1 இராஜாக்கள் அறிமுகம்

1 இராஜாக்கள் அறிமுகம்

 

பரிசுத்த வேதாகமத்தில், ஆரம்பத்தில் முற்பிதாக்களைப்பற்றியும், அதன் பின்பு தீர்க்கதரிசிகள், நியாயாதிபதிகள்

ஆகியோரைப்பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது அவர்கள் பரலோகத்தின் தேவனோடு நெருங்கிய ஐக்கியத்திலிருந்தார்கள். அவர்கள் கர்த்தரோடே முகமுகமாகப் பேசினார்கள். கர்த்தருடைய வார்த்தையும் அவர்களுக்கு தாமதமில்லாமல் உண்டாயிற்று. முற்பிதாக்களின் சரித்திரம் நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதற்காக எழுதப்பட்டிருக்கிறது

 

முற்பிதாக்களின் காலத்தில், கர்த்தருடைய தரிசனம் அவர்களுக்கு பிரத்தியட்சமாய்க் கிடைத்து போல, இப்போது நமக்கு கிடைப்பதில்லை

 

நியாயாதிபதிகளின் காலத்திற்கு பின்பு, கர்த்தருடைய பொதுவான பராமரிப்பே, அவருடைய ஜனத்திற்கு கொடுக்கப்பட்டது. நம்முடைய காலத்தில், நாமும் கர்த்தருடைய பொதுவான பராமரிப்பினால் வழிநடத்தப்படுகிறோம்.

 

முற்பிதாக்களுக்கு மேசியாவைப்பற்றிய அடையாளங்கள் அதிகமாய்க்

காண்பிக்கப்படவில்லை. ஆனாலும் அவர்களிடத்தில் மேசியாவைப்பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது சுவிசேஷத்தின் ரகசியங்கள் காணவேண்டுமென்று தீர்க்கதரிசிகளும், ராஜாக்களும் ஆவலாய் வாஞ்சித்தார்கள்

 

"அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும் காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (லூக் 10:24)

 

ராஜாக்களின் புஸ்தகத்திற்கு, சாமுவேலின் இரண்டு புஸ்தகங்களும் முன்னுரையாக எழுதப்பட்டிருக்கிறது சாமுவேலின் புஸ்தகத்திலே இஸ்ரவேலின் ராஜரீகம் சவுலின் காலத்தில் ஆரம்பமானது பற்றியும், தாவீதின் ராஜகுடும்பத்தாரைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது

 

ராஜாக்களின் இரண்டு புஸ்தகங்களிலும், இஸ்ரவேலை ராஜ்யபாரம்பண்ணின தாவீதின் சந்ததியாரைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. தாவீதுக்கு பின்பு, அவருடைய குமாரன் சாலொமோன், சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவானார். அதன் பின்பு இஸ்ரவேல் தேசம், வடக்கு இஸ்ரவேல் தேசம் என்றும், தெற்கு யூதா தேசம் என்றும் இரண்டாகப் பிரிந்தது

 

சாலொமோனுக்கு பின்பு, யூதாதேசத்திலும் இஸ்ரவேல் தேசத்திலும், பல ராஜாக்கள் ராஜ்யபாரம் பண்ணியிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சரித்திரம் ராஜாக்களின் புஸ்தகத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் தேசத்தாரும், யூதாதேசத்தாரும் முடிவிலே அந்நிய தேசத்து சிறையிருப்புக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

 

ஆதியாகமம் புஸ்தகத்திலிருந்து குடும்ப இராஜாக்களின் புஸ்தகங்களிலிருந்து அரசியல் பிரமாணங்களைப்பற்றியும், சமுதாய நிர்வாகத்தைப்பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் நாம் நல்ல உபதேசங்களைப் பெற்றுக்கொள்கிறோம்.

