வெளி 13ஆம் அதிகாரம் விளக்கம்
சாத்தான் கர்த்தருடைய சபைகளுக்கு விரோதமாக எப்போதுமே கிரியை நடப்பிக்கிறான். வலுசர்ப்பத்திற்குப் பின்பு மேலும் இரண்டு மிருகங்கள் சபைக்கு சத்துருக்களாய் வருகிறது. அவற்றைப்பற்றிய விவரம் இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது முதலாம் மிருகம் (வெளி 13:1-10). இரண்டாம் மிருகம் (வெளி 13:11-18).
சமுத்திரத்திலிருந்து -எழும்பி வந்த ஒரு மிருகம் வெளி 13 :1,2
வெளி 13:1. பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
வெளி 13:2 நான் கண்ட மிருகம் சிறுத்தையை போலிருந்தது அதின் கால்கள் கரடியின் கால்களை போலவும் அதின் வாய் சிங்கத்தின் -வாயைப்போலவும் இருந்தது வலு சர்ப்பமானது தன் பலத்தையும், தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
அப்போஸ்தலர் யோவான் இந்தத் தரிசனத்தைக் காண்கிறபோது கடற்கரை மணலின்மேல் நிற்கிறார். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக் காண்கிறார். ஏற்கெனவே சபைக்கு விரோதமாக வலுசர்ப்பம் எழும்பி வந்தது. இப்போது அதன் தொடர்ச்சியாக சமுத்திரத்திலிருந்து இந்த மிருகம் எழும்பி வருகிறது.
இந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருக்கிறது. தானியேல் தீர்க்கதரிசி நான்கு மிருகங்களை தரிசனத்திலே கண்டார். "பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின் மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான். தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின" (தானி 7:1-3). இந்த நான்கு மிருகங்களும், நான்கு ராஜ்யங்களைக்குறிக்கும் என்று வேத பண்டிதர்கள் வியாக்கியானம் சொல்கிறார்கள்.
இந்த மிருகத்திற்கு எழுதலைகர் களும் பத்துக்கொம்புகளும் இருக்கிறது. இந்த மிருகத்திற்கு வெவ்வேறு விதமான அதிகாரங்கள் இருப்பதை இந்தத் தலைகள் கொம்புகளும் விவரிக்கிறது அதன் கொம்புகளின் மேல் பத்து முடிகள் இருக்கிறது. இந்த முடிகள் கப்பம் செலுத்துகிற ராஜாக்களைக் குறிக்கிறது மேலும் இந்த மிருகத்தின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருக்கிறது இந்த மிருகம் தேவனுடைய மகிமைக்கு விரோதமாய் இருக்கிறது தேவனுக்கும், அவருடைய சபைக்கும் விரோதமாய்க் கிரியை நடப்பிக்கிறது.
சமுத்திரத்திலிருந்து எழும்பி வந்த மிருகம் சிறுத்தையை போலிருக்கிறது அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருக்கிறது. இந்த மிருகத்திற்கு சுயமாக எந்தப் பெலனுமில்லை. இது ஒரு பெலனற்ற மிருகம் ஆனாலும், வலுசர்ப்பமானது தன் பலத்தையும், தன் சிங்காசனத்தையும், தன்னுடைய மிகுந்த அதிகாரத்தையும் இந்த மிருகத்திற்குக் கொடுக்கிறது மிருகமும் வலுசர்ப்பத்திடமிருந்து தனக்குத் தேவையான பலத்தையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்கிறது.
மிருகம் வலுசர்ப்பத்தின் அடியாள் போல
இருக்கிறது. வலுசர்ப்பத்தினுடைய துன்மார்க்கமான -கிரியைகளுக்கு மிருகம் துணை போகிறது வலுசர்ப்பம் மிருகத்திற்குப் பெலன் கொடுத்து, அதை தன்னுடைய துன்மார்க்கமான கிரியைக்கு பங்காளியாகி கொள்கிறது
வலுசர்ப்பத்தையும், மிருகத்தையும் வணங்கினார்கள் வெளி 13:3,4
வெளி 13:3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அத்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்ட பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
வெளி 13:4. அத்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும் மிருகத்திற்கு ஒப்பானவன் யார் அதனோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி மிருகத்தையும் வணங்கினார்கள்.
