ரூத் அறிமுகம்
நகோமியின் குடும்பத்திலே நடைபெறுகிற சம்பவங்கள் இந்த சரித்திர புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புஸ்தகம் நியாயாபதிகளின் புஸ்தகத்திற்கு அடுத்த புஸ்தகமாக பரிசுத்த வேதாகமத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. இதில் எழுதப்பட்டிருக்கிற சம்பவங்கள் நியாயாதிபதிகளின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களாகும்
ரூத்தின் சரித்திர புஸ்தகம் சாமுவேல் புஸ்தகத்திற்கு முந்தின புஸ்தகமாக பரிசுத்த வேதாகமத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. ரூத்தின் சரித்திர புஸ்தகத்தின் கடைசி பகுதியில், தாவீதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது
ரூத்தின் சரித்திர புஸ்தகத்தில் அற்புதங்களைப்பற்றியோ,
நியாயப்பிரமாணத்தைப்பற்றியோ,
யுத்தங்களைப்பற்றியோ, தேசத்தில் ஏற்படும் குழப்பங்கள், புரட்சிகள் பற்றியோ எழுதப்படவில்லை . நகோமியின் ஜீவியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும் பாடுகளும், வேதனைகளும் இந்தப் புஸ்தகத்தின் முதல் பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. இதன் பிந்தின பகுதியில் நகோமிக்கு உண்டான ஆறுதலைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ரூத்தின் மனந்திரும்புதல் முதலாவதாகவும், அதன் பின்பு அவளுக்கு காண்பிக்கப்பட்ட விசேஷித்த கிருபைகள் இரண்டாவதாகவும் இந்தப் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது
கர்த்தருடைய வழிநடத்துதல் அற்புதமானது நம்முடைய அன்றாட ஜீவியத்தில், கர்த்தர் தமது கிருபைகளை நமக்கு வெளிப்படுத்துகிறார். நம்முடைய சொந்தக் குடும்பத்தின் காரியங்களையும் கர்த்தர் பொறுப்பேற்று வழிநடத்துகிறார் (1சாமு 2:7,8; சங் 113:7-9).
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, மோவாபிய ஸ்திரீயாகிய ரூத்தின் வம்சத்தில் வந்தவர் இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு மத்தேயு 1-ஆவது அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. புறஜாதியாரும் இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்திலே வம்சவரலாற்றில், புறஜாதி தேசத்து ஸ்திரீயாகிய ரூத் இடம் பெற்றிருக்கிறாள்.
சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதற்கு அடையாளமாக, இயேசுகிறிஸ்துவின்
நகோமி, ரூத் ஆகியோர் அனுபவித்த படுகளும் வேதனைகளும் இந்தப் புஸ்தகத்தின் முன்னுரையாக எழுதப்பட்டிருக்கிறது (ரூத் 1-ஆவது அதிகாரம்). அவர்களுடைய கடின உழைப்பும் மனத்தாழ்மையும் (ரூத் 2-ஆவது அதிகாரம்). அவர்களுக்கும் போவாசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற புதிய உறவு (ரூத் 3-ஆவது அதிகாரம்). நகோமியும் ரூத்தும் தாங்கள் இழந்துபோன சந்தோஷத்தையும் சமாதானத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள் (ரூத் 4-ஆவது அதிகாரம்) இந்த சம்பவம் இயேசுகிறிஸ்து பிறந்த ஊராகிய பெத்லகேம் ஊரிலே நடைபெறுகிறது.
ரூத் புஸ்தகத்தின் மூலப்பிரதி எழுதப்பட்ட காலம் சுமார் கி.மு. 1600 -1500 வருஷமாகும். இந்தப் புஸ்தகத்தின் தற்போதுள்ள பகுதி எழுதப்பட்ட காலம் சுமார் கி.மு 1163 - 1123 வருஷமாகும். இதைச் சாமுவேல் தீர்க்கதரிசி எழுதியிருக்க வேண்டும். அல்லது ஏசாயா தீர்க்கதரிசி இந்தப் புஸ்தகத்தின் தற்போதுள்ள பகுதியைச் சுமார் கி.மு. 743 - 683 ஆவது வருஷத்தில் எழுதியிருக்க வேண்டும்.