 

வாழ்க்கையைப்பற்றியும் நல்ல உபதேசங்களைக் கற்றுக்கொள்கிறோம்

இராஜாக்களின் புஸ்தகத்தில் தாவீதின் வம்சவழியில் வந்த இராஜாக்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாவீதின் வம்சத்தில் வந்தவர். தாவீதின் குமாரர்களில் சிலர், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்கள். வேறுசிலரோ தாவீதைப்போல ஜீவிக்காமல், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள்

 

இராஜாக்களின் புஸ்தகத்திலே யூதாதேசத்து இராஜாக்களின் சுபாவங்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தாவீது ராஜா கர்த்தரிடத்தில் பயபக்தியுள்ளவர். சாலொமோன் ஞானமுள்ளவர். ரெகொபெயாம் எளிமையானவர். அபியா வீரமுள்ளவர். ஆசா நேர்மையானவர். யோசபாத் மார்க்க காரியங்களில் ஈடுபாடுள்ளவர். யோராம் ஒரு துன்மார்க்கன். அகத்சியா பிறரை வஞ்சிக்கிறவர் யோவாஸ் பின்மாறிப்போனவர். அமத்சியா அவசரப்படுகிறவர். உசியா பராக்கிரமமுள்ளவர். யோசியா இளகிய இருதயமுள்ளவர். யோவாகாஸ் யோயாகீம், யோயாக்கீன் ஆகியோர் துன்மார்க்கர் துன்மார்க்கமான இராஜாக்கள் தங்களையும் அழித்து தங்கள் தேசத்தையும் அழித்துப்போட்டார்கள்.

 

இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்த இராஜாக்களில், நல்லவர்களும் கெட்டவர்களும் சமபங்காக இருக்கிறார்கள். நல்ல இராஜாக்களின் ராஜாசனம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கிறது துன்மார்க்கரின் ராஜாசனமோ சீக்கிரத்தில் முடிந்துபோகிறது.

 

தாவீதின் மரணம் (1 இராஜா 1,2 ஆகிய அதிகாரங்கள்) சாலொமோனின் மகிமையான ஆட்சிக்காலம் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறார் இராஜா 3-10 ஆகிய அதிகாரங்கள்). யூதாவுக்கு ராஜாவாக ஆட்சி புரிந்த அபியா, ஆசா, ஆகியோரின் ஆட்சிக்காலத்திலும், இஸ்ரவேலுக்கு ராஜாவாக ஆட்சிபுரிந்த பாஷா, ஒம்ரி ஆகியோரின் ஆட்சிக்காலத்திலும் இஸ்ரவேல் தேசத்தின் மகிமை மங்கிப்போயிற்று (1 இராஜா 15,16 ஆகிய அதிகாரங்கள்)

 

எலியாவின் அற்புதங்கள் (1 இராஜா 17-19 ஆகிய அதிகாரங்கள்). பெனாதாத்திற்கு விரோதமாக ஆகாப் வெற்றி பெறுகிறான். ஆகாபின் துன்மார்க்கமும் வீழ்ச்சியும் (1 இராஜா 20-22 ஆகிய அதிகாரங்கள்)

 

இஸ்ரவேலின் ராஜாக்கள் ஜனங்களுக்கு ஆண்டவரைப்போல

முக்கியமானவர்களாகயிருந்தாலும், அவர்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக மனுஷராகவே இருக்கிறார்கள். அவர்களும் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டியவர்கள்.

 

இராஜாக்கள், 2 இராஜாக்கள் ஆகிய இரண்டு புஸ்தகங்களும் பாலஸ்தீன தேசத்தில் சுமார் கி.மு. 1046 - 606 ஆகிய வருஷக் காலத்தில்

எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ராஜாக்களின் ஆட்சிக் காலத்திலும் ஊழியம் செய்து வந்த தீர்க்கதரிசிகள் அல்லது சம்பிரதிகள் அந்தந்தக் காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எழுதினார்கள் இந்த ஆவணங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, பிற்காலத்து ஆசிரியர்கள் அதை ""ராஜாக்கள்" என்னும் ஒரே புஸ்தகமாகத் தொகுத்தார்கள்

 

கி.மு. 294 - 289 ஆகிய வருஷங்களில் எபிரெய மொழியின் பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, செப்துவஜிந்த் பதிப்பு வெளிவந்தது. செப்துவஜிந்தில் ராஜாக்கள் புஸ்தகம் 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள் என இரண்டு புஸ்தகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது

