வெளி 12ஆம் அதிகாரம் விளக்கம்
கிறிஸ்து ஸ்திரீ யினுடைய வித்தாக இருக்கிறவர் அந்திக்கிறிஸ்துவோ சர்ப்பத்தின் வித்தாக இருக்கிறது பரலோகத்திலே கிறிஸ்துவுக்கும் அந்திக்கிறிஸ்துவுக்கும் இடையே யுத்தமுண்டாயிற்று (வெளி 12:1-11). இதன்பின்பு இந்த யுத்தம் வனாந்தரத்திலே நடைபெறுகிறது (வெளி 12:12-17).
சூரியனை அணிந்திருந்த ஒரு ஸ்திரீ வெளி 12 : 1,2
வெளி 12:1. அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணித்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சத்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன
வெளி 12:2. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளை பெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
சாத்தான் கர்த்தருடைய சபையின் வளர்ச்சியை தடை பண்ணுவதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறான். இந்த அதிகாரத்தில் சபையானது ஒரு ஸ்திரீக்கு ஒப்புமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சபை கிறிஸ்துவினுடைய பரிசுத்தமான மனையாட்டி திருச்சபையே எல்லா பரிசுத்தவான்களுக்கும் தாயாகயிருக்கிறவள்.
அப்போஸ்தலர் யோவான் வானத்திலே ஒரு பெரிய அடையாளத்தைக் காண்கிறார். ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருக்கிறாள். கிறிஸ்துவானவர் நீதியின் சூரியனாக இருக்கிறவர் இந்த ஸ்திரீ கிறிஸ்துவை அணிந்திருக்கிறாள். கிறிஸ்துவின் பிரகாசம் இந்த ஸ்திரீயின்மீது பிரதிபலிக்கிறது.
ஸ்திரீயினுடைய பாதங்களின்கீழ் சந்திரன் இருக்கிறது ஸ்திரீயினுடைய இருதயமும் நம்பிக்கையும் கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறது. ஸ்திரீ யின் தலையோ பரலோகத்திலிருக்கிறது.
சடையான ஸ்திரீயானவள் பரலோகத்திலுள்ள மேலான காரியங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்திரீயினுடைய - சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடம் இருக்கிறது. இவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்' செய்த பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள்.
ஸ்திரீயானவள் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாளா பிரசவ வேதனையடைந்து, பிள்ளை பெறும்படி வருத்தப்பட்டு அலறுகிறாள். கிறிஸ்துவின் பரிசுத்தமான சந்ததியார் சபையிலே சேர்க்கப்பட வேண்டும் இதுவே சபையின் பிரதான ஊழியம் விசுவாசிகளை சபையில் கூட்டிச் சேர்க்கும்போது, பிரசவ வேதனையை போல் சபைக்கு வேதனை உண்டாகும். வேதனையால் வருத்தமும் உண்டாகும்.
