துன்மார்க்கருடைய ஆலோசனை

துன்மார்க்கருடைய ஆலோசனை

 

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், (சங் 1:1)

 

சங்கீதக்காரர், இந்த சங்கீதத்தில் நீதிமானின் சுபாவங்களைப்பற்றிச் சொல்லுகிறார். கர்த்தர் தமக்குரியவர்களை பேர்பேராக அறிந்திருக்கிறார் நாமோ மனுஷரை அவர்களுடைய சுபாவங்களினால் அறிந்து கொள்கிறோம். நீதிமான்கள் கர்த்தருக்குப் பிரியமான வழிகளில் நடப்பார்கள். துன்மார்க்கமான வழிகளில் நீதிமான்கள் நடக்கமாட்டார்கள்.

 

நீதிமான்கள் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கமாட்டார்கள் (சங் 1:1). இந்த சுபாவமே நீதிமானுடைய முதலாவது சுபாவமாக இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. தீமையிலிருந்து விலகுவதுதான் ஞானத்தின் ஆரம்பம்.

 

தங்களைச் சுற்றிலும் துன்மார்க்கர் இருப்பதை நீதிமான்கள் காண்பார்கள். இந்த உலகத்தில் துன்மார்க்கர் நிரம்பியிருக்கிறார்கள். துன்மார்க்கரைப்பற்றிச் சொல்லும்போது, சங்கீதரக்காரர் அவர்களுக்கு மூன்று பெயர்களைக் கொடுக்கிறார் அவையாவன: 1. துன்மார்க்கர் 2. பாவிகள் 3 பரியாசக்காரர் என்பனவாகும்

 

துன்மார்க்கருக்கு தெய்வபயமில்லை. தேவனுடைய பிரமாணங்களுக்கு இவர்கள் கீழ்ப்படிவதில்லை. துன்மார்க்கர் கர்த்தருக்கு விரோதமாக கலகம்பண்ணுகிறார்கள். தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல், அவற்றிற்கு மீறி ஜீவிக்கிறார்கள். இவர்கள் பாவிகள். தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் பாவம் செய்கிறார்கள். நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்யவில்லையென்றால், நாம் பாவம் செய்ய ஆரம்பித்துவிடுவோம். பாவம் செய்கிறவர்களின் இருதயம் பாவத்தினால் கடினப்பட்டிருக்கும்.

 

பாவசிந்தனையுள்ளவர்கள் பரியாசக்காரராயிருப்பார்கள்

பரியாசக்காரர்கள் பரிசுத்தமானதை பரியாசம்பண்ணுவார்கள். தேவனைத் தூஷிப்பார்கள். பாவத்தை நேசிப்பார்கள். பரிசுத்தத்தை வெறுப்பார்கள். துன்மார்க்கர் எப்போதும் நிலையற்றவர்களாகவே இருப்பார்கள். இவர்களுடைய ஜீவியத்தில் நோக்கமோ, குறிக்கோளோ, இலக்கோ இருக்காது. இவர்களுடைய ஜீவியத்தைக் குறித்து இவர்களுக்கு எந்தவிதமான தீர்மானமும் இல்லை. இவர்களுக்கு முடிவும் இல்லை துவக்கமும் இல்லை. இவர்களுடைய ஜீவியத்தை எந்தப் பிரமாணமும் ஆளுகை செய்வதில்லை தங்களுடைய மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காக, இவர்கள் மாம்சப்பிரகாரமாக ஜீவிப்பார்கள். எல்லா சோதனைகளுக்கும் தங்களை

ஒப்புக்கொடுத்து பாவம் செய்வார்கள்.

 

நீதிமான்கள் துன்மார்க்கரை பார்க்கும்போது தங்கள் இருதயத்தில் வருத்தப்படுகிறார்கள்

துன்மார்க்கரைப்போல நீதிமான்கள் ஜீவிப்பதில்லை துன்மார்க்கரைப்போல நீதிமான்கள் கிரியை நடப்பிப்பதுமில்லை. கர்த்தருடைய பிள்ளைகள் துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடப்பதில்லை. துன்மார்க்கருடைய குறிக்கோள்களும் கொள்கைகளும் நீதிமான்களுடைய கொள்கைகள் அல்ல. நீதிமான்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு முன்மாதிரியாக துன்மார்க்கரை நோக்கிப் பார்ப்பதில்லை. அவர்களுடைய தீய ஆலோசனையின் பிரகாரம் நீதிமான்கள் ஜீவிப்பதுமில்லை .

 

நீதிமான்கள் பாவிகளுடைய வழியில் நிற்கமாட்டார்கள். துன்மார்க்கர் பாவம் செய்யும்போது, நீதிமான்கள் பாவம் செய்யாமல், பாவங்களைத் தவிர்த்து விடுகிறார்கள். துன்மார்க்கருடைய வழியை நீதிமான்கள் பின்பற்றுவதில்லை. நீதிமான்கள் பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரமாட்டார்கள். பரியாசக்காரரோடும், அவருடைய சிநேகிதரோடும் நீதிமான்கள் ஐக்கியமாயிருக்கமாட்டார்கள்.

 

பரியாசக்காரர்கள் சாத்தானுடைய பிள்ளைகள். பிசாசு இவர்களை ஆளுகை செய்கிறான். பிசாசு தன்னுடைய தந்திரமான யோசனைகளை பரியாசக்காரர் மூலமாய் நிறைவேற்றுகிறான். பரியாசக்காரர்களும் சாத்தானுடைய ராஜ்யத்தை இந்தப் பூமியிலே ஸ்தாபிப்பதற்கு பிரயாசப்படுகிறார்கள். இவர்கள் சாத்தானுடைய கருவிகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.