 

ராஜாக்கள் புஸ்தகங்களைத் தொகுத்து எழுதியவர்கள் ஏசாயா, எரேமியா ஆகிய தீர்க்கதரிசிகளாக இருக்க வேண்டும். கி.மு. 743 - 683, கி.மு. 782 # 606 ஆகிய வருஷக்காலத்தில் ராஜாக்கள் புஸ்தகம் தொகுத்து நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

ஏசாயாவும், எரேமியாவும் இஸ்ரவேலுடைய ராஜாக்களின் நடபடிகளைத் தொகுத்தார்கள். நாத்தான் காத், இத்தோ, அகியா, யெகூ ஆகியோர் ராஜாக்களின் நடபடிகளை அந்தந்த காலத்தில் எழுதி வைத்திருந்தார்கள்

 

யூதருடைய பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம் எரேமியாவே ராஜாக்கள் புஸ்தகத்தின் தொகுப்பாசிரியர் என்பது தெரிய வருகிறது. ஆனால் 2நாளா 32:32 ஆவது வசனத்தில் ஏசாயா இதை எழுதியதாகக் குறிப்பு உள்ளது. எசேக்கியாவின் காலம் வரையிலும் ஏசாயா ராஜாக்களின் புஸ்தகத்தை எழுதியிருக்க வேண்டும் அதற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து சிறையிருப்புக்காலம் வரையிலுமுள்ள வரலாற்றை எரேமியா எழுதி இந்தப் புஸ்தகத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்

 

இராஜாக்கள் புஸ்தகத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காரியங்கள் மையக்கருத்தாக சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றின் விவரம் வருமாறு :

 

1. சாலொமோனின் காலத்திலிருந்து பாபிலோனின் சிறையிருப்புக் காலம் வரையிலுமுள்ள இஸ்ரவேல் யூதா, ஆகிய ராஜாக்களின் வரலாறு. இதில் 413 வருஷங்களில் நடைபெற்ற வரலாறு எழுதப்பட்டிருக்கிறது

 

2.1 இராஜாக்கள், 2 இராஜாக்கள் ஆகிய புஸ்தகங்கள் தாவீது ராஜாவைப் பற்றிய சம்பவங்களை விளக்கி ஆரம்பிக்கிறது. பாபிலோனின் ராஜாவைப் பற்றிய சம்பவங்களை விளக்கி முடிவு பெறுகிறது

 

3. தேவாலயம் கட்டும் பணி இந்தப் புஸ்தகங்களில் ஆரம்பிக்கப்படுகிறது. தேவாலயம் அழிக்கப்படுவதைப் பற்றிய செய்தியுடன் இந்தப் புஸ்தகம் முடிவு பெறுகிறது

 

4. தாவீதின் முதலாவது பின்னடியாரான சாலொமோனைப் பற்றி விளக்கி ராஜாக்கள் புஸ்தகம் ஆரம்பிக்கிறது. இந்தப் புஸ்தகத்தின் முடிவில் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் புத்திரரைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது

 

5. இஸ்ரவேலின் ராஜாக்கள், யூதாவின் ராஜாக்கள் ஆகியோர் அனைவருமே தாவீதோடு ஒப்பிட்டுக் கூறப் பட்டிருக்கிறார்கள்

 

6. தாவீதின் ராஜ்யம் தொடர்ந்து நிலைத்து நிற்காமல் போனதற்குக் காரணமும், இஸ்ரவேல் தேசம் அந்நியருடைய சிறையிருப்புக்குப் போனதற்குக் காரணமும் இந்தப் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது

 

பொருளடக்கம்

 

 தாவீதின் கடைசி நாட்கள்

 

1. தாவீது வயது சென்ற விர்த்தாப்பியனானான் (1:1-4)

2. அதோனியா தாவீதின் ராஜ்யபாரத்தைக் கைப்பற்ற சதி பண்ணுகிறான் (1:5-9)

3. நாத்தான், பத்சேபாள் ஆகியோரின் திட்டம் (1:10-14)