ரூத் புஸ்தகத்தின் ஆசிரியர் சாமுவேல் அல்லது ஏசாயா. தாவீதின் வம்சவழியை விளக்குவதற்காக இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. ரூத் இந்தப் புஸ்தகத்தை எழுதியதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை. சாமுவேல் இந்தப் புஸ்தகத்தை எழுதினார் என்று யூதருடைய பாரம்பரிய வரலாறு கூறுகிறது. நியாயாதிபதிகளின் காலத்திற்குப் பின்பு இந்தப் புஸ்தகம் இப்போதுள்ள வடிவத்தின் பிரகாரம் கோர்க்கப்பட்டிருக்கிறது. (ரூத் 1:1)
நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேல் புத்திரரின் வரலாற்று நிகழ்ச்சிகளை இந்தப் புஸ்தகம் விவரிக்கிறது இதில் உறவின்முறை மீட்பைப் பற்றிய பிரமாணம் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் வரும் புறஜாதி ஸ்திரீயைப் பற்றிய விவரமும், பாரேசிலிருந்து தாவீது வரையிலுமுள்ள தாவீதின் வம்சவரலாற்றைப் பற்றிய விவரமும் இந்தப் புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது
பொருளடக்கம்
மெலேக்குவின் குடும்பம்
1. கானான் தேசத்திலே பஞ்சம் (1:1-2)
2. எ-மெலேக்கு, அவனுடைய இரண்டு குமாரர் ஆகியோரின் மரணம் (1:3-5)
3.நகோமி தன் சொந்த ஜனத்தாரிடம் திரும்பிவர ஆயத்தமாகிறாள் (1:6-7)
4.தன் சொந்த ஊருக்குப் போகுமாறு ரூத் சோதிக்கப்படுகிறாள் (1:8-13)
5.ரூத் தன் மாமியைப் பற்றிக் கொள்கிறாள் (1:14-17)
6. நகோமி இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்பி
வருகிறாள் (1:18-22)
உறவின்முறை மீட்பைப் பற்றி நகோமியின் திட்டம்
1.போவாஸ் # உறவின் முறையான் (2:1)
2.நகோமியின் திட்டம் (2:2-3)
3.போவாஸ் ரூத்தின்மீது கிருபையாயிருக்கிறான் (2:4-14)
4.ரூத் அரிக்கட்டுகள் நடுவிலே கதிர்பொறுக்கிக் கொள்ளலாம் (2:15-18)
5. நகோமியின் ஆலோசனை (2:19-22)
6.ரூத் போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருக்கிறாள் (2:23)
7.போவாஸ் ரூத்தின் உறவின் முறையான் (3:1-2)
8. நகோமியின் ஆலோசனை (3:3-4)
9.ரூத் நகோமிக்குக் கீழ்ப்படிகிறாள் (3:5-9)
10.உறவின்முறை மீட்பின் நிறைவேற்றம்
பட்டணத்து மூப்பரோடு ஆலோசனை (3:10-12)
11. போவாஸின் பதட்டம் (3:13-14)
12.நீர் சுதந்தரவாளி (3:15-18)
13.ரூத்துக்கு ஆசீர்வாதமான வார்த்தை (4:1-7)
14.போவாஸ் உறவின்முறை மீட்பை நிறைவேற்றுகிறார் (4:8-10)
15.. மூப்பர்களின் ஆசீர்வாதம் (4:11-12)
16.. உறவின்முறை மீட்பின் ஆசீர்வாதம் (4:13-17)
17.பேரேசுடைய சந்ததி (4:18-22)