பெரிய வலுசர்ப்பம் வெளி 12 : 3,4
வெளி 12:3. அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பாள பெரிய வலுசர்ப்பம் இருந்தது
வெளி 12:4. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடன் அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
அப்போஸ்தலர் யோவான் வானத்திலே சூரியனை அணிந்திருந்த ஒரு ஸ்திரீயை அடையாளமாகக் காண்கிறோம் இதைத் தொடர்ந்து அவர் வேறொரு அடையாளத்தை வானத்தில் காண்கிறார். கர்த்தருடைய சபைக்கு விரோதமாக சத்துருவானவன் எழும்பி வருகிறான் அவன் பெரிய வலுசர்ப்பம்போல இருக்கிறான். இவன் சிவப்பான நிறமுடையவன். சிவப்பு நிறம் பயங்கரத்திற்கு அடையாளம். இவன் மிகுந்த கொடூர குணம் உள்ளவன்
பெரிய வலுசர்ப்பத்திற்கு ஏழுதலைகள் இருக்கிறது. இந்த எழுதலைகளும் ரோமப்பேரரசை குறிக்கலாமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். வலு சர்ப்பத்திற்கு பத்துக் கொம்புகளும் இருக்கிறது வலுசர்ப்பத்தின் அதிகாரம் பத்துப்பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அகஸ்துராயன் உடைய காலத்திலே, ரோமப்பேரரசு, பத்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வலுசர்ப்பத்தின் தலையில் உள்ள பத்துக் கொம்புகளும் ரோமப்பேரரசின் பத்து மாகாணங்களுக்கு அடையாளம் என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள் வலுசர்ப்பத்தின் தலைகளின் மேல் எழுமுடிகள் உள்ளது. இவையெல்லாம் கிரீடங்கள். இந்த ஏழு முடிகளும் எழு ராஜாக்களாக விவரிக்கப்பட்டிருக்கிறார்கள் (வெளி 17:10)
வலு சர்ப்பத்திற்கு ஒரு வால் இருக்கிறது. வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை வலுசர்ப்பத்தின் வால் இழுத்து. அவற்றை பூமியில் விழத்தள்ளிற்று வலுசர்ப்பத்தின்வால் அந்த அளவுக்கு நீளமானது. வலிமையானது. உரோமப்பேரரசின் அதிகாரம் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி விரிந்திருந்தது. சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ, பிரசவ வேதனைப்பட்டு பிள்ளை பெறுகிறாள். பிள்ளை பிறந்தவுடனே அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு, வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக இருக்கிறது ஓரிடத்தில் சபை ஸ்தாபிக்கப்படும் போதே சாத்தான் அதை அழித்துப்போடு முயற்சி பண்ணுகிறான் சபையின் ஆரம்பநிலமையிலேயே அதை உபத்திரவப்படுத்துவதற்கு சாத்தான் அங்கு வந்து விடுகிறான்.
கிறிஸ்தவ மார்க்கத்தை ஆரம்பத்திலேயே அழித்துவிடவேண்டுமென்பதுதான் சாத்தானுடையவஞ்சகமான திட்டம். ஸ்திரீயினுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடுவது என்பதற்கு, சபையை அழித்துப்போடுவது என்று பொருள்.
ஆண் பிள்ளை வெளி 12 : 5,6
வெளி 12:5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலாள் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தின் இடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளி 12:6. ஸ்திரீயானவள் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
வலுசர்ப்பத்தினால் பிள்ளையைப் பட்சித்து போட முடியவில்லை ஸ்திரீயானவள் தன்னுடைய பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். அது ஒரு ஆண் அந்தப் பிள்ளை சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகை செய்யும். ஆண்பிள்ளை பாதுகாப்பாக பெற்றெடுக்கப்படுகிறது.
கர்த்தரானவர் ஆண்பிள்ளையை பாதுகாக்கிறார், பராமரிக்கிறார். சபை ஆரம்பிக்கப்படும்போது சபையின்மீது தேவனுடைய விசேஷித்த கிருபை வந்து இறங்குகிறது. சபையின் ஆரம்பகாலத்தில் கர்த்தர் தம்முடைய விசேஷித்த பராமரிப்பை சபைக்கு அருளுகிறார். நம்முடைய தேவன் மகாதேவன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே உலக இரட்சகராகவும் இருக்கிறார். சபை அழிந்துபோகாதபடிக்கு கிறிஸ்துவானவர் தம்முடைய சபையை பாதுகாக்கிறார். கர்த்தருடைய சமுகத்திலிருந்து ஆண்பிள்ளைக்கும், இந்தப் பிள்ளையை பெற்றெடுத்த ஸ்திரீக்கும் பாதுகாப்பும் பராமரிப்பும் கொடுக்கப்படுகிறது.