4. தாவீதின் வாக்கைப் பத்சேபாள் நினைவுபடுத்துகிறாள் (1:15-21)

5. பத்சேபாளின் விண்ணப்பத்தை நாத்தான் ஆதரித்துப் பேசுகிறான் (1:22-27)

6. தாவீது சாலொமோனை ராஜாவாக்குகிறான் (1:28-35)

7. சாலொமோனை ஆசாரியனாகிய சாதோக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறான் (1:36-40)

8. அதோனியா சாலொமோனுக்குக் கீழ்ப்படிகிறான் (1:41-53)

9. சாலொமோனுக்குத் தாவீது கொடுத்த கட்டளை (2:1-9)

தாவீதின் மரணம் (2:10-11)

 

 சாலொமோனின் ஆட்சிக் காலம் # நாற்பது வருஷ அரசாட்சி

 

1. சாலொமோனின் ராஜ்யபாரம் ஸ்திரப்படுகிறது (2:12)

2. அதோனியாவின் மரணம் (2:13-25)

3. அபியத்தார் ஆசாரிய ஊழியத்தி-ருந்து விலக்கப்படுகிறான் (2:26-27)

4. யோவாபின் மரணம் (2:28-34)

5. புதிய ராணுவத் தலைவனும் புதிய பிரதான ஆசாரியனும் (2:35)

6. சீமேயின் மரணம் (2:36-46)

7. சாலொமோனின் திருமணமும் எகிப்தோடு அவனுக்கிருந்த தொடர்பும் (3:1-3)

8. சாலொமோன் செலுத்திய ப-கள் (3:4)

9. சாலொமோன் ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளுமாறு ஜெபிக்கிறான் (3:5-9)

10. சாலொமோனுக்கு ஞானமுள்ள இருதயத்தையும் அவன் கேளாத ஐசுவரியத்தையும் மகியையும் கர்த்தர் தருகிறார் (3:10-15)

11. சாலொமோன் நீதி வழங்குகிறான் (3:16-28)

12. சாலொமோனின் பிரபுக்கள் (4:1-6)

13. சாலொமோனின் பன்னிரண்டு மணியகாரர் (4:7-19)

14. சாலொமோனின் விஸ்தாரமான இராஜ்யம் (4:20-21)

15. நாள் ஒன்றிற்கு சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு (4:22-23)

16. சாலொமோனின் அமைதியான ஆட்சிக்காலமும் செழுமையும் (4:24-28)

17. சாலொமோனின் ஞானமும் புத்தியும் மனோவிருத்தியும் (4:29-34)

18. சாலொமோனின் ஆராதனை முறைமைகள்

 

(1) தேவாலயம் கட்ட ஆயத்த வேலைகள்

(அ) சாலொமோன் தீருவின் ராஜாவாகிய ஈராமிடம் ஆலயம் கட்ட கேதுரு மரங்ளையும் தேவதாரி மரங்களையும் கேட்கிறான் (5:1-6)

(ஆ) தேவாலயம் கட்டும் வேலையில் ஈராம் சாலொமோனுக்கு உதவி புரிகிறான் (5:7-10)

(இ) ஈராமின் ஒரு வருஷ சம்பளம் (5:11)

(ஈ) தீருவோடு சாலொமோனின் உடன்படிக்கை (5:12)

(உ) தேவாலயம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள் (5:13-18)

(2) தேவாலயக் கட்டுமானப் பணிகள்

(அ) தேவாலயம் கட்ட ஆரம்பித்த நாள் (6:1)

(ஆ) தேவாலயத்தின் விஸ்தீரணம் (6:2)

(இ) தேவாலயத்தின் முகப்பும் மண்டபமும் (6:3-6)

(ஈ) ஆலயம் கட்டுவதற்குப் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் (6:7)

(உ) வாசற்படி, சுழற்படிகள், சுற்றுக்கட்டுகள்

(6:8-10)

(ஊ) தாவீதோடு சொன்ன வார்த்தையைக் கர்த்தர் சாலொமோனிடம்

நிறைவேற்றுகிறார் (6:11-14)

(எ) கேதுரு பலகைகளால் உட்சுவர் (6:15)

