தியத்தீரா வெளி 2:18-29
வெளி 2:18. தியத்தீரா சபையின் தூதனுக்கு தீ எழுதவேண்டியது என்னவெனில் அக்கினிஜுவாலை போன்ற கண்களும்
பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தியத்தீரா
சபையின் தூதனுக்கு எழுதவேண்டியதை
வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவானவர்
தம்மைப்பற்றிச் சொல்லும்போது,
"அக்கினிஜுவாலை போன்ற கண்கள்,
பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் என்று
சொல்லுகிறார். இயேசு கிறிஸ்துவின் கண்கள்
அக்கினிஜுவாலைபோல பிரகாசமாகயிருக்கிறது. எல்லா நபர்களும், எல்லா காரியங்களையும் கிறிஸ்துவின் பிரகாசமான கண்கள் ஊடுருவி பார்க்கும்.
அவருடைய பாதங்கள் பிரகாசமான
வெண்கலம் போல இருக்கிறது. கிறிஸ்துவானவர் பரிபூரண ஞானத்தின் பிரகாரமாக நியாயந்தீர்க்க றவர். பரிபூரணபலத்தினால் கிரியை செய்கிறவர்.
கிறிஸ்து தம்முடைய நீதியில் நிலைத்து நிற்கிறவர்.
தியத்தீரா துருக்கியின் மேற்கு பகுதியில்
பெர்கமுவிற்கும், சர்தையுவிற்கும் இடையில்
அமைந்துள்ள பட்டணம்
அறிந்திருக்கிறேன் வெளி 2:19
வெளி 2:19. உன் கிரியைகளையும், உன் -அன்பையும், உன் ஊழியத்தையும், உன்
விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த
கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும்
அறிந்திருக்கிறேன்.
தியத்தீரா சபை யாரை இயேசு கிறிஸ்து
புகழ்ந்து பேசுகிறார். அவர்களைக்குறித்து
நற்சாட்சி சொல்லுகிறார். அவர்கள்
நற்கிரியைகளைச் செய்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவர்கள், தங்கள் விசுவாசத்தை நற்கிரியைகள் மூலமாய் வெளிப்படுத்தவேண்டும். அன்போடு
நற்கிரியைகளைச் செய்ய வேண்டும்.
தியத்தீரா சபையார் இயேசு கிறிஸ்துவுக்கு உற்சாகமாய் ஊழியம் செய்கிறார்கள். அவர்களிடத்தில் கிறிஸ்துவைப்பற்றும்
விசுவாசம் உறுதியாயிருக்கிறது. தேவனுடைய கிருபையை பெற்றிருக்கிறார்கள் நீடிய பொறுமையுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெற்று
கனிதருகிறார்கள். அவர்கள் முன்பு செய்த
கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள்
அதிகமாக இருக்கிறது. எல்லா
விசுவாசிகளிடத்திலும் இப்படிப்பட்ட வாஞ்சை இருக்க வேண்டும். நாம் ஏற்கெனவே செய்த நற்கிரியைகளை விட, இன்னும் அதிகமாய் நற்கிரியைகளைச் செய்ய வேண்டும்.
தியத்தீரா சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்
1. கிரியைகள்
2. அன்பு
3. ஊழியம்
4. விசுவாசம்
5. பொறுமை
6. அதிகமான கிரியைகள்
குறை உண்டு வெளி 2:20-23
ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:20
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன், தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 2:21
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
வெளிப்படுத்தின விசேஷம் 2:22
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன், அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும், அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:23
தியத்தீரா சபையார் ஆவிக்குரிய
ஜீவியத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
நற்கிரியைகளை அதிகமாய்ச் செய்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் பேரில் கர்த்தருக்கு
குறை இருக்கிறது சபையார் மத்தியிலே
கள்ளத்தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள்
அவர்கள் விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள்.