மிருகத்திற்கு ஏழுதலைகள் இருக்கிறது. அந்தத் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாய் காயப்பட்டிருக்கிறேன் ஆனால் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்படுகிறது சத்துரு கீழே விழுந்தாலும் மறுபடியும் எழும்பி சபைக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறான் அவன்
காயம்பட்டாலும் தன் காயத்தை பெற்றுக்கொள்கிறான் அவனுக்கு சாவுக்கேதுவான காயம் உண்டானால் அவன் செத்துப் போகாமல் தன்னைச் சொஸ்தமாக்கிக்கொள்கிறான்.
பூமியிலுள்ள யாவரும் அந்த மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப் படுகிறார்கள் அந்த மிருகத்திற்கு இருக்கிற அதிகாரத்தைப் பார்த்து, படத்தை பார்த்து அதன் சிங்காசனத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அந்த மிருகத்தைப் பின்பற்றுகிறார்கள் வலுசர்ப்பத்திற்கோ, மிருகத்திற்கோ மெய்யாகவே ஒரு பலனுமில்லை. அவற்றிற்கு ஒரு அதிகாரமுமில்லை. அவற்றிற்கு சிங்காசனமுமில்லை. ஆனால் தங்களிடத்தில் இவையெல்லாம் இருப்பதுபோல மாய்மாலம் பண்ணுகிறது. ஜனங்கள் மாய்மாலத்தை மெய்யென்று நம்பி ஆச்சரியப்படுகிறார்கள்
வலுசர்ப்பத்தையும், மிருகத்தையும் கனப்படுத்துகிறார்கள். வலுசர்ப்பமானது தன் பலத்தையும், தன் சிங்காசனத்தையும், மிகுந்த அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுத்திருக்கிறது அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த வலுசர்ப்பத்தை பூமியிலுள்ள யாவரும் வணங்குகிறார்கள்.
வலுசர்ப்பத்தை வணங்குகிறவர்கள் மிருகத்தையும் வணங்குகிறார்கள். மிருகத்திற்கு ஒப்பானவர்கள் யாருமில்லை என்று சொல்கிறார்கள் மிருகத்தோடே யுத்தம்பண்ணத்தக்கவன் ஒருவருமில்லை என்று அறிக்கையிடுகிறார்கள். மிருகத்திற்கு அதிக வல்லமை இருப்பதாக நினைத்து பூமியிலுள்ள யாவரும் மிருகத்தையும் வணங்குகிறார்கள்.
மிருகத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது வெளி 13:5-7
வெளி 13:5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது
வெளி 13:6. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தின் பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
வெளி 13:7. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது
மிருகம் வலுசர்ப்பத்திடமிருந்து அதிகாரம் பெற்றிருக்கிறது. மிருகத்தினுடைய வாய் அருமையான வைகளையும் தூஷணமானவைகளையும் பேசுகிறது. கர்த்தருடைய பரிசுத்தவான்களோடு நாற்பத்திரண்டு மாதம் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. மிருகத்திற்கு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்கள் ஜெயிக்கும்படிக்கும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
சமுத்திரத்திலிருந்து எழும்பி வந்த மிருகம் தேவனைத் தூஷிக்கும்படி தன்னுடைய வாயைத் திறக்கிறது. தேவனுடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தின் பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் மிருகம் தூஷிக்கிறது மிருகம் தன்னுடைய துன்மார்க்கமான கிரியையை பூமியிலும் செய்கிறது. பரலோகத்திலும் செய்கிறது. கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாகவும் தூஷிக்கிறது. கர்த்தருக்கு விரோதமாகவும் தூஷிக்கிறது.
மிருகத்தினால் தேவனுடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தின் பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷிக்க மாத்திரமே முடியும். அவர்களோடு யுத்தம் பண்ணுவதற்கோ அவர்களை ஜெயிப்பதற்கோ மிருகத்திற்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. பரலோகத்தில் உள்ளவர்களை தூஷித்துவிட்டு மிருகம் என்னுடைய துன்மார்க்கம் கிரியையை அங்கே நிறுத்திக்கொள்கிறது அதற்குமேல் மிருகத்திற்கு அதிகாரமில்லை.