(ஏ) மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானம் (6:16-22)

(ஐ) இரண்டு கேருபீன்கள் (6:23-28)

(ஒ) ஆலயத்தின் சுவர்களும் தளவரிசையும் (6:29-30)

(ஓ) இரட்டைக் கதவுகள் (6:31-35)

(ஔ) உட்பிரகாரம் (6:36)

(ஃ) ஆலயம் கட்டித் தீர்ந்தது (6:37-38)

 

(3) சாலொமோனின் அரமனை (7:1-7)

(4) இராணியின் மாளிகை (7:8)

(5) அரமனையும் மாளிகையும் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் (7:9-12)

(6) தேவாலயத்தில் வெண்கல வேலை

 

(அ) ஈராமின் வேலை (7:13-14)

(ஆ) இரண்டு வெண்கலத் தூண்கள் (7:15)

(இ) இரண்டு கும்பங்கள் (7:16)

(ஈ) பின்னல்களும் தொங்கல்களும் (7:17-22)

(உ) வெண்கலக் கடல் என்னும் தொட்டி (7:23-24)

(ஊ) பன்னிரண்டு ரிஷப கள் (7:25-26)

(எ) பத்து வெண்கல ஆதாரங்கள் (7:27-37)

(ஏ) பத்து வெண்கலக் கொப்பரைகள் (7:38-39)

(ஐ) வெண்கல வேலைப்பாடுகளின் விபரம் (7:40-45)

(ஒ) வார்ப்புப்பட்டரை (7:46-47)

 

(7) தேவாலயத்தின் பொன் வேலை (7:48-51)

(8) தேவாலயப் பிரதிஷ்டை

 

(அ) கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி (8:1-11)

(ஆ) சாலொமோனின் பிரசங்கம் (8:12-21)

(இ) சாலொமோனின் பிரதிஷ்டை ஜெபம்

 

(ண்) கடந்த காலத்தில் கர்த்தர் உண்மையுள்ளவராயிருந்தார் (8:22-24)

(ண்ண்) இஸ்ரவேலைத் தொடர்ந்து ஆசீர்வதியும் (8:25-26)

(ண்ண்ண் ) தேவன் சர்வ வியாபகர் (8:27)

(ண்ஸ்) தேவாலயத்தில் செய்யப்படும் விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்பீராக (8:28-30)

(ஸ்) நீதிக்குத்தக்கதாய் நியாயந் தீர்ப்பீராக (8:31-32)

(ஸ்ண்) பாவங்களை மன்னித்து அடிமைத் தனத்தை நீக்குவீராக (8:33-35)

(ஸ்ண்ண்) தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக (8:36)

(ஸ்ண்ண்ண் ) வாதையையும் வியாதியையும் நீக்குவீராக (8:37-40)

(ண்ஷ்) அந்நிய ஜாதியாரையும் ஆசீர்வதிப்பீராக (8:41-43)

(ஷ்) யுத்தத்தில் இஸ்ரவேலைப் பாதுகாப்பீராக (8:44-45)

(ஷ்ண்) பாவங்களை மன்னித்து அடிமைத்தனத்தை நீக்குவீராக (8:46-53)

 

(ஈ) சாலொமோன் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கிறான் (8:54-61)

(உ) சாலொமோனும் ஜனங்களும் செலுத்திய காணிக்கைகளும் ப-களும் (8:62-64)

(ஊ) பதினான்கு நாள் பண்டிகை (8:65-66)

(எ) தேவன் சாலொமோனுக்கு இரண்டாம் விசை தரிசனமாகிறார் (9:1-9) 

 

19. சாலொமோனுடைய ஆட்சியின் விபரம்

 

(1) இருபது வருஷம் # கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜாவின் அரமனையையும் கட்டினான் (9:10)

(2) சாலொமோனும் ஈராமும் செய்து கொண்ட உடன்படிக்கை (9:11-14) 

(3) சாலொமோனின் கட்டுமானப் பணிகளும் அமஞ்சி ஆட்க ளும் (9:15-22)

(4) சாலொமோனின் வேலையாட்களும் அவன் செலுத்திய ப-களும் (9:23-25)