வஞ்சிக்கிற கள்ளத்தீர்க்கதரிசிகளை
கிறிஸ்துவானவர் யேசபேல் என்னும்
ஸ்திரீயானவளோடு ஒப்பிட்டுச் சொல்லுகிறான். அவளை பெயரிட்டு அழைக்கிறார்.
யேசபேல் கர்த்தருடைய ஊழியக்காரர்களை வஞ்சித்தால். அவர்கள் வேசித்தனம்பண்ணவும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்தல். வஞ்சிக்கிற கள்ளத்தீர்க்கதரிசிகள், யேசபேலை போலவே, விசுவாசிகளை வஞ்சித்து பாவத்தின் பாதையிலே வழி நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வஞ்சகர்களை தியத்தீரா சபையார் தங்களுடைய சபையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இடங்கொடுக்கிறார்கள்.
யேசபேல் மனந்திரும்பவேண்டுமென்று
கர்த்தர் அவளுக்கு தவணை கொடுத்தார்.
ஆனால் அவளுக்கோ தன் வேசிமார்க்கத்தைவிட்டு மனந்திரும்ப
விருப்பமில்லை. தேவனுடைய பொறுமையை யேசபேல், விசுவாசிகளை வஞ்சிக்கிறவர்களும் அசட்டை பண்ணுகிறார்கள் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி துன்மார்க்கம் பண்ணுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பும்படியாய் கர்த்தர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர்களோ கர்த்தர் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் அசட்டை பன்னிவிட்டார்கள். இன்னும்
மனந்திரும்பாமலேயே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்னும் விருப்பம் இல்லை .
கர்த்தர் நல்லோரையும் பொல்லோரையும்
நேசிக்கிறவர் அவருடைய அன்பில்
பட்சபாதமில்லை அவர் நீதிமான்களை
நேசிப்பதுபோல பாவிகளையும் நேசிக்கிறார். கர்த்தர் பாவிகளை நேசித்தாலும் அவர்களுடைய பாவங்களை வெறுக்கிறார். யேசபேல் தன்
வேசிமார்க்கத்தைவிட்டு மனந்திரும்புதல் போனபடியால் கர்த்தர் அவளை தண்டிக்கிறார். அவளைக் கட்டில் கிடையாக்குகிறார்.
யேசபேலோடு விபச்சாரம் செய்தவர்கள்
தங்களுடைய கிரியைகளைவிட்டு
மனந்திரும்பவேண்டுமென்று கர்த்தர்
எதிர்பார்க்கிறார். மனந்திரும்பும்படியாய்
அவர்களுக்கும் தவணை கொடுக்கிறார்
அவர்கள் மனந்திரும்பாவிட்டால்
கர்த்தர் அவர்களையும் மிகுந்த
உபத்திரவத்திலே தள்ளுவார்.
கர்த்தர் யேசபேலைத் தண்டிப்பதோடு
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே
கொல்லுவேன் என்று சபிக்கிறார். இந்த
மரணம் அவர்களுடைய இரண்டாம்
மரணத்தைக் குறிக்கிறது. அவர்கள் நித்திய
மரணமடைவார்கள்
கர்த்தர் துன்மார்க்கரைத் தண்டிக்கும் போது, அதைப் பார்த்து. உணர்ந்து நாம் மனந்திரும்பி விட வேண்டும், நமக்கு நல்ல புத்திவர வேண்டுமென்பதற்காக கர்த்தர் துன்மார்க்கரை அழிக்கிறார். அவர்களைத் தண்டிக்கிறார். யேசபேலையும், அவளுடைய பிள்ளைகளையும், யேசபேலோடு விபசாரம் செய்தவர்களையும் கர்த்தர் உபத்திரவத்திலே தள்ளுகிறார். அவர்களைத் தண்டிக்கிறார். அப்பொழுது கர்த்தர் உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும் கர்த்தர் நீதியின் படி தீர்ப்பு செய்யும் போது, அவருடைய சுபாவம் வெளிப்படும்.