ஆனால் பூமியிலுள்ள பரிசுத்தவான்களோ மிருகத்தினால் அதிகமாய்ப் பாதிக்கப்படுகிறார்கள். மிருகம் பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணுகிறது அவர்களில் சிலபேரை ஜெயிக்கிறது. மிருகத்திற்கு இப்படிப்பட்ட அதிகாரம் இருந்தாலும் அதற்கு நித்திய அதிகாரம் கொடுக்கப்படவில்லை. நாற்பத்திரண்டு மாதம் மாத்திரமே யுத்தம்பண்ணுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிருகத்திற்குத் தங்களை யார் ஒப்புக்கொடுக்கிறார்களோ அவர்கள் மீது மாத்திரமே, அந்த மிருகத்திற்கு அதிகாரமுண்டு. மிருகத்தை வணங்குகிறவர்கள் மிருகத்திற்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள்
ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் வெளி 13 : 8-10
வெளி 13:8. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
வெளி 13:9. காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
வெளி 13:10. சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
மிருகத்திற்கு நித்திய அதிகாரம் கொடுக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மாத்திரமே அதற்கு அதிகாரமுண்டு. மிருகத்தின் அதிகாரத்திற்கு எல்லோரும் அடிமைகள் மிருகத்தை எல்லோரும் வணங்குவது இல்லை ஒரு குறிப்பிட்ட எண்ணிகையிலுள்ளவர்கள் மாத்திரமே மிருகத்தை வணங்குகிறார்கள். இவர்கள் மாத்திரமே மிருகத்திற்கு அடிமைகளாய் இருக்கிறார்கள்.
உலகத்தோற்றமுதல் இரட்சிக்கப்பட்டவர்களின் பெயர்கள், ஆட்டுக்குட்டியினுடைய ஜீவப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது. ஜீவப்புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் மாத்திரமே மிருகத்தை வணங்குவார்கள் கர்த்தருக்கு விரோதமாய் கிரியை செய்கிறவர்கள் மிருகத்தை வணங்குவார்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படியாதவர்கள் மிருகத்திற்குக் கீழ்ப்படிவார்கள்.
பட்டயத்தினால் கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். மற்றவர்களை பட்டயத்தினால் கொள்ளுகிறவர்கள் தங்களுடைய பட்டயங்களின் மேல் விழுந்து செத்துப் போவார்கள் கர்த்தருடைய பிள்ளைகளை சிறைப்படுத்திக் கொண்டுபோகிறவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். துர்க்கிரியைகளைச் செய்து மற்றவர்களை அழிக்கிறார்கள் துர்க்கிரியைகளினால் அழிந்துபோவார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகள் சிறைப்பட்டுப்போகும்போது தங்களுடைய பொறுமையையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோலவே கர்த்தருடைய பிள்ளைகள் பட்டயத்தினாலே கொல்லப்படும்போது தங்கள் பொறுமையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். யோவான் இந்தச் சத்தியத்தைச் | சொல்லும்போது "காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன் என்று சொல்லுகிறார் இந்தச் சத்தியத்தை எல்லோரும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாகத் தீங்கு செய்கிறவர்களுக்கு தீங்கு வரும் கர்த்தருடைய பிள்ளைகளை அழிக்கிறவர்களுக்கு அழிவு வரும் கர்த்தருடைய பிள்ளைகளைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு துன்பம் வரும்.
வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பி வருகிறது வெளி 13 : 11,12
வெளி 13:11. பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடைய தாயிருந்து வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
வெளி 13:12. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆற சேதமடைந்த முத்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
அப்போஸ்தலர் யோவான் வேறொரு மிருகத்தையும் காண்கிறார். முதலாவது மிருகம் சமுத்திரத்திலிருந்து எழும்பி வருகிறது இரண்டாவது மிருகம் பூமியிலிருந்து எழும்பி வருகிறது. இந்த மிருகத்திற்கு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகள் இருக்கிறது. ஆனால் இதன் வாயோ வலுசர்ப்பத்தைப் போல பேசுகிறது. இந்த மிருகம் கள்ளப்போதகர்களுக்கு ஒப்பாயிருக்கிறது. கள்ளப் போதகர்கள் சத்தியத்தைப் போதிப்பதாகச் சொல்லிக்கொண்டு,
துர்உபதேசத்தைப் போதிப்பார்கள். நல்லவர்களைப் பேசி நடிப்பார்கள். ஆத்து மாக்களை வஞ்சிப்பார்கள். இரண்டாவது மிருகம் வலுசர்ப்பத்தைப்போல பேசி ஜனங்களை வஞ்சிக்கிறது.