ஸ்திரீ தன் பிள்ளையைப் பெற்றவுடன், அந்தப் பிள்ளை தேவனிடத்திற்கும், அவளுடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறது இந்தப் பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நிற்கிறது பிள்ளையோ வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஸ்திரீயானவள் வலுசர்ப்பத்திற்குத் தப்பித்து வனாந்தரத்திற்கு ஓடிப்போகிறாள்.
தேவன் ஸ்திரீயைப் பாதுகாக்கிறார். பராமரிக்கிறார். வனாந்தரத்திலே அவளுக்கு ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுகிறேன் ஸ்திரீ | வனாந்தரத்திலிருக்கும்போது கர்த்தரானவர் அவளைப் போஷிக்கிறார். கர்த்தருடைய பாதுகாப்பும் பராமரிப்பும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மாத்திரம் நிர்ணயிக்கப்படுகிறது கர்த்தர் அந்த ஸ்திரீயை ஆயிரத்தி இருநூற்று நாற்பது நாளளவும் வனாந்தரத்திலே போஷிக்கிறார். அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் வனாந்தரத்திலே அவளுக்கு உண்டாயிருக்கிறது.
வானத்திலே யுத்தமுண்டாயிற்று வெளி 12 : 7-9
வெளி 12:7. வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்த்த தாதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் -ஜெயங்கொள்ள வில்லை .
வெளி 12:8. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமல் போயிற்று
வெளி 12:9. உலகம் த்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பெரிய பாம்பாகிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது அது பூமியிலே விழ தள்ளப்பட்டது அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
சாத்தான் சபையைப் பட்சித்துப்போட முயற்சி செய்து கொண்டிருக்கிறான். ஆனால் சபைக்கு விரோதமாக சாத்தானால் ஜெயங்கொள்ள முடியவில்லை. சபையைப் பட்சிக்கவேண்டுமென்று யுத்தம்பண்ணியவன் தோற்றுப்போகிறான். பட்சிக்க நினைத்தவன் பட்சிக்கப்படுகிறான். கர்த்தருக்கும் சாத்தானுக்கும் பரலோகத்தில் யுத்தமுண்டாயிற்று. கர்த்தருடைய சார்பாக மிகாவேல் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணுகிறார்கள் வலுசர்ப்பத்தோடு அதைச் சேர்ந்த தூதர்கள் சேர்ந்துகொண்டு, கர்த்தருக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார்கள் சபையில் நடைபெறுகிற சண்டைகளும் சச்சரவுகளும் பிரிவினைகளும், போட்டிகளும் பரலோகத்திலே பிரத்தியட்சமாகத் தெரியும் சபைக்கு விரோதமாக நடைபெறுகிற யுத்தம் வானத்தில் உண்டாயிருக்கும்
யுத்தம் வானத்திலே உண்டாயிற்று. பரலோக ராஜ்யம் பூமியிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் திருச்சபையே, பூமியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற பரலோக ராஜ்யம். இயேசுகிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையே நடைபெறுகிற யுத்தம், பூமியிலே, கர்த்தருடைய சபையிலே நடைபெறுகிறது. இங்கு நடைபெறுகிற யுத்தம் பரலோகத்திலிருந்து கவனிக்கப்படுகிறது.
கர்த்தருடைய பட்சத்திலே இயே கிறிஸ்துவின் பிரதான தூதனாகிய மிகாவேல் மிகாவேல் சேர்ந்த தூதர்களும், கர்த்தரை உண்மையாய்ப் பின்பற்றுகிற விசுவாசிகளும் இணைந்திருக்கிறார்கள், அவர்கள் கிறிஸ்துவின் தலைமையிலே, சத்துருவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறார்கள். இந்த யுத்தத்தில் சாத்தானுடைய பட்சத்தில் வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் கர்த்தருக்கு | விரோதமாக யுத்தம் பண்ணுகிறார்கள்
இயேசு கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறார். இதுவே திருச்சபையின் பெலன் சபையாரின் இரட்சிப்புக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அதிபதியாயிருக்கிறார். கர்த்தர் நம் பட்சத்தில் இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லை. இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள்ளிருக்கிற இயேசு கிறிஸ்து பெரியவர்.
இயேசுகிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் நடைபெற்ற யுத்தத்திலே கர்த்தர் ஜெயம் பெறுகிறார். சாத்தான் தோற்று போகிறான் கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் ஜெயமுண்டாயிற்று சாத்தானுக்கும் அவருடைய பிசாசுகளுக்கும் தோல்வி உண்டாயிற்று. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து அவர்கள் கீழே தள்ளப்பட்டார்கள். வானத்தில் சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் இருந்த இடம் காணப்படாமல் போயிற்று சாத்தானுக்கு பெரிய தோல்வி உண்டாயிற்று. வலுசர்ப்பம் சபையைப் பட்சித்துப்போடவேண்டுமென்று கர்த்தரோடு யுத்தம்பண்ணிற்று இந்த யுத்தத்தில் வலுசர்ப்பம் தோற்றுப்போயிற்று சர்ப்பம் அழிந்து போயிற்று
வானத்திலே ஒரு பெரிய சத்தம் வெளி 12 : 10,11
வெளி 12:10. அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும்; உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரன் மேல் குற்றஞ்சுமத்தும் பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டு போனான்.
வெளி 12:11. மரணம் நேரிடுகிறதாயிருத்தாலும் -அதற்குத் தப்பும்படி உங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
அப்போஸ்தலர் யோவான் வானத்திலே சூரியனை அணிந்திருந்த ஸ்திரீயையும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தையும் தரிசிக்கிறார். ஸ்திரீயானவள் பிள்ளை பெறுகிறாள் பிசாசானவன் பிள்ளையைப் பட்சித்துப்போடும்படி கர்த்தரோடு யுத்தம் பண்ணுகிறான் இந்த யுத்தத்தில் வலுசர்ப்பம் தோற்றுப்போயிற்று அது கீழே தள்ளப்படுகிறது. அதைத் தொடர்ந்து வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாயிற்று. யோவான் அந்தச் சத்தத்தைக் கவனித்துக் கேட்கிறார்.
கர்த்தரும் அவருடைய சேனையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் வெற்றி பெற்றவர்கள் ஆனந்த சந்தோஷமாய் ஆர்ப்பரிக்கிறார்கள். கர்த்தரைத் துதிக்கிற ஜெயப்பாடல்களைப் பாடுகிறார்கள். கர்த்தரைத் துதித்து துதிப்பாடல்கள் பாடுகிறார்கள். கிறிஸ்துவானவரே ஜெயம் பெற்றிருக்கிறார். துதிப்பாடல்களில்
கிறிஸ்துவானவர் துதிக்கப்படுகிறார்.
இரட்சிப்பும் வல்லமையும், நமது தேவனுடைய ராஜ்யமும் அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது" என்று வானத்திலே உண்டான பெரிய சத்தம் கர்த்தரைத் துதித்துப்பாடுகிறது சபையின் இரட்சிப்பும் பெலனும் ராஜாதி ராஜாவாகிய இயே கிறிஸ்துவின் மாத்திரமே இருக்கிறது. அவரே சபைக்குத் தலையாக இருக்கிறார்
சத்துருவாகிய சாத்தான் இரவும் பகலும் தேவனுக்கு முன்பாக, கர்த்தருடைய பிள்ளைகள் மேல் குற்றம் சுமத்தும் பொருட்டு நிற்கிறான். தேவனுடைய பிரசன்னத்தை சாத்தான் விரும்புவதில்லை. ஆனாலும் தேவனுடைய பிள்ளைகள் மேல் குற்றம் சுமத்தும் பொருட்டு, தேவனுக்கு முன்பாக நிற்கிறான். தேவனை விரும்பாதவன், தேவனுடைய சமூகத்தில் அவருடைய பிள்ளைகளை குற்றப்படுத்த விரும்புகிறார்.
