யோவான் 7:3 தியானம்

யோவான் 7:3 தியானம்

ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். (யோவான் 7:3)


ஒரு ஆவிக்குரிய மனிதன் விழுந்துபோகாமல் இருக்க அவனுக்கு கர்த்தரை அறிகிற அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த அறிவுதான் அவனை காப்பாற் முகம், சோர்வடையாமல் விசுவாசத்தில் நிலைத்து நிற்கச் செய்யும்


தன்னை இரட்சித்த தேவன் யார் என்பதையும், அவர் எப்படிப்பட்டவர் என்பதையும், அவருடைய சுவங்கள் என்ன என்பதையும், நாம் என்ன செய்ய அவர் விரும்புகிறார் என்பதையும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்

இந்த அறிவு தான் இரட்சிக்கப்பட்ட ஒருவனை பரலோகம் கொண்டுபோய் சேர்க்கும். மற்றொரு அறிவு நமக்கு வேண்டும். அதுதான் பரலோகத்திற்குரிய அறிவு, பரலோக ராஜ்யத்திற்குள் செல்ல வேண்டுமேயானால் பரலோக ராஜ்யத்தைப்பற்றிய முழு அறிவு நமக்குள் இருக்க வேண்டும். பரலோகத்திற்குள் யார் செல்ல முடியும் யார் அங்கு இருக்கிறார்கள்? போன்ற அடிப்படையை தெரிந்து கொள்ளுதல் நமக்கு அவசியம் வேண்டும், எந்த ஒரு அறிவும் இவ்வாமல் பரலோகத்திற்குள் செல்ல முடியாது.

கர்த்தரைப்பற்றிய அறிவை அடைந்து கொள்ள, பரலோக ராஜ்யத்தைப்பற்றிய அறிவை பெற, கர்த்தர் நம் ஒவ்வொருவர் கையிலும் பரிசுத்த வேதாகமத்தை கொடுத்திருக்கிறார். வேதத்தை வாசித்து, தியானித்து கர்த்தரைப்பற்றிய அறிவில் வளர்ந்து விருத்தியாக முடியும் தேவனைப் பற்றியும், செல்லப்போகும் பரலோகத்தை பற்றியும் இப்போது தெரியவில்லை என்றால் பரலோகத்திற்கு சென்றாலும் எங்கே போவது என்பது நிச்சயம் தெரியாது, பக்கத்து நாட்டிற்கு நாம் செல்ல வேண்டுமானால் அதன் வரை படம் நமக்கு அவசியம் தேவை அல்லது அங்கு சென்று வந்திருந்தவரின் ஆலோசனை வேண்டும். இதற்காகவே, வேதத்தை நன்கு படித்து, ஆவியானவரின் துணையை நாட வேண்டும். அவரே நமக்கு சகலத்தையும் போதிப் பவர்

இப்படிப்பட்ட அறிவிலே நாம் நாள் தோறும் வளர வேண்டும். அப்போது தான் நாம் பூரணமடைவோம். நாம் பூரணமடைய வேண்டுமென்பதே தேவ சித்தம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.