ரபி அக்கிபா
ஒன்று மாற்றி ஒன்று என்று ஏராளமான படையெடுப்புகளும், சிறையிருப்பு களையும் சந்தித்த தேசம் இஸ்ரவேல். எனவே, இவர்கள் ஒவ்வொரு முறை இப்படி பாதிக்கப்படும் போதும் தங்கள் வேதாகமத்தைக் காத்துக் கொள்ள அதிகம் பிரயாசப்பட்டார்கள். இஸ்ரவேலர்கள் தங்கள் வாழ்க்கையில் உயிரை விடப் பிரதானமாகக் கருதிய இரண்டு விஷயங்களில் ஒன்று தேவன் அவர்களுக்குத் தந்த வேதம். மற்றது. அவர்கள் தேவனை வழிபட பயன்படுத்திய தேவாலயம்.
இவ்விரண்டையுமே அவர்கள் தங்களுக்கு நேரிட்ட சோதனை காலங்களில் காத்துக்கொள்ள அதிகப் பிரயாசப்பட்டார்கள். அதில் அவர்களால் தங்கள் தேவாலயத்தைக் காத்துக் கொள்ள முடியாமல் போனாலும் தேவன் தங்களுக்குத் தந்த வேதத்தில் ஒரு எழுத்தைக்கூட இழக்காமல் காத்துக் கொண்டார்கள், படையெடுப்புக் காலங்களிலும் சிறையிருப்புக் காலங்களிலும் வேதாகமச் சுருள்களை மிகவும் கவனமாக எடுத்துச் சென்று மலைக்குகைகளிலும், வனாந்திரங்களிலும் மறைத்து வைத்துக் காப்பாற்றுவார்கள்.
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ரோமர்களின் தொல்லைகள் இஸ்ரவேலர்களுக்கு அதிகமாகப் பெருகியிருந்த காலத்தில் வேதாகமத்தை அழிந்துவிடாமல் காத்துக்கொள்ள இவர்கள் அதிகமாகவே பிரயாசப்பட வேண்டியிருந்தது. ரோமர்களால் உண்டான உபத்திரவ காலத்தில் வேதாகமத்தை பிரதியெடுத்துத் தொகுத்துக் காப்பாற்றியவர் அக்கிபா என்பவராவார். யூத ரபியான இவர் கி.பி 50 ல் பிறந்தார். இவருடைய காலத்தில்தான் கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்டது. இந்த சமயத்தில் ஜனங்கள் எருசலேமை விட்டுச் சிதறிப் போனார்கள். அப்படி சிதறிப் போனவர்கள் வேதாகமத்தின் சுருள்களையும் தங்களோடு எடுத்துக்கொண்டு தப்பிப் போய்விடுவார்கள்.
இதனால் வேதாகமத்தின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று விட்டன. இவை எல்லாவற்றையும் தேடிக்கண்டுபிடித்து அவற்றை பிரதியெடுத்துத் தொகுத்து மறுபடியும் முழுமையாக்கினவர் இந்த ரபி அக்கிபாதான், இவர் கி பி 132 வ் ரோமர்களுடன் இஸ்ரவேலர்கள் நடத்திய புரட்சிக் கலவரத்தில் மரணமடைந்தார். இவரால் பிரதி செய்யப்பட்டு முழுமையாகத் தொகுக்கப்பட்ட மூலப் பிரதியைக் கொண்டுதான் பின்னாட்களில் மற்றைய பிரதிகளை தயாரித்தார்கள். இன்று நம்முடைய கையில் அச்சு வடிவிலிருக்கும் வேதாகமம் இவருடைய தொகுப்பிலிருந்து உருவாக்கப்பட்டதுதான், (Izmir) என்றழைக்கப்படுகிறது.