கர்த்தரோ சாத்தானுடைய குற்றச்சாட்டை அங்கீகரிக்கவில்லை. மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். அவர் தம்முடைய பிள்ளைகளின் இருதயத்தை அறிந்திருக்கிறார். சாத்தான் தேவனுக்கு முன்பாக கர்த்தருடைய பிள்ளைகள் மேல் குற்றம் சாட்டினால் அவனுடைய குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை சாத்தான் பொய்யனாகவும், பொய்க்குத் தகப்பனாகவும் இருக்கிறார் தம்முடைய பிள்ளைகள் மேல் குற்றம்சாட்டுகிற சத்துருவை கர்த்தர் கீழே தள்ளி விடுகிறார் உலகம் அனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது. அது பூமியிலே விழ தள்ளப்பட்டது அதனோடேகூட அதைச் சேர்ந்த பிசாசுகளும் தள்ளப்பட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் சாத்தானை ஜெயித்தார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இரண்டு உபாயங்களினால் சாத்தான் மீது ஜெயமுண்டாயிற்று அந்த உபாயங்களாவன: 1. ஆட்டுக்குட்டியின் இரத்தம் 2. தங்கள் சாட்சியின் வசனம் கர்த்தருடைய பிள்ளைகள் இவ்விரண்டு உபாயங்களையும் பயன்படுத்தி வலுசர்ப்பதை ஜெயித்தார்கள். விசுவாசிகள் சாத்தானோடு யுத்தம்பண்ணும்போது, மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும், அதற்குத் தப்பும்படி, தங்கள் ஜீவனையும் பார்க்கவில்லை, கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இரத்தம் சாட்சியாக மரிப்பதற்கு ஆயத்தமாக இருந்தார்கள் சத்துருவை ஜெயிக்க வேண்டுமென்று தீர்மானமாய் யுத்தம்பண்ணினார்கள். நித்திய சுவிசேஷத்தை தேவனுடைய வல்லமையினால் தொடர்ந்து பிரசங்கம் பண்ணினார்கள்.
சாத்தானோடு யுத்தம்பண்ணும்போது கர்த்தருடைய பரிசுத்தவான்களிடத்தில் பரிசுத்தமான தைரியம் இருந்தது அவர்கள் துன்பங்களை -அனுபவிக்கும்போது நீடியபொறுமையோடு அவற்றைச் சகித்துக் கொண்டார்கள் தங்கள் ஜீவனை அவர்கள் நேசிக்கவில்லை. மரணத்திற்குத் உங்களை ஒப்புக்கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். ஜீவன் மேலுள்ள ஆசையை கர்த்தர்மேல் வைத்திருக்கும் விசுவாசம் மேற்கொண்டது சாத்தானோடு யுத்தம் பண்ண வேண்டும் என்னும் பக்திவைராக்கியம் ஜீவன் மேலுள்ள ஆசையை மேற்கொண்டது. கர்த்தருடைய பிள்ளைகள் உங்கள் ஜீவன் மேல் வைத்திருந்த ஆசை தோற்றுப் போயிற்று கர்த்தர்மேல் வைத்திருந்த விசுவாசம் ஜெயம்பெற்றது. சாத்தானை ஜெயிக்கவேண்டும் என்னும் பக்திவைராக்கியம் ஜெயம் பெற்றது
ஆபத்து வரும் வெளி 12:12
வெளி 12:12. ஆகையால் பரலோகங்களே! அவைகளின் வாசமாயிருக்கிறவர்கள் களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறார்கள் ஐயோ, பிசாசானவன் தளக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறித்து மிகுத்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கின படியால் உங்களுக்கு என்று ஆபத்து வரும் சொல்லக்கேட்டேன்.