(5) இஸ்ரவே-ன் முதலாவது கடற்படை (9:26-28)

(6) சாலொமோனின் கீர்த்தியும் ஞானமும் (10:1-9)

(7) சாலொமோனின் ஐசுவரியம்

 

(அ) சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுக்குக் கொடுத்தது (10:10)

(ஆ) ஓப்பீரி-ருந்து வந்த பொன்னும் இரத்தினங்களும் (10:11)

(இ) சேபாவின் ராஜஸ்திரீ தன் தேசத்திற்குத் திரும்பிப் போகிறாள் (10:12-13)

(ஈ) சகல ராஜாக்களிடமிருந்தும் வந்த பொன்னும் திரவியங்களும் (10:14-15)

(உ) பொன் தகட்டால் செய்யப்பட்ட பரிசைகள் (10:16-17)

(ஊ) தந்தங்கள் (10:18-23)

 

(8) சாலொமோனின் வீழ்ச்சி

 

(அ) பொன்னையும் வெள்ளியையும் அதிகமாகச் சேர்த்தான் (10:24-27)

(ஆ) குதிரை வீரர்களையும் இரதங்களையும் அதிகமாகச் சேர்த்தான் (10:28-29)

(இ) அதிகமான மனைவிகளைச் சேர்த்தான் (11:1-3)

(ஈ) கர்த்தருடைய பிரமாணத்தை வாசித்து அதற்குக் கீழ்ப்படிய வில்லை (11:4)

(உ) விக்கிரக ஆராதனையில் பங்கு பெற்றான் (11:5-8)

 

(9) சாலொமோனின் சிட்சைகள்

 

(அ) நியாயத்தீர்ப்பின் தீர்க்க தரிசனம் (11:9-13)

(ஆ) கர்த்தர் சாலொமோனுக்கு எதிராக எழுப்பிய விரோதிகள் (11:14-22)

(இ) இரண்டாம் விரோதி (11:23-25)

(ஈ) மூன்றாம் விரோதி (11:26-39)

 

(10) சாலொமோனின் பொறாமைக் குணம் (11:40)

(11) சாலொமோனின் மரணம் (11:41-43)

 

ரெகொபெயாமின் ஆட்சி

 

1. ரெகொபெயாமின் மதிகேடான செய்கை (12:1-15)

2. உள்நாட்டுக் குழப்பம் (12:16-20)

தீர்க்கதரிசனம் யுத்தத்தைத் தவிர்த்தது 3. (12:21-24)

 

யெரொபெயாமின் ஆட்சி

 

1. யெரொபெயாமின் பாவங்கள்

 

(அ) பொறாமை, அவிசுவாசம் (12:25-27)

(ஆ) விக்கிரகாராதனை (12:28-30)

(இ) மேடைகளும் ஈனமான ஆசாரியர்களும்

(12:31-33)

 

2. யெரொபெயாமும் தீர்க்கதரிசியும்

 

(1) பபீடத்திற்கு எதிரான தீர்க்கதரிசனம் (13:1-2)

(2) மூன்று அற்புதங்கள் (13:3-6)

(3) தீர்க்கதரிசியின் கீழ்ப்படிதல் (13:7-10)

(4) தீர்க்கதரிசியின் கீழ்ப்படியாமை (13:11-19)

(5) தீர்க்கதரிசியின்மீது நியாயத்தீர்ப்பு (13:20-26)

(6) தீர்க்கதரிசி அடக்கம் பண்ணப் படுகிறான் (13:27-32)

(7) யெரொபெயாம் தொடர்ந்து பொல்லாப்பு செய்கிறான் (13:33-34)

 

3. யெரொபெயாமின்மீது நியாயத்தீர்ப்பு

 

(1) குமாரனின் வியாதி (14:1-4)

(2) அறிவை உணர்த்தும் வசனம் (14:5-6)

(3) யெரொபெயாமிற்கு எதிரான தீர்க்கதரிசனம் (14:7-11)

(4) தீர்க்கதரிசனம் நிறைவேறுதற்கு அடையாளம் (14:12-13)