கர்த்தர் நம் எல்லோரையும் நோக்கிப்
பார்க்கிறார். நம்முடைய கிரியைகளை அவர்
ஆராய்ந்து அறிகிறார். ஒவ்வொருவருக்கும்
அவரவருடைய கிரியைகளின்படி கர்த்தர்
பலனளிப்பார். துர்க்கிரியைகளைச்
செய்கிறவர்களை கர்த்தர் தண்டிப்பார்.
நற்கிரியைகளைச் செய்கிறவர்களை கர்த்தர்
ஆசீர்வதிப்பார்.
தியத்தீரா சபையில் காணப்படும் குறைபாடுகள்
1. யேசபேலைப் போதிக்கும்படி இடம்
கொடுத்திருக்கிறார்கள்.
2. தேவனுடைய ஊழியக்காரர் வேசித்தனம்
பண்ணை அவளுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.
3. விக்கிரகங்களுக்கு படைத்தவைகளைப்
புசித்து தேவனுடைய ஊழியக்காரர்களை வஞ்சிக்க அவளுக்கு இடம்
கொடுத்திருக்கிறார்கள்.
4. தேவனுடைய ஊழியக்காரர்களை
வஞ்சிக்கும்படி அவளுக்கு இடம்
கொடுத்திருக்கிறார்கள்.
1இராஜா 18-19 ஆகிய அதிகாரங்களில்
கூறப்பட்டிருக்கும் யேசபேல், இந்த
யேசபேலும் ஒரே நபரல்ல. இவள் தியத்தீரா
சபையிலுள்ள ஒரு ஸ்திரீ தியத்தீரா
சபையிலுள்ள ஸ்திரீக்கு மனந்திரும்புவதற்கு
ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால்
அவள் மனந்திருந்தவில்லை.
வேதாகமத்தில் வேசித்தனம் என்பது பல
பொருளுடையது. அவையாவன:
1. திருமணமானவர்கள் அல்லது
திருமணமாகாதவர்கள் செய்யும் விபச்சாரம்
(மத் 5:32)
2. விக்கிரகாராதனை யும், விக்கிரகாராதனை யின் ஒரு பகுதியாக விபச்சாரம் பண்ணுவதும் (2 நாள் 21:11)
3. சரீரப்பிரகாரமான வேசித்தனம் யோவான் (8:41)
4. ஆவிக்குரிய வேசித்தனம் (எசே 16:15,26 29)
5. சுயபுணர்ச்சியும், ஆண்புணர்ச்சியும்
(1கொரி 6:9-11)
6. ஒரு சிலர் வேசித்தனம் என்பது
திருமணமாகாதவர்கள் செய்யும் உடலுறவு
பாவம் என்று கூறுகிறார்கள்.
யேசபேலின் நிமித்தம் கொடுக்கப்படும்
நியாயத்தீர்ப்பின் மூன்று அம்சங்கள்
1. நான் அவளைக் கட்டில் கிடையாக்குவேன். (யோபு 33:19)
2. அவளுடன் விபச்சாரம் செய்பவர்களை
மிகுந்த உபத்திரவத்திலே தள்ளுவேன்.
3. அவளுடைய பிள்ளைகளைக் கொல்லவே
கொல்லுவேன் (வெளி 2:23)
சாத்தானுடைய ஆழங்கள் வெளி 2: 24.25
தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:24
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:25
சபையார் மத்தியிலே யேசபேலைப்போல
வஞ்சிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுடைய துர்உபதேசத்திற்குச்
செவி கொடுக்காமல், தங்களைத்
தீட்டுப்படுத்தாமல், தங்களை பரிசுத்தமாய்க்
காத்துக்கொள்கிறவர்களை கர்த்தர்
ஆசீர்வதிப்பார். வஞ்சிக்கிறவர்கள் தங்கள்
வார்த்தைகளினால், கிரியைகளினாலும்
விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள்.
வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப்
படைத்தவைகளைப் புசிக்கவும் இவர்கள்
விசுவாசிகளுக்குப் போதித்து அவர்களை
வஞ்சிக்கிறார்கள்.
தங்களுடைய வஞ்சகமான போதகத்தை
"சாத்தானுடைய ஆழங்கள்" என்று பேரிட்டு
அழைக்கிறார்கள். இவர்களுடைய உபதேசம்
துன்மார்க்கமாய் இருக்கிறது. தங்களுடைய
போதகத்தை இவர்கள் இரகசியமான
ஆழங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்
ஆழத்தில் இருள் தான் இருக்கும். வெளிச்சம் இருக்காது.
கர்த்தரோ வஞ்சிக்கிறவர்களின்
உபதேசத்தை, ஆழமான இரகசியம் என்று
சொல்லவில்லை அதற்குப் பதிலாக
அவர்களுடைய போதகத்தை சாத்தானுடைய ஆழங்கள் என்று சொல்லுகிறார். இதற்கு சாத்தானுடைய ஏமாற்றுத்தனம் சாத்தானுடைய வஞ்சகம் என்று பொருள் சொல்லலாம்.
கர்த்தருடைய விசுவாசிகள் வஞ்சிக்கிற
உபதேசங்களுக்கு செவி கொடுக்க மாட்டார்கள். அவர்கள் ஆழங்கள் என்று சொல்லுவதை விசுவாசிகள் அறிந்துகொள்ளாமலிருக்கிறார்கள்.
சாத்தானுடைய ஆழங்களுக்கு
பங்காளிகளாகயிராதவர்களை கர்த்தர்
ஆசீர்வதிக்கிறார். அவர்கள்மேல் வேறொரு
பாரத்தையும் சுமத்தமாட்டேன் என்று
வாக்குப்பண்ணுகிறார். விசுவாசிகளிடத்தில்
கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் இருக்கிறதா. கர்த்தர் வருமளவும் அவர்கள் தங்களிடத்திலுள்ள விசுவாசத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும் விசுவாசத்தோடு தங்களுடைய நல்மனச்சாட்சியையும் அவர்கள் உறுதியாய்ப் பற்றிக் கொள்ள வேண்டும். கர்த்தர் வரும்போது நம்முடைய எல்லா ஆபத்துக்களும், எல்லா வேதனைகளும், எல்லா கஷ்டங்களும்
நம்மை விட்டு நீங்கிப்போகும்.
ஞான மார்க்கத்தார் தங்களுடைய
உபதேசங்களைத் தேவனுடைய ஆழங்கள்
என்று அழைத்துக் கொண்டார்கள். இயேசு
கிறிஸ்து அந்த உபதேசத்தைச் சாத்தானுடைய ஆழங்கள் என்று அழைக்கிறார்.
எல்லா விசுவாசிகளும் செய்ய வேண்டிய காரியங்கள்
1. நமக்குள்ளதை கிறிஸ்து வருமளவும்
பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
(வெளி 2:25; எபி 3:6)
2. ஜெயங்கொள்ள வேண்டும். (வெளி 2:26; வெளி 2:7,11 17 ; வெளி 3:5).
3. முடிவுபரியந்தம் கிறிஸ்துவின் கிரியைகளைக் கைக்கொள்ள வேண்டும். (வெளி 2:26)
ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு வாக்குப்
பண்ணப்பட்டிருக்கிறவைகள்
1. ஜாதிகளின்மேல் அதிகாரம் (வெளி 2:26)
2. இருப்புக்கோலால் ஜாதிகளை ஆளுதல்.
(வெளி 2:27)
3. எதிர்க்கும் மண்பாண்டங்களைப் ஜாதிகளை போல நொறுக்குதல் (வெளி 2:27)
4. விடிவெள்ளி நட்சத்திரம். (வெளி 2:28)
எல்லாப் பரிசுத்தவான்களும் கிறிஸ்துவின் கீழ் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருந்து பூமியை நித்திய காலமாக ஆளுகை செய்வார்கள்.