வானத்திலிருந்து ண்டு பெரிய சத்தம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதித்துப் பாடுகிறேன் கர்த்தருடைய பிள்ளைகள் ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தினாலும், தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் வலுசர்ப்பத்தை ஜெயித்தார்கள் என்று சொல்லுகிறது. இதைத் தொடர்ந்து பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஆபத்து வரும் என்றும் எச்சரித்துச் சொல்லுகிறது.
கர்த்தர் வலுசர்ப்பத்தை ஜெயித்தார்.
ஆகையால் பரலோகங்களும், அவைகளில் வாசமாயிருக்கிறவர்களும் களிகூர வேண்டும் ஆனால் பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களுக்கு பிரச்சனைகள் உண்டாகும். வலுசர்ப்பமானது வானத்திலிருந்து பூமியிலே விழ தள்ளப்பட்டது அது பூமியில் இருக்கும்போது சும்மா இருக்காது
தன்னுடைய துர்க்கிரியைகளைச் செய்வதற்கு பிசாசானவனுக்கு கொஞ்ச காலம் மாத்திரம் இருக்கிறது கர்த்தர் அவனுக்கு கொஞ்சகாலம் மாத்திரமே அனுமதிருக்கிறார்.
பிசாசானவனும் தனக்கிருக்கிற கொஞ்ச காலத்தை பற்றி நன்றாக அறிந்திருக்கிறான். ஆகையினால் அவன் கர்த்தருடைய பிள்ளைகள் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறார் விசுவாசிகள் மத்தியிலே கோபத்தோடு இறங்கி வந்திருக்கிறான். ஆகையினால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு வலுசர்ப்பத்தினால் ஆபத்து வரும் என்று வானத்திலே உண்டான Qufu சத்தம் எச்சரித்துச் சொல்லுகிறது.
வலுசர்ப்பம் சபைக்கு விரோதமாக மேற்கொண்ட யுத்தத்திலே தோற்றுப்போயிற்று. தான் தோல்வியடைந்ததினால் சாத்தான் மிகவும் கோபமாக இருக்கிறார். இந்த உலகம் முழுவதும் பிரச்சனை கொடுக்க வேண்டும் என்று சாத்தான் துரிதமாய்ச் செயல்படுகிறான். வலுசர்ப்பத்தினால் பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களுக்கு ஆபத்து வரும்,
பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் வெளி 12 : 13-17
வெளி 12:13. வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த பெண் பிள்ளையை பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்துவது
வெளி 12:14. ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி ஒரு காலமும், காலங்களும்,
அரைக்காலமுமாகப் போஷிக்கப் படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
வெளி 12:15. அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதி போன்ற வெள்ளத்தை அவளுக்குப்பின்னாக ஊற்றிவிட்டது.
வெளி 12:16. பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கியது
வெளி 12:17. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின் மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற வர்களும், இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ண போயிற்று.
வலுசர்ப்பம் கர்த்தருடைய சபையின் மீது இரண்டாம் முறையாக யுத்தம் பண்ணுகிறது முதலில் வானத்திலே யுத்தமுண்டாயிற்று. இரண்டாவது யுத்தம் வனாந்தரத்திலே உண்டாயிற்று. முதலாவது யுத்தத்தில் வலுசர்ப்பம் தோற்றுப் போயிற்று அது பூமியிலே தள்ளப்பட்டது. தான் தோற்றுப்போனதையும், பூமியிலே தள்ளப்பட்டதையும் அறிந்து, வலுசர்ப்பம் அந்த பெண் பிள்ளையை பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்துகிறது. ஸ்திரீயானவள் பாம்பின் முகத்திற்கு விலகி வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் போகிறேன்
கர்த்தர் தம்முடைய சபையைப் பாதுகாக்கிறார். பராமரிக்கிறார். வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்கு பறந்து போகும்படிக்கு கர்த்தரானவர் அந்த ஸ்திரீக்கு பெருங்கழுகு இரண்டு சிறகுகளைக் | கொடுக்கிறார். வனாந்தரத்திலுள்ள அந்த இடம் ஸ்திரீக்கும் பாதுகாப்பான இடம் கர்த்தரே இந்த இடத்தை ஸ்திரீக்குக் கொடுத்திருக்கிறார்.