(5) இஸ்ரவே-ல் சிறையிருப்பு பற்றிய தீர்க்கதரிசனம் (14:14-16)

(6) யெரொபெயாமின் மகனுடைய மரணம் (14:17-18)

 

4. யெரொபெயாமின் மரணம் (14:19#20) ய. ரெகொபெயாமின் ஆட்சியின் தொடர்ச்சி

 

1. ஆட்சிக்காலம் (14:21)

2. தேவதூஷணம் (14:22-24)

3. யூதாவின்மீது எகிப்தியரின் படையெடுப்பு (14:25-28)

4. ரெகொபெயாமின் மரணம் (14:29-31)

 

யூதாவின் இராஜாக்கள்

 

1. அபியாமின் ஆட்சி (15:1-8)

2. ஆசாவின் ஆட்சி 

 

(1) நல்ல ராஜா (15:9-15)

(2) உள்நாட்டுக் குழப்பம் (15:16#17)

(3) சீரியரோடு உடன்படிக்கை (15:18-19)

(4) இஸ்ரவேல் மீது சீரியப்படையெடுப்பு (15:20-21)

(5) ஆசாவின் கட்டுமானப் பணி (15:22)

(6) ஆசாவின் வியாதியும் மரணமும் (15:23-24)

 

 இஸ்ரவே-ன் ராஜாக்கள்

 

1. நாதாபின் ஆட்சி (15:25-26)

2. பாஷாவின் ஆட்சி

 

(1) உள்நாட்டுக் கலவரம் (15:27-28)

(2) யெரொபெயாமின் வீட்டாரெல்லாம் அழிந்தார்கள் (15:29-31)

(3) பாஷாவின் ஆட்சிக்காலம் (15:32-34)

(4) பாஷாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (16:1-7)

 

3. ஏலாவின் ஆட்சி (16:8)

4. சிம்ரியின் ஆட்சி

 

(1) உள்நாட்டுக் குழப்பம் (16:9-10)

(2) பாஷாவின் வீட்டாரெல்லாம் அழிந்தார்கள் (16:11-14)

(3) உள்நாட்டுக் குழப்பம் (16:15-17)

(4) சிம்ரியின் மரணம் (16:18-20)

 

5. உம்ரியின் ஆட்சி

 

(1) உள்நாட்டுக் குழப்பம் (16:21-22)

(2) சமாரியவை உம்ரி கட்டுகிறான் (16:23-24)

(3) உம்ரியின் பொல்லாப்பும் மரணமும் (16:25-28)

 

ஆகாபின் ஆட்சி

 

1. ஆகாபின் பொல்லாப்பு (16:29-33)

2. எரிகோவைக் கட்டியோர்மீது சாபம் (16:34)

3. மூன்றரை வருஷம் பஞ்சம் (17:1)

4. எ-யாவைக் காகம் போஷிக்கிறது (17:2#7)

5. பானையின் மாவும் கலசத்தின் எண்ணெயும் குறையவில்லை (17:8-16)

6. விதவையின் மகனை எ-யா உயிருடன் எழுப்புகிறான் (17:17-24)

7. எ-யா ஆகாபைச் சந்திக்கச் செல்கிறான் (18:1-2)

8. ஆகாப் தண்ணீ ரைத் தேடுகிறான் (18:3-6)

9. எ-யா ஒபதியாவைச் சந்திக்கிறான் (18:7-16)

10. ஆகாபும் அவனுடைய கள்ளத் தீர்க்கதரிசிகளும் (18:17-24) 11. பாகால் தீர்க்க தரிசிகளின் முயற்சிகள் (18:25-29)

12. கர்த்தரிடத்தி-ருந்து இறங்கி வந்த அக்கினி (18:30- 40)

13. மழை (18:41-46)

14. எ-யா யேசபேலுக்கு பயந்து ஓடுகிறான் (19:1-3)

15. தெய்வீக வல்லமை (19:4-8)

16. புதிய வெளிப்பாடும் புதிய கட்டளையும் (19:9-18)

17. எ-சாவின் அழைப்பு (19:19-21)

18. ஆகாப் சீரியரோடு பண்ணிய முதலாவது யுத்தம்

 