இரண்டாம் மிருகம் ஜனங்களை தவறான பாதையில் வழிநடத்திச் செல்லுகிறது. முந்தின மிருகத்தை பூமியும் அதன்குடிகளும் வணங்கும்படி செய்கிறது. ஜனங்களை வஞ்சிக்கிறது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதும் இரண்டாம் மிருகம் அதற்கு முன்பாக நடப்பிக்கிறது.
முந்தின மிருகத்திற்கு ஏழுதலைகள் இருக்கிறது. அந்தத் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கிறது ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக்காயம் சொஸ்தமாக்கப்பட்டது. சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தை பூமியும் அதன் குடிகளும் வணங்கும்படி இரண்டாம் மிருகம் வஞ்சிக்கிறது
கள்ளப்போதகர்கள் கர்த்தருடைய பிள்ளைகளை வஞ்சிப்பார்கள், மெய்யான தேவனை ஆராதியாமல், தேவர்களல்லாத வர்களை ஆராதிப்பதற்கு கள்ளப்போதகர்கள் ஜனங்களை வஞ்சித்து வழிநடத்துவார்கள். இரண்டாம் மிருகம் கள்ளப்போதகர்களைப் போலவே வஞ்சிக்கிறது பூமியையும் அதன்குடிகளையும் கர்த்தரை வணங்கும்படி செய்வதற்குப் பதிலாக, மிருகத்தை வணங்கும்படி செய்கிறது.
கள்ளப்போதகர்கள் தங்களை வணங்குமாறு சொல்ல மாட்டார்கள் ஆனால் தவறான உபதேசத்தைச் சொல்லி கர்த்தரை வணங்குவதிலிருந்து அவர்களை திசை
திரும்பிவிடுவார்கள் அதுபோலவே இரண்டாம் மிருகம் பூமியையும் அதன் குடிகளையும் தன்னை வணங்குமாறு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவர்களை முந்தின மிருகத்தை வணங்கும்படி செய்கிறது.
அற்புதங்களை நடப்பித்து, பூமியின் குடிகளை மோசம்போக்கிற்று வெளி 13: 13-17
வெளி 13:13. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருத்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
வெளி 13:14. மிருகத்தின் முன்பாக அத்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
வெளி 13:15. மேலும் அம்மிருகத்தின் சொருபம் பேச தக்கதாகவும் மிருகத்தின் சொகுபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத் தக்கதாகும் மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி | அதற்குச் சத்துவம் கொடுக்கப்பட்டது
வெளி 13:16. இது சிறியோர் பெரியோர், ஐசுவரியவான் கள் தரித்திரர் சுயாதீனர் அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
வெளி 13:17. அத்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
இரண்டாம் மிருகம் ஏராளமான ஜனங்களை வஞ்சிக்கிறது. தன்னிடத்தில் மெய்யான வல்லமையிருப்பதுபோல காண்பிக்கிறது பெரிய அற்புதங்களை நடப்பிக்கிறது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாக பெரிய அற்புதங்களை நடப்பிக்கிறது. ஜனங்கள் மிருகம் நடப்பிக்கிற அற்புதங்களைப் பார்த்து வஞ்சிக்கப்படுகிறார்கள். இந்த அற்புதங்கள் மெய்யான அற்புதங்களல்ல. இவை மாய்மாலமான வானத்திலிருந்து பூமியின் மேல் மெய்யாகவே அக்கினி இறங்கவில்லை. அக்கினி இறங்குவதுபோல காண்பிக்கிறது. இந்த மாய்மாலத்தை முந்தின மிருகத்திற்கு முன்பாக செய்து காண்பிக்கிறது.
கர்த்தர் சில சமயங்களில் பிசாசுகளுக்கு அற்புதம் செய்கிற அதிகாரத்தைக் கொடுக்கிறார். விசுவாசத்தில் உறுதியா இல்லாதவர்கள் சாத்தானைப் பின்பற்றிப் போவதற்கு அனுமதி கொடுத்துவிடுகிறார். அவர்கள் இப்படிப்பட்ட பொய்யான அற்புதங்களைப் பார்த்து
வஞ்சிக்கப்படுகிறார்கள்.