சாதிகள் மேல் அதிகாரம் விடிவெள்ளி நட்சத்திரம் வெளி 2:26-29
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:26
அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:27
விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:28
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 2:29
ஜெயங்கொள்கிறவனுக்கு கர்த்தர் ஆசீர்வாதம் சொல்லுகிறார். ஜெயங்கொள்கிறவர்கள் முடிவுபரியந்தம் கர்த்தருடைய கிரியைகளை
கைக்கொள்ளவேண்டும். கர்த்தர்
ஜெயங்கொள்கிறவர்களுக்கு சாதிகள் மேல்
அதிகாரங்கொடுப்பார். கர்த்தர் கொடுக்கிற
வல்லமையும் அதிகாரமும் மிகவும்
உன்னதமானது இந்த உலகத்தின் மீது
ஜெயங்கொள்கிற விசுவாசிகளுக்கு கர்த்தர்
ஆளுகை செய்கிற அதிகாரத்தைக்
கொடுப்பார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
பிதாவாகிய தேவனிடமிருந்து அதிகாரம்
பெற்றிருக்கிறார். தாம் பிதாவிடத்திலிருந்து
அதிகாரம் பெற்றதுபோலவே, கிறிஸ்துவானவர் ஜெயங்கொள்கிறவர்களுக்கு சாதிகள் மேல்
அதிகாரங்கொடுப்பார்.
-ஜெயங்கொள்கிறவர்கள் ஜாதிகளை
இருப்புக்கோலால் ஆளுகை செய்வார்கள்.
இவர்கள் ஜாதிகளை மண்பாண்டங்களைப்போல நொறுக்கி போடுவார்கள். மண்பாண்டங்களால் இருப்புக்கோலை எதிர்க்க முடியாது
இருப்புக்கோல் மண்பாண்டத்தில் பட்டாலும், மண்பாண்டம் இருப்புக்கோல்மீது பட்டாலும், மண்பாண்டமே நொறுங்கிப்போகும். ஜெயங்கொள்கிறவர்கள் ஜாதிகளை இருப்புக்கோலால் ஆளுகை செய்யும்போது, அவர்கள் மண்பாண்டங்களைப்போல
நொறுக்கப்படுவார்கள். ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர்
அறிவையும், ஞானத்தையும், வல்லமையையும் கொடுப்பார்.
ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர்
விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பார்.
கிறிஸ்துவானவரே விடிவெள்ளி நட்சத்திரம்,
அவர் வரும்போது பொழுதுவிடியும். இருள்
நீங்கும் பகல் பொழுது ஆரம்பமாகும்
கிறிஸ்துவானவர் நம்முடைய ஆத்துமாவிற்குள் பிரவேசிக்கும்போது, நம்முடைய ஆத்துமாவின் இருள் நம்மைவிட்டு நீங்கிப்போகும். தேவனுடைய தெய்வீக பிரசன்னம் நம்முடைய
ஆத்துமாவில் பிரகாசமாக இருக்கும். விடிவெள்ளியின் வெளிச்சம் தேவனுடைய
கிருபையையும் அவருடைய மகிமையையும் நமக்குக் கொடுக்கும்.
கர்த்தர் -சொல்லுவதை நாம் செவிகொடுத்து
கேட்கவேண்டும். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை எல்லா விசுவாசிகள் கேட்க வேண்டும். காதுள்ளவன் என்னும் வார்த்தை கேட்கும் ஆற்றலுடைய எல்லா விசுவாசிகளையும்
குறிக்கிற வார்த்தை. கர்த்தருடைய
வார்த்தையை எல்லோரும் கேட்க வேண்டும்.
கேட்கிறவர் எல்லோரும் கீழ்ப்படியவேண்டும்.