(1) பெனாதாத்தின் முதலாவது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது (20:1-4)

(2) பெனாதாத்தின் இரண்டாவது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது (20:5-9)

(3) பெனாதாத்தின் பெருமை (20:10)

(4) ஆகாப் பெனாதாத்திற்குக் கூறிய பதிலுரை (20:11-12)

(5) ஆகாபுக்கு தேவன் தந்த ஜெய வாக்குத்தத்தம் (20:13-14)

(6) சீரியர்மீது வெற்றி (20:15-21)

 

19. யுத்தத்தைப் பற்றிய தீர்க்கதரிசன எச்சரிப்பு (20:22)

 

ஆகாப் சீரியரோடு பண்ணிய இரண்டாவது யுத்தம்

 

(1) சீரியரின் திட்டம் (20:23-25)

(2) தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (20:26-27) 

(3) ஆகாபுக்கு மறுபடியும் தேவனுடைய ஜெயவாக்குத்தத்தம் (20:28)

(4) சீரியர்மீது இரண்டாவது முறையாக வெற்றி (20:29-30)

(5) ஆகாபின் பாவம் (20:31-34)

(6) தீர்க்க தரிசி மூலமாக எச்சரிப்பு (20:35#43)

 

ஆகாப் நாபோத்துக்கு எதிராகச் செய்த பாவம்

 

(1) அவனுடைய திராட்சத்தோட்டத்தை இச்சிக்கிறான் (21:1-4)

(2) யேசபே-ன் சதித்திட்டம் (21:5-10)

(3) யேசபே-ன் சதித்திட்டம் வெற்றி பெறுகிறது (21:11-14)

(4) ஆகாபிடம் நாபோத்தின் திராட்சத் தோட்டம் (21:15-16)

(5) ஆகாப், யேசபேலுக்கு எதிராக எ-யாவின் தீர்க்கதரிசனம் (21:17-24)

(6) ஆகாபின் பொல்லாப்பும் தன்னைத் தாழ்த்தியதும் (21:25-27)

(7) ஆகாப் பொல்லாப்பி-ருந்து தப்புகிறான்

(21:28-29)

 

ஆகாப் சீரியரோடு பண்ணிய மூன்றாவது யுத்தம்

 

(1) யோசபாத்தோடு ஒப்பந்தம் (22:1-4)

(2) யோசபாத் தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறான் (22:5)

(3) கள்ளத்தீர்க்கதரிசிகள் ஜெயங் கிடைக்கும் என்றனர் (22:6)

(4) யோசபாத் உண்மையான தீர்க்கதரிசியிடம் ஆலோசனை கேட்கிறான் (22:7)

(5) மிகாயாவை அழைக்கிறார்கள் (22:8-9)

(6) கள்ளத்தீர்க்கதரிசிகள் ஜெயங் கிடைக்கும் என்றனர் (22:10-12) 

(7) ஆகாபுக்கு நல்ல வார்த்தை கூறுமாறு மிகாயாவை ஒருவன் எச்சரிக்கிறான் (22:13-14)

(8) மிகாயாவின் முதலாவது தீர்க்கதரிசனம்

(22:15-16)

(9) இஸ்ரவே-ன் தோல்வியைப் பற்றி மிகாயாவின் தீர்க்க தரிசனம் (22:17-18)

(10) பொய்யின் ஆவியைப்பற்றி மிகாயாவின் தீர்க்கதரிசனம் (22:19-23)

(11) உண்மையான தீர்க்கதரிசியின் பரீட்சை

(22:24-28)

(12) கீலேயாத்திலுள்ள ராமோத்திலே யுத்தம் (22:29-36)

(13) ஆகாபின் மரணம் (22:37-40)

 

 யோசபாத்தின் ஆட்சி

 

1. ஆட்சிக்காலம் (22:41-42)

2.. நல்ல ராஜா (22:43-47)

3. யூதாவின் இரண்டாவது கப்பற்படை (22:48-49)4. 

யோசபாத்தின் மரணம் (22:50)

 

அகசியாவின் ஆட்சி (22:51-53)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.