இரண்டாம் மிருகம் பொய்யான அற்புதங்களை நடப்பித்து பூமியின் குடிகளை மோசம் போக்குகிறது மிருகத்திற்கு முன்பாக இப்படிப்பட்ட பொய்யான அற்புதங்களைச் செய்யும்படிக்கு இரண்டாம் மிருகத்திற்கு சத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலாம் மிருகத்தின் ஏழு மலைகளில் ஒன்று பட்டயத்தினாலே சாவுக்கேதுவாய் காயம் பட்டிருந்தது ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. அந்த மிருகத்திற்கு முன்பாக இரண்டாம் மிருகம் பொய்யான அற்புதங்களை நடப்பித்து பூமியின் குடிகளை மோசம்போக்குகிறது. மோசம்போன ஜனங்களிடத்தில் இரண்டாம் மிருகம் துர்உபதேசம் பண்ணுகிறது "பட்டயத்தினாலே காயப்பட்டு பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டும் என்று இரண்டாம் மிருகம் பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
இந்தச் சொரூபம் சாதாரண சொரூபம் அல்ல இது பேசும் சொரூபம் தன்னை வணங்காத யாவரையும் கொலைசெய்து போடும் சொரூபம் மிருகத்தினுடைய சொரூபத்திற்கு அப்படிப்பட்ட துன்மார்க்கமான ஆவியை இரண்டாம் மிருகம் கொடுக்கிறது. இந்த ஆவியைக் கொடுக்கும்படி இரண்டாம் மிருகத்திற்கு சத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பூமியின் குடிகள் மிருகத்தின் சொரூபம் பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் அது கொலை செய்வதைப் பார்த்து பயப்படுகிறார்கள் இதனால் பூமியின் குடிகள் வஞ்சிக்கப்பட்டு மிருகத்தின் சொரூபத்தை வணங்குகிறார்கள்.
மிருகத்தின் சொரூபத்தை வணங்குகிறவர்களில், சிறியோர், பெரியோர், ஐகவரியவான்கள் தரித்திரர் சுயாதீனர் அடிமைகள் ஆகிய எல்லோரும் இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் தங்கள் உங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது மிருகத்திடமிருந்து ஒரு முத்திரையைப் பெற்று கொள்கிறார்கள்.
மிருகத்தை வணங்குகிறவர்கள், அந்த மிருகத்தின் முத்திரை அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்து கொள்கிறார்கள் பூமியின் குடிகள் மிருகத்தின் முத்திரை வெளிப்படையாகத் தரித்துக்கொண்டு, அந்த மிருகத்தின் சொரூபத்தை வணங்குகிறார்கள். இந்த முத்திரையைத் தரித்துக்கொள்கிறவர்கள் மாத்திரமே பூமியில் ஒரு பொருளை விற்கவோ அல்லது வாங்கவோ முடியும். இந்த முத்திரையைத் தரித்துக்கொள்ளாதவர்களுக்கு இந்தப் பூமியிலே தொழில் செய்வதற்கோ, வியாபாரம் செய்வதற்கு" பொருட்களை கொள்முதல் செய்வதற்கோ அனுமதி மறுக்கப்படுகிறது. இரண்டாம் மிருகம் ஜனங்களை வஞ்சிக்கிறது.
அறுநூற்று அறுபத்தாறு வெளி 13:18
வெளி 13:18. இதிலே ஞானம் விளங்கும்; அத்த மிருகத்தின் இலக்கத்தைப் -புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக் கடவன் இது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு
அப்போஸ்தலர் யோவான் மிருகத்தின் இலக்கத்தை கணக்குப் பார்த்துச் சொல்லுகிறார். அதினுடைய இலக்கம் அறுநூற்று அறுபத்தாறு இந்த இலக்கத்தில் மனுஷருடைய ஞானமும், புத்தியும் வெளிப்படுவதாகச் சொல்லுகிறார். அறுநூற்று அறுபத்தாறு என்னும் இலக்கம் மனுஷருடைய இலக்கமாகவும் இருக்கிறது என்றும் சொல்லுகிறார் இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை வேத பண்டிதர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
தேவன் தம்முடைய சத்துருக்கள் எல்லோர் மீதும், "மெனே தெக்கேல்" என்று எழுதுகிறார். சத்துருக்களுடைய நாட்கள் எண்ணப்படுகிறது. அவர்களுடைய காலம் முடிந்து போகும் அவர்கள் அழிந்து போவார்கள் சத்துருக்கள் அழிவார்கள். ஆனாலும் கர்த்தருடைய ராஜ்யமோ நித்திய காலமாய் நிலைத்துநிற்கும்.