சபையானது கர்த்தரால் பாதுகாக்கப் படுகிறது பராமரிக்கப்படுகிறது போதிக்கப்படுகிறது கர்த்த ர்
ஸ்திரீயானவள் வனாந்தரத்திலே போஷிக்கிறார் போஷிப்பார் காலமும் கர்த்தரால் நிர்ணயிக்கப்படுகிறது. அவள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமுமாக பாதிக்கப்படுகிறாள் ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்குக் பறந்து போனாலும் வலுசர்ப்பம் அங்கும் வந்து ஸ்திரீயோடு யுத்தம் பண்ணுகிறது ஸ்திரீயானவளுக்கு பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டாலும், அவளால் தன் சுயபலத்தினால் தன்னைக் காத்துக்கொள்ள முடியவில்லை. கர்த்தரே அவளைப் போஷிக்க வேண்டும் கர்த்தரே அவளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்
பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றி வருகிறது அந்த வெள்ளத்தில் ஸ்திரீயானவள் அடித்துக்கொண்டு போகப்பட வேண்டும் என்பதுதான் பாம்பின் வஞ்சகமான திட்டம் கர்த்தரோ பாம்பு அனுப்பிய வெள்ளத்திலிருந்து ஸ்திரீயைப் பாதுகாக்கிறார். கர்த்தருடைய பாதுகாப்பு இல்லையென்றால் சபைக்கு பாதுகாப்பு இல்லை .
பூமியானது ஸ்திரீக்கு உதவியாக தன் வாயைத் திறக்கிறது. வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை ஸ்திரீக்குப் பின்னாக ஊற்றிவிடுகிறது அந்த வெள்ளம் ஸ்திரீயைப் பின்தொடர்ந்து வருகிறது ஸ்திரீயை வெள்ளம் கொண்டுபோகும்படி நதி அவளைப் பின்தொடர்ந்து வருகிறது. இந்த ஆபத்தான வேளையில் பூமியானது தன் வாயைத் திறந்து வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை
விழுங்குகிறது ஸ்திரீயானவள் வெள்ளம் கொண்டு போகப்படாதபடிக்கு பாதுகாக்கப்படுகிறது வனாந்தரத்திலும் ஸ்திரீக்கு கர்த்தருடைய பாதுகாப்பு உண்டாயிற்று சபைக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கர்த்தர் என்னுடைய வல்லமையினால் சபையை அற்புதமாகப் பாதுகாக்கிறார் சபையை அதிசயமாய் பராமரிக்கிறார்.
ஸ்திரீயானவள் வெள்ளத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறேன் இதனால் வலுசர்ப்பம் து ஸ்திரீயின் மேல் கோபங்கொள்கிறது. இப்போது ஸ்திரீயோடு யுத்தம் பண்ணுவதற்கு பதிலாக கர்த்தருடைய பிள்ளைகளோடு யுத்தம் பண்ணுவதற்கு வலுசர்ப்பம் புறப்பட்டுப் போகிறதே
இந்தப் பூமியிலே தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து குறித்து சாட்சியுடையவர்கள் இருக்கிறார்கள். கர்த்தருக்கு மீதியான ஜனங்கள் உலகமெங்கும் எல்லா தேசத்தார் மத்தியிலும் இருக்கிறார்கள். இவர்கள் ஸ்ரீ யாருடைய சந்ததிகள். வலுசர்ப்பமானது ஸ்திரீயின் மேல் கோபங்கொண்டு, அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ண போயிற்று கடைசி சத்துரு காசி சக்கரு அழிக்கப்படும் வரையிலும் உலகத்தில் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்கள் இருப்பார்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சியுடையவர்கள் இருப்பார்கள்.
