிக்கை (23:16-18)

19. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட பதினெட்டாவது முயற்சி (23:19-21)

20. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட பத்தொன்பதாவது முயற்சி (23:22-26)

21. தாவீது சவு-டமிருந்து தப்பியோடி விடுகிறான் (23:27-29)

22. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட இருபதாவது முயற்சி (24:1-2)

23. தாவீது சவுலைக் கொல்லாமல் தப்பவிடுகிறான் (24:3-7)

24. தாவீது சவு-டம் கண்டித்துப் பேசுகிறான் (24:8-15)

25. சவுலும், தாவீதும் இரண்டாம் முறையாக ஒப்புரவாகுகிறார்கள் (24:16-22)

26. சாமுவே-ன் மரணம் (25:1)

 

தாவீதும், நாபாலும்

 

(1) நாபாலும், அவன் மனைவியும் (25:2-3)

(2) நாபாலுக்கு தாவீதின் செய்தி (25:4-10)

(3) நாபா-ன் ஆணவம் (25:11-12)

(4) தாவீதின் பழிதீர்க்கும் திட்டம் (25:13)

(5) அபிகாயில் தன் கணவன் நாபாலை எச்சரிக்கிறாள் (25:14-17)

(6) அபிகாயில் தாவீதிற்கு இரகசியமாக உணவு அனுப்பினாள் (25:18-31)

(7) தாவீது நாபாலைக் கொல்லாமல் தப்பவிடுகிறான் (25:32-35)

(8) நாபா-ன் மரணம் (25:36-38)

(9) தாவீது அபிகாயிலை விவாகம் பண்ணினான் (25:39-42)

(10) தாவீது அகினோவாமையும் விவாகம் பண்ணினான் (25:43-44)

 

29. தாவீதை சீப் ஊரார் காட்டிக் கொடுத்தார்கள் (26:1)

30. தாவீதைக் கொல்லுவதற்கு சவுல் எடுத்துக்கொண்ட இருபத்தி ஒன்றாவது முயற்சி (26:2-3)

31. தாவீது சவுலை இரண்டாம் முறையாக கொல்லாமல் தப்பிக்க விடுகிறான் (26:4-12)

32. தாவீது அப்னேரைக் கடிந்து கொள்கிறான் (26:13-16)

33. தாவீது சவுலைக் கடிந்து கொள்கிறான் (26:17-20)

34. தாவீதும், சவுலும் மூன்றாம் முறையாக ஒப்புரவானார்கள் (26:21-25)

35. தாவீது மறுபடியுமாக காத்திற்குப் போனான் (27:1-4)

36. சிக்லாகில் தாவீது (27:5-7)

37. தாவீது ஆகீசை ஏமாற்றுகிறான் (27:8-12)

38. இஸ்ரவே-ல் விரோதிகள் நடுவில் தாவீது (28:1-4)

39. சவுல் கர்த்தரைத் தேடுகிறான் ஆனால் பதில் கிடைக்கவில்லை (28:5-6)

40. சவுல் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயினிடத்தில் சென்றான் (28:7-9)

41. சவுல் அவளுக்குப் பொல்லாப்பு வராது என்று ஆணையிட்டான் (28:10-11)

42. சவுலும் சாமுவே-ன் ஆவியும் (28:12-19)

43. அஞ்சனம்பார்க்கிற ஸ்திரீ சவுலுக்கு போஜனம் கொடுக்கிறாள் (28:20-25)

44. இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணாமல் தாவீது விடுவிக்கப்படுகிறான் (29:1-11)

45. சிக்லாகுக்காக தாவீதின் யுத்தம்

 

(1) சிக்லாக் அக்கினியால் சுட்டெரிக்கப் பட்டது (30:1-5)

(2) தாவீது மிகவும் நெருக்கப்பட்டான் (30:6)

(3) கர்த்த கர்த்தரிடமிருந்து பதில் (30:7-8)

(4) தாவீது தன் விரோதிகளை விரட்டிச் சென்றான் (30:9-15)

(5) தாவீது தன் விரோதிகளை ஜெயித்தான் (30:16-20)

(6) கொள்ளைப்பொருள்களைப் பற்றிய புதிய பிரமாணம் (30:21-25)

(7) தாவீதின் இராஜதந்திரம் (30:26-31)

 

 கில்போவா மலையில் யுத்தம்

 

1. இஸ்ரவேலரின் தோல்வியும், யோனத்தானின் மரணமும் (31:1-3)

2. சவு-ன் மரணம் (31:4-6)

3. இஸ்ரவேலர்கள் தோற்று ஓடினார்கள் (31:7)

4. சவுலுக்கு ஏற்பட்ட அவமானம் (31:8-10)

5. சவு-ன் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் யாபேசிலே அடக்கம் பண்ணினார்கள் (31:11-13)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.